பயப்படுகிறாரா மோடிஜி – வாரணாசியில் மீண்டும் போட்டியிட…!!!




மோடிஜி – ஒரு எம்.பி.யாக தத்தெடுத்த வாரணாசி தொகுதியில் உள்ள ஜெயா நகர் கிராமத்தில் கடந்த நாலு வருடங்களில், வளர்ச்சி என்கிற பெயரில் எத்தகைய சீரழிவு ஏற்பட்டிருக்கிறது, ஒதுக்கப்பட்ட பணம் எப்படி குஜராத் காண்டிராக்டர்களுக்கு சென்று விட்டது என்பதை,
கடந்த இரண்டு இடுகைகளில் வெளியான திரு ராகவ் பஹலின் quint வீடியோவும், அவரது பேட்டியும் தெளிவாக்கியது….

கங்கையை சுத்தப்படுத்தும் பணியில், மத்திய அரசு சுமார் 22,000 கோடி
(இருபத்தி இரண்டாயிரம் கோடி ரூபாய் ) செலவு செய்தும்,

உருப்படியான அளவில் வேலைகள் நடைபெறவில்லை என்பதையும்,
பெரும்பாலான வேலைகளில் ஊழலில் பணம் சுருட்டப்பட்டு விட்டது என்பதையும், உண்ணாவிரதம் இருந்து கடந்த வாரம் உயிரை விட்ட சாது அகர்வால் அவர்களின் கதை சொல்கிறது….

இதையெல்லாம் தாண்டி, பாஜகவை சேர்ந்த புகழ்பெற்ற நடிகரான
சத்ருகன் சின்ஹா-வே வாரணாசி தொகுதியில் மோடிஜியை எதிர்த்து
போட்டியிடக்கூடும் எங்கிற தகவல்களும் வெளிவந்துள்ளன….

இந்த நிலையில் – மோடிஜி மீண்டும் வாரணாசி தொகுதியில் போட்டியிட மாட்டார் என்கிற மாதிரியான செய்திகள் வெளியாகி உள்ளன….

இன்றைய தினமணி நாளிதழில் இதுகுறித்து வெளியாகியுள்ள
செய்தியிலிருந்து சில பகுதிகள் –

———————–

கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்துடன் வெற்றி பெற்ற வாராணசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் போட்டியிடுவாரா, மாட்டாரா என்கிற ஐயப்பாடு எழுப்பப்படுகிறது. இந்த முறை அவர் ஒடிஸா மாநிலம் புரி மக்களவைத் தொகுதியில் இருந்து போட்டியிடக்கூடும் என்று கூறப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி 2014 மக்களவைத் தேர்தலில், அவரது சொந்த மாநிலமான குஜராத்திலுள்ள வடோதரா, உத்தரப் பிரதேசத்திலுள்ள வாராணசி ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலுமே வெற்றி பெற்றார். இந்தியாவிலேயே அதிக வாக்கு வித்தியாச வெற்றியை அவரால் வடோதரா தொகுதியில் ஈட்ட முடிந்தது.

வாராணசியிலும் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராகக் களமிறங்கிய ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவாலை 1,79,739 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார் நரேந்திர மோடி.

வாராணசி தொகுதியைத் தக்க வைத்துக் கொண்டு, வடோதரா தொகுதியை அவர் ராஜிநாமா செய்து அங்கே இடைத்தேர்தலுக்கு வழிகோலினார். வாராணசி தொகுதியில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து கங்கையை சுத்தமாக்கும் பல திட்டங்களும் அவரால் அறிவிக்கப்பட்டன.

பிரதமரின் தொகுதி என்கிற அந்தஸ்தைப் பெற்ற வாராணசியில் மத்திய அரசும், உத்தரப் பிரதேச அரசும் பல வளர்ச்சிப் பணிகளை முடுக்கியும் விட்டன.

அப்படி இருந்தும்கூட, அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி வாராணசி தொகுதியில் போட்டியிட
மாட்டார் என்று தெரிகிறது.

கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் பிகார் மாநிலம் பாட்னா சாஹிப் தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற நடிகர் சத்ருகன் சின்ஹா, இப்போது பாஜகவில் இருந்து விலகி விட்டிருக்கிறார். சமாஜ்வாதி கட்சியின் ஆதரவுடனோ அல்லது சுயேச்சை வேட்பாளராகவோ அவர் வாராணசியில் பிரதமரை எதிர்த்துப் போட்டியிடப் போவதாக ஏற்கெனவே அறிவித்து விட்டிருக்கிறார்.

“பனாரசி பாபு’ திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த சத்ருகன் சின்ஹா
வாராணசி பகுதிகளில் பிரபலமானவர் என்பது மட்டுமல்லாமல், அவர் சார்ந்த காயத்ஸ் சமூகத்தினர் அந்தத் தொகுதியில் கணிசமாக இருக்கிறார்கள்.

