…
…

…
வழக்கத்திலிருந்து மாறுபட்டு, முதல் தடவையாக, “துக்ளக்”
வார இதழின் 49-வது ஆண்டு விழாக் கூட்டம் இந்த வருடம் சென்னைக்கு வெளியே – கோவையில் ஜனவரி 14-ந்தேதி நடைபெற்றிருக்கிறது …
கிட்டத்தட்ட கடந்த 15 ஆண்டுகளாக தொடர்ச்சியாகவும்,
அதற்கு முன்னர் சென்னையில் இருக்கும்போதெல்லாமும், துக்ளக் ஆண்டு விழா கூட்டங்களில் தவறாமல் கலந்து கொள்வது என் வழக்கமாக இருந்து வந்தது.
அதற்கான முக்கிய காரணம் – ஆசிரியர் “சோ” அவர்கள் மீது
எனக்கிருந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக பற்றுதல், அபிமானம், நம்பிக்கை ஆகியவையே…
ஆனால் இப்போது……? (என்னுடைய கருத்தை,
பின்னர் – பின்னூட்டத்தில் தெரிவிக்கிறேன்…)
எனவே, துக்ளக் ஆண்டு விழா தொடர்பான செய்தி எங்கேயாவது கிடைக்கிறதா என்று தேடிக்கொண்டிருந்தேன்.
யூ-ட்யூபில் கோவை துக்ளக் ஆண்டு விழாவின் எடிட் செய்யப்பட்ட காணொளி கிடைத்தது…
விமரிசனம் தள வாசக நண்பர்களும் காண வசதியாக, அதனை கீழே
பதிப்பித்திருக்கிறேன்….
…
…
வீடியோவின் நீளம் காரணமாக, பார்ப்பவர்களின் வசதிக்காக இந்த தகவல் தரப்படுகிறது –
வீடியோவில் –
1 முதல் 16 நிமிடங்கள் வரை – திரு.கோபண்ணா – காங்கிரஸ்
17 முதல் 43 நிமிடங்கள் வரை – திரு.இல.கணேசன் – பாஜக
44 முதல் 1.03 மணி நேரம் வரை –
திருப்பூர் திரு. சுப்பராயன் – இ.கம்யூனிஸ்ட்
1.06 மணி முதல் 1.56 மணி (இறுதி) வரை –
திரு.எஸ்.குருமூர்த்தி, துக்ளக் ஆசிரியர் – ஆகியோர் பேசுகின்றனர்.
————————————————————————–
வழக்கம் போல் நண்பர்கள், தங்கள் கருத்துகளை பின்னூட்டங்கள்
மூலம் தெரிவிக்கலாம்.
.
.
—————————————————————————————————–



கோவையில் இன்னொரு பாஜக பிரச்சாரக்கூட்டம் நடந்திருக்கிறது என்பதைத்தவிர
துக்ளக் ஆண்டு விழா என்று சொல்கிற மாதிரி வேறு சுவாரஸ்யம் எதையும் இதில் காணுமே ? எரிச்சலாக இருக்கிறது.
கே.எம்.சார், முடிந்தால் சோ அவர்கள் நடத்திய பழைய ஆண்டு விழா வீடியோ பதிவு ஒன்றை போடுங்களேன். கொஞ்சம் சந்தோஷமாக இருக்கும்.
நண்பர் அரவிந்தனின் கருத்தை நான் வழிமொழிகிறேன்.
கடைசியில் துக்ளக் இந்த கதிக்கு போய் விட்டது காண வ்ருத்தமாக இருக்கிறது.
சோ அவர்கள் நடத்திய பழைய ஆண்டு விழா கூட்டம் ஒன்றை பதிவு செய்யுங்களேன். மனதிற்கு கொஞ்சம் ஆறுதலாக இருக்கும்.
அய்யா …! இதுவரை: டிசம்பர் 10 — 2009 ல் இருந்து இன்றுவரை துக்ளக் பற்றி 135 இடுகைகள் நமது தளத்தில் பதிவாக்கி உள்ளீர்கள் — அதிலிருந்து பல நாட்டு நடப்புகள் — பல முன்னணி அரசியல் தலைவர்கள் — அட்டைப்பட கார்ட்டூன்கள் — மதம் போன்ற பலவற்றை அறியும்படி எங்களை ஆட்படுத்திய தங்களுக்கு வாசகன் என்ற முறையில் நன்றியை உரித்தாக்குகிறேன் …
// துக்ளக் மதிப்பீடு – தமிழக பாஜக பற்றி …..
