நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும்…..



இன்று எம்.ஜி.ஆர். அவர்களின் பிறந்த நாள்….

வாழ்ந்தவர் கோடி.. வீழ்ந்தவர் கோடி …
மக்கள் மனதில் நிற்பவர் யார்…?
என்று நமக்கு நாமே – கேட்டுக்கொள்ள வேண்டிய நாள்…!!!

ஒரு திரைப்பட நடிகராகவோ,
ஒரு அரசியல்வாதியாக,
முதலமைச்சராகவோ,
எம்ஜியார் அவர்களை ரசித்ததை விட,
விரும்பியதை விட –

ஒரு மிகச்சிறந்த மனித நேயமுள்ள மனிதராக,
தான் சந்திக்கும் அனைவரையுமே
நேசித்த ஒரு மனிதராக,
அடுத்தவருக்கு தெரியாமலே,
வெளியே சொல்லாமலே –
பலருக்கும் உதவி புரியக்கூடிய
ஒரு நிஜ ஹீரோவாக,
தனக்கென்று எதையும் சேர்த்து வைத்துக் கொள்ளாமல்,
தான் சம்பாதித்ததை எல்லாம்
பிறருக்காகவே செலவழித்த ஒரு
அற்புதமான கொடைவள்ளலாக, ஒரு நல்ல மனிதராக –
இதயத்தில் நிறுத்திக் கொள்ளவே விரும்புகிறேன்…

கட்சி, அரசியல், வகித்த பதவிகள் –
இவற்றை எல்லாம் தாண்டி –
எத்தனை ஆண்டுகள் ஆனாலும், மக்கள் மனதில்
நிலைத்து நிற்கக்கூடிய மிகச்சில மனிதர்களில்
எம்.ஜி.ஆர். அவர்களும் ஒருவர்….!!!

———————

இன்று விடுமுறை நாள் தானே….
மனதுக்கு சந்தோஷமாக –
ஆனந்தமாக, பார்த்து / கேட்டு –
சாவகாசமாக பழைய நினைவுகளில் ஊஞ்சலாட –

எனக்குப் பிடித்த, மறக்க முடியாத
சில எம்ஜிஆர் படப்பாடல்களை கீழே பதிகிறேன்…
உங்களுக்கும் பிடித்திருக்கும் என்று நம்புகிறேன்…!!!

……………………………

கவிஞர் கண்ணதாசன் அவர்கள் இயற்றிய –
நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும்….

கண்ணதாசன் அவர்கள் இயற்றிய –
– அச்சம் என்பது மடமையடா…

தஞ்சை ராமய்ய தாஸ் அவர்கள் இயற்றிய –
எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே…

https://youtu.be/iw3zAZn_iss

பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அவர்களின் –
சின்னப்பயலே சின்னப்பயலே…..

https://youtu.be/LTCihMCfSCU

தஞ்சை ராமய்ய தாஸ் அவர்கள் இயற்றிய –
மயக்கும் மாலைப்பொழுதே நீ போ போ ….

கவிஞர் கண்ணதாசன் அவர்களின் –
நாடகமெல்லாம் கண்டேன் உந்தன் ஆடும் விழியிலே…

…………

.
—————————————————————————————————————

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

8 Responses to நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும்…..

  1. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    அய்யா … ! மறக்க — மறைக்க முடியாத மாமனிதர் — ! ஆனந்த ஜோதி படத்தில் வரும் ஒரு பாடல் … ஆன்மிகம் தழுவியது ஊன்றி படித்தால் உண்மை விளங்கும் – அதிலிருந்து கடவுள் மற்றும் நீதி பற்றிய வரிகள் :–
    கடவுள் இருக்கின்றார் அது உன் கண்ணுக்குத் தெரிகின்றதா?
    கடவுள் இருக்கின்றார் அது உன் கண்ணுக்குத் தெரிகின்றதா?
    காற்றில் தவழுகிறாய் அது உன் கண்ணுக்குத் தெரிகின்றதா?
    காற்றில் தவழுகிறாய் அது உன் கண்ணுக்குத் தெரிகின்றதா?
    கண்ணுக்குத் தெரிகின்றதா?
    கடவுள் இருக்கின்றார் அது உன் கண்ணுக்குத் தெரிகின்றதா?

