திருமதி சின்மயி – திருவாளர் வைரமுத்து – யார் வழக்கு தொடுக்க வேண்டும்…?.. ஏன்…?


இதைப் படிக்கும் யாரும்
எந்தவித முன் முடிவும் இல்லாமல்
திறந்த மனதுடன் படிக்க வேண்டுகிறேன்.

பரபரப்பை உண்டாக்க இந்த இடுகை எழுதப்படவில்லை… நிதானமாக உண்மை நிலை அலசப்பட வேண்டுமென்று நினைக்கிறேன்.

முந்தைய தலைமுறைகளைப் போல் சமூகம் இப்போது இல்லை.. இன்றைய நாட்களில், ஒவ்வொரு வீட்டிலிருந்தும் – ஒன்றிரண்டு பெண்கள் நிச்சயமாக பணி செய்ய பலதரப்பட்ட இடங்களுக்கு/அலுவலகங்களுக்கு போகிறார்கள்…

எனவே, இதை படிக்கும்போது, இந்த பிரச்சினை தங்கள் வீட்டு பெண்களும் சந்திக்கும் ஒன்று என்பதை மனதில் கொள்ள வேண்டுகிறேன்.

இன்றைய நாட்களில் அநேகமாக எல்லா இடங்களிலும் ஆண்களும் பெண்களும் சேர்ந்து தான் பணிபுரிய வேண்டியிருக்கிறது. 40 வருடங்கள் பல ஊர்களில், பல
அலுவலகங்களில் பெண்களுடன் சேர்ந்து பணிபுரிந்து வந்த என்
அனுபவத்தில், என் பார்வையில் இந்த கருத்துகளைச் சொல்கிறேன்….

40 – க்கு குறைவான வயதுடைய பெண்களில் பலர்
தாங்கள் பணிபுரியும் இடங்களில், ஏதோ ஒரு வகையில் பாலியல்
தொந்திரவுக்கு உள்ளாகித்தான் வருகின்றனர். இதை வன்கொடுமை
என்று சொல்ல முடியாது… ஆனால் உளவியல் ரீதியான
பாதிப்பு…..அதை வெளியில் பகிர்ந்து கொள்ள முடியாமல்,
உள்ளேயே வலிகளோடும், வடுக்களோடும் வாழ்ந்து வருகின்றனர்…..

இது வரை கற்பழிப்பு என்கிற ஒன்று தான் வெளியே வந்தது…
அதற்கு குறைவான எந்த புகார்களும் வெளிவரவில்லை…

அப்பாவி போல் பொதுப்படையாக சில வார்த்தைகளை வெளியிட்டு
முன்னோட்டம் பார்ப்பது;
கெட்ட எண்ணங்களோடு இரட்டை அர்த்தம் தரும் வார்த்தைகளை கலந்து உரையாடுவது;
தனியே வெளியிடங்களுக்கு செல்ல அழைப்பு விட்டு நோட்டம் பார்ப்பது…
என்று எவ்வளவோ வகைகள்…

நான் அதிகம் விவரிக்க வேண்டியதில்லை.. இதை படிப்பவர்களுக்கே அதெல்லாம் தெரிந்தது தான்… .

கூடவே பணிபுரியும் கலீக்ஸ் ஒரு விதம் என்றால், மேலதிகாரிகள் வேறொரு விதம்…. அலுவலக நேரம் முடிந்த பிறகும் கூட, தங்களுடன் தனியே அமர்ந்து பணிபுரிய வலியுறுத்துவார்கள்… தேவையின்றி அடிக்கடி கூப்பிடுவார்கள்… எந்த வேலையும் சொல்லாமல் எதிரே உட்கார வைத்துக்கொள்வார்கள்.

உடன் பணிபுரிபவர்களை கூட புத்திசாலியான பெண்கள் சுலபமாக விலக்கி விடுவார்கள்… ஆனால் உயர் அதிகாரிகள்…?