Posted on ஏப்ரல் 14, 2016 by vimarisanam – kavirimainthan // https://vimarisanam.wordpress.com/2016/04/14/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95/ சுமார் இரண்டே முக்கால் ஆண்டுகளுக்கு முன் சோ அவர்கள் வாழ்ந்த காலத்தில் வெளிவந்த இந்த அட்டைப்பட கருத்து இன்றும் பொருந்துகிறதோ …?
// “துக்ளக்” ஆசிரியராக திரு.எஸ்.குருமூர்த்தி அவர்கள் பொறுப்பேற்றது எப்படி…..? இனி துக்ளக் எப்படி இருக்கும்….?
Posted on திசெம்பர் 28, 2016 by vimarisanam – kavirimainthan // என்பதில் — // இனி துக்ளக் இதழ் எப்படி இருக்கும்…..?
“சோ” அவர்களின் –
ரசனை, அனுபவம், பழகும் தன்மை, எழுத்து ஆகியவை
தனித்தன்மை உடையவை. இப்போது உள்ளவர்களில்,
அவரைப்போல் அரசியல் நையாண்டியை
( satire ) வேறு யாரும் கையாள முடியாது…
எனவே, “சோ” அவர்களின்
பழைய “துக்ளக்” கை இனி காண முடியாது தான்…!!!
திரு.குருமூர்த்தி அவர்களின் பின்னணி வேறுபட்டது.
எனவே, அதே டீம் வேலை செய்தாலும் கூட,
தலைமையில் மாற்றம் ஏற்பட்டிருப்பதாலும்,
இவரது ரசனை வேறுபட்டதாக இருக்கும் என்பதாலும்,
துக்ளக்கும் இனி மாறுபட்டு தான் இருக்கும்…..!!! // ….என்று அன்று தாங்கள் எழுதியது இன்று துக்ளக் ஆண்டு விழா இடம் மாறி கோவைக்கு சென்று உள்ளது … மாறுபட்டு தான் இருக்கும் என்று சூப்பரா பதிவாகிய தங்களை பாராட்டியே தீரனும் …!!!
செல்வராஜன்,
புள்ளி விவரங்களை அள்ளி வீசி கலக்கி விட்டீர்கள்…!!!
எனக்கே, நான் இவ்வளவு எழுதி இருப்பதை இப்போது பார்க்க பிரமிப்பாகத்தான் இருக்கிறது.
நிச்சயமாக, இன்றைய துக்ளக்’கிற்கும், ஆசிரியர் சோ அவர்கள் நடத்திய துக்ளக்’கிற்கும் ஒப்பீடு செய்ய முடியாத அளவிற்கு வித்தியாசங்கள் இருக்கின்றன.
சோ அவர்கள், பாஜகவை சில சமயங்களில் ஆதரித்து பேசினாலும், எழுதினாலும், அதற்கு முக்கிய காரணமாக இருந்தது – காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் தொடர்ந்து நிகழ்ந்த, வெளிப்பட்ட தாங்கவொண்ணாத ஊழல்கள் தான்.
காங்கிரசுக்கு ஒரு மாற்றாக பாஜக வரவேண்டும் என்பது தான் அவரது எண்ணமாக இருந்ததே தவிர, காங்கிரஸ் அடியோடு ஒழிய வேண்டும் என்றோ, பாஜக நிரந்தரமாக ஆட்சியில் இருக்க வேண்டும் என்றோ அவர்
விரும்பியதில்லை. தேசிய அளவில் இந்த இரண்டு கட்சிகளுமே கிட்டத்தட்ட சமபலத்துடன் வளர்ந்து, தேவைக்கேற்ப – மாறி மாறி ஆட்சி செய்வது தான் ஜனநாயகத்திற்கு நல்லது என்று அவரே பலமுறை எழுதியும் இருக்கிறார்.
திரு.நரேந்திர மோடியை தமிழ்நாட்டில் சோ தான் அறிமுகப்படுத்தினார்… அவர் தான் மோடிஜியை பிரதமர் வேட்பாளர் ஆக்கும்படி அத்வானிஜியிடமே வேண்டுகோள் விடுத்தார் என்பது உண்மையே…
வள்ளுவர் கோட்டத்தில் நடந்த அந்த கூட்டத்தில் நான் மேடையிலிருந்து 70 அடிக்குள்ளாகவே இருந்தேன். அத்வானிஜி முகத்தில் தெரிந்த சங்கடங்களை எல்லாம் என்னால் நேரடியாக கவனிக்க முடிந்தது… !
அட்வானிஜியை வருத்தப்பட வைக்க வேண்டுமென்பது சோவின் எண்ணமல்ல…. நரேந்திர மோடி என்னும் பிம்பத்தை அவர் மிகவும் நம்பினார்….
