…
…

…
சொந்த நாட்டின் நிர்வாகத்திடமிருந்து,
(அது ஈழத்தமிழர்களானாலும் சரி, இந்தியத் தமிழர்களானாலும் சரி…) .. மதிப்போ, மரியாதையோ, உரிய அங்கீகாரமோ – கிடைக்காத தமிழர்களை ….
முதல் மனிதராக முந்திக்கொண்டு, தமிழில் “தைப்பொங்கல்”
வாழ்த்துகளைத் தெரிவிக்கும் கனடா பிரதமர் Justin Trudeau
அவர்களை எந்த விதத்தில் பாராட்டுவது என்று தெரியவில்லை.
…
…
உலகெங்கும் வாழும் தமிழர்களின் சார்பாக,
அவரும் அவரது குடும்பமும் –
நீண்ட நெடுங்காலம், நல்ல உடல்நலத்துடன், உளமகிழ்ச்சியுடன் வாழ
வேண்டுமென்று நாம் வேண்டுவோம்.
-அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
.
————————————————————————————————————-



நானும் தங்கள் பிரார்த்தனையில் கலந்து கொள்கிறேன்.
மேலும், அவர் இந்தியா வந்து சுற்றுப்பயணம் சென்ற போது எடுத்த புகைப்படத்தை தேடிப்பிடித்து பிரசுரித்ததற்கு நன்றி.
கூடவே அவரை இந்த ஆட்சியாளர்கள் அப்போது நடத்திய விதத்தையும் அந்த புகைப்படத்தை கொண்டு தாங்கள் நினைவு படுத்த விரும்புவதையும் புரிந்து கொள்ள முடிகிறது.
அய்யா …! வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு என்று எப்பாேதுமே நாம் பெருமிதம் காெள்வாேம் ….இதே தமிழனின் பண்பாடை உலகத்திலிருநந்து வருகின்ற அனைவருக்கும் அளித்து மகிழ்கின்ற கனடா பிரதமர் மற்றும் அவரது குடும்பததினருக்கும் ..மற்றும் தளத்தின் நண்பரகளுக்கும் இனிய மறைந்து …மறந்து விடாமல் இருக்கும ” கிராமத்து ” பாெங்கல் வாழ்த்தினை நல்கி மகிழ்கிறேன் …!!!