…
…

…
திருட்டு நரி ஒன்று ஊருக்குள் புகுந்து கோழி, ஆடுகளைத் திருடச் சென்றது. ஊர்க்காரர்கள் பார்த்து விடவே, தப்பித்தோம் பிழைத்தோம் என்று காட்டுக்கு ஓடியது. ஓடும் வழியில் வேலியில் சிக்கி, நரியின் வால் அறுந்து விட்டது.
காட்டிற்குள் சக நரிகள் கேலி செய்யும் என்ற பயத்தில், பல நாட்கள் எந்த நரியின் கண்களிலும் படாமல் குகைக்குள்ளேயே மறைந்து இருந்தது. ஆனால், எவ்வளவு நாட்கள் தான் மறைந்திருக்க முடியும்?
ஒரு நாள் வேறு வழியில்லாமல் வெளியே வந்தது, தன் அறுந்த வாலைப்பற்றிய குற்ற உணர்ச்சி / தாழ்வு மனப்பான்மையை மறைக்க – அனைத்து நரிகளுக்கும் தன்னைப் போலவே வாலில்லாமல் போய் விட்டால் தன்னை யாரும் குறைபாடாகப் பார்க்க மாட்டார்கள் என்று நினைத்தது.
மற்ற நரிகளிடம் – வால் இருப்பது பல விதங்களிலும் தொந்திரவாக இருக்கிறது…. அதனால் தான் நீக்கி விட்டேன். நீங்களும் என்னைப்போலவே வாலை நீக்கி விடுங்கள் என்று உபதேசம் செய்தது.
Me Too -வில் அசிங்கப்பட்டு, அவமானப்பட்டு – பதுங்கிக்கிடந்த திருவாளர் வைரமுத்து என்கிற நரி இப்போது வெளியே தலைகாட்டத்துவங்கி இருக்கிறது…. தன் குறையை மறைக்க,
மற்றவர்களுக்கு உபதேசம் செய்யத்துவங்கி இருக்கிறது.
தன் சொந்த இல்வாழ்க்கையை தக்க வைத்துக்கொள்ள வக்கில்லாதவர் தனக்கு கிடைக்காதது யாருக்கும் கிடைக்ககூடாது என்கிற நல்லெண்ணத்தில் –
இப்போது ஊராருக்கு உபதேசம் சொல்கிறார் –
” திருமணம் என்பது ஒரு வேண்டாத தளை, தேவையில்லாமல் நாமே விதித்துக் கொள்ளும் கட்டுப்பாடு … திருமணம் என்கிற வழக்கம் மிக அண்மைக்காலத்தில் – 3000 ஆண்டுகளுக்கு முன்னர் துவங்கியது தான்…
அடுத்த 50-100 ஆண்டுகளில் இந்த வழக்கம் காணாமல் போய்விடும்…”
…
…
3000 ஆண்டுகளாக உள்ள வழக்கம் என்று அவரே ஒப்புக்கொள்ளும் வழக்கத்தை அண்மைக்காலத்தில் தோன்றியது தான் என்றும் முட்டாள்தனமாக வாதிடுகிறார்.
அவரே ஒப்புக்கொள்கிறபடி – 3000 ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கும் ஒரு சமூகப்பழக்கத்தை அண்மையில் தோன்றிய பழக்கம் தான் என்று சொல்பவர் எப்பேற்பட்ட அறிவாளி….?
இந்த சமூகத்திற்கு அறிவு கூறும் தகுதி இவருக்கு எங்கே வந்தது…?
கண்ணியமாக, ஊர் மெச்ச, சமூகம் போற்றும் வழியில் வாழும் பெரியவர்கள் – இளைஞர்களுக்கு அறிவுரை கூறுவதில் அர்த்தம் இருக்கிறது….
