திருடர்களே தலைவர்களாக இருந்தால் …..


ஒரு நாட்டின் பெரும்பான்மையான அரசியல் தலைவர்கள்,
திருடர்களாகவே இருந்தால், அந்த நாட்டு மக்களின் நிலை எப்படி
இருக்கும்…?

அண்மையில், சீனாவின் ஹாங்காங்க் நகரை மக்காவ்’வுடன்
இணைக்கும் 55 கி.மீ. நீளமுடைய மிக நீண்ட கடல் பாலம் திறந்து
வைக்கப்பட்டதை பார்த்தபோது, இந்திய மக்கள் அடைந்த
உணர்வைப்போல் தான் இருக்கும்.

இதைப்பார்த்து பெருமூச்சு விடுவதைத் தவிர, நாம் வேறு என்ன செய்ய
முடியும் …? உழைப்பாளிகளான சீன மக்களையும், நாட்டின்
வளர்ச்சியில் உண்மையான அக்கறை காட்டும் சீன அரசையும்,
உளமாரப் பாராட்டவும் முடியும்….. அதையே செய்வோம்…!


—————————————————————————————————-

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to திருடர்களே தலைவர்களாக இருந்தால் …..

  1. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    இந்தியாவில் நல்லவர்கள் குறைவு, அல்லது ஒதுங்கிப் போய்விடுகின்றனர். அதனால் அரசியல் மற்றும் அதிகார வர்க்கம் சரி செய்யமுடியாத விதமாக மோசமான நிலையில் இருக்கிறது. அவர்கள் மக்களையும் தங்கள் ‘குற்றங்களுக்கு’ உடந்தையாக்கிவைத்திருப்பதால் மொத்த இந்தியாவும் நல்ல நிலையை நோக்கிச் செல்லவில்லை.

    நாம் சீனாவைப் பார்த்து பெருமூச்சுதான் விடமுடியும். அவர்களில் பாதி அளவு அடைவதற்குக்கூட நமக்கு, நம் மக்களுக்குத் தகுதியில்லை.

  2. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    அய்யா ..! // ஒரு நாட்டின் பெரும்பான்மையான அரசியல் தலைவர்கள்,
    திருடர்களாகவே இருந்தால், அந்த நாட்டு மக்களின் நிலை எப்படி
    இருக்கும்…? // கேள்வியோடு நிறுத்திவிட்டிர்களே — ஏதாவது ஒரு உதாரணம் கூறியிருக்கலாமே …!

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


      செல்வராஜன்,

      உதாரணம் – இன்று நம் நாடு இருக்கும் நிலை தான் சிறந்த உதாரணம்..!

      சீனா உலகிலேயே நீளமான 55 கி.மீ.கடல் பாதையை முழுக்க முழுக்க தங்கள் தொழில்நுட்பத்தையே பயன்படுத்தி, தன் மக்களின் உழைப்பிலேயே, உருவாக்கி, பொருளாதார வளர்ச்சிக்கு வழி வகுத்திருக்கிறது.

      இந்தியா – 3000 கோடி ரூபாய் ஒதுக்கி, அதே சீனாவிடம் கொடுத்து, அதன் தொழில் நுட்பத்திலேயே ஒரு சிலையை உருவாக்கி, இங்கே கொண்டு வந்து உலகிலேயே பெரிய சிலையை நாங்கள் தான் இந்தியாவில் நாட்டினோம் …
      பார் எங்கள் சாதனையை என்று நாளைய தினம் பெருமையடித்துக் கொள்ளப்போகிறது ஒரு கூட்டம்….கூடவே “பாரத் மாதா கீ ஜெய்” என்று கோஷம் வேறு எழும்பும்.

