அதிமுகவின் “காவல் தெய்வம்” பேட்டி – “பாஜகவும் ஊழல் கட்சி தான் – நோ கூட்டணி ” –


………………..

தற்போதைக்கு பாஜகவின் அமுக்குப்பிடியிலிருந்து – அதிமுகவை
பத்திரமாக காத்து வருவது இரண்டு காவல் தெய்வங்கள்…

ஒன்று திரு.தம்பித்துரை… இரண்டாவது திரு. பொன்னையன்…

இதில் 2-வது காவல் தெய்வம் நேற்றிரவு – நியூஸ் -18 தமிழ் – தொலைக்காட்சிக்கு அளித்த பிரத்தியேக பேட்டி ஒன்றில் கூறுகிறது –

மதுரையில் ஊழல் குற்றச்சாட்டு பற்றி மோடிஜி கூறியது -” தன்னைத்
தானே மோடிஜி கூறிக்கொள்கிறார்… ரஃபேல் தவிர இன்னும் பல
குற்றச்சாட்டுகள் மோடி, அமீத் ஷா மற்றும் பாஜக ஆளும் மாநிலங்கள்
மீது உள்ளன”

” ராகுல் காந்தி…ஆயிரக்கணக்கான குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக
மோடி மீது அள்ளி வீசுகிறாரே …”

“பிஜேபியுடன் கூட்டணி என்று அதிமுகவில் யாரும் பேசவே இல்லை…
அந்த கட்சியுடன் கூட்டு சேரக்கூடாது என்று கட்சியிலும் வலியுறுத்துவேன்……”

“தமிழகத்தில் பாஜக ஜீரோ…”

“அதனுடன் அதிமுக கூட்டு வைக்க வாய்ப்பே இல்லை…
மக்கள் கருத்து தான் என் கருத்து… என் கருத்தை கட்சியிலும் கூறி
இருக்கிறேன்…”

———-

இந்த காவல் தெய்வங்களால் மட்டும், கட்சியை பாஜகவின் அழுத்தங்களிலிருந்து விடுவிக்க முடியுமா…?

——————————————————————-

தொலைக்காட்சிக்கு பொன்னையன் கொடுத்த பேட்டி

.
—————————————————————————————————

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to அதிமுகவின் “காவல் தெய்வம்” பேட்டி – “பாஜகவும் ஊழல் கட்சி தான் – நோ கூட்டணி ” –

  1. அரவிந்தன்'s avatar அரவிந்தன் சொல்கிறார்:

    இந்த காவல் தெய்வங்களின் நிலை வலுப்பெறுவது தமிழ்நாட்டு அரசியலுக்கு நல்லது. இன்னும் சில பூத கணங்களும் இவற்றுடன் சேர்ந்து கொள்வது இன்னும் அதிக பயன் அளிக்கும்.

  2. மெய்ப்பொருள்'s avatar மெய்ப்பொருள் சொல்கிறார்:

    திரு பொன்னையன் இப்போது சொல்வது ” காலத்தின் கட்டாயம் “.
    தமிழ்நாட்டில் ஏதோ ஒரு கட்சி பா ஜ க கூட கூட்டணி வைத்தால்
    அதோடு அந்த கட்சி காலி ! அந்த கட்சிக்கு வரும் ஓட்டுக்கூட வராது .

    தேர்தல் முடிந்த பிறகு நிலைமை எப்படி இருக்கின்றது என்பதை
    பொறுத்து முடிவு செய்வார்கள் .

    “நேருவின் மகளே வருக – நிலையான ஆட்சி தருக ”
    என 1980 ல் மூத்த தலைவர் மு. கருணாநிதி முடிவு எடுத்தார் .
    எனவே நாளை தி மு க கூட பா ஜ க வை ஆதரிக்க நேரலாம் .
    யாருக்கு தெரியும் ?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.