…
…

…

…
செய்தி –
திரு.அமீத் ஷா, தற்போது கேரளா வந்திருக்கிறார்.
நேற்று அவர் முன்னிலையில் மாதவன் நாயர், பாஜகவில் இணைந்தார்.
சொன்னது –
தற்போது பாஜகவில் இணைந்தது பற்றி மாதவன் நாயர் கூறும்போது,
“சிறிது காலமாகவே நான் பாஜகவிற்காக பணியாற்றி வந்தேன்.
நாட்டின் மேம்பாடு குறித்த பிரதமர் மோடியின் எண்ணங்கள்
என்னை ரொம்பவே பாதித்தது. அதன் காரணமாகவே தற்போது என்னை பாஜகவில் இணைத்து கொண்டேன்” என்று தெரிவித்தார்.
மாதவன் நாயர் சொல்லாமல் மறைத்தது –
மாதவன் நாயரின் மீது இஸ்ரோவில் பணிபுரிந்த காலத்தில் செய்த
“தேசத்துரோகம்” உட்பட பல பிரிவுகளில், அசைக்க முடியாத
ஆதாரங்களுடன் தொடுக்கப்பட்டுள்ள வழக்கு இன்னமும் நிலுவையில்
இருக்கிறது…….!!! ( தற்போது அதிலிருந்து தப்பிக்க சுலபமான வழி
கண்டுபிடித்திருக்கிறார்……??? )
—————–
திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட குற்றங்கள் –
இந்த கிரிமினல் வழக்கு குறித்த விவரங்கள் –
நீண்ட காலத்திற்கு முன்பே,
அவை வெளியே தெரிய வந்த காலத்திலேயே,
விமரிசனம் தளத்தில் வெளிவந்திருக்கின்றன…
2011-12-ல் பல கட்டுரைகள் வெளிவந்தன
நீண்ட நாட்களாகி விட்டன…
பலர் மறந்திருக்கலாம்.
புதிய வாசக நண்பர்கள் அவற்றை காண விரும்பலாம்.
கீழே இருக்கும் ஒரு இடுகையை பார்த்தாலே
அனைத்து விவரங்களையும் புரிந்துகொள்ள முடியும்…
ஜனவரி 27, 2012-ல் வெளிவந்த அதனைப் பார்க்க கீழே சொடுக்கவும் –
( இடுகையின் நடை கண்டு, புதிய வாசகர்கள் திகைக்கலாம்… பழைய நண்பர்களுக்கு தெரியும்…. ஆமாம்… அப்போதெல்லாம் மிக சூடான கட்டுரைகள் எழுதி வந்தேன்… இப்போது அந்த சூடு இல்லை…!!! )
மாதவன் நாயரே – ஆட்டம் வேண்டாம் ! இது “பேட்டை துள்ளல்” இல்லை – சுத்தமான கிரிமினல் கேஸ் !
மேற்படி கட்டுரையில் சொல்லப்பட்ட செய்திகளுக்குப் பிறகு-
திரு.மாதவன் நாயர் மற்றும் அவரது கூட்டாளிகளின் மீது
சிபிஐ கிரிமினல் வழக்கு தொடர்ந்தது – இன்னும் நிலுவையில் இருக்கிறது….
சாதாரண மனிதர்களான நம்மைப்போன்றவர்களுக்கே
தெரிந்த – மாதவன் நாயரின் கிரிமினல் பின்னணி
திரு.அமீத்ஜீக்கு தெரியாதா ?
தேசதுரோகிகள் பாஜகவில் சேர்வதன் மூலம்
தங்கள் மீதுள்ள கிரிமினல் வழக்கிலிருந்து
தப்பித்துக்கொள்ள பாஜக மேலிடம் உதவலாமா…?
———————-
பின் குறிப்பு –
நண்பர்கள் இதையும் காண விரும்புகிறேன் –
ஆட்டம் போட்ட மாதவன் நாயரின் – ஸீன் 3 !! நாடகம் பாதியில் முடிகிறது !!
.
—————————————————————————-



