..
..

…
துவக்கத்திலேயே சொல்லி விடுகிறேன்…
திரு.ப.சி. அவர்கள் மீதான நமது விமரிசனங்கள் அப்படியே தான் இருக்கின்றன… அதில் எந்தவித மாறுதலும் இல்லை….
ஆனால், அது குறித்து இப்போது, இந்த இடத்தில்
பேச வேண்டிய அவசியம் இல்லை……அவற்றைப்பற்றி இங்கே பேசினால்,
முக்கிய விஷயங்கள் திசை திருப்பப்பட்டு விடும். எனவே, தேவைப்படும் சமயத்தில், அதை தனியாக வேறு இடத்தில் வைத்துக் கொள்வோம்….
அவற்றைத் தொடாமலே – பாஜக அரசின் செயல்பாடுகளைப்பற்றி
மட்டும் இங்கு பேசுவோம்…!!!
இரண்டு நாட்களுக்கு முன்னர், புதிய தலைமுறை தொலைக்காட்சியில்
‘அக்னி பரீட்சை’ நிகழ்ச்சியில், நிர்வாக ஆசிரியர்
திரு.கார்த்திகைச்செல்வன் – திரு.ப.சிதம்பரம் அவர்களுடன் நிகழ்த்திய
ஒரு சுவாரஸ்யமான பேட்டி … கேள்வி-பதில் நிகழ்ச்சி இடம் பெற்றது.
இன்றைய அரசியல் குறித்த பல கருத்துகள் அதில் விவாதிக்கப்பட்டன.
திரு.ப.சி., பாஜக அரசின்- ரஃபேல் உட்பட – செயல்பாடுகள் குறித்த பல விஷயங்களை ஆணித்தரமாக முன்வைக்கிறார்.
தொலைக்காட்சியில் அதை காண இயலாத நண்பர்களுக்கும் அந்த செய்திகள் சென்று சேர வேண்டுமென்று விரும்புகிறேன்…. எனவே, அந்த பேட்டியின் பதிவை கீழே வைத்திருக்கிறேன்.
பேட்டியை பாருங்கள்… பிறகு பின்னூட்டங்களின் மூலம் பேசுவோம்…!!!
…
…
————————————————————————————————————-



ரஃபேல் விஷயத்தில் பாஜக வசமாக சிக்கிக் கொண்டு விட்டது.
புத்திசாலித்தனமாக, நேரடியாக தன் கைக்கு பணம் வராமல் பார்த்துக் கொண்டு
பணம் தனக்கு வேண்டியவர்களிடம் டெபாசிட் ஆகவும், தங்களுக்கு தேவையான சமயத்தில் அதை பயன்படுத்திக் கொள்ளவும் ஏற்பாடு நடந்திருக்கிறது.
அம்பானி தேர்தல் சமயத்தில் இதைக்கொண்டு மோடிஜியை கவனித்துக் கொள்வார்/.
ஆனால் தன்னை யார் என்ன செய்து விட முடியும் என்கிற அகம்பாவத்தில் அலட்சியமாக செயல்பட்டதில், விவகாரம் வெளியே தெரிந்து விட்டது.
வரப்போகும் தேர்தலில் பாஜக ரஃபேல் காரணமாக மிகப்பெரிய எதிர்ப்பை சந்திக்க வேண்டியிருக்கும். மக்கள் மனதில் ரஃபேல் விவகாரம் ஆழப்பதிந்து விட்டது.
அதற்கு ராகுல்காந்தி இந்த விஷயத்தை எளியவிதத்தில் பாமர மக்களுக்கு புரியும் விதத்தில் எடுத்துச் சொல்வதும் ஒரு காரண்ம்.