இதற்கெல்லாம் பயந்து பணியை விட முடியாது; மாற்றிக் கொள்ளவும் வழி
இல்லையென்றால் பாவம் என்ன தான் செய்வார்கள்…?
நான் எந்த ஊரில், எந்த இடத்தில், பணிபுரிந்தாலும், என்னுடன் பணிபுரியும் பெண்களிடம், பரிவுடனும், ஆதரவாகவும், உதவியாகவும் இருப்பவன் என்பதால், பல பெண்கள் என்னிடம் தங்கள் பிரச்சினைகளை மனம்விட்டு கூறி இருக்கிறார்கள்… பல சமயங்களில் அவர்களின் பிரச்சினைகளிலிருந்து விடுபட நான் நேரடியாகவும், மறைமுகமாகவும் உதவி இருக்கிறேன்.

நான் நிர்வாக (ADMINISTRATION) பிரிவில் பணிபுரிந்து வந்ததால்,
தொல்லை கொடுக்கும் நபர்களை வேறு பிரிவுகளுக்கு மாற்றம் செய்து
அல்லது பாதிக்கப்பட்ட பெண்களை வேறு பாதுகாப்பான இடத்திற்கு
மாற்றுவது என்று விஷயத்தை பெரிது படுத்தாமல், அசிங்கப்படுத்தாமல்,
இயன்ற வரை தீர்வு காண முயற்சித்திருக்கிறேன்.

என் சக்திக்கு /அதிகார வரம்பிற்கு மீறிய நபர்களாக இருந்தால், எனக்கு
நம்பிக்கையான மேலதிகாரிகளிடம் கூறி, அவர்களுக்கு relief கிடைக்கவும் உதவி இருக்கிறேன்.

ஆனால், இதெல்லாம், பல பிரிவுகளுடன் இயங்கும் பெரிய அலுவலகங்களுக்கு தான் ஒத்து வரும். சிறிய அலுவலகங்கள், வியாபார நிலையங்கள், ஒரே தொழிலில் சம்பந்தப்பட்ட சிறு குழுக்கள் – இங்கெல்லாம் இத்தகைய தீர்வு
சாத்தியமில்லை… இது ஒரு துறைக்கு தான் என்றில்லை… பெண்கள்
பணிபுரியக்கூடிய அனைத்து துறைகளிலும் இந்த பிரச்சினை இருக்கிறது.

எனவே, இப்போது, #Me Too என்கிற தலைப்பினுள் இதுகுறித்த குற்றச்சாட்டுகள் பாதிக்கப்பட்ட சில பெண்களிடமிருந்து வரும்போது –

அதை உண்மை என்றே ஏற்க வேண்டியிருக்கிறது… சாதாரணமாக,
சுயகௌரவத்தை பாதிக்கக்கூடிய இத்தகைய குற்றச்சாட்டுகளை எந்த
பெண்ணும் வெளியில் சொல்ல முன்வர மாட்டார்.

இப்போது கூட, எத்தனை பெண்கள் பொதுவெளியில் புகார் கூறி இருக்கிறார்கள்…? அதிக பட்சம் – 20 பேர். இந்த நாட்டில் பணிபுரியக்கூடிய பெண்களில் இது எத்தனை சதவீதம் இருக்கும்…? இன்னமும் பல லட்சம் பெண்கள் வெளியில் சொல்லாமல் இந்த வேதனையை அனுபவித்துக் கொண்டு
தான் இருக்கிறார்கள்.

பொதுவாக, கண்ணியமாக நடந்துகொள்ளும் ஆண்கள், கூட பணிபுரியும் பெண்களுடன், சர்வசகஜமாக நட்புடன், உரிமையாக பழகக்கூடிய,
பல விதங்களிலும் உதவியாக இருக்கக்கூடிய ஆண்கள் தான் சமூகத்தில் அதிகம்…. சக பெண் பணியாளர்களை தங்கள் தோழிகளாக கருதி,
அவர்களுடன் உரிமையோடு, பேசிப்பழகி –
அவர்களுக்கு வேண்டிய பல உதவிகளை செய்து கொடுக்கும்
பல இளைஞர்களை நான் இன்றும் கண்டு கொண்டு தானிருக்கிறேன்.

