…
…
நண்பர் ஒருவரிடமிருந்து கீழேயுள்ள செய்தியை வரப்பெற்றேன்.
சுருக்கமாகவும், படிக்க சுவாரஸ்யமாகவும் படைக்கப்பட்டிருக்கிறது.
படித்துப் பார்த்தேன்.
இதை உருவாக்கியவர் ஒரு கட்சி சார்புடையவர் என்பது உண்மை…
ஆனால், யோசித்துப் பார்த்தால் – அதில் கூறப்பட்டிருக்கும் செய்திகள் அத்தனையும் உண்மை என்பதை உணர்வோம்……
இந்த நான்கரை ஆண்டுகளில் மிக மோசமான ஒரு நிலைக்கு நாம்
கொண்டு செல்லப்பட்டிருக்கிறோம் என்பது உண்மை தானே……???
…

…
—————————————————————————-



உங்களின் விமரிசனம் ஒருதலைபட்சமானது.
சக்தி
அங்கே சொல்லி இருப்பதில் எது தவறானது ?
அத்தனையும் நிஜம். நாடு அதல பாதாளத்தில் விழுந்து விட்டது.
அய்யா …! ஏதாே ” “காம்-கீ-பாத்’ ” என்று ஒன்று இருக்கா …?
செல்வராஜன்,
சீரியசாக தான் கேட்கிறீர்களா…?
ஹிந்தியில் “காம்-கி-பாத்” என்றால், “வேலையைப் பற்றிய பேச்சு…”
என்று பொருள் கொள்ளலாம்….!!!
“வேலை பேசுகிறது” என்றும் கொள்ளலாம்… 🙂 🙂
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
அய்யா…! இடுகையில் சுட்டியுள்ளதை பற்றிய ” பேச்சு ” எனலாமா .. அல்லது அவைகளே ” பேசுகிறது ” எனலாமா …?
செல்வராஜன்,
.
“செயல்களே பேசுகின்றன” என்பதை விட –
“விளைவுகள் – செயல்களின் பெருமையை பேசுகின்றன” என்று சொல்வது
இன்னும் பொருத்தமாக இருக்குமென்று நினைக்கிறேன்….. 🙂 🙂
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
KM Sir see Dinamani news to know about RBI situation.
Mercy,
ரிசர்வ் பேங்க் டெபுடி டைரக்டர் ஆச்சார்யா அரசாங்கத்திற்கு சாபமே கொடுத்திருக்கிறார்.
தங்களை சுதந்திரமாக செயல்பட விடாமல் தொடர்ந்து இடையூறு செய்தால்,
பொருளாதாரம் நாசமாகிப் போகும் என்று எச்சரித்திருக்கிறார்..
ஆனால் அரசாங்கம் கவலைப்படவே இல்லையே…
அருண் ஜெட்லிஜியைப் போன்ற ஜீனியஸ்கள் இருக்கும்போது
இவர்கள் பேச்சு, எச்சரிக்கையெல்லாம் எடுபடுமா…?
ஜெட்லிஜி சொல்கிறார் – ரிசர்வ் வங்கியில் இருப்பவர்களுக்கு பொருளாதாரமே
தெரியவில்லையென்று….!!!
மூர்க்கர்களுக்கு யார் புத்தி சொல்ல முடியும்…?
இவருக்கு சு.சுவாமி தான் சரிப்படுவார்.
.
வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
உங்கள் கருத்தோடு மாறுபடுகிறேன்.
என்னவோ சிபிஐ அப்பழுக்கில்லாத உயர்ந்த ஸ்தானத்தில் ஐந்து வருடத்துக்கு முன் இருந்தது போல இந்த வாதம் இருக்கிறது! (இந்த கேஸ் ஆரம்பத்திலிருந்து ஒரு ஆதாரமானது யாராவது கொண்டுவருவார்கள் என்று காத்திருந்தேன் — 2ஜி கேஸ் நீதிபதி)
தேர்தல் ஆணையம் சேஷன் இருந்த போது மட்டுமே சுதந்திரமாக இருந்தது. வேறு எப்போதும் இல்லை.
என்று ஜனார்தன் பூஜாரி லோன் மேளா ஆரம்பித்தாரோ, அன்றே பிடித்தது இந்திய வங்கிகளுக்கு சனி. ஆனாலும், வாராக்கடன் மிக அதிகமானது உண்மையே.
