…
…
முழு சுதந்திரமும், அரசியல் தலையீடு இல்லாத சூழ்நிலையும் இருந்தால், தமிழகத்தைச் சேர்ந்த பல IAS அதிகாரிகள் எவ்வளவு சிறப்பாக பணியாற்றக்கூடிய திறமையுடையவர்கள் என்பதை நடந்து முடிந்த உலக முதலீட்டாளர் மாநாடு (Global Investor’s Meet) நிரூபித்துக் காட்டியுள்ளது.
தமிழகத்தின் அத்தகைய அதிகாரிகளின் சிறப்பான பணிக்கு பாராட்டு தெரிவிக்கவும், இதில் அரசியல் தலையீடு சுத்தமாக இல்லாமல் பார்த்துக்கொண்டதற்காக முதலமைச்சர் திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கவும் – இந்த இடுகையை விசேஷமாக பதிவு செய்கிறேன்.
( தமிழக அரசின் அரசியல் செயல்பாடுகளைப்பற்றி இந்த இடுகையில் நான் எதுவும் பேச விரும்பவில்லை…! )
முதலில் – இந்த மாநாட்டில் கைகூடப்பெற்ற சில விஷயங்கள் –
தமிழக அரசு சார்பில் நடத்தப்பட்டுள்ள 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, அதன் வாயிலாக ரூ.3 லட்சத்து 431 கோடிக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.
இதன்மூலம் 10 லட்சத்து 50 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறுவார்கள்
என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாகை மாவட்டத்தில் பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையம் அமைக்க சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் ரூ.27,400 கோடியும்,
பேட்டரி கார்களை உற்பத்தி செய்ய ஹுண்டாய் நிறுவனம் ரூ.7 ஆயிரம்
கோடியும் முதலீடு செய்ய உள்ளன.
எம்ஆர்எஃப் நிறுவனம் தனது பெரம்பலூர், வேலூர் மாவட்ட ஆலைகளை விரிவு படுத்த ரூ.3,100 கோடியும்,
ஸ்மார்ட்போன் உற்பத்தி செய்ய பாக்ஸ்கான் நிறுவனம் ரூ.2,500 கோடியும்,
காட்டுப்பள்ளி துறை முக விரிவாக்கப் பணிக்காக அதானி நிறுவனம்
ரூ.10 ஆயிரம் கோடியும் முதலீடு செய்கிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில் பியூஜியோ கார் உற்பத்தி ஆலையை நிறுவ,
பிரான்ஸின் பிஎஸ்ஏ நிறுவனம் ரூ.1,250 கோடி, எய்ஷர் நிறுவனம் தனது
விரிவாக்கப் பணிக்காக ரூ.1,500 கோடி முதலீடு செய்கிறது.
ஜப்பான், தென்கொரியா, தைவான், ஜெர்மனி, பிரான்ஸ், பின்லாந்து, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பல நிறுவனங்களுடன்
தமிழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
அமெரிக்க நிறுவனமான டீபிஐ, தமிழகத்தில் காற்றாலைகளுக்கான இறக்கைகளை தயாரிக்க உள்ளது.
பின்லாந்தின் சல்காம்ப், சீனாவின் லக்சேர் நிறுவனங்கள் – வன்பொருள் உற்பத்தி துறையில் முதலீடு செய்கின்றன.
மாநிலத்தின் அனைத்து பகுதிகளும் சம வளர்ச்சி பெறும் வகையில் முதலீடுகளை திரட்ட இந்த மாநாட்டில் முக்கியத்துவம் தரப்பட்டது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய மாவட்டமான நாகையில், சென்னை பெட்ரோலியம் நிறுவனம் முதலீடு செய்கிறது. தென் மாவட்டங்களில்
பிரிட்டானியா, ராம்கோ போன்ற நிறுவனங்கள் முதலீடு செய்கின்றன.
டிவிஎஸ், எம்ஆர்எஃப் உள்ளிட்ட நிறுவனங்கள் கூடுதல் முதலீடுகளுக்கு
ஒப்புக்கொண்டுள்ளன.
சிறு, குறு, நடுத்தர தொழில்துறையில் ரூ.32,206 கோடிக்கு முதலீட்டு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உணவு பதப்படுத்தும் துறையில்
ஜிஎஸ்இ அவிக்னா நிறுவனம் ரூ.2 ஆயிரம் கோடிக்கு உணவுப் பூங்கா
அமைக்க ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
Times of India ஆங்கில செய்தித்தாளிலிருந்து சில பகுதிகளையும் இங்கே
தர விரும்புகிறேன்….

