…
ரிசர்வ் வங்கியின் மீது மத்திய அரசு தொடுத்திருக்கும் தாக்குதல்
உலக அளவில் கவனத்தைப் பெற்றிருக்கிறது…
“இந்திய ரிசர்வ் வங்கி உட்பட உலகில் இருக்கும் எந்த மத்திய வங்கியின் தன்னாட்சிக்கும் ஆதரவாக இருப்போம்” என்று ஐ.எம்.எஃப். எனப்படும் சர்வதே நாணய நிதியம் ( International Monetary Fund ) அறிவித்துள்ளது.
…

…
மத்திய அரசு ரிசர்வ் வங்கியிடம் கீழ்க்கண்டவற்றை எதிர்பார்ப்பதாகத்
தெரிகிறது….
– ரிசர்வ் வங்கியின் Reserve Fund – லிருந்து மத்திய அரசு பணம் கேட்கிறது…65,000 கோடி அளவிற்கு… (ரிசர்வ் வங்கி தனது பாதுகாப்பு
நிதியை விட்டுக்கொடுக்க மறுக்கிறது…)
– வாராக்கடன்களில் சிக்கியுள்ள சில நிறுவனங்களை, ரிசர்வ் வங்கி
Prompt Corrective Action- ன் கீழ் (திவால் சட்டம்) ஏலத்தில் கொண்டு வர
நடவடிக்கை எடுக்கிறது… இதை மத்திய அரசு ஏற்கவில்லை… சில
குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு – இந்த விதிகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டுமென்று மத்திய அரசு வலியுறுத்துகிறது.
– இந்திய அரசு தொடர்ந்து பெரு முதலாளிகளுக்கு வரிச்சலுகைகளை கொடுத்துக் கொண்டே இருக்கிறது… அவர்களுக்கு வரி விலக்குகள் அளித்துக் கொண்டே இருக்கிறது. இதனால் பட்ஜெட் பற்றாக்குறை அதிகரிக்கிறது..
மத்திய அரசு கடந்த 4 வருடங்களில் சாதாரண மக்கள் மீது நிறைய மறைமுக வரிகளை திணித்திருக்கிறது. தொடர்ந்து, அரசாங்கம் அதிகம் செலவு செய்வதால், பணவீக்கம் அதிகரிக்கிறது.
பணவீக்கத்தை கட்டுப்படுத்த, வட்டி விகிதத்தை (interest rate) அதிகரிக்க
ரிசர்வ் வங்கி விரும்புகிறது… ஆனால் இதற்கு மத்திய அரசு எதிர்ப்பு
தெரிவிக்கிறது….
இதற்கு பதிலடியாக — பொதுத்துறை வங்கிகள் கண்மூடித்தனமாக கடன் கொடுத்ததை உரிய நேரத்தில் ரிசர்வ் வங்கி கட்டுப்படுத்த
தவறியது தான் – எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம் என்று ரிசர்வ்
வங்கியின் மீது பொதுவெளியில் குற்றச்சாட்டை முன்வைக்கிறார்
நிதியமைச்சர் ஜெட்லிஜி….
– இறுதியாக, ரிசர்வ் வங்கி சட்டம் 1934–ன் ஷரத்து 7(1)-ன் அடிப்படையில், ரிசர்வ் வங்கியின் மீது மத்திய அரசுக்கு இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி –
சில காரியங்களை செய்யச்சொல்லி உத்திரவு போடுகிறது மத்திய அரசு….( சுதந்திரம் கிடைத்த இத்தனை ஆண்டுகளில், முதல் தடவையாக இந்த பிரிவு, இப்போது தான் மத்திய அரசால் ரிசர்வ் வங்கியின் மீது பயன்படுத்தப்படுகிறது…!!! )
யார் மீது தவறு…?
ரிசர்வ் வங்கி, மத்திய அரசு இரண்டுமே – தங்கள் பொறுப்பை சரியாக நிறைவேற்றத் தவறி விட்டன என்று சொல்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்… நமக்கும் அப்படித்தான் தோன்றுகிறது…
இடையில், நமக்கு வேறு ஒரு சந்தேகம் உருவாகிறது….
இந்த சண்டை ஜெட்லிஜிக்கும் – ரிசர்வ் வங்கிக்கும் இடையிலானதா…?
மோடிஜிக்கு இதில் சம்பந்தம் எதுவும் கிடையாதா..?
அவர் ஏன் இந்த விஷயத்தில் – வாயே திறக்கவில்லை…?
ஜெட்லிஜி, மோடிஜிக்காகத்தான் இந்த மோதலில் ஈடுபடுகிறாரா..?
அல்லது தன்னிச்சையாக செயல்படும் ஜெட்லிஜியை,
மோடிஜியால் கட்டுப்படுத்த முடியவில்லையா..?
…

…
.
———————————————————————————————



I don’t know why readers are reluctant to comment on this article. Is it for obvious reasons or
they don’t like this article..
பயணம், பிசி…. அதனால் பல இடுகைகளுக்குக் கருத்துத் தெரிவிக்கவுல்லை.
நடந்துகொண்டிருப்பது நல்லதாகத் தெரியவில்லை. பொதுவா தொழிலதிபர்களுக்கு ஆதரவாகவும், மக்களுக்கு (சாதாரண சம்பாதிக்கும் வர்க்கத்திற்கு) எதிராகவும் மோடி அவர்கள் ஆட்சி உழைத்துக்கொண்டிருக்கிறது.
இந்தியாவைக் காக்கும் (பொருளாதாரத்தைக்) இரு அதிகார மையங்கள் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டுவதை விட்டுவிட்டு மக்களைப் பற்றிச் சிந்தித்தால் நலம். தாங்கள் விரும்பிய ஆளைக் கொண்டுவந்து சிபிஐ யைக் கெடுத்ததுபோல் அடுத்து ரிசர்வ் வங்கியைக் குறிவைத்துள்ளார்கள்.