மற்றவற்றில் மாற்று கருத்து இல்லை.
எனக்கு இதில் சொல்லியுள்ளவற்றில் உடன்பாடு கிடையாது. 2008க்குப் பிறகு ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்துகொண்டே வந்திருக்கிறது. (ஆனாலும் நம் நாட்டில் எப்போதுமே பணவீக்கம் இருந்துகொண்டே வந்திருக்கிறது. 1947ல் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் எவ்வளவு, ஒவ்வொரு வருடமும் அது எப்படி மாறியிருக்கிறது என்று பார்த்தாலே போதும்). பெட்ரோல் உபயோகம், அதீத வாகனங்கள், அதீத மின்னணுப்பொருட்கள் என்று நிலைமை கட்டுக்கடங்காமல் இருக்கும்போது அதீத இறக்குமதி தவிர்க்கமுடியாது. மக்கள் அந்நிய உணவு, உடை, கார் போன்று எல்லாவற்றிலும் அந்நியமோகம் கொண்டு இருப்பதால் இறக்குமதியும், நம் பணம் வெளிநாட்டுக்குச் செல்வதும் கட்டுக்கடங்காமல் இருக்கிறது. 1950ல் பவுன் மதிப்பு என்னவாக இருந்தது, 1980ல் அது எப்படி அதிகமாகியது? அப்போது பணவீக்கம் இல்லையா?
மதவெறி, சகிப்புத் தன்மை குறைவு – இதெல்லாம் இந்த ஆட்சியில் அதிகமானதாக எனக்குத் தெரியவில்லை. பாஜக ஆட்சிக்கு முன்னால் 10 ஆண்டுகளில் எவ்வளவு பயங்கரவாதச் செயல்கள், அந்நிய ஊடுருவல் இருந்தது என்று கணக்கெடுத்தால் அவைகள் இந்த ஆட்சியில் இல்லை என்பது தெளிவாகத் தெரியும்.
சிபிஐ, எப்போதும் அரசாங்கத்தின் கைப்பாவையாகத்தான் இருந்துவந்துள்ளது. இந்திரா காந்தி காலத்திலிருந்து நீதித்துறை பாழ்படுத்தப்பட்டது. என்னவோ இதற்கு முன்னால் அங்கு புத்தர்கள் இருந்ததுபோலவும் இப்போதுதான் கலகம் வெடிப்பது போலவும் எண்ணுவது தவறு. டி.என்.சேஷன் தேர்தல் ஆணையம் எப்படிச் செயல்படவேண்டும் என்று காட்டினார். அடுத்து வந்த காங்கிரஸ் அரசு, தேர்தல் ஆணையத்திற்கு மூன்று தலைவர்களை நியமித்து நீர்த்துப்போகச் செய்தது.
முட்டாள்களுக்கு மீடியா வெளிச்சம் எப்போதும் இருந்துவந்துள்ளது. போராட்டக் காரர்கள் எப்போதுமே ஒடுக்கப்பட்டுவந்துள்ளனர். பாஜக ஆட்சிக்கு முன்னர், நக்சல் இயக்கத்திற்கு அமைச்சர் பதவி கொடுத்தார்களா? இல்லை கலவரங்களில் ஈடுபட்டவர்களுக்கு அரசாங்கப் பதவி கொடுத்தார்களா?
இதில் வெளியிடப்பட்டிருக்கும் கருத்துக்கள் எந்த ஆட்சிக்கும் எந்தக் காலத்திலும் பொருந்தும்.
ஆனாலும் பாஜக, நல்ல ஆட்சி கொடுத்துள்ளது என்று சொல்வதற்கு எனக்குத் தெரிந்து ஒரு உதாரணமும் கிடையாது. காங்கிரசை விட இது பெட்டர் என்பதற்கும் எனக்கு உதாரணங்கள் கிடைக்கவில்லை except காங்கிரஸ் தலைமை-சோனியா அவர்கள், நாட்டின் தார்மீக நெறிகளைக் குழிதோண்டிப் புதைத்தார், கொள்ளையர்களைக் கூட்டுச் சேர்த்துக்கொண்டு காமன் வெல்த், 2ஜி என்று அரசைச் சூறையாடினார், இலங்கைத் தமிழர்களை திமுக துணையோடு கொன்றுகுவித்தார்.