…

…
இந்த மாநாடு சிறப்பாக நடைபெற்றதில் முக்கிய பங்காற்றிய சில அதிகாரிகளைப்பற்றி, Times of India ஒரு குறிப்பீடு தந்துள்ளது.
…

…
இவர்களைத் தவிரவும், பின்னணியில் – மேடைக்கு வராத இன்னும் பல
அதிகாரிகள், திரு.ககன்தீப் சிங் பேடி போன்றவர்கள் – மிகச்சிறப்பாக பணியாற்றி இருக்கிறார்கள்.
இந்த 3 லட்சம் கோடி ஒப்பந்தங்களில், கால்பங்கு அளவிற்கு-
சுமார் 75 ஆயிரம் கோடி அளவிற்கு நடைமுறையில் வந்தால் கூட, இந்த மாநாடு மிகவும் வெற்றிகரமான ஒரு முயற்சி என்று தான் சொல்ல வேண்டும்.
பிரதமரின் தீவிர பங்களிப்போடு, குஜராத்தில் கடந்த வாரம் நடந்த உலக முதலீட்டாளர் மாநாட்டில், இதை விட மிகக்குறைவான அளவில் தான் முதலீடுகள் கிடைத்தன என்பதை இங்கு அவசியம் குறிப்பிட்டால் தான், ஒரு ஒப்பீடு கிடைக்கும்.
…

…
The government, however, maintained silence on the total quantum of investments promised during the summit.
Barring a few major long-term investment announcements, which were made in presence of the Prime Minister Narendra Modi on the inaugural day on Friday, no other announcements could catch the fancy of the industry.
The Gujarat Deputy Chief Minister Nitin Patel said, “The (investment) amounts need not to be given much attention.
—————-
இந்த முயற்சியில் ஈடுபட்ட அனைத்து அதிகாரிகளுக்கும், அவர்களது பணியில் அரசியல் ரீதியான எந்தவித குறுக்கீடுகளும் இல்லாதபடி பார்த்துக்கொண்டு – அவர்களுக்கு முழு சுதந்திரம் அளித்து செயல்பட்ட, தமிழக அமைச்சரவைக்கும் –
– இந்த விமரிசனம் தளம் – அரசியலுக்கு அப்பாற்பட்டு – வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.
.
———————————————————————————



அய்யா …! உண்மையில் நல்ல மனதோடு நமது தமிழகத்திற்கும் இது போன்ற உலக முதலீட்டார்கள் வரவேண்டும் — தொழில் தொடங்க வேண்டும் — வேலைவாய்ப்பு பெருக வேண்டும் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது — இருந்தாலும் தற்போது உயர் நீதிமன்றம் எழுப்பியுள்ள இந்த கேள்வியும் — நம் மனதில் ஒரு புறத்தில் இருக்கத்தானே செய்கிறது — இந்த மாநாடுகள் ஒரு விழா சடங்காக அவ்வப்போது நடந்து விட்டு போகிறதா என்பதற்கான விடையும் கிடைக்க வேண்டுமல்லவா …?
// முதல் உலக முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் எத்தனை தொழில்கள் தொடங்கப்பட்டன? நீதிமன்றம் சரமாரிக் கேள்வி // https://www.dinamani.com/tamilnadu/2019/jan/25/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-3082956.html இதற்கான பதிலில் தான் இருக்கிறது இப்போதைய மாநாட்டின் பலா பலன் … அப்படித்தானே ..?
செல்வராஜன்,
நீதிமன்ற கேள்விகள் கடந்த மாநாட்டைப் பற்றியது. நான் இந்த இடுகையில் கடந்த மாநாட்டைப்பற்றி எதுவும் கூறவில்லையே…?
நேற்றும், அதற்கு முன்தினமும் நம் கண்ணெதிரே நடந்தவற்றை தெரிந்து கொள்வதற்கு நீதிமன்றம் தேவையில்லை… தொலைக்காட்சியையும், செய்திதளங்களையும் தொடர்ச்சியாகப் பார்த்து விவரங்களை கோர்வையாக தெரிந்துகொண்டால் போதும்.
இதில் சொல்லப்பட்ட 3 லட்சம் கோடியில், இறுதியாக எத்தனை கோடி தேறும் என்பதை குறைந்த பட்சம் 6 மாதங்கள் கழித்து தான் தெரிந்து கொள்ள முடியும்.
இதில் கால் பங்கு (அதாவது 25 %) – 75,000 கோடி அளவிற்கு நடைமுறையில் வந்தால் கூட அதுவே சிறப்பான பலன்-விளைவு தான் என்று நான் எழுதி இருக்கிறேன்… இதில் எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை.
நான் இங்கு குறிப்பாக பாராட்டி இருப்பது இந்த மாநாட்டிற்காக கடுமையாக உழைத்து, சிறப்பாக செயல்பட்ட தமிழக IAS அதிகாரிகளையும், அவர்களின் செயல்பாடுகளில் அரசியல் குறுக்கீடுகள் இல்லாமல் பார்த்துக்கொண்ட அரசியல் தலைமையையும் தான்…
இதை உணர்ந்து கொள்வதற்கு நீதிமன்றத்தின் துணை தேவையில்லை. நமக்கிருக்கும் புரிந்துணர்தலே போதும்.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
Ayya, Nalla pathivu. 25% is decent expectations. Hope it can bring more employment opportunities. Otherwise it shall be a big problem for lot of graduates. When i Joined engineering, TN had just 90 Engg colleges. In 20 years, Colleges became 6 fold. Whereas Job opportunities are not good. More engg graduates are doing Ola / Uber, Swiggy services.
தமிழக அதிகாரிகள் மிகச்சிறப்பாக செயல்பட்டிருக்கிறார்கள். சில அதிகாரிகள்
பல மாநிலங்களுக்கு பயணம் செய்து, சிறப்பான பலன் கிடைக்க பெரும் முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் செயல்பாடுகள் நிச்சயம்
பாராட்டுக்கு உரியவையே.