இன்னொரு மனதை உருக்கும் ஹிந்தி பாடல்… (என் விருப்பம் -23 )



(இந்த பாடலைப் பாடியிருக்கும் திரு.மன்னா டே ..)

காலையில் போட்ட பதிவிலேயே இதையும் சேர்க்க எண்ணி இருந்தேன்.
எப்படியோ, இறுதியில் பதிவிடும்போது தவறி விட்டேன்.

அதனாலென்ன, இன்று விடுமுறை நாள் தானே… இன்னொரு பாடலும்
கேட்கலாம் அல்லவா ….!!!

‘சீமா’ என்கிற ஹிந்தி திரைப்படம்…
இதில் மிகச்சிறந்த குணசித்திர நடிகர் பால்ராஜ் சஹானி – ஒரு அநாதை இல்ல காப்பாளராக நடிக்கிறார்.

திரையில் அவர் பாடுவதாக வரும் “தூ ப்யார் கா சாகர் ஹை” “கருணைக்கடல் நீ” என்று கடவுளை வேண்டி பாடும் இந்த பிரார்த்தனைப் பாடலை இசையமைப்பாளர்கள் ஷங்கர்-ஜெய்கிஷன் இசையமைப்பில் பாடி இருப்பவர் வங்காளத்தைச் சேர்ந்தவரும் ஹிந்தி திரைப்பட பாடகருமான மன்னா டே.

மன்னா டேயின் குரல் கொஞ்சம் வித்தியாசமானது…ஒரு சிலருக்கு மட்டும் தான் பொருந்தும்..!!

சில பிரார்த்தனை பாடல்களை எத்தனை முறை கேட்டாலும் அலுப்பதில்லை… இல்லையா…? அவற்றில் இதுவும் ஒன்று.

(வீடியோவை காப்பிரைட் காரணமாக இங்கே பார்க்க முடியவில்லை…
watch on youtube -என்று தெரியும் இடத்தில் க்ளிக் செய்தால் பார்க்கலாம்..)

.
———————————————————————————————————

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

1 Response to இன்னொரு மனதை உருக்கும் ஹிந்தி பாடல்… (என் விருப்பம் -23 )

  1. Mani's avatar Mani சொல்கிறார்:

    நீங்கள் பதிவு செய்திருக்கும் இரண்டு பாடல்களுமே அருமை சார்.
    மனதை உருக்கும் பாடல்கள்.
    மொழி தெரியாவிட்டாலும் கூட அரைகுறையாக அர்த்தம் புரிகிறது.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.