சொந்த வாழ்வில் தறிகெட்டு காட்டெருமையைப் போல் அலைந்து கண்ட
வயல்களில் எல்லாம் மேய்ந்து, அதனால் குடும்ப வாழ்வையும் இழந்த ஒரு மனிதர் இங்கே ஊருக்கு உபதேசம் செய்கிறார்.
தமிழராகப் பிறந்து, உலகுக்கே பொதுமறையாக குறளைப் படைத்த திருவள்ளுவரை விட இவர் தன்னை புத்திசாலி என்று கருதிக்கொண்டிருக்கிறாரா….?
2000 ஆண்டுகளுக்கு முன்னரே, இல்வாழ்க்கையின் சிறப்பைப் பற்றி திருவள்ளுவர் சொன்னதை எல்லாம் உண்மையிலேயே அறிந்துணர்ந்திருந்தால் – இத்தகைய போதனையைச் செய்யத் துணிவாரா திருவாளர் வைரமுத்து …?
இல்வாழ்வின் சிறப்பை பற்றி ‘இல்லறவியல்’ பிரிவில் மட்டுமே இருபது
அதிகாரங்கள் இருப்பதை இவர் அறிவாரா…?
இவற்றில் முக்கியமாக –
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று.
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை.
துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை.
மங்கலம் என்ப மனைமாட்சி மற்று
அதன்நன்கலம் நன்மக்கட் பேறு.
அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
போஒய்ப் பெறுவ எவன்.
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை.
ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து.
மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.
மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்.
பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்.
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.
தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்றசொற்காத்துச்
சோர்விலாள் பெண்.
புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை
இகழ்வார்முன்ஏறுபோல் பீடு நடை.
முக்கியமாக பிற்காலத்தில் தேவையேற்படக்கூடும் என்று கருதி – திருவாளர் வைரமுத்து போன்றவர்களுக்கு என்றே வள்ளுவர் சொல்லி விட்டுப்போன குறள்கள் –
————–
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற வொழுக்கு.
பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து
அறம்பொருள் கண்டார்கண் இல்.
அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
நின்றாரின் பேதையார் இல்.
அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள்
பெண்மை நயவா தவன்.
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்.
ஊருக்கு உபதேசம் செய்யும் தகுதி திருவாளர் வைரமுத்துவுக்கு சற்றும் கிடையாது… அவரை பொதுவிழாவிற்கு அழைத்து பேசச்செய்பவர்கள், அறிந்தோ-அறியாமலோ இந்த சமூகத்திற்கு கேடு விளைவிக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
இனியும் பொதுவெளிகளில் வைரமுத்து இவ்வாறெல்லாம் பேசினால்,
அசிங்கப்பட, அவமானப்பட வேண்டியிருக்கும் என்பதை அவரும், அவரை விழாக்களுக்கு அழைத்து பேசச்செய்பவர்களும் உணர்வது நல்லது.
.
———————————————————————————————



சிலருக்கு எத்தனை முறை செருப்படி வாங்கினாலும், புத்தி வருவதில்லை. ஒன்றுமே நடக்காதது போல் துடைத்துக்கொண்டு வெளியே வந்து விடுகிறார்கள்.
இவருக்கு மேடையில் பேச வாய்ப்பு அளிப்பவர்களும் இவரைப்போன்றவர்கள் தான் என்கிற முடிவிற்குத்தான் வரவேண்டி இருக்கிறது.
சாக்கடையில் புரண்ட பன்றியொன்று, குளித்துவிட்டு செண்ட் அடித்துக்கொண்டு வந்திருக்கிறது. இதைக்கண்டாலே மீ-டூ பெண்களின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் நினைவிற்கு வந்து குடலைப் புரட்டுகிறது.
எப்படித்தான் டக்குப்பக்குன்னு இந்த மாதிரி உடனுக்குடன் இடுகையை எழுதறீங்களோ கா.மை சார்… அதற்குப் பாராட்டுகள்.
வைரமுத்து கதையைச் சொன்னா அசிங்கம்தான்.
