இசைக்கு ஏது ஜாதியும், மதமும் ….. ? (என் விருப்பம் – 22)


மனதிற்கு பிடித்த, நல்ல இசையை – அனுபவித்து ரசிப்பவர்கள், பாடுபவர்கள், யாரும் – ஜாதி, மதம், மொழி ஆகியவை தங்கள் ரசனையில் குறுக்கிடுவதை அனுமதிக்க மாட்டார்கள்… மொழி தெரிந்திருந்தால், அது ஒரு கூடுதல் சந்தோஷம்…அவ்வளவே.

ஒரு அற்புதமான, அந்தக்காலத்தில் மிகவும் புகழ்பெற்ற பாடல் ஒன்றை இன்று என் விருப்பமாக கீழே பதிந்திருக்கிறேன். நண்பர்களும் ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

இந்த பாடலுக்கென்று ஒரு தனி மதிப்பு / விசேஷம் இருக்கிறது…

ஹிந்து கடவுளான சிவனைக் குறித்த பாடல் இது …

இதை எழுதியவர் ஹிந்தி திரையுலகில் புகழ்பெற்ற உருதுக் கவிஞர் ஷகீல் பதாயுனி – இவர் ஒரு இஸ்லாமியர்…!

இந்த பாடலுக்கு இசையமைத்தவர், புகழ்பெற்ற
ஹிந்தி இசையமைப்பாளர் நௌஷாத் அவர்கள். இவரும் ஒரு இஸ்லாமியர்….!

இந்த பாடலை மனமுருகி, உணர்வுபூர்வமாக பாடியவர் – புகழ்பெற்ற பாடகர் மொஹம்மது ரஃபி… இவரும் ஒரு இஸ்லாமியர் என்பதை நான் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை…

1) முதலில் ரஃபி ஒரு மேடையில் நேரடியாக, இசைக்குழுவினருடன் பாடிய வீடியோ… இதில் இசையமைப்பாளர் நௌஷாத் அவர்களும் இருக்கிறார்….

2) “ஓ பகவான்” பாடலை பாட வேண்டும் என்று விரும்பாத புகழ்பெற்ற
பாடகர்களே கிடையாது என்று சொல்லலாம். ஒரு மேடை நிகழ்ச்சியில்,
கே.ஜே.யேசுதாஸ் அவர்கள் உணர்ச்சிகரமாக இந்த பாடலை பாடியிருப்பது அடுத்த வீடியோவில்….
(யேசுதாஸ் ஒரு கிறிஸ்தவர் என்று நான் சொல்ல மாட்டேன்.. அவர் எல்லாருக்கும் பொதுவானவர்..!! )

3) இந்தப் பாடல், 1952-ல் வெளியாகி, பாடல்களுக்காகவே
Super HIT ஆன ஹிந்தி திரைப்படம் “பைஜூ பாவாரா” வில் இடம் பெற்றது. திரைப்படத்தில் அந்த பாடல் வரும் நிகழ்ச்சியையும் பார்த்தால் தானே நமக்கு நிறைவு ஏற்படும்…. கடைசியாக இந்த வீடியோவையும் பதிந்திருக்கிறேன்… இதில் நடித்திருப்பவர் அந்தக்காலத்தில் புகழ்பெற்ற ஹிந்தி நடிகர்
“பாரத் பூஷன்”…

இனி – மனதை உருக்கும் “ஓ பகவான்…”

——————————————————–

மொஹம்மது ரஃபி, நௌஷாத் –

————————-

கே.ஜே.யேசுதாஸ் –

—————————

பைஜூ பாவாரா திரைப்படத்தில் -பாரத் பூஷன் –

.
———————————————————————————

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to இசைக்கு ஏது ஜாதியும், மதமும் ….. ? (என் விருப்பம் – 22)

  1. அரவிந்தன்'s avatar அரவிந்தன் சொல்கிறார்:

    மனதை உருக்கும் பாடல். மொழி தான் புரியவில்லை.
    இருந்தாலும் நீங்கள் சொல்வது போல் உணர்வு புரிகிறதே. அது போதுமே.
    அதையே யேசுதாஸ் பாடுவதும் சிறப்பாக இருக்கிறது.
    இவற்றையெல்லாம் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.

  2. மெய்ப்பொருள்'s avatar மெய்ப்பொருள் சொல்கிறார்:

    இசையை ரசிக்க மொழி தேவை இல்லை – அதற்கு உதாரணம் ரஃபி .

    இந்தியில் அவ்வளவு பெரிய பாடகராக இருந்த ரஃபி க்கு தமிழ்
    சுத்தமாக தெரியாது .அப்படி இருந்த போதும் T M S பாடும்
    தமிழ் பாட்டைக் கேட்பார் . TMS விசிறி என்று சொல்லிருக்கிறார் .

    பைஜூ பாவ்ரா இன்னொரு பாட்டு

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


      நன்றி நண்பரே.
      நான் சிறுவயதிலிருந்தே விரும்பி ரசிக்கும் இன்னொரு பாடல் இது…

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.