இதற்கு தடையேதும் இல்லையே….???


தேவைப்படுகின்ற இடங்களில் தடைகளும், கட்டுப்பாடுகளும் அவசியம்
தான்… ஆனால், அது சிவகாசி மக்களின் தொழிலுக்கான தடையாகவோ,
வயிற்றுப்பிழைப்பிற்கான தடையாகவோ – அமைந்து விடலாமா…?

உச்சபட்ச அதிகாரம் இருக்கிறது – உத்திரவுகளை பிறப்பிக்க… சரி…
ஆனால், உத்திரவுகள் பிறப்பிக்கப்படும் முன்னர், அது யார்
யாரையெல்லாம் பாதிக்கும் என்று கொஞ்சம் யோசிக்கப்படவும்
வேண்டும் அல்லவா…? எந்த சட்டமும் மனிதாபிமான
கண்ணோட்டத்தையும் மனதில் கொண்டு – உருவாக்கப்பட வேண்டும்
அல்லவா…? அவர்களுக்கு ஒரு மாற்று ஏற்பாட்டிற்கு வழி செய்ய
வேண்டாமா…?

இருண்டு கிடக்கும் எளியவரின் வாழ்விலும் ஒளிபிறக்க
வேண்டுமென்று வேண்டுவோம்…


———————————————————————————————————–

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to இதற்கு தடையேதும் இல்லையே….???

  1. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    கா.மை சார்… உங்கள் எண்ணம் சரிதான். உத்தரவு பிறப்பிக்கும் முன்னர், அதனால் பாதிப்படைபவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்படவேண்டும். இது மாநில அரசின் கீழ் உள்ள விஷயம். நீதிமன்றம், 2 மணி நேரத்துக்கு மேல் வெடி வெடிக்கக்கூடாது என்று சொல்லியிருக்கிறது. அதில் நான் தவறேதும் காணவில்லை. இன்னும் கொஞ்ச வருடங்களில், வெடியே வெடிக்கக்கூடாது என்று தீர்ப்பும் வரலாம், வரும், வருவது நல்லது. அதனால் இப்போதே மாநில அரசு இதற்கு மாற்று ஏற்பாடுகள் செய்யவேண்டும்.

    தீர்ப்பு நல்லதுதான். அதனை நாம் எல்லோரும் வரவேற்கவேண்டும்.
    1. எதற்கு ரோடுகளில் யாரும் நடமாடமுடியாதபடி வெடி வெடிக்கவேண்டும்? ஏன் ரோடு முழுவதும் குப்பையில் மூழ்கடிக்கவேண்டும்? வெடிபோடுபவர்கள் யாராவது ரோடைச் சுத்தம் செய்கிறார்களா இல்லை மக்கள் நடமாட்டம் இருக்கிறதே, பார்த்து வெடிப்போமே என்று நினைக்கிறார்களா?
    2. எதற்கு நடு இரவில் அதுவும் குடியிருப்புப் பகுதிகளில் மிகுந்த சப்தத்தோடு வெடிகள் வெடித்து அடுத்தவர்களுக்கு இடைஞ்சல் செய்யவேண்டும்? வீட்டில் மத்தாப்பூ போன்ற அடுத்தவர்களுக்கு இடைஞ்சல் இல்லாதவைகளை உபயோகப்படுத்தி தீபாவளி கொண்டாட முடியாதா? இந்த டெசிபலுக்கு மேல் எந்த வெடிகளும் தயாரிக்கக்கூடாது என்று சொல்லக்கூடாதா?
    3. புகை மாசு எவ்வளவு கெடுதல். இதற்கு ஏன் சில பண்டிகைகள் காரணமாக இருக்கவேண்டும்? (அதாவது, பண்டிகையைச் சாக்கிட்டு எதற்கு மற்றவர்களுக்கு கெடுதி செய்யவேண்டும் என்று அர்த்தம்)