2016-இல் நடந்த உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால், அதற்குப் பிறகு நடந்த அத்தனை மக்களவை, இடைத்தேர்தல்களிலும் ஆளும் பாஜக தொடர்ந்து தோல்வியைத் தழுவியிருப்பது குறிப்பிடத்தக்கது.

போதாக்குறைக்கு, சமாஜ்வாதி கட்சியும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும், அஜித் சிங்கின் ராஷ்ட்ரீய லோக்தளமும், காங்கிரசும் பாஜகவுக்கு எதிராக “மெகா’ கூட்டணி அமைத்துப் போட்டியிடும் முயற்சியில் இறங்கி இருக்கின்றன.

இந்தப் பின்னணியில், பிரதமர் நரேந்திர மோடி உத்தரப் பிரதேசத்திலிருந்து போட்டியிடுவது பாதுகாப்பானதல்ல என்று பாஜக தலைமை கருதுவதாகக் கூறப்படுகிறது. பிரதமர் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு அதில் ஒரு தொகுதியில் தோல்வி அடைந்தாலும், அது மிகப் பெரிய பின்னடைவாக இருக்கும் என்பதால் பிரதமர் வாராணசியில் போட்டியிடுவது குறித்துக் கட்சித் தலைமை மறுசிந்தனையில் இறங்கி இருக்கிறது.

பாதுகாப்பாக சொந்த மாநிலமான குஜராத்தில் மட்டும் போட்டியிடுவது
அல்லது குஜராத்திலும், ஒடிஸா மாநிலம் புரி தொகுதியிலுமாக
இரண்டு தொகுதிகளில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடக்கூடும்
என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

——————————————————–

பின் சேர்க்கை –
———————

நான் மேலே குறிப்பிட்டிருக்கும் சாது அகர்வால் அவர்கள்
குறித்த ஒரு செய்தி தற்போது வெளியாகி இருக்கிறது…
அது கீழே –


————————————

ஏமாற்றிவிட்டீர்கள்.. உங்களுக்கு கங்கை தேவையில்லை.. மரணத்திற்கு முன் அகர்வால் மோடிக்கு எழுதிய கடிதம் –

டேராடூன்: கங்கைக்காக உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த பிரபல சமூகவியலாளர் பேராசிரியர் ஜிடி.அகர்வால் பிரதமர் மோடிக்கு எழுதிய கடைசி கடிதம் குறித்த விவரம் வெளியாகி உள்ளது.

கடந்த இரண்டு நடக்களுக்கு முன் பிரபல சமூகவியலாளர் பேராசிரியர் ஜிடிஅகர்வால் தொடர் உண்ணாவிரதம் காரணமாக ஹரித்வாரில் மரணம் அடைந்தார்.

இவர் கங்கை நதியை சுத்தம் செய்ய வேண்டும் என்று இத்தனை வருடமாக போராடி வந்தார். இதற்காக அவர் தொடர் உண்ணாவிரதம் இருந்தார். 11 நாட்கள் அவர் உண்ணாவிரம் இருந்தார்.

உண்ணாவிரதம் காரணமாக உடல்நலம் குன்றிய அவர் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 1.30 மணிக்கு ஹரித்வார் கங்கை கரையில் மரணம் அடைந்தார். சமூகவியலாளர் பேராசிரியர் ஜிடி.அகர்வால் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னலாஜி கான்பூரில் பேராசிரியராக இருந்தவர். அதேபோல் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் இவர் பணியாற்றி இருக்கிறார்.

இவர் நீர் மாசுபாடு தொடர்பாக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். கங்கை நதி மாசுபடுவதற்கு எதிராக போராடி வந்தார். இவர் கடந்த ஜூன் 22ம் தேதி உண்ணாவிரதம் செய்ய தொடங்கினார். கங்கையை சுத்தம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து உண்ணாவிரதம் இருந்தார். 111 நாட்கள் இவர் உண்ணாவிரதம் இருந்துள்ளார். பெரிய ஏமாற்றம் இந்த நிலையில் அவர் இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தின் விவரம் வெளியாகி உள்ளது.

அதில், கங்கை நதியை சுத்தம் செய்வதில் பிரதமர் மோடி வேகமாக இருப்பார் என்று நினைத்தேன். எல்லோருக்கும் முன் முதல் அடி எடுத்து வைப்பார் என்று நினைத்தேன். நீங்களும் இதற்காக தனி அமைச்சரவையை கூட உருவாக்கினார்கள். ஆனால் அதற்கு பின் எதுவுமே செய்யவில்லை. அப்படியே எல்லோரையும் போல ஏமாற்றிவிட்டீர்கள்.

