இந்த “தத்தி”கள் நிஜமாகவே இண்டெலிஜென்ஸ் ஆட்களா…?


முந்தாநாள் வரை சிபிஐ புலனாய்வு நிறுவனத்தின் தலைவராக இருந்து,
நேற்று மோடிஜியின் கருணையால் வீட்டுக்கு அனுப்பப்பட்ட திரு.வர்மா
அவர்களின் வீட்டின் அருகே –

மணிக்கணக்கில் சந்தேகப்படும் விதத்தில், வீட்டின் முன்புறமும்,
பின் பக்கத்திலும் முகாமிட்டிருந்த 4 நபர்களை, வர்மா அவர்களின்
பாதுகாவலர்கள் (டெல்லி போலீஸ்) இன்று காலை சுற்றி வளைத்து
பிடித்திருக்கிறார்கள்.

பாதுகாப்பு போலீஸ் அவர்களை அணுகி, அவர்கள் யாரென விசாரிக்க
முயன்றபோது, அவர்கள் விழுந்தடித்துக் கொண்டு அங்கிருந்து
தப்பியோட முயன்றிருக்கின்றனர்.

போலீஸ் விடாமல் அவர்களை துரத்திப் பிடித்து அமுக்கி, கழுத்தை பிடித்து ‘தள்ளிக்கொண்டு’ போய் வர்மா அவர்களின் வீட்டு காம்பவுண்டிற்குள் வைத்து
விசாரித்திருக்கின்றனர்…. முதலில் அவர்கள் தங்களைப் பற்றிய
எந்த விவரங்களையும் தரவில்லை… பின்னர் பாதுகாப்பு போலீஸ்
அவர்களை சோதனையிட்டதில், அந்த 4 பேரிடமும், இண்டெலிஜென்ஸ் பீரோவில் பணிபுரிபவர்களுக்கான அடையாள அட்டைகள்
கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன.

அந்த ஆட்கள் டெல்லி போலீசிடம் மாட்டி, குட்டு வெளிப்பட்டு விட்டது
என்றவுடன், இண்டெலிஜென்ஸ் பீரோ அவசரம் அவசரமாக, “எங்கப்பன் குதிருக்குள் இல்லை” கதையாக – இது வர்மாவை வேவு பார்க்கும் வேலை அல்ல… எங்கள் நிறுவனம் வழக்கமாக முக்கியமான இடங்களில் மேற்கொள்ளும் கண்காணிப்பு நடவடிக்கை தான் என்று தெரிவித்திருக்கிறது.

வர்மாவின் வீட்டில் ஒட்டுக்கேட்கும் சாதனத்தைப் பொருத்தவும்,
அவர் தொடர்பு கொள்ளும் நபர்களை உளவு பார்க்கவும் இந்த நபர்கள்
முயன்றதாக சில செய்திகள் தெரிவிக்கின்றன…

அவர்கள் உண்மையிலேயே இண்டெலிஜென்ஸ் ஆட்கள் தான் என்றால்,
அவர்கள் அதிகாரபூர்வமாக அந்த ஏரியாவில் பணிபுரிய
அனுப்பப்பட்டவர்கள் தான் என்றால், பாதுகாப்பு அலுவலர்கள் கேட்டபோது உடனடியாக இந்த விவரங்களை தெரிவித்திருக்கலாமே…
அவர்கள் ஐ.பி. ஆட்கள் என்று சொல்லி அடையாள அட்டையையும்
காட்டி இருந்தால், இந்த பிரச்சினையே உருவெடுத்திருக்காதே…?

அவர்களின் கோமாளித்தனத்தை பார்க்கும்போது –

இரண்டு சந்தேகங்கள் எழுகின்றன.

1) அவர்கள் மேற்கொண்ட பணி அதிகாரபூர்வமானது தானா…?
அதில் உள்நோக்கம் வேறு எதுவுமில்லையா…?

2) அவர்கள் உண்மையிலேயே ஐ.பி. ஆட்கள் தானா…? அல்லது
குஜராத்திலிருந்து “இறக்குமதி” செய்யப்பட்டு தற்காலிக அடையாள அட்டை வழங்கப்பட்டவர்களா…?

ஏனெனில், ரெகுலர் ஐ.பி. ஆட்கள் இப்பேற்பட்ட ‘தத்தி’களாக இருக்கவே
முடியாது…. அவர்கள் புத்திசாலிகள்… சாமர்த்தியம் மிக்கவர்கள்…இண்டெலிஜென்ஸ் பீரோவில் இத்தகைய ‘தத்தி’கள் இருக்க
வாய்ப்பே இல்லையே…!!!

.
———————————————————————————

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to இந்த “தத்தி”கள் நிஜமாகவே இண்டெலிஜென்ஸ் ஆட்களா…?

  1. R.Gopalakrishnan's avatar R.Gopalakrishnan சொல்கிறார்:

    Sir, this video is not opening. But the balancing act video is opening. Can you guess the reason?

  2. மெய்ப்பொருள்'s avatar மெய்ப்பொருள் சொல்கிறார்:

    ஐ பி யில் உள்ள நிறைய பேர் இப்படித்தான் .இருக்கிறார்கள் .
    மேலே உள்ள அதிகாரிகள் சொல்வதை கேட்டு தலையை
    ஆட்டுவது தவிர வேறொன்றும் தெரியாது .
    அப்புறம் அய்யா அடிக்கும் ஜோக்குக்கும் சிரிக்க வேண்டும் .
    அவ்வளவுதான் .

  3. R.Gopalakrishnan's avatar R.Gopalakrishnan சொல்கிறார்:

    Yes, I saw this. thanks Mr.KM

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.