பாலுணர்வு இல்லாத ஆண்கள் யாருமில்லை…. ஆனால் தங்கள் உணர்வுகளை கையாள்வதில் ஒரு கண்ணியம், கட்டுப்பாடு, self discipline மிக மிக அவசியம் என்பதை உணர்ந்து செயல்படுபவர்களால், பெண்களுக்கு எந்த பிரச்சினையும்
இல்லை.

அந்த கட்டுப்பாடு இல்லாத, குறைந்த எண்ணிக்கையிலான
விலங்குகளைப்பற்றியும், அவர்களை எப்படி வழிக்கு கொண்டு வருவது என்பதைப் பற்றியும் மட்டும் தான் நாம் இங்கே விவாதித்துக் கொண்டிருக்கிறோம்.

இயல்பாகவே ஆணாதிக்கம் நிறைந்த நம் சமூகத்தில், ஏதோ சில பெண்களாவது தயக்கத்தை உடைத்துக்கொண்டு வெளியே வந்து தங்களுக்கு நேர்ந்த மோசமான அனுபவங்களை பகிர்ந்து கொள்வதற்கான ஒரு வழியை, #Me Too இயக்கம் தந்திருக்கிறது.

சம்பவம் நடந்து பல ஆண்டுகள் கழித்து அதைப்பற்றி பேசுவதால் என்ன தீர்வு கிடைத்து விடும்.. என்றெல்லாம் நாம் குழப்பிக்கொள்ள வேண்டியதில்லை… தீவிரமான புரையோடிப்போன புண்களுக்கான சிகிச்சை அத்தனை சீக்கிரமாக முடிந்து விடாது.

இது நம் சமூகத்தை, முக்கியமாக ஆண் சமுதாயத்தை பீடித்திருக்கும்
ஒருவித மனநோய்…. இதற்கான தீர்வும் பல படிகளில் தான் அமையும்…

கட்டுப்பாடின்றி செயல்பட்டால், தான் மிக மோசமான அவமானங்களை
சந்திக்க நேரிடும் என்கிற பயம் ஒன்று தான் இத்தகையோரை வழிக்குக் கொண்டு வரும்.

இந்த பிரச்சினை சமூகத்தில் விவாதிக்கப்படும் விஷயமாக மாறுவது,
பாதிக்கப்பட்ட பெண்களுக்கு – நீங்கள் தனியாக இல்லை
உங்களுக்கு துணையாக பலர் இருக்கிறோம் என்கிற நம்பிக்கையை தருவதற்கு இந்த #Me Too பதிவுகள் பெரிதும் உதவும்.

இதில், இடையில் போலியான குற்றச்சாட்டுகள் வரவும் வாய்ப்புண்டு
என்பது உண்மை தான்… சிலர் அவதூறு பரப்பவும் இடம் உண்டு தான்.

ஆனால், இத்தகைய குறைகள் இருந்தாலும் கூட –

நமது சமூகத்தை பீடித்துள்ள அசிங்கமான, கொடூரமான ஒரு நோயை
விரட்டியடிக்க இந்த வழி உதவும் என்பதால், இதை வரவேற்றே தீர
வேண்டும்.

இத்தகைய புகார்களைப் பற்றி படிக்கும்போது, just அதை கூறுபவர்
நம் குடும்பத்துப் பெண்ணாக இருந்தால், நாம் எத்தகையை நிலையை
எடுப்போம் என்று சற்று யோசித்துப் பார்க்க வேண்டும்.

