ராகவ் பஹல் செய்த குற்றமென்ன …?


மோடிஜியின் கனவுத்திட்டம் பற்றி
(ஏகப்பட்ட கனவுத்திட்டங்களில்
ஒன்றே ஒன்று பற்றி மட்டும்) சில உண்மைகளைச் சொல்லி விட்டார்..
திருவாளர் ராகவ் பஹல்…

செய்தி தொலைக்காட்சி உரிமையாளராக, ஆசிரியராக பணியாற்றி வரும் ஒருவருக்கு அடிப்படை அறிவு வேண்டாமா…?

கல்லில் போய் மண்டையால் (அதுவும் மொட்டை மண்டையால்)
முட்டினால் என்ன ஆகும்…? கல் உடையுமா அல்லது மொட்டை மண்டை உடையுமா…? இவருக்கு நடந்தது இரண்டாவது … இயற்கை தானே…?

சரி விவரத்திற்கு வருவோம் –

பஹல் செய்த பாவம் குறித்து, செய்தித் தளங்களில் வெளிவந்திருக்கும்
செய்திகளிலிருந்து சில விஷயங்கள் மட்டும் கீழே –

மோடிஜி 4 வருடங்களுக்கு முன்னர், ஜெயபிரகாஷ் நாராயண் அவர்களின் பிறந்த நாள் அன்று கிராம மக்களுக்காக ஒரு திட்டத்தை Sansad Adarsh Gram Yojana (SAGY) என்கிற பெயரில் துவங்கி வைத்தார்.

இந்த திட்டத்தின் கீழ், ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் மூன்று
கிராமங்களைத் தேர்வு செய்யலாம். அந்த மூன்று கிராமங்களும் அவர்களின் அவர்களின் தொகுதிக்குள் இருக்க வேண்டும்.

அந்த கிராமங்கள் வரும் 2019-க்குள் இந்தியாவின் முன் மாதிரி கிராமங்களில் ஒன்றாக விளங்கும். “இந்த திட்டத்தின் கீழ் நான் வாராணாசியில் உள்ள ஜெயாநகரைத் தத்தெடுத்துக் கொள்கிறேன்” என்றார் மோடிஜி.

சன்சத் ஆதர்ஷ் கிராம் யோஜனா இந்த திட்டத்தின்படி நல்ல கல்வி, சுகாதாரம், மருத்துவ வசதிகள், தொழிற் பயிற்சிகள்,

அடிப்படை பொருளாதார வாழ்கைக்கு ஏற்பாடு செய்து கொடுத்தல், அடிப்படை கட்டமைப்பு வசதிகளான மின்சாரம், வீடுகள், நல்ல சாலைகள்… குறிப்பாக இணைய வசதி போன்றவைகளை செய்து கொடுக்க வேண்டும்.

மோடிஜி தத்தெடுத்தது, அவரது பாராளுமன்ற தொகுதியான வாரணாசி
தொகுதிக்குள் “ஜெயாநகர்” என்கிற ஒரு கிராமம்.

Republic tv, Times Now, CCN news-18, Indiatoday போன்ற தொலைக்காட்சிகளை அன்றாடம் பார்த்து, மோடிஜி அரசைப்பற்றி எப்படி விவரிக்க வேண்டும்… எப்படி விவாதங்களை அமைக்க வேண்டும் என்கிற அடிப்படை அறிவு கூட இல்லாத –

ராகவ் பஹல் போன்ற அறிவு சூன்யங்களை பாஜக அரசு பொறுத்துக்
கொள்ளுமா..?

ராகவ் பஹல் தான் நடத்தும் ” the quint ” என்கிற செய்தி வலைத்தளத்தின் சார்பாக, அதன் செய்தியாளரையும்,

வீடியோகிராபரையும் அனுப்பி, மோடிஜி தத்தெடுத்த அந்த கிராமத்தின் வளர்ச்சி இந்த 4 ஆண்டுகளில் எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை கண்டறிந்து ஒரு வீடியோ செய்தியை தனது செய்தி வலைத்தளத்தில் வெளியிட்டார்….

ஜெயா நகர் என்கிற அந்த கிராமத்தில் ஏற்பட்டுள்ள சில சிறப்பு அம்சங்களை வெளிக்கொண்டு வந்து காட்டினார் …

என்ன அவை …?

