…
…
ஒரு மணி நேரத்திற்கு முன்
விகடன் செய்தியில் –
ஒரு செய்திக்கட்டுரை வெளியாகி உள்ளது….
( https://www.vikatan.com/news/politics/148309-admk-ready-to-forget-the-alliance-with-bjp.html )
அதன் முக்கிய கருத்துச் சுருக்கம் –
…

…
இந்த செய்திக் கட்டுரையில், பாதிக்கும் மேல் – அவர்களது யூகம் தான் என்றாலும் கூட –
இந்த தலைப்பு உண்மையாகும் பட்சத்தில், தமிழக அரசியலில் இது மிகவும் மகிழ்ச்சியான, வரவேற்கத்தக்க ஒரு செய்தியாக இருக்கும்.
.
————————————————————————————————



கைப் புண்ணுக்குக் கண்ணாடி தேவையில்லை.
இன்றைக்கு பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தால், அதிமுக sizeable தொண்டர்கள் (மாற்று மதத்தவரும்) அதிமுகவுக்கு வாக்களிக்காமல் டிடிவி தினகரனுக்கு வாக்களிக்கும் சூழல் நேரிடும் (அவர்கள் திமுகவுக்கு வாக்களிக்கமாட்டார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் அப்படி வாக்களிப்பது எம்ஜியாருக்கும் ஜெ.வுக்கும் செய்யும் துரோகம் என்று தெரியும்). அப்படி ஒன்று நேர்ந்தால் தினகரன் பலம் பெற்று அதிமுக அவருடைய தலைமையில் ஒன்றிணையும் வாய்ப்பு நேரிடும். அது அதிமுகவுக்கு நல்லதில்லை என்றே நினைக்கிறேன். இல்லை அது நல்லதுதானோ என்னவோ… யாரரிவார் (காரணம், யார் கை சுத்தம் என்று அரசியலில் நாம் அறிந்ததுதானே).
பாஜகவுடன் கூட்டணி சேர்வதால் தமிழகத்துக்கு எந்த விதமான நன்மையும் கிடையாது. உமியோடு அரிசி ஏன் சேரவேண்டும்? பாஜக தனித்து வாங்கப்போவதோ 2% வாக்குகள் (என்று நான் நம்புகிறேன், அதுவும் நாடாளுமன்றத் தேர்தல் என்பதால்). அவர்களால் ஒரு பாராளுமன்றத் தொகுதியிலும் இம்பேக்ட் காண்பிக்க முடியாது (கன்யாகுமரி-பொன்ரா தொகுதி, கோவை நீங்கலாக). அதனால் இந்திய அளவில், தமிழகம் பாஜகவை விரும்பவில்லை என்பது தெரியவரும். அதுதான் நல்லது.
அதற்குப் பதில், பாமக (6-7 தொகுதி), தேதிமுக (2 தொகுதி அல்லது அவர்களை டிராப் செய்து) கொடுத்து தைரியமாக களம் இறங்கலாம். 10-15 சீட்டுகள் கிடைக்கும் வாய்ப்பு உண்டு. திமுக பெரிய கூட்டணியாக களம் இறங்குவதாலேயும் அதிமுகவுக்கு ஸ்டார் தலைமை இல்லாததாலேயும் இந்த நிலைமை.
பாஜகவின் தலைவலியை ஏன் அதிமுக சுமக்கவேண்டும்? அவர்கள் கூட்டணியில் இருந்து, 5 தொகுதிகள் கிடைத்து, பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் தமிழகத்துக்கும் அதிமுகவுக்கும் ஒரு நன்மைகூட அவர்கள் செய்யமாட்டார்கள். இதுதான் பாஜகவின் வரலாறு. இதே நிலைமை காங்கிரஸ் கூட்டணியில் இருந்தால் அவர்கள் மத்திய மந்திரி, சுருட்டுவதற்கு அனுமதி என்பதை தாராளமாக வழங்குவார்கள். இதுதான் பாஜகவுக்கும் காங்கிரஸுக்கும் வித்தியாசம்.
