யமுனை ஆற்றிலே… ஈரக்காற்றிலே…


பிரயாகையில், திரிவேணி சங்கமத்திற்கு முன்பாக, சற்று மேற்கே ஒன்றரை கிலோமீட்டர் தொலைவிலிருந்து ஒரு படகு பயணம்…..

யமுனை ஆற்றில், நிறைய வெள்ளை நிற பறவைகள்… புறாக்களை விட பெரிதாக இருக்கின்றன.. நீரில் மிதக்கின்றன…. பார்க்க அன்னம் போல் இருக்கின்றன… படபடவென்று சிறகடித்து நீர்மட்டத்திற்கு வெகு அருகாமையிலேயே பறக்கின்றன.

ஆற்றில் மீன்களை கொத்திப் பிடிக்கும் பறவைகளை பார்த்திருக்கிறோம்.
ஆனால், இவை vegetarian பறவைகள் போலும்… முறுக்கு சாப்பிடுகின்றன…!!!

ஆம்… இவற்றிற்கு போடுவதற்கு என்றே ஆற்றில் சில படகுகளில்
சிறு வியாபாரிகள் (மெது)முறுக்கு பொட்டலங்களை – பத்து ரூபாய் –
விற்கிறார்கள். படகின் அருகிலேயே பறக்கும் இந்த பறவைகளை நோக்கி குரல் கொடுத்தால், அவை நம்மை கவனிக்கின்றன. முறுக்கு பொட்டலத்தை பிரித்து, அவற்றின் கண்ணெதிரேயே, ஆற்றில் வீசினால், இவை சிறகடித்துப் பறந்து வந்து, அந்த முறுக்கை கவ்வி சாப்பிடுகின்றன…. முறுக்கு நீரில் மூழ்குவதில்லை… மிதக்கிறது…

பார்க்க ரம்மியமான காட்சி…!

இவை வசந்தகாலம் துவங்கியவுடன் வந்து விடுகின்றனவாம். 5-6 மாதங்கள் இங்கே வாசம். குளிர்காலம் துவங்கியவுடன் இந்த இடத்தை விட்டு சென்று விடுகின்றனவாம்..!! எங்கிருந்து வருகின்றனவோ – எங்கே செல்கின்றனவோ… தெரியவில்லை..!!!
இயற்கையின் விசித்திரங்களில் இதுவும் ஒன்று….

நான் பார்த்து ரசித்த காட்சியை நீங்களும் பார்க்க – வீடியோ கீழே –
( full screen -ல் பாருங்கள்…)

….
———————————————————————————-

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to யமுனை ஆற்றிலே… ஈரக்காற்றிலே…

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.