ஊருக்கே மின்வசதி கிடையாது….
(இந்தியாவின் 6 லட்சம் கிராமங்களுக்கும் மின்வசதியை ஏற்படுத்தி விட்டதாக
4 மாதங்களுக்கு முன் மோடிஜி அரசு செய்த விளம்பரத்தை இங்கு நினைவு படுத்தலாமா…? )

அங்கே இருக்கும் பள்ளியில், ஸ்மார்ட் வகுப்புகள் என்கிற பெயரில் கணிணிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன… ஆனால் அவற்றை இயக்க மின்வசதி இல்லை.. சூரியவெளிச்சத்தில் மின்சக்தியை உற்பத்தி செய்யும், சோலார் பேனல்கள் நிறுவப்பட்டிருக்கின்றன… ஆனால், உற்ப்த்தியாகும் மின்வசதிய சேமித்து வைத்து பயன்படுத்த உரிய பேட்டரிகள் இல்லை…!!!

கிராம சபாவின் தலைவர் – ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு
மாடு கொடுக்கப்பட்டு விட்டதாக அரசு விளம்பரங்கள் கூறுகின்றன… நாட்டின் பிரத மந்திரியே தத்தெடுத்திருக்கும் கிராமத்துக்கு எல்லா நிறுவனங்களும், வந்து எல்லா வேலைகளையும் முடித்தது போல அனைத்து அரசு தஸ்தாவேஜ்களும் சொல்கின்றன. ஆனால் ஒன்றும் கிடைக்கவில்லை ” என்கிறார்.

” சரி என்ன தான் உங்கள் கிராமத்துக்கு புதிதாக கிடைத்திருக்கிறது..? –
என்றால் –

“மூன்று வங்கிகள் வர வழைக்கப்பட்டிருக்கின்றன.
ஒரு பேருந்து நிறுத்தம் கட்டப்பட்டிருக்கிறது.
அதை ஒரு ஓடாத பேருந்து மட்டும் எப்போதும் பயன்படுத்துகிறது.
அவ்வளவு தான்”

– என்கிறார் ஊர் தலைவர் நாராயண்.

– “ஆமாங்க எங்க ஊர்ல கட்டுன பஸ் ஸ்டாண்டு ஆகட்டும்,
பள்ளிக் கூடமாகட்டும், ரோடு போட பயன்படுத்தின செங்கல்,
சிமென்ட் ஆகட்டும் எல்லாமே குஜராத்துல இருந்து தாங்க வந்துச்சு ”
என்று ஓப்பன் ஸ்டேட்மெண்ட் கொடுக்கிறார் ஊர் தலைவர் நாராயண்.
( காண்டிராக்டு எடுத்தவர் குஜராத்தி போலும்..)

தொழில் பயிற்சிக்காக காதி அமைச்சகம் தொடங்கிய காதி கைவினை மில் மற்றும் விற்பனையகத்தில் பணி புரியும் 75 பெண்களுக்கு கடந்த நான்கு மாதமாக சம்பளம் கொடுக்கவில்லை. வேலை பார்க்கும் யாருக்கு ஏன் தங்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என்கிற காரணமே தெரியாமல் பைத்தியம் போல் தொடர்ந்து வேலை பார்க்கின்றனர்…..

ஊருக்குள் நுழையும் போதே, அக்மார்க் மேடு பள்ள இந்தியச் சாலைகள்,
அதுவும் செங்கல்லைப் பயன்படுத்தி போட்டிருக்கிறார்கள், ஊருக்கு வெளியே மட்டும் தான் நல்ல தார் சாலைகள், கிராமத்தின் உள்ளே பூராவும் செங்கல் மற்றும் சிமெண்ட் கற்களை அடுக்கி வைத்து விட்டு போன கற்கள்.

