…
…
ஐசிஐசிஐ வங்கி மூலம் வீடியோகான் நிறுவனத்திற்கு முறைகேடாக
3250 கோடி ரூபாய் கடன் கொடுத்து –
அதன் மூலம் சொந்த முறையில் பண ஆதாயம் பெற்றதாக அந்த வங்கியின் (முன்னாள்) தலைமை நிர்வாக அதிகாரி சந்தா கோச்சார்,
அவரது கணவர் தீபக் கோச்சார், விடியோகான் குழும
நிர்வாக இயக்குநர் வேணுகோபால் தூத் ஆகியோருக்கு எதிராக சிபிஐ
விசாரணை நடத்தி வந்தது…
கடந்த சில மாதங்களாக நடத்தப்பட்டு வந்த
விசாரணையின் விளைவாககடந்த 22/01/2018 அன்று
இவர்கள் மீது ஒரு FIR பதிவு செய்யப்பட்டது.
உடல்நலக்குறைவு காரணமாக அமெரிக்கா சென்று, அங்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார் திரு.அருண் ஜெட்லி.
என்ன வியாதி என்று வெளியே சொல்லப்படாமல் ரகசியமாக வைக்கப்பட்டிருக்கும் வேளையில், அவரது நண்பர்கள் ஒருவகை புற்று நோயாக இருக்கலாமென்று சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
( திரு.அருண் ஜெட்லி, விரைவில் உடல்நலம் பெற்று நாடு திரும்ப
வேண்டும் என்று மனிதாபிமானம் காரணமாக வேண்டுகிறோம்…)
அவர் உடனடியாக பணிக்குத் திரும்ப வாய்ப்பில்லை என்கிற காரணத்தால், அவரது இடத்தில் திருவாளர் பியூஸ் கோயல், தற்காலிக நிதியமைச்சராக நியமிக்கப்பட்டு, திரு.ஜெட்லி இலாகா இல்லாத அமைச்சராக ஓய்வில் /சிகிச்சையில் இருக்கிறார்…!!!
இது ஒரு பக்கம் இருக்க –
ஆயிரக்கணக்கான மைல்கள் தாண்டி டெல்லியில்
22-ந்தேதி நடைபெற்ற ஒரு நிகழ்வுக்கு அமெரிக்காவிலிருந்தே, துடிதுடித்துப்போய் கண்டனக்குரல் எழுப்பி இருக்கிறார் ஜெட்லிஜி…
அது என்ன நிகழ்வு …?
ஐசிஐசிஐ வங்கியில் நடத்தப்பட்ட முறைகேடுகளை காரணம் காட்டி,
அந்த வங்கியின் (முன்னாள்) தலைமை நிர்வாக அதிகாரி சந்தா கோச்சார், அவரது கணவர் தீபக் கோச்சார், மற்றும் விடியோகான் குழும நிர்வாக இயக்குநர் வேணுகோபால் தூத் ஆகியோருக்கு எதிராக சிபிஐ FIR போட்டு, வழக்கு பதிவு செய்த நிகழ்வு தான் அது.
துடித்துப்போய், சிபிஐ-க்கு தேவையில்லாத adventure -ல் ஈடுபடாதீர்கள்என்று அட்வைஸ் செய்கிறார்.
பொதுவெளியில் இப்படி எழுதுகிறோமே – இது குறித்து விமரிசனம் வருமே என்று கூட யோசிக்காமல், திரு.ஜெட்லி துடித்துப்போய் சிபிஐ பற்றி, நிறைய comments போட்டு, ட்விட்டர் செய்திகள் வெளியிடுகிறார்…கீழே அவற்றை பார்க்கலாம்.
…