ஆனால், இன்றைய தினம் சோ இருந்திருந்தால், நிச்சயம் மோடிஜியையும், அவரது தலைமையிலான ஆட்சியின் ஆணவம், அராஜகம் நிறைந்த ஆட்டங்களையும் சகித்துக் கொண்டிருக்க மாட்டார்…
முக்கியமாக – மதத்தின் பெயரால் நிகழும் வன்முறைகளை – அது ஹிந்து மதமாகவே இருந்தாலும் கூட, அவர் சகிக்க மாட்டார். அவர் எந்தவித extreme க்கும் துணை போகக்கூடியவர் அல்ல.
இன்றைய சூழ்நிலையில் சோ இருந்திருந்தால் – நாலரை வருட மோடிஜியின் ஆட்சியின் அழகைப் பார்த்து விட்டு – அவரே, பாஜகவை வருகின்ற தேர்தலில் பதவியிலிருந்து அகற்ற வேண்டும் என்றுகூட சொல்லி இருக்கக்கூடும்.
இப்போது வெளி வருவது “சோ” அவர்கள் உருவாக்கிய, நடத்திய துக்ளக் அல்ல… இது பாரதீய ஜனதா கட்சியின், தமிழக பிரச்சாரத்தை மேற்கொண்டிருக்கிற ஒரு தமிழ் வார இதழ். ஆண்டுவிழா கூட்டத்தில் ஆசிரியர் பேசியது,
அதை நேரடியாக உறுதிப்படுத்தி இருக்கிறது.
அவர்களின் அதிருஷ்டம்… சோவின் அபிமானிகள் பல ஆயிரம் பேர்கள் ( என்னைப் போன்றவர்கள் ) அதை நன்கு உணர்ந்தும் தெரிந்தும், இப்போதும் துக்ளக்’கை வாங்கிப் படித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வழக்கம் அவர்களது ரத்தத்தில் ஊறி விட்டது…
ஆனால், சர்குலேஷன் குறையவில்லை என்பதால், துக்ளக்கின் வாசகர்கள் அத்தனை பேரும் பாஜக வழிக்கு வந்து விட்டார்கள் என்று இன்றைய துக்ளக் நிர்வாகம் நினைத்துக் கொண்டிருக்கிறது போலும் …!!!
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
நனறி அய்யா ..! தாங்கள் என்றுமே திரு.சாே அவர்களைப் பாேலவே நடுநிலை வழுவாமல்இருப்பது எம்மை பாேன்றவர்கள் அறிந்தது தான் …ஆனால் ஒரு சிலர் உங்களின் நிலைப்பாட்டை அறியாமல் சில நேரங்களில் விமர்சிப்பது அவர்களிடம் ஒருசார்பு நிலை இருப்பதே காரணம் பாேலும் …
பாஜக ஆதரவாளர்கள் உங்களின் இந்த மறுமாெழியை படித்தபின்னும் அரைத்த மாவையே அரைக்காமல் இருப்பார்களா என்பதே கேள்விதான் …நல்ல ஒரு மறுமாெழி … ! துக்ளக் சார்ந்த இடுகைகளை அவர்கள் படித்தால் நீங்கள் சிலதில் திரு.சாே ..திரு.குருமூர்த்தி அவர்களை விமர்சித்து பதிவாக்கி இருப்பதும் புரியும் .. நன்றி …!!!
தம்பி துரை அவர்கள் ‘தமிழகத்தில் பாஜகவை அதிமுகவினர் சுமந்து செல்ல மாட்டோம்’ என்று அவர் சொன்னதற்கு…
பொன்னார் அவர்களிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அவர், ‘அண்ணணோடு என்னை மோதவைக்க பார்க்காதீர்கள்’ என்று பம்மியது… குருமூர்த்தி அவர்களுமே இதுவரை எதிர் வினையாற்றாமல் இருப்பது….
அப்பட்டமாக தமிழகத்தில் பாஜகவின் இன்றைய நிலையை எடுத்தோம்பி விட்டது.
இது என்றும் மாறப்போவதில்லை.
‘சோ’ வல்ல குருமூர்த்தி.
சோ அவர்கள் பத்திரிகையை அவர் போக்கில் கொண்டு சென்றார். வெற்றியும் அடைந்தார். ஒரு தனி மனிதரால் தன்னுடைய எழுத்தை மட்டுமே வைத்து 40+ ஆண்டுகள் அதை வெற்றிகரமாக கொண்டு செல்வது என்பது பிரமிக்க வைக்கும் விஷயம்.
குருமூர்த்தி அவர்கள் அதை பாஜகவின் கட்சி பத்திரிகையாக மாற்றிவிட்டார். எவ்வளவு காலம் இவரால் அதை நடத்த முடியும் என்பது தான் இப்போது உள்ள கேள்வி.
பூனை புலியாக முடியாது.