…
…

…
‘இணைந்து பணி செய்யுங்கள் அல்லது வெளியேறுங்கள்!’- ஆர்பிஐ
ஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ் ஆணையிடுகிறது.
——————–
இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர், மத்திய அரசுடன் இணைந்து பணி செய்ய வேண்டும், இல்லையென்றால் பதவி விலக வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பொருளாதாரப் பிரிவு தலைவர் காட்டமான கருத்தைத் தெரிவித்துள்ளார்….
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பொருளாதாரப் பிரிவு தலைவர் அஷ்வனி மகாஜன், ‘அர்பிஐ, மத்திய அரசுடன் இணக்கமாக மட்டுமே செயல்பட வேண்டும். அப்படி செயல்பட முடியவில்லை என்றால் ரிசர்வ் வங்கி ஆளுநராக இருக்கும் உர்ஜித் படேல் அவரது பதவியை ராஜினாமா செய்துவிட்டுப் போகலாம்.
அதேபோல ஆர்பிஐ அமைப்பில், தொடர்ந்து வெளிநாட்டில் பயின்ற பொருளாதார வல்லுநர்களுக்கு முக்கியப் பொறுப்பு கொடுக்கப்பட்டு வருகின்றன. அப்படி செய்ய வேண்டிய அவசியமே அல்ல. நம் நாட்டில் பயின்ற தேச பக்தி கொண்ட பல பொருளாதார வல்லுநர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு பதவி வழங்கப்பட வேண்டும். பல விஷயங்களில் நாட்டின் நடைமுறை தெரியாமல் ஆர்பிஐ
அடம்பிடிக்கிறது. இதனால், நமது பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்படுகிறது’ என்று தெரிவித்துள்ளார்.
——————————–

(நன்றி – ஹிந்து நாளிதழ் – திரு.கேசவ்… )
—————————-
” நாங்கள் இனி எந்த வித
அரசியல் நடவடிக்கைகளிலும்
ஈடுபட மாட்டோம்.. தயவுசெய்து
எங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள
தடையை நீக்குங்கள்…. ”
– என்று, நேற்று திறந்து வைத்தார்களே சிலை –
அந்த சர்தார் படேல் உயிருடன் இந்த நாட்டின் உள்துறை அமைச்சராக
இருந்தபோது சரணாகதி ஒப்பந்தம் surrender application செய்து தான் தங்களுக்கு விதிக்கப்பட்ட தடையிலிருந்து மீண்டு வந்தது ஆர்.எஸ்.எஸ். இயக்கம்….
தாங்கள் நேரடி அரசியலில் ஈடுபட முடியாது என்பதால் தான்
மறைமுகமாக பாஜகவை ஆட்டி வைப்பதன் மூலம் தங்கள்
எண்ணங்களை நிறைவேற்றிக்கொண்டு வருகிறது.
எனவே, இவர்களுக்கு ரிசர்வ் வங்கி கவர்னரை வெளியேறச்சொல்ல
எந்தவித அதிகாரமோ, உரிமையோ – இல்லை.
வேண்டுமானால் –
இவர்கள், தங்களது பிரதிநிதியாக கொண்டு வந்த ஆட்சியில் அமர்த்திய
பெருமகனிடம் சென்று முட்டிக் கொள்ளட்டும்….
————————————————————
பின் குறிப்பு –
நேற்று 3000 கோடியில் திறந்தார்களே ஒரு சிலை –
அதற்கு இன்று திடீரென்று உயிர் வந்தால் அது RSS பற்றி என்ன சொல்லி இருக்குமென்று தெரிந்து கொள்ள நண்பர்கள் விரும்பினால்
கீழே “க்ளிக்” செய்யவும்…
RSS -ஐ தடை செய்த சர்தார் படேலை பாஜக இவ்வளவு கொண்டாடுவது ஏன்…?
.
————————————————————————————————–



இவர்கள் வரிசையாக ஒவ்வொரு Institution ஆக நாசம் செய்துகொண்டே வருகிறார்கள். தேர்தல் கமிஷன், விஜிலன்ஸ் கமிஷன், சிபிஐ இப்போது
ரிசர்வ் பேங்க். ஏற்கெனவே நீதிமன்றத்துடன் தலையீடு வேறு. பல்கலைக்கழகங்கள் அனைத்தும் நாசம். 2019-ல் தேர்தல் ஒழுங்காக நடக்குமா ?
அல்லது அதற்குள் மதக்கலவரங்களை அரங்கேற்றி விடுவார்களா ?
இது மிகவும் பெரிய விஷயமாகப் பேசப்படவேண்டும். அரசாங்க இன்ஸ்டிடியூஷனைப் பற்றி அரசுதான் பேசவேண்டும். போகிற வருகிறவர்களெல்லாம் எச்சரிக்கை செய்து அரசியல் செய்யக்கூடாது. இடுகையைப் பாராட்டுகிறேன். தலைப்பை, ‘தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரனா’ என்றும் போட்டிருக்கலாம்.
ஹி…ஹி…ஹி…. இது ஒரு ” சிரிப்பு பின்னூட்டம் ” … அது இன்றி ஒரு அணுவும் அசைவதில்லை என்பதுதான் நடைமுறை …?