ஆனால் திரு.ஸ்டாலின் ஏன் விசாரணைக்கு பயப்படுகிறார்….?



தமிழக அரசின் பொதுப்பணித்துறை (P.W.D.) – நெடுஞ்சாலைகள் உருவாக்கம் மற்றும் பராமரிப்பு பணிகளுக்கு சுமார் 4000 கோடிகளுக்கு மேல் டெண்டர் கொடுத்ததில் ஊழல் நடந்திருப்பதாக, திமுக தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

விதிமுறைகள் மீறப்பட்டு, முதல்வரின் உறவினர்களுக்கே டெண்டர் கொடுக்கப்பட்டிருப்பதாக முக்கியமான குற்றச்சாட்டு. திரு.ஸ்டாலின் நிறைய மேடைகளில் இதைப்பற்றி பேசி வந்தார்.

இது குறித்து, திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கின் இறுதி விளைவாக, இந்த குற்றச்சாட்டுகளை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று நேற்றைய உயர்நீதிமன்றம் உத்திரவு போட்டிருக்கிறது.

3 மாதங்களுக்குள் முதல் கட்ட விசாரணையை முடித்து, அடிப்படையில்
குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருப்பதாகத் தெரிந்தால், உரிய முறையில் வழக்கு பதிவு செய்து, சி.பி.ஐ. வழக்கை முன்னெடுத்துச்செல்ல வேண்டுமென்பது நீதிமன்ற உத்திரவு.

தமிழக அரசியல்வாதிகளின் செல்வாக்குக்கு அப்பாற்பட்ட சி.பி.ஐ.
விசாரிப்பதால், இந்த பிரச்சினையில் ஓரளவு உண்மை வெளிவரலாம்
என்பதால் – இந்த உத்திரவை நாம் முழுமனதோடு வரவேற்கிறோம்.

பொதுப்பணித்துறை மட்டும் அல்ல. இன்னும் தமிழக அரசின் பல அமைச்சர்களின் மீதும், அவர்களின் துறைகள் மீதும் பல வெளிப்படையான குற்றச்சாட்டுகள் எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்பட்டுள்ளன… இவற்றில் பல குற்றச்சாட்டுகள், வெளிப் பார்வைக்கு அடிப்படையில் உண்மை இருப்பதாகவே
தோன்றுகின்றன. இந்த குற்றச்சாடுகள் மீதெல்லாம் கூட முறையான,
நேர்மையான, வெளிப்படையான விசாரணை நடைபெற வேண்டியது அவசியம்.

————-

இது ஒரு பக்கமிருக்க –

இதற்கு இணையாக, அல்லது – இதே போன்ற இன்னொரு வழக்கும்
நீண்ட நெடும் நாட்களாக நிலுவையில் இருக்கிறது. அதுவும் இதேபோல்,
தமிழக பொதுப்பணித்துறை கொடுத்த காண்டிராக்டுகள் சம்பந்தப்பட்டது.
சுமார் 400 கோடி ரூபாய் அளவிற்கு திட்டம் போட்டு, நிதி ஒதுக்கீடு
செய்யப்பட்டு, பணிகளும் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போதே,
அந்த தொகை 1200 கோடி அளவிற்கு உயர்த்தப்பட்டு,

அதே ஒப்பந்தக்காரர்கள் மூலம் நிறைவேற்றப்பட்ட வகையில் பெருத்த ஊழல்
நடைபெற்றது என்பது குற்றச்சாட்டு.

இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த வழக்கில், குற்றச்சாட்டை கூறுவது அதிமுக அரசு. குற்றம் நடைபெற்றதாகச் சொல்லப்படும் காலத்தில் ஆட்சியில் இருந்து இதை நடத்திய பெருமை திமுகவுக்கு போகிறது.

திமுக ஆட்சிக்காலத்தில், கலைஞர் முதலமைச்சராகவும்,
திரு.ஸ்டாலின் துணை முதலமைச்சராகவும்,
திரு.துரைமுருகன் பொதுப்பணித்துறை அமைச்சராகவும் பதவியில் இருந்தபோது இந்த ஊழல் நிகழ்ந்தது என்று கூறி –

இதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி ரகுபதி கமிஷனின் விசாரணைக்கு மேற்படி மூவரும், சென்னை உயர்நீதிமன்றம் சென்று தடையுத்தரவு பெற்று,

கடந்த சுமார் 6 வருடங்களாக இந்த விசாரணை தொடர்ந்து நடக்க விடாமல் நீதிமன்ற தடையுத்தரவுகளின் மூலம் இழுக்கடிக்கப்பட்டது….

இறுதியாக, அண்மையில் சென்னை உயர்நீதிமன்ற விசாரணையின்போது, விசாரணை கமிஷன் மூலம் தேவையின்றி காலதாமதம் ஏற்பட்டு, பண விரயமும் ஏற்பட்டிருக்கிறது என்பதை சுட்டிக்காட்டி, இனியும் கமிஷன் நீடிக்க அவசியம் இல்லையென்றும்,

அடிப்படையில் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருந்தால், தமிழக அரசு
நேரடியாக வழக்கு பதிவு செய்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது விசாரணையை தொடரலாம் என்றும் உத்திரவிடப்பட்டது.

இதன் அடிப்படையில், தமிழக அரசு வழக்கு ஆவணங்களை லஞ்ச ஊழல் ஒழிப்பு துறையிடம் ஒப்படைத்து, மேல் நடவடிக்கை எடுக்கச் சொன்னது….

