…
…

..

…

..
..

..

“ஜார்ஜ்” என்று தான் பெரும்பாலானவர்கள் அவரை அழைப்பார்கள்.
அவரைச்சுற்றி எப்போதும் ஒரு சாதாரண உழைக்கும் மக்களின் கூட்டம் இருக்கும்….
மிகச்சிறந்த தொழிற்சங்கத் தலைவராக இருந்தவர் அவர்.
எனக்கு, இரண்டு முறை அவரை நேரடியாக, மிக அருகிலிருந்து சில மணி நேரங்கள் கூடவே இருந்து – கவனிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது.
மிக எளிய, எந்தவித பந்தாவும் இல்லாத மனிதர் அவர்.
அவர் பாதுகாப்பு அமைச்சராக பணியாற்றியபோது கூட,
டெல்லியில் இருந்த அவரது அதிகாரபூர்வ
“பாதுகாப்பு அமைச்சருடைய இல்லம் – ”
– எப்போதும் ஒரு சத்திரம் போலவே
(அல்லது சென்டிரல் ஸ்டேஷன் என்றும் சொல்லலாம்) இருந்தது.
ஏகப்பட்ட சாதாரணர்கள், சகஜமாக அங்கே வருவார்கள் – போவார்கள்.
சிலர் அங்கேயே வாரக்கணக்கில் தங்கியும் இருப்பார்கள்.
அவரைப்போன்றவர்கள் எல்லாம் அபூர்வப் பிறவிகள்.
எப்போதாவது தான் வருவார்கள்…
..

..
ஜார்ஜின் இறப்பு – தொடர்ந்து பல ஆண்டுகளாக
நோய்வாய்ப்பட்டிருந்த அவருக்கு –
– அவரைப்பொருத்த வரையில் ஒரு விடுதலை…
” நிம்மதியாக உறங்குங்கள் ஜார்ஜ்… ”
-காவிரிமைந்தன்
29/01/2019
.
———————————————————————————————–



வாஜ்பாய் அவர்களின் தலைமையிலான, முதலாவது NDA கூட்டணி அரசு திறமையாகவும், ஒற்றுமையாகவும் செயல்பட முதல், முக்கிய காரணமாக இருந்தவர் அதன் ஒருங்கிணைப்பாளராக பொறுப்பேற்றிருந்த ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் தான். சிக்கல்களை எல்லாம் மிகத்திறமையாகவும், பொறுமையாகவும் கையாண்டு, வாஜ்பாய் அவர்களுக்கு மிகவும் உதவியாக இருந்தார் ஜார்ஜ்.
காமை சார்… நீங்கள் ஜார்ஜைப் பற்றிய இடுகை இதற்கு முன்பே வெளியிட்டிருக்கணும் (வெளியிட்டிருக்கீங்களோ?). அவரைப் பற்றி நான் படித்த அறிந்த செய்திகளுக்கு மாறாக, ‘சவப்பெட்டி ஊழல்’ மற்றும் சில ஊழல்கள் அவர்மீது சாற்றப்பட்டது. அவரது சொந்த வாழ்விலும் அவருக்கு ஏதோ சிக்கல்கள் இருந்தன என்றும் படித்திருக்கிறேன் (பகுஜன் கான்ஷிராம் அவர்களுக்கு நடந்ததைப் போல)
புதியவன்,
மன்னிக்கவும்…. இந்த சமயத்தில் “ஜார்ஜ்” பற்றிய நல்ல நினைவுகளே என் நெஞ்சில் நிறைந்திருக்கின்றன.
அதை மாற்றிக்கொள்ள நான் விரும்பவில்லை…
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்