…
…
ஞாயிறு அன்று, மோடிஜி மதுரைக்கு விஜயம் செய்ததையொட்டி, டாக்டர் சு.சுவாமி, தனது ட்விட்டர் மூலமாக ஒரு மிரட்டல் அறிவிப்பு விடுத்திருந்தார்…
———————–
மதுரையில் இருக்கும் விமான நிலையம், நான் மதுரை பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது, என்னுடைய முயற்சிகளின் விளைவாக
கட்டப்பட்டது…
பிரதமர் மோடி என்னுடைய சொந்த ஊரான மதுரைக்கு செல்லும்போது, மதுரை விமான நிலையத்தின் பெயரை “முத்துராமலிங்கத்தேவர் இண்டர்நேஷனல் ஏர்போர்ட்” என்று பெயரிடுவதாக அறிவிக்க வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்…( I demand….)
…
வேண்டுகோள் – request – என்கிற வார்த்தையே கிடையாது…
வலியுறுத்துகிறேன் – Demand – தான்.
…

————————
யாரை யார் மிரட்டுவது…. குஜராத்திக்காரரிடம், சு.சுவாமியின் “பாச்சா”
பலிக்குமா..?
மோடிஜி வந்தார்… சென்றார்… விமான நிலைய பெயர் மாற்றம் பற்றிய எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை…!
“மதுரை அல்வா” வின் விளைவு – re-action – எதாவது வெளியில் தெரியுமா அல்லது வழக்கம் போல் அசடு வழிய – சு.சுவாமி அடுத்த ஆட்டத்திற்கு சென்று விடுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் ….!!!
இரண்டாவதிற்கு தான் சான்ஸ் அதிகம்…!!!
.
——————————————————————————————



KM Sir sorry for bringing another news which is no way connected to the one you have mentioned above.
https://www.vikatan.com/news/india/148173-cbi-officer-transferred-who-signed-fir-against-chanda-kochhar.html?artfrm=home_breaking_news
Sharron,
No sorry… You have rightly brought this news into attention.
நான் ஏற்கெனவே இது குறித்து “ஐசிஐசிஐ விவகாரத்தில் அருண்ஜி அமெரிக்காவிலிருந்தே
துடிப்பது ஏன்…? ” என்கிற தலைப்பில் ஒரு இடுகை எழுதிக்கொண்டிருக்கிறேன்…
இன்னும் கொஞ்சம் விவரங்கள் சேகரித்துக் கொண்டிருக்கிறேன். மதியம் இடுகை
வெளியாகும்…
வெளியே விமரிசனம் கிளம்பும் என்று தெரிந்தும், ஜெட்லிஜி வெளிப்படையாகவே
சிபிஐ செயலை கண்டித்திருக்கிறார்…
எதிர்க்கட்சிகள் என்ன செய்கின்றன பார்ப்போம்.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் தேவர் பெயரை வைக்கவேண்டுமென்கிற கோரிக்கை இங்கே நீண்ட நாட்களாகவே இருப்பதுதான்! இதற்குப் போட்டியாக இமானுவேல் சேகரன் பெயரைசூட்ட வேண்டுமென்ற கோரிக்கையும் உண்டு! இந்த சிலைவைத்தல், பெயர் சூட்டுதல் அல்லது மாற்றுதல் என்கிற சாங்கியம் எத்தனை அக்கப்போர்களைத் தூண்டக்கூடியது என்பது தெரிந்துதான் விமரிசனமாக எழுதினீர்களா?
கிருஷ்ண மூர்த்தி S,
இல்லை… நீங்கள் என்னை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்று நினைக்கிறேன். இந்த பெயர் வைக்கும் விவகாரத்தில் எல்லாம் எனக்கு எந்தவித பற்றும் கிடையாது.
நான் just டாக்டர் சு.சுவாமியையும், மோடிஜியையும் கிண்டல் செய்ய முனைந்தேன்… அவ்வளவே.
இவர் பெரிய பிஸ்தா மாதிரியும், தான் சொன்னால் பிஎம் பயந்துபோய் செய்து விடுவார் என்கிற மாதிரியும் ட்வீட் போட்டு டிமாண்ட் பண்ணுகிறார்… அவர் வழக்கம்போல், அவர் ஸ்டைலில் கொஞ்சம் கூட லட்சியமே செய்யாமல்
தன் வழியில் போய்க்கொண்டே இருக்கிறார்…
இவர் அசடு வழியும் முகத்தை துடைத்துக்கொண்டு, இதை சுத்தமாக மறந்துவிட்டு, அடுத்த விவகாரத்திற்கு jump செய்யப்போகிறார்… இவர் வார்த்தைகளை சீரியசாக எடுத்துக் கொள்பவர்கள் எவ்வளவு பரிதாபத்திற்குரியவர்கள்..!!!
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்