மோடிஜி தத்தெடுத்த இந்த ஜெயா நகரின் அபரிமிதமான வளர்ச்சிகள் குறித்து ஒரு செய்தியை, quint செய்தித்தளம் வீடியோ ஆதாரத்துடன்
வெளியிட்டது….

quint செய்தித்தளத்தில் வெளிவந்த அந்த வீடியோவை நண்பர்களும் கண்டு, மேற்படி செய்திகளை உறுதி செய்துகொள்ள அந்த வீடியோ…..கீழே –

இந்த வீடியோவையும், செய்தியையும் வெளியிட்டதன்
விளைவைத்தான் திருவாளர் ராகவ் பஹல் அனுபவித்தார்….!!!
அனுபவித்துக் கொண்டிருக்கிறார்…

இதனால், சகலமானவரும்
அறிய வேண்டியது என்னவென்றால்……..????????????????????????????

கையில் தொலைக்காட்சி இருக்கிறது, செய்தித்தளம் இருக்கிறது
என்கிற காரணத்தினால், யாராவது உண்மைகளை வெளியிட
கிளம்புவதாக இருந்தால் …….???

திரு.ராகவ் பஹல் அவர்களின் மொட்டை மண்டைக்கு ஏற்பட்ட
கதியை முதலில் நினைத்துப் பார்த்துக்கொண்டு பிறகு செயலில்
இறங்க வேண்டும் என்று அன்புடன் நினைவுபடுத்தப்படுகிறார்கள்…….!!!

.
———————————————————————————

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

10 Responses to ராகவ் பஹல் செய்த குற்றமென்ன …?

  1. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    அய்யா ….! அவருடைய மாெட்டை தலைக்கு ஒன்றும் ஆகவில்லை ஆனால் இந்த ரெய்டுக்கு சென்றவர்கள் முகத்தில் தான் கரி பூசி காெண்டார்கள் என்று குட் ரிடர்ன்ஸ் செய்தியில் வந்துள்ளது …அது

    // இந்த விஷயத்தை தான் Quint பத்திரிகை ஒரு வீடியோ பதிவு மூலம் உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது. இப்படி மோடியின் கிராம மக்கள் படும் கஷ்டத்தை சொன்ன Quint நிறுவனர் ராகவ் பால் வருமான வரியில் 118 கோடி முறைகேடு செய்திருப்பதாகச் சொல்லி கடந்த வியாழக்கிழமை என்று காலை 7.45 மணி தொடங்கி வெள்ளிக் கிழமை காலை 6 மணி வரை வருமான வரித்துறையினர் நோண்டி நொங்கு எடுத்திருக்கிறார்கள். வருமான வரித்துறை எந்த ராகவ் பல் முறைகேடு செய்ததற்கான எந்த ஒரு சிறிய ஆதாரம் கூட கிடைக்கவில்லை. வருமான வரித்துறையினர் கேட்ட கேள்விகளுக்கு முறையான் பதில்களை ஆதாரங்களோடு காட்ட வருமான வரித் துறை “ஸாரி சார்” என பல் இழித்திருக்கிறது. // கரி யாருடைய முகத்தில் …?

  2. Mani's avatar Mani சொல்கிறார்:

    இந்த விஷயத்தில் பாஜக காரர்கள் எவராவது
    வாயைத் திறக்கிறார்களா பாருங்கள்.

  3. Sharron's avatar Sharron சொல்கிறார்:

    He may quit contesting from Varanasi this time.See Dinamani news.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


      நன்றி Sharron.

      இன்று இந்த செய்தி குறித்து தனியே ஒரு இடுகை பதிவிட்டிருக்கிறேன்.

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

  4. venkat's avatar venkat சொல்கிறார்:

    can some one watch the video carefully. i see several electricity post and in one shot even a transformer is visible. it is hard to beleive that two banks are functioning without electricity.
    yes, it is quite evident that the work FAR FROM complete but it is not difficult to understand that efforts have gone in. ( KM Sir has a colored vision and hence he cannot see those )

    Dont forget the fact that while making documentaries like this, interviews are staged to an extent. in other words, they show only what they want to show ( or pick the interview that reflects their prejudice )

    keep in mind that only 40% of benefit on any government scheme goes to public due to deep rooted corruption in the system. no government can remove this unless people and babu’s change

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      வெங்கட்,

      ஆத்திரத்தில் என் அந்தஸ்தையே உயர்த்துகிறீர்களே… 🙂 🙂

      அங்கே சொல்லி இருப்பது எல்லாம் ராகவ் பஹலும் அவரது வீடியோவும் சொல்வன.
      நானா போய் பார்த்தேன் உங்கள் “தத்து” தலைவர் தத்தெடுத்த கிராமத்தை…?