மாதவன் நாயர் : — // தப்பிக்கப் பார்க்கும் ஒரு கிரிமினல் – // அய்யா … ! இது போன்ற தலைப்பை படித்தாலே போதும் ஓரளவு விஷயம் அத்துப்படியாகிவிடும் — சூப்பர் … ! ஒரு செய்தி :— // சிறப்புப் பார்வை: இனி யார் உண்மை பேசுவார்? // https://minnambalam.com/k/2018/10/29/10 …. மாதவன் நாயர் போன்ற யோக்கியர்கள் இணைவது — இன்றைய மின்னம்பலம் செய்தி போன்றவைகள் — ஜனநாயகத்தை வலுப்பெற வைத்து நம்பிக்கையூட்டும் … அப்படித்தானே …?
செல்வராஜன்,
இதற்கான விடை மக்களிடம் தான் இருக்கிறது…
மக்கள் நினைத்தால், எதையும் மாற்ற முடியும்…உருவாக்கவும் முடியும்.
விடிவிற்கு – எதிர்காலத்தை நம்புவோம்.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
ayya,
I am really worried on people mentality including me. we just do our daily routines and we cant get much time for social services. I am doing financial assistance to orphan & elders home as a maximum social service. Do you really think, social revolution can happen with present self-centered generation? I am not blaming us. Our education system just replaces marks & ranks for discipline, affection, mercy and patriotism. I am really frustrated to see all the things and i am feeling handicapped. We are really missing a good self less leader for our country and state.
Pl share your view and if possible a blog post.
thanks
Karthik
கார்த்திக்,
உங்கள் உணர்வுகள் எனக்கு புரிகின்றன… அந்த மாதிரி உணர்வுகளால் உந்தப்பட்டு தானே நான் இந்த வலைத்தளத்தில் மீண்டும் மீண்டும் எழுதிக் கொண்டிருக்கிறேன்… நான் எழுதுவதால் மட்டும் இந்த நிலை மாறி விடும் என்றெல்லாம் நான் நினைத்துக் கொள்வதில்லை….இத்தகைய உணர்வுகளை நம்மிடையே எழச்செய்யவும்,
நமது சிந்தனைகளை, எண்ணங்களை பரிமாறிக்கொள்ளவும் பயன்படும் என்று தான் இங்கு எழுதுகிறேன்.
நீங்கள் இங்கே எழுதியிருப்பது போல், இன்னும் நிறைய நண்பர்கள் மனதுக்குள் நினைத்துக் கொண்டிருப்பார்கள் என்பதை என்னால் உணர முடிகிறது….. இந்த எண்ணிக்கை இன்னும் இன்னும் அதிகமாக வேண்டும். அரசியல்வாதிகளை (எந்த கட்சியாக இருந்தாலும் சரி) நம்பாமல், இந்த சமூகம், மக்கள், நாடு, முன்னேற நம்மால் என்ன செய்ய முடியும் என்று யோசிக்க வேண்டும். அது எத்தகைய பங்களிப்பாக இருந்தாலும் சரி….
சிறு துளி பெருவெள்ளம். தனி மனிதர்கள் விழித்துக்கொண்டால், சமூகமும் நிச்சயம் விழித்துக் கொள்ளும்.
நீங்கள் தொடர்ந்து உங்களால் இயன்றதை செய்துகொண்டே இருங்கள். இதை எல்லா நண்பர்களுக்கும் சேர்த்தே சொல்கிறேன்… எதிர்காலத்தில் நம்பிக்கை வைப்போம்.
இயற்கையே, இறைவனே – ஒரு நல்ல வழிகாட்டியை அனுப்பி வைப்பான்…கடந்த காலங்களில் எல்லாம், தேவை ஏற்படும்போதெல்லாம் இது நடந்திருக்கிறது. எதிர்காலத்திலும் நடக்கும்.
உங்களுக்கு குற்ற உணர்வு வேண்டாம். உங்களால் முடிந்ததை செய்துகொண்டே இருங்கள்.
உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
Nandri Ayya. Got tears when I read your reply. You are great.
//நான் எழுதுவதால் மட்டும் இந்த நிலை மாறி விடும் என்றெல்லாம் நான் நினைத்துக் கொள்வதில்லை….இத்தகைய உணர்வுகளை நம்மிடையே எழச்செய்யவும், நமது சிந்தனைகளை, எண்ணங்களை பரிமாறிக்கொள்ளவும் பயன்படும் என்று தான் இங்கு எழுதுகிறேன். //
சார் மிகச்சரியாகவே சொல்லி இருக்கிறீர்கள்.
இந்த தளத்தினால் பலரது மனதில் உறங்கிக்கொண்டிருக்கும் பொதுவாழ்வில் நேர்மை, நியாயம், குறித்த உணர்வுகள் தூண்டப்படுகின்றன. ஊர் எக்கேடு கெட்டால் என்ன; நாம் ஒருவர் கேட்பதால் மட்டும் மாறி விடவா போகிறது என்கிற எண்ணம் தான் பெரும்பாலானவர்களை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது.
இதில் நமக்கு நேரடி சம்பந்தம் இருக்கிறது – இதை திருத்த வேண்டிய பொறுப்பு,
சரி செய்ய வேண்டிய பொறுப்பு நமக்கும் இருக்கிறது என்று ஒவ்வொருவரும் உணர ஆரம்பித்தால் போதும். நிச்சயம் மாற்றம் வரும்.
நீங்கள் சொல்வது போல் – இன்றில்லா விட்டாலும், நாளையாவது.
அய்யா …! // உணர்வுகளால் உந்தப்பட்டு தானே நான் இந்த வலைத்தளத்தில் மீண்டும் மீண்டும் எழுதிக் கொண்டிருக்கிறேன்… // இந்த தங்களின் இந்த எழுத்திற்கு எந்தவிட தடையும் ஏற்படாமல் இருக்குமா …? இருக்க இறைவன் அருளை வேண்டுவாேம் …!!