தலைப்பிற்கு வருவோம் –

திருமதி சின்மயி – யால், இப்போது நடைமுறையில் இருக்கும்
சட்ட விதிகளின்படி, இந்த புகாரை நிச்சயம் நிரூபிக்க முடியாது….
எனவே அவர் போலீசில் புகார் கொடுப்பதிலோ வழக்கு தொடுப்பதிலோ
எந்த அர்த்தமும் இல்லை. எந்த பலனும் கிடைக்காது……

ஆனால், திருவாளர் வைரமுத்து நிஜமாகவே தன்மீது அபாண்டமாக,
பொய்யான குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது என்று தொடர்ந்து
சொல்வாரேயானால் –

– நீங்கள் தான் அசைக்க முடியாத ஆதாரங்களை
தேடியெடுத்து பத்திரமாக வைத்திருப்பதாக கூறிக்கொள்கிறீர்களே… அப்படியானால், உங்களை அவமானப்படுத்தும் நபர் மீது
நீங்கள் மான நஷ்ட வழக்கு போட்டு உங்களை நிரபராதி
என்று நிரூபித்துக் கொள்ளுங்கள் என்று தான் சொல்வோம்.

வைரமுத்து அவர்கள் தான், தன்னிடம் வழக்குக்கான ஆதாரங்கள்
இருப்பதாக கூறிக்கொள்கிறார்… எனவே அவர் தான் மான-நஷ்ட
வழக்கு தொடுக்க வேண்டும்… தொடுக்கட்டும்…
எதிர் தரப்பில் இருப்பவருக்கு குறுக்கு விசாரணை செய்யும் வாய்ப்பு
கிடைக்கும்… அதற்குண்டான பலன்களும் கிடைக்கும். அவரது
குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்கான சான்றுகள்,
இவரது பதில்களிலேயே கிடைக்க வாய்ப்பும் இருக்கிறது.

( அதற்கு பயந்து தானே, எதிராளி வழக்கு போடட்டும் என்று இவர்
ஒதுங்கி நின்று சவால் விடுகிறார்…? )

அதுவரை “நான் நல்லவனா – கெட்டவனா என்று
யாரும் தீர்மானிக்க வேண்டாம்…” என்று
அவர் என்ன உத்திரவு போடுவது….?

அவர் மீது புகார் சொன்ன திருமதி சின்மயி மீது
வைரமுத்து அவர்கள் மானநஷ்ட வழக்கு தொடுத்து
தன் வசம் இருப்பதாக கூறிக்கொள்ளும் ஆதாரங்களின்படி –
தாம் களங்கமற்றவர் என்று நிரூபிக்கும் வரை –

நாம் திருமதி சின்மயி கூறும் குற்றச்சாட்டுகளை தான் நம்புவோம்….
திருமதி சின்மயி-க்கு இந்த தீங்கு இழைக்கப்பட்டதாகவே நம்புவோம்…

இத்தகைய இழிவான செயல்களில் ஈடுபடுபட்டவரை, இந்த
சமூகத்திலிருந்து எல்லா வகையிலும் தனிமைப்படுத்துவோம்.

இது சின்மயி என்கிற தனிப்பட்ட பெண்ணின் வழக்கல்ல…
திருவாளர் வைரமுத்து என்கிற தனி மனிதரின் பிரச்சினையுமல்ல..

சமூகத்தில் புரையோடியிருக்கும், ஒரு வியாதியை பொதுவெளிக்கு
கொண்டு வந்து இயன்றவரை குணமாக்க வேண்டும் என்கிற
நோக்கத்தில் கிளம்பியிருக்கும் வழக்கு.

.
—————————————————————————-

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

24 Responses to திருமதி சின்மயி – திருவாளர் வைரமுத்து – யார் வழக்கு தொடுக்க வேண்டும்…?.. ஏன்…?

  1. புரட்சி தமிழன்'s avatar புரட்சி தமிழன் சொல்கிறார்:

    வழக்கம் போல் இந்த பெண், r.s.s மற்றும் b.j.p யின் தூண்டுதலால் தான் இவ்வாறு வழக்கு தொடர்கிறார் என்று ஒரு கும்பல் கிளப்பி கொண்டிருக்கிறது.
    எனவே இந்த குற்ற சாட்டு திசை மாறி பி.ஜெ.பி எதிர்ப்பாளர்களால் இவரின் குற்ற சாட்டு நீர்த்து போய் கொண்டு இருக்கிறது.