…

…

…
இங்கே சில கேள்விகள் எழுகின்றன….
எந்த முறையில் திரு.ஜெட்லி இந்த கருத்துகளை வெளியிட்டிருக்கிறார்..?
அவர் இப்போது நிதியமைச்சர் இல்லை. மத்திய அரசின் எந்த இலாகாவும் அவரது நிர்வாகத்தில் இல்லை. ஒருவேளை நிதியமைச்சராக இருந்தால் கூட, சிபிஐ அவரது நிர்வாகத்தின் கீழ் வராது.
சட்டப்படி, சிபிஐ ஒரு சுயேச்சையான அமைப்பு..
அதன் செயல்பாடுகளில் இவர் குறுக்கிடுவதை எந்தவித சட்டங்களோ, முறைகளோ, நியாயப்படுத்தவில்லை.
அடுத்த கேள்வி, இவருக்கு இந்த வழக்கில் அப்படியென்ன விசேஷ ஈடுபாடு…? சிபிஐ அமைப்பு FIR தானே பதிவு செய்திருக்கிறது… ?
அதுவும், அவர்களிடம் உள்ள ஆதாரங்களின் அடிப்படையில்….?
எந்த ஆதாரங்களின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்பது வழக்கு நீதிமன்றத்திற்கு வரும்போது தான் தெரியவரும்.
அந்த அடிப்படை ஆதாரங்கள் பற்றி எதுவும் அறிய வாய்ப்பில்லாத நிலையில், எந்த தகுதியில் இவர் சிபிஐ நிர்வாகத்தை – குறை கூறுகிறார்..?
( பயமுறுத்துகிறார் என்று சொல்வது தான் பொருத்தமாக இருக்கும்…! )
இவருக்கு இந்த வழக்கில் அப்படியென்ன அக்கறை…?
இத்தோடு தீர்ந்ததா விவகாரம்….?
இவர் அறிக்கை வெளியிட்டதன் விளைவு –
எந்த சிபிஐ அதிகாரி, FIR பதிவு செய்தாரோ, சுதான்ஷு தார் மிஸ்ரா,
என்கிற அந்த அதிகாரி, மறுநாளே தன் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு விட்டார்.
…

..

…
இது ஜெட்லிஜியின் தலையீட்டின் விளைவு என்று அப்பட்டமாகத் தெரிகிறது….
தமிழில் ஒரு பழமொழி உண்டு… குதிரை
கீழே தள்ளியதோடு நில்லாமல் குழியையும் பறித்ததாம் என்று…
அதுபோல், இந்த அதிகாரி மாற்றம் செய்யப்பட்டதற்கு கண்டனங்கள்
வந்துவிடப்போகின்றனவே என்று எண்ணியோ என்னவோ சிபிஐ தரப்பில் ஒரு விளக்கமும் வெளியிடப்பட்டுள்ளது…?
இந்த வழக்கை மிக அதிக காலம் தாமதப்படுத்தியதற்காக – அந்த அதிகாரி பொறுப்பிலிருந்து விடுவிக்க்ப்பட்டிருக்கிறாராம்…!
( அது FIR பதிவு செய்யப்பட்டு, அருண்ஜி அமெரிக்காவிலிருந்து அறிக்கை விட்ட பிறகு தான், அவர்களுக்கு தெரிய வந்திருக்கிறது போலும்….)
முறைகேடுகள், முறைகேடுகள் – தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கின்றன…. யார் என்ன செய்து விட முடியும் எங்களை – என்கிற அலட்சியமும், அகம்பாவமும் தான் இந்த நிகழ்வுகளின் மூலம் வெளிப்படுகின்றன….!!!
நடப்பவற்றை, பொது மக்களும் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்…!!!
.
——————————————————————————-