    தேடியும் கிடைக்காது நீதி தெருவினில் இருக்காது
    தேடியும் கிடைக்காது நீதி தெருவினில் இருக்காது
    சாட்டைக்கு அடங்காது நீதி சட்டத்தில் மயங்காது
    காலத்தில் தோன்றி கைகளை வீசி காக்கவும் தயங்காது
    காக்கவும் தயங்காது

    அடுத்து மன்னாதி மன்னன் என்ற படத்தில் வரும் பாடல் : — கனிய கனிய மழலை பேசும் கண்மணி உயர் காதல் பொங்கும் கீதம் பாடும் பொன்மணி பாடலும் —
    மகாதேவி படத்தில் வரும் :– கண் மூடும் வேளையிலும் கலை என்ன கலையே கண்ணே உன் பேரழகின் விலை இந்த உலகே என்ற பாடலும் இரு பெரும் நடிகைகளோடு இணைந்து மக்கள் திலகம் நடித்தது — விரசம் இல்லாத அருமையான காதல் பாடல்கள் — இரவினில் கேட்க — ரசிக்க மெல்லிசை …!!
    இறுதியாக நல்லவன் வாழ்வான் படத்தில் வரும் :– ஆண்டவன் ஒருவன்… இருக்கின்றான்…
    அவன்… அன்பு மனங்களில்… சிரிக்கின்றான்….பாடலில் அவரது வேடம் வேறுவிதமாக இருப்பதோடு — அந்த கண்களில் ஒரு சாந்தமான யோகியின் ஒளியினை காணலாம் … இரண்டு திலகங்களின் நடிப்பின் பொற்காலம் அது …!!!

  2. D. Chandramouli's avatar D. Chandramouli சொல்கிறார்:

    Although a great fan of Sivaji Ganesan, I used to enjoy MGR’s films for wholesome enjoyment. Many songs penned by Vaali were superb reflection of MGR’s own personality. Both Sivaji and MGR ruled the Tamil cine world for over two decades, and they made a great imprint in our minds.

  3. D. Chandramouli's avatar D. Chandramouli சொல்கிறார்:

    Btw, the songs selected are superb. Surprising that I never heard the beautiful song ‘Nenjirukkum varai’ – unbeatable melody, nice rendering; who was the singer? It isn’t Suseela’s. Another beauty you mentioned is ‘Mayakkum malai’. Unfortunate that this generation misses such wonderful compositions. We were so lucky to have had giants in the film industry. If we talk about Sivaji and MGR, there were TMS, Suseela, MSV-VR, KVM, GR (earlier), Sirkazhi. Like this, every department of film making had ‘jambavans’. Your selections take me to that grand era, which is etched in our memory. While I do enjoy Ilayaraja’s and ARR’s songs, my first preference to this day continue to the ones of 60s, 70s and early 80s. Sorry for this long narration.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


      சந்திரமௌலி,

      உங்கள் கருத்துகளை நான் வரவேற்கிறேன்… பின்னூட்டத்தின் நீளம் பற்றியெல்லாம் நீங்கள் கவலைப்படவே வேண்டாம். உங்களைப் போன்ற நண்பர்களின் கருத்துகளை அறிந்து கொள்வதில் நான் மிகவும் ஆர்வம் கொண்டுள்ளேன்.

      அந்த “நெஞ்சிருக்கும் வரை நினைவிருக்கும்” பாடல், நீண்ட காலமாக என் நெஞ்சிலேயே காத்திருந்தது.
      அதிகம் பாப்புலர் ஆகாத, ஆனால் கண்ணதாசன் எழுதிய மிக அழகான அந்த பாடலை உரிய சமயத்தில் இங்கே
      பதிப்பிக்க வேண்டுமென்று நினைத்திருந்தேன்….

      நீங்கள் சொல்பவை அனைத்தும் என் மனதிலும் பசுமையான நினைவுகளாக ஓடிக்கொண்டிருக்கின்றன.
      நிறைய பின்னூட்டங்கள் எழுதுங்கள்… உங்களுக்கு இங்கே ஒரு வெண்டிலேஷன் கிடைக்கும்…!

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

  4. மெய்ப்பொருள்'s avatar மெய்ப்பொருள் சொல்கிறார்:

    ஓ வெண்ணிலா ஓ வெண்ணிலா

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.