  2. Mani's avatar Mani சொல்கிறார்:

    அசைக்க முடியாத ஆதாரங்களை திரட்டி வைத்திருக்கிறேன் என்று “ஜவடால்” விடும் வைரமுத்து நீதிமன்றத்திற்கு போகட்டுமே.
    என் மானத்தை வாங்குகிறார் சின்மயி என்று புகார் கொடுக்கட்டுமே.
    போனால், அவர் மானம் மேலும் சந்தி சிரித்து விடும்.
    அவர் பெண்கள் விடுதி நடத்துவது எதற்கு;
    தனியே மாடியில் ஆபீஸ் வைத்திருப்பது ஏன்:
    என்பது போன்ற சிந்து பாடும் கவிஞரின் சகல விவகாரங்களும் சந்திக்கு வந்துவிடும்.
    வக்கணையாக பேசத்தெரிந்து விட்டால் அயோக்கியர்கள் யோக்கியர் ஆகி விட முடியுமா ?
    இன்று கூட இரண்டு பெண்கள் அமெரிக்காவிலிருந்து எழுதி இருக்கிறார்கள்.
    ஏ.ஆர். ரஹமான் அவர்களிடம் பாட வாய்ப்பு வாங்கிக்கொடுப்பதாகக் கூறி
    வரவழைத்து தனிமையில் வம்பு பண்ணினார் என்று.
    இனி ஏ.ஆர். ரஹமான் இந்த அசிங்கக் கவிஞரை பக்கத்தில் கூட
    நெருங்க விட மாட்டார்.

    • delhipayanam's avatar delhipayanam சொல்கிறார்:

      Total industry is rotten and very rare to see right people there.A person from a good family back ground would not dream a career in cine industry, especially females.honest people are countable there for sure.money and fame matters a lot.so adjustments are found common.

  3. tamilmani's avatar tamilmani சொல்கிறார்:

    A woman that too a married woman will not accuse a person just like that. In this case Vairamuthu
    seems to be a habitual offender . Chinmayi says that Vairamuthu also know what happened in
    Switzerland.. If he is ” innocent ” let him file a case against Chinmayi. But certain elements in
    Tamilnadu support the accused instead of the woman who complains . Will they do that if same thing happened to the womenfolk in their family.

  4. venkat's avatar venkat சொல்கிறார்:

    responsible blog…
    in my opinion, had BJP not supported Chinmaye the way they did, it would have created more damage to kaviperarusu! The issue has been politicized unnecessarily like many other social issues…

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      Venkat,

      // responsible blog… //

      வசிஷ்டர் வாயால் “பிரம்மரிஷி” பட்டம்…. 🙂 🙂 🙂

      நன்றி.
      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

  5. BALA's avatar BALA சொல்கிறார்:

    யோசித்துப்பார்க்கிறேன்… சின்மயி தாங்கள் மீது இம்மாதிரியான பாலியல் குற்றாச்சாட்டினைக் கூறியிருந்தால்… உங்கள் கருத்து மேற்கண்டவாறு இருக்குமா??

    • bandhu's avatar bandhu சொல்கிறார்:

      your assumption is that chinmayi is lying. the very gist of the post that it may not be so.

    • சத்தியசோதனை's avatar சத்தியசோதனை சொல்கிறார்:

      ஏன் நிறுத்திவிட்டீர்கள் Bala?… ஒவ்வொரு கோர்ட்டாக ஏறி ஜட்ஜை பார்த்து உங்கள் மீது கொலை குற்றச்சாட்டு இருந்தால் உங்கள் தீர்ப்பு என்ன? உங்கள் மீது கற்பழிப்பு குற்றச்சாட்டு இருந்தால் உங்கள் தீர்ப்பு என்ன என கேட்டு எல்லா கேஸையும் காலி செய்யலாமே?