KM Sir this news is removed from all the news papers now
இதையும் அகற்றி விடுவார்களா…?
அய்யா .. ! ஒரு நீண்ட தலைசுற்றும் வரலாறு :– // A to Z சந்தா கோச்சார் மீதான 3250 கோடி வாராக் கடன் வழக்கு..! // ….. இதில் என்னவொரு வேடிக்கை என்றால் ….. // 2012 காலத்தில் எஸ்பிஐ தலைமையில் 20 வங்கிகள் இணைந்து வீடியோகான் நிறுவனத்துக்கு 40,000 கோடி கடன் கொடுக்கிறார்கள். அதில் ஐசிஐசிஐ வங்கியின் பங்கு 3,250 கோடி ரூபாய்.
ஏப்ரல் 26, 2012-ல் வீடியோகான் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டிருந்த மொத்த கடன் கணக்குகளும் ஒரே கணக்காக ஒருங்கிணைக்கப்படுகிறது. ஜூன் 30, 2017-ல் வீடியோகான் நிறுவனத்தின் Videocon International Electronics Ltd (VIEL)-ன் கணக்கு வாராக் கடனாக அறிவிக்கப்படுகிறது // .
Read more at: https://tamil.goodreturns.in/news/2019/01/25/chanda-kochhar-icici-bank-loan-her-husband-issue-complete-details/articlecontent-pf68680-013264.html வாராக் கடன் என்று அறிவித்த பின் விசாரணை– எப் .ஐ.ஆர் என்றால் ” அக்கறை ” அதிகமாகுமோ …?
மாற்றி மாற்றி வேறு வேறு பெயர்களில் கம்பெனியை துவக்குவது, கம்பெனிக்குள்ளே கம்பெனி, மாற்றி மாற்றி ஷேர்களை, பொறுப்புகளை – மாற்றிக் கொள்வது, வெவ்வேறு பெயர்களில், வெவ்வேறு வங்கிகளில் கடன் வாங்குவது – என்று பார்த்தாலே புரிகிறது இது ஒரு மோசடி கும்பல் என்று.
ஆனால், ஜெட்லிஜி ஏன் இதற்கு வக்காலத்து வாங்குகிறார், எதற்காக
பரிந்து பேசுகிறார் என்பது தான் புரியாத புதிராக இருக்கிறது.
Prashant Bhushan, lawyer and political activist says –
“It is not quite proper for the Union finance minister to comment on a CBI case, which is still being investigated. The agency is still examining people in the case and it should be in a position to conduct the probe in an independent way,”
கொள்ளையர்களுக்கு வக்காலத்து வாங்குபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கும் அந்த பாவத்தில் பங்கு உண்டு.
போலவே, தான் ஆதரிக்கும் கட்சிகள், தலைவர்கள் செய்யும் அனைத்து அட்டூழியங்களிலும் கொலை, கொள்ளை, மோசடிகளிலும் அதில் ஈடுபடுபவர்களுக்கு இணையாக அதை ஆதரிப்பவர்களையும் அந்த பாவத்தில் பங்கு வந்து சேரும்.
இதை அறியாதவர்களாகவே பெரும்பாலானவர்கள் ஈடுபடுகின்றனர்.
பரிதாபத்துக்கு உரியவர்கள்.
அய்யா .. ! திரு .வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, பாதுகாப்புத்துறை அமைச்சராக பதவி வகித்தவர் ஜார்ஜ் ஃபெர்னான்டஸ். ..இவர் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த போதுதான் கார்கில் போர் நடந்தது. மேலும் தனி ஈழம் அமைய வேண்டும் என்று பேசி நாட்டையே திரும்பி பார்க்க வைத்தவர்தான் ஜார்ஜ் ஃபெர்னான்டஸ்…
”தலைமுறைகள் கடந்தாலும் இந்தியர்கள் உங்களை நினைவில் வைப்பார்கள். இந்திய ஜனநாயகத்திற்கு நீங்கள் பெரிய சேவையை புரிந்துள்ளீர்கள். மக்களின் தலைவர் நீங்கள். வலிமைமிக்க நிர்வாக திறனை கொண்டுள்ளீர்கள்” …என்று பாராட்டுக்கள் நிறைந்து தனது வாழ்த்தினை பிரதமர் மோடிஜி அவர்கள் இவரது சென்ற பிறந்த நாள் வாழ்த்தாக இவருக்கு தெரிவித்திருந்தார் என்பது — ஜார்ஜ் அவர்களின் தனித்தன்மையை எடுத்துக்கூறும் —
இன்று காலமானார். அவருக்கு வயது 88.– ஒரு சோஷியலிஸ்ட் நம்மை விட்டு பிரிந்துவிட்டார் .. ஆன்மா சாந்தியடையட்டும் .. !!! அய்யா …நீங்கள் அதிக காலம் வடநாட்டில் பணியில் இருந்திர்கள் தங்களின் பார்வையில் இவரைப்பற்றி …?
செல்வராஜன்,
தனியே எழுதி இருக்கிறேன்.
-காவிரிமைந்தன்