அதிமுக தலைமை இதனைச் சிந்தித்து முடிவு எடுக்கவேண்டும்.
ஆறு , ஏழு தொகுதிகளுக்கு எல்லாம் பாமக ,அதிமுகவோடு கூட்டணி சேராது , தருமபுரி உட்பட வட மாவட்டங்களில் அவர்களது செல்வாக்குள்ள அத்தனை தொகுதிகளையும் கேட்பார்கள் . கொடுப்பதை வாங்கி கொண்டு போவதற்கு இது ஒன்றும் ஜெயா அதிமுக அல்ல . பலவீனமான எடப்பாடி அதிமுக . எடப்பாடி அதிமுக பாஜாகாவோடு சேர்ந்தாலும் சரி , சேரா விட்டாலும் சரி எந்த தொகுதிகளையும் வெல்லப்போவதில்லை .
அய்யா ….! அந்த விகடன் கட்டுரையில் பல கற்பனைகள் எழுதியவரின் மனதின் ஆசை போன்றவை நிறைய இருந்தாலும் — கடைசி வரிகள் தான் மிக முக்கியமானவை அவை // “அ.தி.மு.க ஒன்றும் அடிமைக் கட்சி இல்லை” என்பதை எடப்பாடி தனது பாணியில் உணர்த்தியுள்ளார் என்கிறார்கள், அ.தி.மு.க-வினர்.// — மக்களுக்கு சமீப காலங்களில் அதிமுக மீது வெறுப்பு ஏற்பட மூல காரணமே : இந்த ” பா.ஜ ,க ..அடிமைகள் — லும்பன்கள் ” என்று மக்கள் நினைக்கின்ற வகையில் மக்கள் — மற்றும் மாநில விரோத மத்திய அரசின் திட்டங்களுக்கும் — இயற்கை பேரழிவு காலங்களில் பாராமுகமாக இருக்கும் பா.ஜ.க மத்திய ஆட்சியின் போக்கும் — அவர்கள் சொற்படி மண்டையை ஆட்டுகின்ற எடப்பாடி அரசின் நடவடிக்கைகளும் தான் முக்கிய காரணிகள் என்பதால் பொதுவாக ஒரு வெறுப்பு இருக்கிறது — தேர்தல் அறிவித்தவுடன் அதிமுகவின் தற்போதைய அடிமை தனத்தில் இருந்து மத்திய அரசுக்கு எதிர்நிலை எடுத்தால் திட்டங்களை ஓரங்கட்டினால் மக்களின் மனநிலை கண்டிப்பாக மாறும் என்பதில் மாற்று கருத்து இருக்காது என்பதே நிலைமை …
திமுக என்னதான் கிராம சபை — அறிக்கை என்று மாய்மாலங்கள் செய்தாலும் — அவர்களின் செயல் பாடுகளை மக்கள் ஏற்றுக்கொள்வார்களா என்பதே கேள்விக்குறியாகத்தான் இருக்கும் — பழசை மக்கள் மறக்கவில்லை — மறக்கும்படியாக அவர்கள் இல்லை என்பதும் அவர்களின் செயல் மூலம் வெளிப்படுகிறது — சட்டசபையில் இருந்து வெளிநடப்பு கட்சி — ஆக்ரோஷமான போராட்டங்களை தவிர்ப்பது — மத்திய அரசின் மாநில நலன் பொருந்தா திட்டங்களை கடுமையாக எதிர்க்காமல் பம்முவது — எதிர்த்தால் ரெய்டு வருமோ என்று பதுங்குவது போன்றவற்றையும் மக்கள் கவனித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள் … தேர்தல் நெருக்கத்தில் காட்சிகள் மாறும் போது தான் நிலவரம் புரியுமோ …?