      யார் மீதும் எந்த குற்றமும் இருக்காது… குற்றமிலா சமூதாயம் மலர்ந்துவிடும்!

    • Mani's avatar Mani சொல்கிறார்:

      BALA என்கிற பெயரில் எழுதுவதை விட, வைரமுத்து ரசிகன் /வெறியன்/கட்சிக்காரன் என்று பெயர் போட்டு இந்த கேள்வியை எழுப்பியிருக்கலாமே. பதில் உங்கள் கேள்வியிலேயே கிடைத்திருக்கும்.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


      BALA,

      முதல்முறையாக இந்த தளத்திற்கு வந்து இந்த கருத்தை பதிவிட்டிருக்கிறீர்கள்.
      திருவாளர் வைரமுத்துவின் தீவிர அபிமானி என்பது புரிகிறது.

      இது – உங்கள் கேள்விக்கான பதில் –

      என் பெயர் “வைரமுத்து” வாக இருந்தால் – எந்தவித சந்தேகமும் இன்றி
      என் கருத்து இதுவாகத் தான் இருக்கும். புத்திசாலி குருவின் சீடராயிற்றே –
      புரியுமென்று நம்புகிறேன்.

      உங்கள் ‘குரு’வுக்கு வாழ்த்துகள் – தனக்கேற்ற “நல்ல” சீடரை பெற்றதற்காக…!!!

      .
      -காவிரிமைந்தன்

      • BALA's avatar BALA சொல்கிறார்:

        திரு காவிரி மைந்தன் அவர்களுக்கு..

        வரவேற்புக்கு நன்றி..
        வைரமுத்து ஒரு கவிஞர் என்பதை தவிர எனக்கு பெரிதாக அவரை பற்றி தெரியாது,,
        தங்கள் மூவரையும் நேரில் பார்த்ததில்லை.
        நான் வைரமுத்து விட தங்கள் பதிவுகளை அதிகமாக வாசித்திருக்கிறேன். உங்கள் blogகளை எனது whatsapp நண்பர்களுக்கு நிறையதடவை forward ஆகவும் Status ஆகவும் ஷேர் செய்துருக்கிறேன்…

        இதுவரை தமிழ்மணம்-ல் வரும் ஆயிரக்கணக்கான blog களை வாசித்திருக்கிறேன்.. மறுமொழி இட்டதில்லை ..

        நான் சொல்ல வந்தது “எப்பொருள் யார் யார் ..” என்ற திருக்குறளின் கேள்வி தான்..

        இந்த விவகாரத்தில் பலருடைய கருத்துக்களையும் அவதானித்து இதை கேட்டேன் ..
        இந்த நான்கில் எதாவது ஓன்று உண்மையாக இருக்கலாம்..

        1. இருவரும் பொய் சொல்கிறார்கள்
        2. இருவரும் உண்மை சொல்கிறார்கள்
        3, ஆண் பொய் சொல்கிறார்
        4.பெண் பொய் சொல்கிறார்.

        இதன் அடிப்படையில் தங்கள் கருத்து சொல்வீர்கள் என்று ஏமாந்த வாசகன் நான்..அதற்காக வைரமுத்துக்கு வக்காலத்து வாங்கவில்லை.

        • delhipayanam's avatar delhipayanam சொல்கிறார்:

          if you,the author, have guts, write about governor and nirmala devi issue,more hot, lakhs of people will read and reply.no media has the guts to interview that madam.why i don’t know.vairamuthu or who so ever ,if done such a worst to a any female ,be it any one…kutram kutrame…but need full investigation.