விசாரணைக்கு பயந்து போன, திருவாளர்கள் ஸ்டாலினும், துரைமுருகனும் உடனடியாக, உயர்நீதிமன்றத்தில் முறையிட்டு,
விசாரணைக்கு தடையுத்தரவு பெற்றிருக்கிறர்கள். இந்த தடையுத்தரவு
இன்னும் கொஞ்சகாலம் நீடிக்குமாறு பார்த்துக்கொண்டால் –

அதற்குள் தேர்தல் நடந்து தாங்கள் ஆட்சிக்கு வந்து விட்டால்,
விசாரணையின்றியே, வழக்கை முடித்து வைத்து விடலாம் என்பது அவர்கள் எண்ணமாக இருக்கலாம்.

தற்போது ஆட்சியில் இருப்பவர்களும் சரி –
முன்னால் ஆட்சியில் இருந்த திமுகவும் சரி –

ஊழல்களில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல
என்பதே கட்சி சார்பற்ற மக்களின் கருத்து.

எனவே, எந்தவித பாகுபாடுமின்றி, திமுக, அதிமுக ஆகிய கட்சிகளின்
தலைவர்கள் சம்பந்தப்பட்ட – இரண்டு ஊழல்களைப் பற்றியும்,
நியாயமான, விரைவான விசாரணை நடந்து உண்மைகள் வெளிப்பட
வேண்டும்… தமிழக மக்களுக்கு அதுவே தேவை.

எனவே, தங்கள் தரப்பு தடையுத்தரவை வாபஸ் வாங்கிக்கொண்டு,
திரு.ஸ்டாலினும், திரு.துரைமுருகனும் – விசாரணைக்கு தாமாகவே
முன்வந்து உடன்பட வேண்டும்… ஒத்துழைக்க வேண்டும்.

இந்த கட்டத்தில், நேற்றைய தினம் சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கும்போது கூறியுள்ள சில வாசகங்களை நண்பர்களின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன் –

……..

பொது வாழ்வில் நேர்மை, நாணயம் பற்றி மக்கள்
அக்கறை கொள்கின்றனர்… அதிகாரத்தில் இருப்பவர்களின்
நேர்மை பற்றி விசாரிப்பது, உடன்பாடு இல்லாத விஷயம் அல்ல.

நியாயமான, வெளிப்படையான விசாரணையால் தான் அதிகாரத்தில்
இருப்பவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை நீக்க முடியும்.

அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் வரும்போது,
சந்தேகத்தை நிவர்த்தி செய்ய, அவர்களாகவே சுதந்திரமான
விசாரணைக்கு முன்வர வேண்டும்.

……..

இந்த கருத்துகள், இந்நாளில் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு பொருந்துவது போலவே, முன்னாளில் அதிகாரத்தில் இருந்தவர்களுக்கும் பொருந்தும் என்பதை –

திரு.ஸ்டாலின் அவர்கள் ஏற்றுக்கொண்டு, நீதிமன்ற தடையுத்தரவு பெற்று, அதன் பின்னால் ஒளிந்துகொள்ளாமல் – தானாகவே
முன்வந்து விரைவான விசாரணைக்கு ஒத்துழைப்பு தர வரவேண்டும்.

பொதுவாழ்வில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் – தவறு எதுவும் நடக்கவில்லை என்றால், விசாரணைக்கு அஞ்ச வேண்டிய அவசியம் என்ன…?

.
——————————————————————————————-

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to ஆனால் திரு.ஸ்டாலின் ஏன் விசாரணைக்கு பயப்படுகிறார்….?

  1. R.Gopalakrishnan's avatar R.Gopalakrishnan சொல்கிறார்:

    Excellent article.But……

  2. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    // அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் வரும்போது,
    சந்தேகத்தை நிவர்த்தி செய்ய, அவர்களாகவே சுதந்திரமான
    விசாரணைக்கு முன்வர வேண்டும். // அய்யா …! உங்களுக்கு ராெம்ப நல்ல மனசு … ஆர.டி.ஐ. மூலம் பெற்ற தகவலை வெளியிட்டவுடனே அதை மூடி மறைக்கிற காலத்தில் …உங்களுக்கு ராெம்ப நல்ல மனசு ….!

  3. ravikumar r's avatar ravikumar r சொல்கிறார்:

    I do not understand how the Writer expects DMK and ADMK to face fair trial after putting rich experience as political observer

  4. Rajaraman VK's avatar Rajaraman VK சொல்கிறார்:

    DMK is the most corrupt party in India. Even the Sarkaria commission has indicted that DMK is a giant in doing corruption.
    ( check this link for more details -> https://www.thehindu.com/2001/06/10/stories/0410223a.htm)

    Voters of TN should never ever vote for such a mean party that practices hate politics and always anti-national in all its actions.

  5. tamilmani's avatar tamilmani சொல்கிறார்:

    As long as Jayalaitha was alive political atmospere in Tamilnadu was calm , but once she is no more all the players esp kamalahasan , ttv dinakaan, stalin , even karunas (who owes his victory
    for the two leaves symbol) and are jumping and indulging all sorts of drama to win some political mileage. but mark my words they cannot do anything as long as Modi is there. That is why
    these people hate Modi .He is the stumbling block to many peoples aspirations esp Stalin.

  6. Srikanth's avatar Srikanth சொல்கிறார்:

    Yes. you are very right. Unfortunately we missed J very soon. If she was alive and in power for few more years, all these anti-national elements would have been kept in check and their damages to the society will be limited and people would have lived peacefully.

    We need CMs like J who was always very clear and strict when dealing with anti-nationals.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.