அதிருக்கட்டும் இந்த திராவிட கட்சிகள் சார்பாக இருக்கறவங்க யாருமே, திருக்குறள் பற்றிச் சொன்னா, எனக்கு அருவருப்பா இருக்கும். திருக்குறள் புத்தகத்தைப் பார்ப்பதற்குக்கூட இவர்கள் யாருக்கும் அருகதை இல்லை. இவங்கள்ல 95%க்கும் மேல ‘ஒழுக்கம்’ என்ற வார்த்தைக்கே அர்த்தம் தெரியாது.
இவரை அழைத்துப் பேசச் செய்பவர்களுக்கும் தமிழ், தமிழர் பெருமை, திருக்குறள், தமிழர் நூல்கள் என்று ஒன்றிலும் பரிச்சயமே இருக்காது என்பது நிச்சயம். இருவரும் ஒரே கேடகரிதான்.
இந்த. அல்பபிறவியைபற்றி எழுதி தளத்தின் தனமையை குறைக்கவெண்டாமே என தோன்றுகிறது
Wild pig not kattuerumai,please. Well said.
idiotic
அய்யா …! திரு .புதியவன் வீணாப்போன வைரமுத்துவை பற்றி கருத்து கூறும் சாக்கில் // இந்த திராவிட கட்சிகள் சார்பாக இருக்கறவங்க யாருமே, திருக்குறள் பற்றிச் சொன்னா, எனக்கு அருவருப்பா இருக்கும். திருக்குறள் புத்தகத்தைப் பார்ப்பதற்குக்கூட இவர்கள் யாருக்கும் அருகதை இல்லை. இவங்கள்ல 95%க்கும் மேல ‘ஒழுக்கம்’ என்ற வார்த்தைக்கே அர்த்தம் தெரியாது. // என்று கூறியுள்ளதை நீங்கள் ஏற்கிறீர்களா …? வைரமுத்துவை பற்றி –அவரது அவ்வப்போது செய்கைகளை பற்றி அதிகமாக விமரிசித்து இடுகைகளை வெளியிட்ட ஒரே தளம் தங்களின் இதுதான் … ஒட்டுமொத்த திராவிடக்கட்சிகளைப் பற்றி நண்பர் கூறியுள்ளது அவரது தனிப்பட்ட கருத்தாக கொள்ள முடியுமா தளத்தில் …?
செல்வராஜன்,
நண்பர் புதியவனின் கருத்துகளுக்கு பதில் கூற உங்களுக்கு முழு சுதந்திரம் இருக்கிறது.
நீங்கள் சொல்ல வேண்டியதை தாராளமாக உங்கள் பின்னூட்டத்தின் மூலம் நீங்கள் சொல்லலாம்.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
அய்யா …! திருவள்ளுவர் பெயரில் போக்குவரத்துக்கழகம் — திருவள்ளுவர் படத்தை வைத்தது மட்டுமல்லாமல் திருக்குறளை அனைத்து அரசு பேருந்துகளிலும் பயணிகள் படிக்கும் வகையில் வைத்தது — தமிழ்நாட்டில் உள்ள எல்லா சுற்றுலா மாளிகைகளிலும், விடுதிகளிலும் திருவள்ளுவர் படம் இருக்கவும் … திருக்குறள் எழுதப்பட்டு இருக்கவும் செய்தது — திருவள்ளுவர் தினம் — திருவள்ளுவர் பெயரில் விருதை அறிமுகப்படுத்தியது –திருக்குறளை தேசிய இலக்கியமாக அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தீர்மானத்தை இயற்றியது — தமிழக காவல்துறையினருக்கு ஆண்டுதோறும் நன்னடத்தையை பாராட்டி பதக்கங்கள் வழங்குவதுண்டு. அந்தப் பதக்கத்தில் திருவள்ளுவர் திருவுருவம் இடம்பெற செய்தது … திருவள்ளுவர் பெயரில் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது –கன்னியாகுமரியில் விவேகானந்தர் நினைவுப் பாறைக்கு அருகிலுள்ள பாறையில் திருவள்ளுவர் சிலை ஒன்றினை நிறுவியது — வள்ளுவர் கோட்டம் — அதில் இடம் பெரும் சிலைகள்— சிலைகள் எங்கு, எப்படி, எந்த வடிவில் இடம்பெற வேண்டும், அந்தந்த வடிவங்களுக்கு, இடங்களுக்கு ஏற்ப என்னென்ன குறள்கள் இடம்பெற வேண்டும் என்பதை யெல்லாம் பொறித்து பெருமை சேர்த்தது –தமிழ் தொண்டாற்றியவர்களுக்கு தமிழ அரசு வழங்கும் விருதுகளில் திருவள்ளுவர் பெயரில் விருது வழங்குவது என்று இன்னும் எத்தனையோ காரியங்களை திருவள்ளுவருக்கும் அவரது உலக மறையாம் திருக்குறளுக்கும் செய்த — திராவிட கட்சிகளும் — அதனை சார்ந்தவர்களும் கூறுகிற திருக்குறள் — அருவருக்க தக்கது தான் — எல்லாம் காலத்தின் கோலம் …!!
“பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப்படும்”.
அதாவது, பலரும் வெறுக்கும்படியான பயனற்ற சொற்களைப் பேசுபவரை எல்லோரும் இகழ்ந்துரைப்பார்கள் .. என்றும் வள்ளுவன் கூறியிருப்பது என்னைபோன்றவர்களுக்காத்தான் …?
//இவங்கள்ல 95%க்கும் மேல ‘ஒழுக்கம்’ என்ற வார்த்தைக்கே அர்த்தம் தெரியாது// – செல்வராஜன்…. திராவிட அரசு திருவள்ளுவருக்கோ அல்லது திருக்குறளுக்கோ எதுவும் செய்யவில்லை என்றா நான் சொல்லியிருக்கிறேன்? அவர்கள் ‘திருக்குறளை’ப் பற்றிச் சொல்லும்போது, அது சொல்லிய வழி பிரகாரம் அவர்கள் நடந்ததே இல்லை, அதனால்தான் வெறுப்பு என்ற அர்த்தத்தில்தான் சொல்லியிருக்கிறேன்.
பிறன் மனை நோக்காப் பேராண்மை – இது குறளில் உண்டா?
மதுவைப் பற்றிய கருத்து திருக்குறளில் உண்டா இல்லையா?
கடவுள் அதிகாரம் உண்டா இல்லையா?
வாய்மை அதிகாரம் உண்டா?
திருக்குறளின் அதிகாரங்களை நான் நன்கு படித்திருப்பதால் சொல்கிறேன்.
திருக்குறள் மேன்மையானது. ஆனால் திராவிடக் கட்சிகள் அதனைப் பற்றிப் பேசுவது போலிதான்.
Arumaiyana seruppadi
உணமை தான் சரியாண செருப்படி காெடுத்தும் புத்தியில் உரைக்கவில்ை என்றால் என்ன பண்ணுவது …?
தனிமனித ஒழுக்கம் என்பது தமிழக அரசியல்வாதிகளிடம் சுத்தமாக
கிடையாது என்பது ( குறிப்பாக 1967க்கு பிறகு வந்தவர்களிடம்) தெரிந்ததே .வைரமுத்து திமுக அரசியல் தலைவர்களின் நெருங்கிய நண்பர். அவரது தகாத நடத்தை சின்மயி மூலம் வெளி உலகுக்கு தெரிய வந்தது . உன் நண்பனை பற்றி கூறு. உன்னை பற்றி சொல்கிறேன் என்பது ஒரு பழமொழி . அவர்கள் அப்படிதான் இருப்பார்கள். பதவி, பணம் ,அராஜகம் ,அரசியல் செல்வாக்கு அவர்களை
அப்படி தவறு செய்ய தூண்டுகிறது
.