          • அரவிந்தன்'s avatar அரவிந்தன் சொல்கிறார்:

            delhipayanam
            // if you,the author, have guts, write about governor and nirmala devi issue, //
            யாரை சொல்கிறீர்கள்? கே.எம்.சாரையா ?
            உங்களுக்கே பேத்தலாக தெரியவில்லை ?
            ஆதாரம் இல்லாமல் எதைப்பற்றி வேண்டுமானாலும் எழுதி விட முடியுமா ?
            எங்கேயாவது மஞ்சள் பத்திரிகையில் போய் கேட்க வேண்டிய
            ‘நேயர் விருப்ப’த்தை இங்கே கேட்பது ஏன் ?

    • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

      பாலா… உங்கள் கேள்வி அசிங்கமாக இருக்கிறது. சமூகத்தின் பிரச்சனைக்கு, ஒரு தனி மனிதனின் சில்லரைத்தனமான வேலைக்கு வக்காலத்து வாங்க உங்களுக்கு மனது வந்ததை நினைத்து வெட்கப்படுகிறேன். உங்கள் வீட்டில் வேலைக்குப் போகின்ற பெண்கள் அல்லது நண்பிகளிடம் கேளுங்கள். அவர்கள் யாரை நம்புகிறார்கள் என்று. பொன்மணி வைரமுத்து இவரை விட்டு விலகியிருக்கிறாரா ஏன் என்றும் நினைத்துப் பாருங்கள். இளையராஜா இவரை ஒதுக்கியதன் காரணம் என்ன என்று ஆராய்ந்துபாருங்கள்.

      • BALA's avatar BALA சொல்கிறார்:

        திரு. புதியவன் ..

        நீங்கள் வெட்கப்படுவதற்கும் வேதனை படுவதற்கும்.. நான் ஒன்றும் கீழ்த்தரமான எதையும் கேட்கவில்லை..

        அதிகமாக உணர்ச்சிவசப்படுதல் உடம்புக்கு ஆஹாது..

        இளையராஜா ஏன் பிரிந்து போனார் என்பது பொதுவெளியில் எங்கும் சொல்லப்படவில்லை ..
        அது இளையராஜா சொன்னால் மட்டும் தான் உண்மையாய் இருக்கும்.

        இதே போல் தான் பொன்மணி அவர்கள் தரப்பு நியாயமும்..அது அவர் சொன்னால் மட்டும் தான் உண்மையாய் இருக்கும்.

        எனது நண்பர் ஒருவர் ஹாஸ்டல் வைத்திருக்கிறார்..,யாரையும் வெளியேற்ற சொன்னால்.. அவர் சந்திக்கும் குறைந்த பட்ச குற்றச்சாட்டு கையை பிடித்து இழுத்தார் என்பதாகும்.. அதிக பட்ச குற்றச்சாட்டு கற்பழிக்க முயன்றார்.. என்பதாகும்

        அதனால் நான் சொல்ல வந்தது “எப்பொருள் யார் யார் ..” என்ற திருக்குறளின் கேள்வி தான்.. மற்றபடி யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல..

        • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

          அப்படி இல்லை பாலா. சிலர் சொல்வதை நம்புவதற்கு இயலும். நான் நிறைய செய்திகளை, பேட்டிகளை, இண்டெர்ப்ரடேஷன்களைப் படிக்கிறவன். அதனால் ஓரளவு அவதானிக்கமுடியும்.

          வைரமுத்துவின் பின்னணி, அவரது தனிப்பட்ட குணம் நல்லதல்ல. அதுமட்டுமல்ல காரணம்… அதனால்தான் இளையராஜா அவரைவிட்டு முழுவதுமாய் விலகியதுமட்டுமல்ல, வெறுத்து ஒதுக்கியதும்.

          வாலியோ கண்ணதாசனோ வேறு வகை. அவர்கள் ஓரளவு வெளிப்படையாக இதில் நடந்துகொண்டார்கள். அதனால்தான் அவர்கள்மீது இத்தகைய குற்றச்சாட்டு வந்ததில்லை.