    எளியவர்கள் வாழவேண்டும். அவர்கள் வாழ்வில் மிகக் குறைந்த அளவுதான் சந்தோஷம் இருக்கிறது. சட்டங்களால் அவைகள் நீர்த்துப்போகச் செய்யக்கூடாது என்பது சரிதான். ஆனால் மற்றவர்கள் நலன் முக்கியமில்லையா?
    1. பீடி சுற்றும் தொழில் எத்தனை எளியவர்களுக்கு, பெண்களுக்கு வாழ்வாதாரம் தருகிறது. ஆனால் அது எத்தனைபேரின் உயிரைப் பறிக்கிறது.
    2. இதுவே டாஸ்மாக்குக்கும் , சிகரெட்டிற்கும்,அதை விநியோகம் செய்பவர்களுக்கும்.

    மாநில அரசு இப்போதே இதற்கான மாற்று ஏற்பாடுகளை யோசிப்பது நல்லது.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


      புதியவன்,

      மாசு, ஒலி கட்டுப்பாட்டிற்கான முயற்சிகள் – அதற்கான உத்திரவுகள் அவசியம்
      என்பதை நானும் ஏற்கிறேன். குறிப்பிட்ட டெசிபலுக்கு மேல் ஒலி எழுப்பக்கூடிய
      பட்டாசுகள் தடை செய்யப்பட வேண்டும்…. பசுமை பட்டாசுகள் புழக்கத்திற்கு
      கொண்டு வரப்பட வேண்டும் – இவற்றில் எனக்கும் உடன்பாடே.

      ஆனால், எதற்கெடுத்தாலும், எல்லாவற்றிலும் -நீதிமன்றங்கள் மூக்கை நுழைப்பது சரி என்று
      தோன்றவில்லை. வண்ண வண்ண மத்தாப்புகள், விண்ணிற்கு சென்று வண்ணங்களை வாரித்தெளிக்கும்
      புஸ்வாணங்கள் போன்றவை – சிறுவர்களிடையேயும் பார்ப்பவரிடையேயும் நிச்சயம் குதூகலத்தை ஏற்படுத்துகின்றன.

      இந்த மகிழ்ச்சிக்கு ஒரு மணி நேரம் – இரண்டு மணி நேரம் என்று தடை போடுவதையும் ஏற்க முடியவில்லை.
      இன்னும் கொஞ்ச நாட்கள் சென்றால் – மக்கள் சிரித்து மகிழ்வதற்கு கூட நீதிமன்றங்களிடம் அனுமதி வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டு விடுமோ என்று தோன்றுகிறது.

      இந்த கொண்டாட்டங்கள் எல்லாம் ஆண்டிற்கு ஒரு முறை தான். ஆனால் இதைவிட மக்களின் ஆரோக்கியத்தை
      நிரந்தரமாக நாசமாக்கும்,பல ஏழைக் குடும்பங்களை நடுத்தெருவிற்கு கொண்டு வரும் சாராயக்கடைகளை
      மூடுவதில் அக்கறை காட்டலாமே. அது எத்தனையோ பெண்களின் கண்ணீரைத் துடைக்குமே.

      -காவிரிமைந்தன்

      • Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

        அய்யா ..! // மக்களின் தொழிலுக்கான தடையாகவோ,
        வயிற்றுப்பிழைப்பிற்கான தடையாகவோ – அமைந்து விடலாமா…? // உங்களின் இந்த எண்ணம் மற்றவர்களுக்கும் ஏற்படட்டும் …! ஏதாவது ஆட்சியாளர்களின் தவறை சுட்டிக்காட்டுவது கூட நீடிக்குமா ? என்பதே கேள்விக்குறி …! பட்டாசு வெடிக்கத்தானே தடை …
        https://www.youtube.com/watch?v=7smvUMqEGeE …. இதுபோல வெடித்து விளையாடலாமா ….!!

      • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

        கா.மை சார்… உங்கள் வாதம் சரி. மக்கள் நலனுக்காக செயல்பட அரசுகள் இருந்தால் நீதிமன்றத்துக்கு அங்கு வேலை இல்லை. அவர்கள் வேலை குற்றம் சுமத்துபவர்கள் மீது விசாரணை நடத்தி தண்டனை வழங்குவது.

        இங்கு அரசாங்கத்தில் உள்ளவர்களே குட்கா விற்பனை, மது விற்பனை, அரசியல்வாதிகளே சிகரெட் விற்பனை, அதிகாரிகள் ஆட்டோ தொழில் செய்வது, வாக்குகளுக்குப் பணம் கொடுப்பது, அரசுப் பணத்தை இலவசம் என்று வாரி வழங்குவது என்று இருந்தால் யார்தான் பூனைக்கு மணி கட்டுவது?

        வண்ண வண்ண மத்தாப்புகள் (தரைச் சக்கரங்கள் போன்றவையும்) குதூகுலத்தை உண்டாக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அவை யாருக்கும் தீங்கு (அதாவது சத்தத்தினால், அல்லது சாலையில் நடக்கமுடியாதபடி பயத்தை) உண்டாக்குபவை அல்ல. புகையைக் கட்டுப்படுத்த இந்த மாதிரி விஷயங்கள்தான் அவற்றில் உபயோகப்படுத்தணும் என்று அரசு (அங்கதானே வி ஞ் ஞா னி க ள் இருக்காங்க) சொல்லலாம். ஆனால் எல்லாவிதமான வெடிகளுக்கும் இந்தக் கட்டுப்பாடு நிச்சயம் தேவை. 40 வருடங்களுக்கு முன்பு இருந்ததைவிட இப்போது மிக மிக மோசமாகத்தான் சென்றுகொண்டு இருக்கிறது.

        குறிப்பு: தமிழக அரசு முடிவெடுத்து வாங்கி செயல்படுத்த ஆரம்பித்த புதுப் பேருந்துகளைப் பற்றி நீங்கள் ஒன்றும் எழுதவில்லையே. டாய்லெட் சவுகரியத்தோடு நீண்ட தூர பயணத்துக்கான பேருந்துகள் என்று மக்கள் பணம் வீணடிக்கப்படுகிறதே… இருக்கும் பேருந்துகள் காயலான் கடைக்கு லாயக்கானவைகள் போல இருக்கின்றன. மெயிண்டெனன்ஸ் இல்லை. ஒழுங்கான பணியாளர்கள், அதிகாரிகள் இல்லை. இதில் நூற்றுக்கணக்கில் புதுப் பேருந்துகளாம்….

  2. இன்றில்லாவிட்டாலும்'s avatar இன்றில்லாவிட்டாலும் சொல்கிறார்:

    காமை அய்யா,
    இந்து சமய அறநிலையத்துறை மயிலை கபாலீஸ்வரர் கோயில் சிலை மாற்று பற்றி உண்மை ஏதும் தெரியப்படுத்துங்கள்

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


      இன்றில்லாவிட்டாலும் –

      நண்பரே, நிஜம் என்ன என்பது குறித்து எனக்கும் தெளிவாக தெரியவில்லை…
      பொதுவாக, கபாலீஸ்வரர் கோயில் நிர்வாகம் முன்னெப்போதையும் விட
      இப்போது சிறப்பாக இருக்கிறது… விழா நிகழ்ச்சிகள் எல்லாம் நன்றாக நடப்பதை நேரிலும் பார்க்கிறேன்.

      இருந்தாலும் இப்படி புகார் எழக்காரணம் என்ன என்று தெரியவில்லை.
      தவறு நடந்திருந்தால், அதற்கு காரணம் யார் என்றும் தெரியவில்லை.
      கொஞ்சம் பொறுத்துப் பார்ப்போம்.

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.