      போதுமே….இதைவிட வேறென்ன உதாரணம் வேண்டும்…

      -காவிரிமைந்தன்

      • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

        கா.மை சார்… சீனர்கள் (தாய்வான் மற்ற எல்லா பகுதியிலுள்ளவர்களும்) ஹார்ட்வேரில் (கணினி, அதன் உதிரிப்பாகங்கள், எலெக்டிரானிக் சாமான்கள்) அவங்களை அடிச்சிக்க முடியாது. ஜெர்மனி, ஃப்ரான்ஸ் என்று இருந்தாலும், சைனா பொருட்கள் விலை மலிவு. நான் பெரும்பாலும் தாய்வானில் இருந்துதான் இறக்குமதி செய்துகொண்டிருந்தேன் (அவங்க ப்ராடக்ட், சைனாவை விட நல்லா இருக்கும், ஏன்னா குவாலிட்டி மிக அதிகம்). இந்தியாவில் செய்யும் ஹார்ட்வேர்கள் என்பதும் அங்கிருந்து எல்லாம் வாங்கி அசெம்பிள் செய்வதுதான் (பெரும்பாலும்). இந்தியாவுக்கு அந்த ஹார்ட்வேர் நாலட்ஜ் இந்த ஜென்மத்துக்கு வராது (நான் கேலியாச் சொல்லலை. சீனர்கள் இந்த விஷயத்துல எங்கயோ இருக்காங்க. கொரியர்கள் நெட்வர்க்-ஃபைபர் ஆப்டிக்ஸ் போன்றவற்றில் எங்கேயோ இருக்காங்க. நாம அவங்க உயரத்தை அண்ணாந்துதான் பார்க்கணும்).

        சீனாவின் இண்டஸ்டிரியை அவ்வளவு ஊக்குவிக்கறாங்க. அந்தத் தொழிலதிபர்கள் (எல்லாம் சாதாரணர்கள்தான்) ஆங்கிலத்தில் சுமார்தான். ஹோட்டல்களுக்கான ஃபர்னிச்சர் எல்லாம் அவங்களைமாதிரி குறைந்த விலையில் உற்பத்தி செய்ய முடியாது.

        ஆனால் சாஃப்ட்வேரிலும், பெரிய அளவில் கைகொடுக்கும் கால் செண்டரிலும் நாம், குறிப்பாக சென்னை, பெங்களூர் போன்றவை நல்ல நிலையில் இருக்கு. அதைத் தகர்ப்பதற்காக சீனக்குழு சில வருடங்களுக்கு முன்பு இங்கு வந்து அதனை ஆராய்ந்து சென்றிருக்கிறது. அதனால்தான் அவங்க ஆங்கில வழிக்கல்விக்கு, அந்த மொழிக்கு மிக்க முன்னுரிமை கொடுத்து அதுல மேலே வரப் பார்க்கிறாங்க. அதனை அவங்க அச்சீவ் பண்ணிட்டாங்கன்னா, நம்மைவிட பிரமாதமா கால் செண்டர்கள் அவங்க நடத்துவாங்க, நம்ம நாட்டின் வேலை வாய்ப்பு மிகவும் பறிபோகும் (இப்பவே நாம சைனா எக்விப்மெண்ட்ஸ்தான் கால் செண்டர்ல உபயோகப்படுத்தறோம்னு நினைக்கறேன்)

        • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

          புதியவன்,

          இங்கே software துறையில் நாம் கண்டிருக்கும் முன்னேற்றம், வளர்ச்சி அத்தனைக்கும் காரணம் தனிப்பட்ட நபர்களின் ஆர்வமும், திறனும், முயற்சியுமே.

          அரசாங்கத்திற்கோ, அரசியல்வாதிகளுக்கோ – இதில் இம்மியளவு கூட பங்கில்லை.
          ஒருவேளை அவர்கள் தலையிட்டிருந்தால் – இந்த துறையும் நாசமாகிப் போயிருக்கும்.

          இந்த அரசியல்வாதிகளை கட்டுப்படுத்த, மிகக்கடுமையான ஒரு system இங்கு அவசியம் உருவாக வேண்டும்.
          அதற்கு திரு. டி.என்.சேஷன் போன்றவர்கள் தேவை.

          பார்ப்போம்… மீண்டும் ஒரு சேஷன் இங்கே உருவாகின்றாரா என்று…

          -வாழ்த்துகளுடன்,
          காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.