அற்புதமான இளையராஜா நிகழ்ச்சியொன்று…..!!!




இப்போதெல்லாம் ராஜா சார் நிறைய பேசுகிறார்…!!!

இளையராஜா –
இறைவன் நமக்கு கொடுத்துள்ள ஒரு மிகப்பெரிய கொடை….!

நேற்றிரவு தான் பார்த்தேன்….கடந்த ஆகஸ்டிலேயே வெளிவந்து விட்ட இதை எப்படி இவ்வளவு நாட்கள் பார்க்காமல் இருந்தேன் என்று தெரியவில்லை….

எம்.ஓ.பி.வைஷ்ணவ் (பெண்கள்) கல்லூரியில் நடந்த இளையராஜா அவர்களின் – சிறப்பான உரையாடலும், பாடல்களும் சேர்ந்த அருமையான நிகழ்ச்சியொன்று…

விமரிசனம் தள நண்பர்கள் அவசியம் கண்டு ரசிக்க வேண்டிய
ஒரு நிகழ்ச்சி என்பதால், கீழேயே பதிவு செய்திருக்கிறேன்.

————————

சங்கீதத்தை நான்
இப்படித்தான் கற்று கொண்டேன் : இளையராஜா…..

இது போனஸ் –
கவிஞர் கண்ணதாசன் நினைவாக …..


.
————————————————————————————————————–

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to அற்புதமான இளையராஜா நிகழ்ச்சியொன்று…..!!!

  1. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    அய்யா … ! திரு .இளையராஜா அவர்கள் 75 ம் ஆண்டு பிறந்த நாள் கொண்டாட்டங்கள் தற்போது நடைபெற்று வருவதையொட்டி பல கல்லூரிகளில் அவரது நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது — இதில் நேர்காணல் — மாணவிகளின் கேள்விகள் — பாடல்கள் என்று சக்கைபோடு போடுகிறார் இசை ஞானி —

    முன்பே நமது தளத்தில் எம் ஜி ஆர் ஜானகி கல்லூரி நிகழ்ச்சி பற்றி இடுகை வந்தது — தற்போது எம்.ஓ.பி.வைஷ்ணவ் (பெண்கள்) கல்லூரியில் நடந்த இளையராஜா நிகழ்ச்சிபற்றி குறிப்பிட்டு உள்ளீர்கள் — அதேபோல் ராணி மேரி கல்லூரியில் நடந்தது பற்றியும் — அதிலிருந்து மாணவிகளை பாடகிகளாக அறிமுகப்படுத்தியது பற்றியும் ஒரு செய்தி : // 9 மாணவிகளை பாடகிகளாக அறிமுகப்படுத்திய இளையராஜா // https://tamil.thehindu.com/cinema/tamil-cinema/article26049841.ece ராஜா — ராஜாதான் … தூள் கிளப்புகிறார் ராஜா …. !!!

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      ராஜா சார் இந்த நிகழ்ச்சியில் பேசும்போது, தன்னை மிகவும் பாதித்த பாடல் என்று, விஸ்வநாதன் -ராமமூர்த்தி இசையமைப்பில் வெளிவந்த “மாலைப்பொழுதின் மயக்கத்திலே” பாடலைப்பற்றி கூறி இருக்கிறார்.

      நானும், கிட்டத்தட்ட ராஜா சாரின் வயது தான்.
      அதே போல், அவரை – எதிர்காலத்தைப்பற்றி சிந்தித்து, திகைக்க வைத்த அதே உணர்ச்சிகள், எனக்கும் கிட்டத்தட்ட அதே 14-15 வயதில் ஏற்பட்டது. அந்த சமயத்தில் எங்கள் குடும்பம் நிலை தடுமாறி திண்டாடிக்கொண்டிருந்தது. நிகழ்காலத்தில் நிலையான படிப்போ, வாழ்க்கையோ இல்லாத நிலை…… எதிர்காலம் என்ன ஆகும் என்கிற திகைப்பும், கவலையும் வேறு …

      அப்போது இந்த பாடல் எனக்கு மனப்பாடம்….

      ” இளமை எல்லாம் வெறும் கனவு மயம்
      இதில் மறைந்தது சில காலம் –

      தெளிவும் அடையாது முடிவும் தெரியாது
      மயங்குது எதிர் காலம் ”

      என்கிற வார்த்தைகள், வர்ணிக்க முடியாத உணர்வுகளை அந்த வயதில் என் மனதில் ஏற்படுத்தின.

      கவிஞர் கண்ணதாசனைப்போன்று – மனித வாழ்க்கையின் நிஜ உணர்வுகளையும், அனுபவங்களையும் பிரதிபலிக்கும் பாடல்களை என் இத்தனை வயதில் வேறு எந்த கவிஞர்களிடமும் காணமுடியவில்லை….

      ராஜா சார் கூறுவது சத்தியமான வார்த்தை… உண்மை அனுபவம்…

      -காவிரிமைந்தன்

  2. Mani's avatar Mani சொல்கிறார்:

    உண்மை. கவிஞர் கண்ணதாசனும், இசைஞானி இளையராஜா அவர்களும்
    நமக்கு கிடைத்த பொக்கிஷங்கள். அனைத்தையும் பதிவு செய்து வைக்கக்கூடிய
    டெக்னாலஜி கிடைத்தது நமது அதிர்ஷ்டம்.

    காலம் காலத்துக்கும் மறக்க முடியாதவை இவர்களின் படைப்புகள்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.