          இந்த மாதிரி விஷயங்களில் மெய்ப்பொருள் காண முடியாது என்பதால்தான் ஆண்கள், ‘எங்கே ப்ரூஃப்’ என்று சொல்லித் தப்பித்துவிடுகிறார்கள். பொதுவெளியில் ஒரு பெண் சும்மா வாய்க்கு வந்ததைச் சொல்லமுடியாது. அப்படி தைரியமாகச் சொல்ல வரும் பெண்களை ஏடாகூடமாகக் கேள்வி கேட்கும்போது, நாம், ஆண்களின் அயோக்கியத்தனத்தை ஆதரிக்கிறோம், இப்போது சும்மா இருக்கும் ஆண்களையும் தூண்டிவிடுகிறோம் (மறைமுகமாக) என்பதுதான் அதன் உள்ளர்த்தம். அதனால்தான் நான் உடனே மறுமொழி எழுத நேர்ந்தது.

  6. venkat's avatar venkat சொல்கிறார்:

    why is that anyone questioning the logic of your argument is branded as bakth, veriyan, slave, jalra etc.,
    are you and your jalras not mature enough to accept there is ‘other point of view’?
    so arrogant!

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


      Venkat,

      // are you and your jalras not mature enough to accept there is ‘other point of view’?
      so arrogant! //

      மோடிஜியை பற்றி,
      நியாயமாக விமரிசனம் செய்தால் கூட,

      சிலர் arrogant ஆகவும்
      Blind ஆகவும்,
      முட்டாள்தனமாகவும் re-act செய்வதில்லையா ?

      அது மாதிரி தான் என்று வைத்துக்கொள்ளுங்களேன்.

      -காவிரிமைந்தன்

    • BALA's avatar BALA சொல்கிறார்:

      நன்றி வெங்கட்.
      நான் ஒநாய் கூட்டத்தில் சிக்கிவிட்ட சிறு மானாய் உணர்ந்தேன் ..

      தங்கள் பின்னூட்டம் எனக்கு ஆறுதல் அளித்தது,,
      kavirimainthan அவர்களின் விமர்சனத்தை விரும்பி படிக்கும் என்னையே ” ஒரு கேள்வி கேட்டது குத்தமா?” என்று எண்ண வைத்து விட்டார்கள்.

      என் கேள்வியின் பின்னணி இதுதான்,
      பொது மக்களுக்கு மத்தியில் நிறைய romour கள் , உண்மையும் பொய்மையும் கலந்து உள்ளது. ‘
      எனக்கு தெரிந்த romour களின் அடிப்படையில் நான் சொல்லும் கருத்து பொதுக்கருத்து என்று சொல்லும் போது இந்த கேள்வி கேட்கதோன்றியது,,

      தன்னை கேட்பவர்களை
      சிலர் arrogant ஆகவும்
      Blind ஆகவும்,
      முட்டாள்தனமாகவும் நினைப்பது எந்த வகையில் வரும் என்று தெரியவில்லை.?

      • delhipayanam's avatar delhipayanam சொல்கிறார்:

        yes you are right.

        • அரவிந்தன்'s avatar அரவிந்தன் சொல்கிறார்:

          delhipayanam
          இதில் என்ன right கண்டீர்கள்.
          கட்டுரையின் அடிப்படை கருத்தையே புரிந்துகொள்ளாமல், எழுதியவரை குற்றம் சாட்டுவதுதான் கரெக்டா ?
          பாலியல் துன்புறுத்தல் பற்றி எழுதினால், உங்களுக்கு அனுபவம் உண்டா என்று அவர் கேட்பார் அதை நீங்கள் ரொம்ப கரெக்ட் என்று சொல்வீர்களா ?

  7. Saravanan's avatar Saravanan சொல்கிறார்:

    A nice interview of Dr.Shalini on Metoo.. but really very much surprised to see it published in “Nakeeran” channel, watch this video you will know the reason why?

  8. Saravanan's avatar Saravanan சொல்கிறார்:

    Another nice and bold interview by A.R.Reihana (A.R.Rehman Sister) on this same issue. One more nail in Vairamuthu’s coffin.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.