…
…
…
…
சந்தேகத்திற்குள் போகும் முன்னர், இந்த செய்தியை படித்து விடுங்கள் –
…

…
3000 கிலோ இறைச்சியுடன், சுமார் 20,000 நபர்களுக்கு, 3 திருமண மண்டபங்களில் விருந்து நடந்ததாக புகைப்படத்துடன் செய்தி கூறுகிறது.
விருந்திற்கான காரணம், திரு.ஜி.கே.மணி அவர்களின் 3 வயது பேரப்பிள்ளைக்கு கோவிலில் காது குத்தி, காதணி அணிவிக்கப்பட்டதை கொண்டாடுவது.
நமக்கு ஒரு சின்ன சந்தேகம் …
திரு.ஜி.கே.மணி அவர்கள் – 1996, 2001 மற்றும் 2006 என 3 முறை தமிழக சட்டமன்றத்திற்கு எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டது நமக்குத் தெரியும்….
இந்த ஒன்றைத்தவிர, இந்த அளவிற்கு பிரம்மாண்டமான முறையில் விருந்து நடத்தும் அளவிற்கு அவர் பண வசதி படைத்தவரா…? என்ன தொழில் அல்லது வர்த்தகம் செய்கிறார்…?
.
————————————————————————————————————–



திரு G K மணியின் சொத்து விபரம் :
இங்கே பார்க்க :
http://www.myneta.info/tamilnadu2011/candidate.php?candidate_id=228
நன்றி நண்பர் மெய்ப்பொருள்.
மற்ற நண்பர்களுக்கு –
உங்களுக்கு தேட வேண்டிய கஷ்டத்தை கொடுக்காமல் –
கீழேயே விவரங்களை தந்திருக்கிறேன்.
——————-
2016 தேர்தல் சமயத்தில் அவர் தாக்கல் செய்துள்ள சொத்து விவர அறிக்கையின்படி –
அவரது தொழில் – அரசியல்வாதி…!!!
(Self Profession – Politician )
அவரது துணைவியாரின் தொழில் – இல்லத்தரசி..
(Spouse Profession – Housewife )
வருமான வரி அறிக்கையில் அவர் தெரிவித்துள்ள விவரம் –
அவருக்கென்று வருமானம் எதுவும் இல்லை…!!!
2016 சட்டமன்ற தேர்தலின் சமயத்தில்
அவரது மொத்த சொத்துக்களின் மதிப்பு – சுமார் 48 லட்சம்.
———————————————————————————
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
என்ன இவ்வளவு வெள்ளந்தியாக இருக்கிறீர்கள். மூன்று முறை எம்.எல்.ஏவாக இருந்ததுவும் அரசியல்வாதியாக இருப்பதுவுமே போதாதா …!?
என்ன கொடுமை சார் இது.
நிம்மதியா சாப்பிடக்கூட விட மாட்டேங்கறீங்களே.
ஆக அவருக்கென்று வருமானம் எதுவும் இல்லாததால், இந்த விருந்திற்காக அவரால் எதுவும் செலவு செய்திருக்க முடியாது.
அந்த 1500 கிலோ ஆடுகள், 1500 கிலோ கோழிகள் எல்லாம் தாமகவே அவர் வீடு
தேடி வந்து உயிரை விட்டிருக்கும் !
கடுமையாக தாக்கி எழுதுவது ஒருவகை.
எதுவுமே சொல்லாமல் சொல்ல வேண்டியதை எல்லாம் சொல்லி விடுவது
இன்னொரு வகை. வாழ்த்துகள் காவிரி மைந்தன் சார்.
ரொம்ப அப்பாவியாக நீங்க இருப்பதால் உங்களுக்காக சில செய்திகள்.
கனிமொழி அவர்களின் தொழிலும் ‘அரசியல்’தான். ஆனா அன்புமணி அவர்கள் புத்திசாலி. அவர் தொழில் ‘மருத்துவம்’ இ ல் லை. ‘ரியல் எஸ்டேட்’. அப்போ கணக்கு காண்பிப்பது சுலபம் இல்லையா? கனிமொழியை எப்படி 30 கோடி சொத்து வந்ததுன்னு கேட்க முடியும் (அரசியல் தொழிலிலேயே இவ்வளவு சம்பாத்தியமான்னு).
இந்த மாதிரி நீங்க கேள்வி கேட்கக்கூடாதுன்னுதான் சந்திரபாபு நாயுடு, அவருடைய பேரன் பிறக்கும்போதே 18 கோடிக்கு டாலர் நோட்டா ஒட்டிக்கிட்டு பிறந்துட்டான்னு சொல்லியிருக்கார்.
நம்ம அமித்ஷா அவர்களின் கணக்கையும் அன்னார் மகனின் கணக்கையும் விட்டுவிட்டீர் தோழரே..!
அய்யா …! எந்த அரசியல்வாதி இந்த நாட்டில் ஒழுங்காக சம்பாதித்து இருக்கிறான் — ஜி. கே .மணியின் இந்த விவரத்தை போட்டுவிட்டால் மட்டும் போதுமா ..? உதாரணத்திற்கு வேண்டுமானால் எடுத்துக்கொள்ளலாம் — அவ்வளவுதான் …இதில் ஆச்சர்யம் என்ன இருக்கிறது … !
கடலில் நிற்கிற கப்பலுக்கு நீந்தியா போக முடியும் என்று சொகுசு ஹெலிகாப்டரில் சென்றவரை பற்றிக்கூட ஒரு இடுகை நம், தளத்தில் வந்துள்ளது அவரைபற்றியும் அறிய : // அமைச்சர் நிதின் கட்கரி மகள் திருமணம்.. 50 தனி விமானங்களில் விவிஐபிக்கள்… திணறும் நாக்பூர் // https://tamil.oneindia.com/news/india/gadkari-s-daughter-s-wedding-50-chartered-planes-nagpur-268930.html … இவ்வாறாக திருமான வைபோக விழா கொண்டாடியவரின் சொத்து மதிப்பப்பையும் நாம் தரிந்துகொள்ள : http://www.myneta.info/maharashtramlc/candidate.php?candidate_id=116 … இங்கே பார்க்கலாம் … ஒவ்வொரு அரசியலாதியின் கணக்கும் அப்படிதான் — கலைஞர் காட்டாத கணக்கா …? நாயுடுவின் பேரனின் கணக்கும் நம் தளத்தில் இருக்கிறது … !!! … எல்லாம் நம் தலையெழுத்து .. ???
மருத்துவர் ஐயா ராமதாஸ் அவர்கள் பதிலளித்து ட்வீட் போடுவாரா?