…

…
நம் நாட்டில் (அதிருஷ்டவசமாக என்று தான் சொல்ல வேண்டும்…)
ராணுவத்தில் பணிபுரிந்த காரணத்தால், உடல் ஊனமுற்று இளம் வயதில் வெளியே வருபவர்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு.
இங்கே, குறைந்த பட்சம் 15 வருடம் ராணுவத்தில் பணிபுரிந்தால், பென்ஷனுடன் ரிடையராக அதிக வாய்ப்புகள் உள்ளன. 18 வயதில் ராணுவத்தில் சேரும் ஒருவர், 33 வயதில் பென்ஷனுடனும், இதர சலுகைகளுடனும், நல்ல உடல், மன நிலையுடன் ஓய்வுபெற்றுவிட முடிகிறது.
அதன் பின்னர் அவர் முழுமையாக குடும்ப வாழ்வில் இருந்துகொண்டு எந்த துறையில் வேண்டுமானாலும் சேர்ந்து பணியாற்றவோ, வியாபாரம், விவசாயம் ஆகியவற்றில் ஈடுபடவோ முடிகிறது….
ஆனால், அமெரிக்க அரசின் கொள்கைகள் காரணமாக – அமெரிக்க ராணுவத்தில் பணிபுரியும் – அநேகமாக – அனைவருமே எதாவது ஒரு யுத்த களத்தில் கட்டாயமாக ஈடுபடுத்தப்படுகின்றனர். வியட்னாம், ஈராக், ஆஃப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் போர்க்களங்களில் பணிபுரிய நேர்ந்த அநேக அமெரிக்க ராணுவ வீரர்கள் – சிறிய வயதிலேயே பலத்த உடல் ஊனங்களுடனும், குறைபாடுகளுடனும் கட்டாய ஓய்வில் வெளியே அனுப்பி வைக்கப்பட்டனர்.அவர்களில் நிரந்தர உடல், மன – பாதிப்பின்றி வெளிவரும் ராணுவ வீர்ர்கள் மிகக்குறைவே.
அத்தகைய முன்னாள் அமெரிக்க ராணுவ வீரர் ஒருவர் மீது சாலை விதிகளை மீறி தனது காரை ஓட்டிச்சென்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர் நீதிபதி முன் ஆஜர் படுத்தப்படுகிறார்….
விசாரணையில், நீதிபதியும் – அந்த ராணுவ வீரரும் ஆற்றும்
உரையாடலை கீழே உள்ள காணொளியில் பார்க்கலாம்.
சமுதாயத்தில் நீதிபதி ஸ்தானத்தை வகிக்கும் ஒருவர் எந்த அளவிற்கு
பொறுமையும், பொறுப்பும், பக்குவமும், மனிதாபிமானமும் உடையவராக இருக்க வேண்டும் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணமாக இதைக் கொள்ளலாம்.
…
…
————————————————————————————————————-



வெறுமனே நாம, ‘எல்லாவிதத்திலும் சிறந்தது என் தாய் நாடு, நாம் எல்லோரும் சகோதர சகோதரியர்கள்’ என்று பேசினால் போதாது. நம்ம நாட்டுல உயிர்களுக்கு மதிப்பே கிடையாது. நாம எல்லாரையும் ‘சம்பளத்துக்கு வேலை செய்கிறவர்கள்’ என்று நினைத்துவிடுகிறோம். (ஆனால் நம்மிலும் நல்லவர்கள் உள்ளனர், நீதிபதி கற்பகவிநாயகம் போன்று) ஆனால் அவர்களை நாம, AS A SOCIETY போற்ற மறந்துவிடுகிறோம்)
இந்த மாதிரி நிகழ்வுகள் பார்க்கும்போது நாம எங்க இருக்கோம், இன்னும் எவ்வளவு நூற்றாண்டுகள் போகணும், வளர்ந்த நாடுகளின் மனிதாபிமானத்துக்கு அருகில் செல்ல என்பதை அறிந்துகொள்ளமுடியும். மிகவும் பிடித்திருந்தது.
True Puthiyavan sir.
எனக்கும் கூட இந்த இடுகை, விடியோ, அதிலுள்ள செய்திகள் மிகவும் பிடித்திருக்கிறது. அந்த ராணுவ வீரருக்கு தான் எவ்வளவு உடல், மன பிரச்சினைகள்; நாட்டுப்பணியில் அவர் பெற்ற வேதனைகள் அவை என்பதை அந்த நீதிபதியும் உணர்ந்து, சட்டத்தை விட மனிதாபிமானத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார். பகிர்வுக்கு மிக்க நன்றி சார்.
அய்யா …! சுதந்திரமான விசாரணை …! கூறுவதை கேட்கின்ற மனப்பக்குவம் — வக்கீல்களின் குறுக்கீடு இல்லாதது — வாவ் …!! நாடு நல்ல நாடு … அடுத்து ஒரு செய்தி :– வாராக்கடன் விவரங்கள் பற்றியது
// Exclusive: PMO Rebuffs Parliament Committee on Fraud NPA Cases, Deploys Ministers to Meet Joshi // https://thewire.in/political-economy/narendra-modi-pmo-npa-murli-manohar-joshi … நாடு நல்ல நாடு …!!
thiru. Kavirimainthan,
Ungal Rasanai yennai biramikka vaikkirathu.
sameeba kaalangalil miga svarasyamaana katturaigal varukinrana.
I appreciate your interest in handling variety of topics. Wish God
showers you with good health so that you continue your work with the same zeal
and enthusiasm.
நன்றி ராஜகோபாலன்.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
செல்வராஜன்,
ஏற்கெனவே இதை பார்த்தேன். இதில் இன்னும் பல கட்டுரைகள் நமது கருத்தை உறுதிப்படுத்துவதாகவே இருக்கின்றன. சீக்கிரமே வயர் வலைத்தளத்திற்கு ஆளும் தரப்பிலிருந்து எதாவது சிக்கல்கள் உருவாக்கப்படலாம் என்று தோன்றுகிறது.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்