      சரி உங்களுக்கு சந்தோஷம் என்றால் இப்படியே வைத்துக் கொண்டால் போயிற்று…

      ராகவ் பஹல் சொல்வது பொய்..
      quint video சொல்வது முழுப்பொய்…
      அந்த அப்பாவி டீச்சர் ஹிந்தியில் சொல்வது வடிகட்டிய பொய்…
      கிராமத்தலைவர் சொல்வது உண்மைக்கு புறம்பானது…
      அங்கே பார்க்கும் சாலைகள் அந்த ஊருடையதே இல்லை…
      4 மாதமாக சம்பளம் கிடைக்கவில்லை என்று சொல்லும்
      அந்த கிராமத்து பெண் மனநலம் குன்றியவள்…

      நீங்கள் நம்பும் தலைவர் சுத்த செயல் வீரர்…
      இந்த உலகத்தையே மாற்றக் கூடியவர்…

      உலகத்தை மாற்றுவதற்காகத்தான் பல எக்ஸ்பர்ட் பிசினஸ்மேன்-களை
      எல்லாம் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.

      சரி – இன்னும் ஒரு விஷயம் இருக்கிறதே..
      அதற்கும் இப்போதே காரணம் கண்டு பிடித்து வைத்துக் கொள்ளுங்கள்…
      அடுத்த தேர்தலில் மோடிஜி வாரணாசியில் நிற்கவில்லையென்றால்
      அதற்கு என்ன சாக்கு சொல்லலாமென்று…

      .
      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

  5. Mani's avatar Mani சொல்கிறார்:

    வெங்கட் சார்,

    // only 40% of benefit on any government scheme goes to public due to deep rooted corruption in the system. no government can remove this unless people and babu’s change //

    இவரால ஒண்ணுமே செய்ய முடியாதுன்னா அப்புறம் என்ன எழவுக்கு இவரை கட்டிக்கிட்டு அழணும் ? தேவ கவுடாவே தேவலை போலேருக்கே.

  6. Mani's avatar Mani சொல்கிறார்:

    வெங்கட் சார்,

    இதை விடுங்க; ஒங்களால சொல்ல முடியாது. அடுத்த இடுகைல செத்துக்கிட்டுருக்காரே ஒரு கிழவர் அகர்வால். அவர் சொல்றதைப்பத்தி நீங்க
    என்ன சொல்றீங்க ? செத்துப்போனவர் ஒரு பைத்தியம் அப்படீம்பீங்களா ?

  7. venkat's avatar venkat சொல்கிறார்:

    we will find a reason if he doesn’t contest from varanasi! no need to speculate now.
    all i have been insisting is that BJP is a political party and Modi is a politician. Dont’ expect him to behave like a saint! They are there ONLY to advance their personal agenda. Work for the welfare of the people or advance the country or protect the environment… everything has to align their personal interest.

    you can keep complaining for ever.. regardless of party or person etc., as long as you keep writing negative articles… in your eyes.. inru illai.. naalai illai…oru naalum ulagam ungal parvayil marathu!

    even if kamarajar comes, you will find articles criticing him and post it. because, all you care is about ego and importance.

    • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

      வெங்கட்… இந்த இடுகையில் தவறைக் காணவில்லை. அது சொல்லியிருப்பது, அந்த கிராமத்தில் உருப்படியாக ஒன்றும் நடக்கவில்லை என்பது. இதற்கு வெகு சுலபமான பதில், என்ன என்ன வேலைகள் நடந்திருக்கின்றன, குறை சொல்லுபவர்கள் ஒருதலைப்பட்சமானவர்கள், மாற்றுக்கட்சிக் காரர்கள் என்பதற்கான ஆதாரம், அவ்வளவுதான். நக்கீரன்போல் எதற்கெடுத்தாலும் அதிமுகவைக் குறை சொல்லி, திமுகவின் கொபசெ போல் பணியாற்றினால் அவர்களது பத்திரிகை வீழ்ந்ததுபோல் இந்தத் தொலைக்காட்சி சேனலும் வீழப்போகிறது. ஆனால் நடந்தவைகள், உண்மை வெளிவருவதை விரும்பாதவர்கள் செய்யும் செயல்போல்தான் இருக்கிறது.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.