…
இன்று நீதிமன்ற உத்திரவு வெளியான பின்பு, மத்திய அமைச்சர்
உதிர்த்த வார்த்தை முத்துக்கள் இவை –
…

…
” நேர்மை காக்கப்பட வேண்டும் என்ற நல்லநோக்கில் தான் இயக்குநர்,
துணை இயக்குநர் ஆகியோர் மீது விசாரணை நடத்த மத்திய ஊழல்
கண்காணிப்பு ஆணையம் உத்தரவிட்டு, விசாரணை முடியும் வரை அவர்கள் பணியில் இருந்து விலகி இருக்கக் கோரியது.
சிபிஐயின் நோக்கம் மற்றும் நம்பத்தன்மை ஆகியவற்றைப் பாதுகாப்பதே
மத்திய அரசின் நோக்கம்….”
” சிபிஐயின் தலைமை பதவிகளில் இருப்பவர்கள் சீசரின் மனைவியை
போல சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்கவேண்டும்.
அத்தகைய பதவியில் இருப்பவர்கள் மீது எந்த ஒரு சந்தேகமும் வந்து
விடக் கூடாது ”
———————————-
அற்புதமான கொள்கை…பொன்னெழுத்துகளில் எழுதி, போற்றி பாதுகாக்கப்பட
வேண்டிய ஒன்று…!!!
எல்லாம் சரி தான்.. ஆனால், 5 வழக்குகள் அவர் மீது விசாரணையில்
இருக்கும்போதே, அந்த விசாரணை முடிவடையாத நிலையிலிருந்தபோதே, குஜராத்திலிருந்து அஸ்தானா-வை டெல்லிக்கு அழைத்து வந்து –
(சிபிஐ டைரக்டர் அலோக் வர்மா, அஸ்தானா மீது விசாரணையிலுள்ள
வழக்குகளைப்பற்றி மத்திய அரசுக்கு எழுத்து மூலம் தெரிவித்த பிறகும் கூட- )
மத்திய அரசு அவரை சிபிஐ ஸ்பெஷல் டைரக்டராக அமர்த்தி
அழகு பார்த்த போது,
ஜெட்லிஜிக்கு – சீசரின் மனைவி நினைவுக்கு வரவில்லையா…?
.
———————————————————————————



அய்யா …. ! சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவளாக இருக்க வேண்டும்… உண்மைதான் … இருந்தாரா என்பதற்குள் போகக்கூடாது ….!
இதெல்லாம் இருக்கட்டும் நல்ல செய்திகளையும் படித்து கொஞ்சம் ரிலாஸ்க் ஆகா இருக்க …. நம்ம ராக தேவனின் இசை என்னவெல்லாம் அற்புதங்கள் புரிகிறது என்பதற்கு இந்த செய்தி :— // ராஜாவின் ராகம்.. சொக்க வைக்கும் குரலில்.. கண் மூடி தூங்கும் யானை.. இது குஞ்சனின் கதை! //
Read more at: https://tamil.oneindia.com/news/india/young-man-srikumar-sings-elephant-sleep-with-lullaby-ilayaraja-songs/articlecontent-pf333044-332776.html //
இது சம்பந்தமான அனைத்து இடுகைகளையும் அது சார்ந்த கருத்துக்களையும் படித்தேன். காங்கிரஸ் கட்சி தன்னந்தனியே மத்திய அரசை ஆட்சி புரிந்திருந்தால் (அதாவது கொள்ளையர்களைக் கூட்டுச் சேர்க்காமல்) ஒரு வேளை இத்தனை மக்கள் வெறுப்பைச் சம்பாதித்திருக்காதோ? இருந்தாலும் எனக்கு சோனியா, அவரின் மருமகன் போன்றவர்கள் கொஞ்சம்கூட தார்மீக நெறி இல்லாதவர்கள், ஊழல் வாதிகள், ஊழல்வாதிகளைக் காப்பவர்கள், நம்முடைய அரசியல் நெறிமுறைகளை மிதிப்பவர்கள் என்றுதான் அபிப்ராயம். நிற்க….
பாஜக, அது நடந்துகொள்ளும் விதம் பற்றி ஒன்றுமே எழுதத் தோன்றவில்லை. இவர்கள் அகில இந்திய கருணாநிதி கழகமோ என்ற சந்தேகம் வருவதைத் தவிர்க்க இயலவில்லை. அது சந்தேகம் என்ற நிலைக்கும் மேலாகச் சென்றுவிட்டது.
கா.மை. சார்… சாத்தான் வேதம் ஓதுகிறது என்று சொல்வார்களே. அதன் உண்மை அர்த்தம் என்ன?
திரு.அருண் ஜெட்லியை கேட்டால் –
அதையும் வக்கணையாக விளக்குவாறென்று நினைக்கிறேன்… 🙂 🙂
It is essential to prevent divided loyalties among the subordinates and malfunctioning of the institutions both of them kept out of power.In govt.services sent on leave does not mean heis removed from the post and will come back.The judiciary which is appropriating the powers of other branches of the govt should have anticipated this impasse and suggested remedies.Now putting judge to oversee the enquirer by the CVC it is denigrating this post also.if every institution is blackened what is going to be the future of democracy in India.The govt did not jump in when 4judges cast aspersions on the CJI and cast aspersions on a judge who was sympathizer of an opposition party.Thiruvengadam
@திருவேங்கடம் திருமலாச்சாரி அவர்கள் – //In govt.services sent on leave does not mean heis removed from the post and will come back.// – நீங்கள் சொல்வது புரிந்துகொள்ளக்கூடியது. ஆனால் கேள்வி, அரசுக்கு இதில் எந்த நல்ல நோக்கமும் கிடையாது என்பதுதான். ஹஸ்தானாவைக் கொண்டுவரவேண்டிய அவசியம் என்ன? சிபிஐ இன்ஸ்டிடியூஷனின் மேன்மையைக் காக்கவா? பாஜக, அலோக் வர்மா அவர்களை நீக்க முடியாது. ஏனென்றால் இதற்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இவர்களில் ஒருவர் (அல்லது இருவருமேயா?) முழுமையாக சம்மதிக்கவேண்டும். அதற்கு தற்போதைய நிலையில் சாத்தியமில்லாததால்தான் இதனைச் சாக்கிட்டு அலோக் வர்மா அவர்களையும் முடக்கியதுபோல் தெரிகிறது. ‘சீசரின் மனைவி’ என்றெல்லாம் சுட்டிக் காண்பிப்பதற்கு ஜெட்லி அவர்களுக்குத் தகுதி இருக்கிறதா என்பதை நாம் யோசித்துப்பார்க்கவேண்டும். பாஜக அரசின் முக்கியஸ்தர்கள் அனைவரும் எடுத்த பல முடிவுகள், இதற்கு நேர்மாறாகத்தான் இருந்திருக்கிறது (லலித் மோடிக்கு விசா, மால்யாவை பத்திரமாக வெளிநாடு தப்பிச்செல்ல உதவியது, 2ஜி, தொலைத் தொடர்பு வழக்கு முடக்கப்பட்டது…… இதைத் தவிர ஏகப்பட்ட உதாரணங்கள் கொடுக்கமுடியும்)