இவ்வளவு நாள் நீங்கள் இதை வைத்து அரசியல்தான் செய்துள்ளீர்கள். கங்கையை சுத்தம் செய்ய நீங்கள் நினைக்கவே இல்லை. ஆனால் அதில் இருந்து வந்த அரசியலை ஆதாயங்களை மட்டுமே பெற்று இருக்கிறீர்கள். உங்கள் கங்கை வேண்டாம், ஆனால் அதன் அரசியல் வேண்டும். தயவுகூர்ந்து உங்களுக்கு அரசியலுக்கு பயனளிக்கும் கங்கையை கொஞ்சம் சுத்தம் செய்யுங்கள் என்றுள்ளார். இந்த கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

https://tamil.oneindia.com/news/india/activist-gd-agarwal-heartwarming-letter-modi-on-ganga-before-his-death-331971.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.50.225.237&utm_campaign=client-rss

.
———————————————————————————

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

10 Responses to பயப்படுகிறாரா மோடிஜி – வாரணாசியில் மீண்டும் போட்டியிட…!!!

  1. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    வாரணாசி , தேர்தல் , மோடிஜி , என்று அரசியல் பேசும் இந்நாளில் ஒரு முந்தைய இடுகை வெகு சுவாரஸ்யம் மற்றும் அவசியம் குறித்து விளக்குகிறது — நண்பர்கள் படித்து காசிக்கு செல்லும்போது பார்த்துவிட்டாவது வாருங்கள் …!

    // பாரதியையும், காசியையும் மறக்கலாமா ..? திரு.இல.கணேசன் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்….!
    Posted on நவம்பர் 3, 2015 by vimarisanam – kavirimainthan // —- https://vimarisanam.wordpress.com/2015/11/03/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


      செல்வராஜன்,

      வெகு சீக்கிரமே, ஒரு quick trip – ஆக வடக்கே போய் வரலாமென்று உத்தேசித்திருக்கிறேன்….இன்ஷா அல்லாஹ்…!
      அநேகமாக அதில் ஒருநாள் காசியில் தங்கலும் இருக்கலாம்….!!!

      அதை – பாரதி இளமைக்காலத்தில் வாழ்ந்த இடத்தை தரிசிக்க – என்று சொல்லலாமா அல்லது
      மோடிஜியின் தற்கால இருப்பிடத்தை (… ? ) தரிசிக்க என்று சொல்வதா…?

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

  2. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    நண்பர்களுக்கு,

    தற்போது, மேலே இடுகையில், திரு.அகர்வால் அவர்களின் உயிர்த்தியாகம் பற்றிய ஒரு செய்தியை பின்சேர்க்கையாக – சேர்த்திருக்கிறேன்… அவசியம் படிக்கவும்.

    -காவிரிமைந்தன்

  3. Rajaraman VK's avatar Rajaraman VK சொல்கிறார்:

    No way. PM Sri Modi will win again from Varanasi this time in 2019 with much better margin than last time. Indeed Modi is a varam for Indians sent by God and we are so fortunate to have such a person of integrity and nation-first in all his thoughts and actions. Crores of Indians are wishing and praying that BJP that too under Sri Modi should continue ruling Indian for many more years.

  4. Mani's avatar Mani சொல்கிறார்:

    Rajaraman VK

    // Crores of Indians //
    please modify as –

    ” Lakhs of MODI BAKTS 🙂 “

  5. மெய்ப்பொருள்'s avatar மெய்ப்பொருள் சொல்கிறார்:

    பயமா ? அதுவும் மோதிக்கா ?
    ஐ டி செல் வேலையில் இறங்கும் .
    மக்களை திசை திருப்பும் முயற்சிகள் செவ்வனே நடைபெறும் .

    போன தடவை ரூ 500 , ரூ 1000 நோட்டுகளை தடை செய்து
    எதிர்கட்சிகளிடம் பணமில்லாமல் செய்து வெற்றி பெற்றது .

    இப்ப எந்த எதிர்கட்சியிடமும் பணம் இல்லை !
    எனவே மறுபடியும் பா ஜ க வர சான்ஸ் உள்ளது .
    மேலும் அங்கு ஆட்சியில் பா ஜ க இருக்கிறது எனபதையும் மறக்க கூடாது .

  6. R KARTHIK's avatar R KARTHIK சொல்கிறார்:

    I had a chance to meet a person from Banaras. We had lots of time to chat during our kid’s skateboard sessions. In the discussions that i had with him, i understand that he is very happy on Modi as their MP. He was convinced that things has improved in varanasi after modi. He stays in Bangalore but vists Banaras very often to meet his mom so he is still connected with his hometown.

  7. venkat's avatar venkat சொல்கிறார்:

    karthik, you are a modi bakth. KM sir and his bakths knows everything. website like oneindia.com are unbiased portals. so, what they is 100% correct. you cannot bring realistic view to this wonderful blog. only jalras are allowed!

  8. Mani's avatar Mani சொல்கிறார்:

    Venkat,

    // you cannot bring realistic view to this wonderful blog. only jalras are allowed! //

    Your views are allowed here by K.M.sir.
    Are you a JALRAA ?

    Kartik’s pinnoottam is also here
    .
    YOU ARE A BLIND BAKT sorry SLAVE.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.