…
…

..

…
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களை வைத்து எந்த அளவிற்கு விளம்பரம் தேடிக்கொள்ள முடியுமோ, அந்த அளவிற்கு பாஜகவிற்கு விளம்பரம் தேடி முடித்து விட்டார்கள் மோடிஜியும், அமீத்ஜீயும்….
மயானத்தில், சடலத்தை எரித்த இடத்திலிருந்து – மறுநாள், அஸ்தியை எடுத்த அனுபவம் ஏற்கெனவே உள்ளவர்களுக்கு தெரியும்…. ( என் வாழ்வில் அந்த அனுபவம் நிறையவே ஏற்பட்டு விட்டது….)
சகலமும் சாம்பலாகி விடும்… மிஞ்சி மிஞ்சிப் போனால் – 5 அல்லது 6 எரிந்து கரிக்கட்டையான pieces கிடைக்கலாம்…. அதுவும் 95 வயது முதிர்ந்த உடலுக்கு அது கூட கடினம் தான்.
ஆனால், இதை வைத்து 65 பித்தளைக் கலசங்களை தயாரித்து, அலங்கரித்து, நாடு முழுவதும் அனுப்பி, எல்லா ஊர்களிலும் ஊர்வலம் நடத்தி,
– திமுக உட்பட இதிலெல்லாம் நம்பிக்கையே இல்லாதவர்களைக்கூட
கட்டாயமாக வந்து வணக்கம் செலுத்த வேண்டிய சூழ்நிலையை உருவாக்கி……….. கெட்டிக்கார இரட்டையர்கள்…!!!
இதன் மூலம் – வருகிற தேர்தலின்போது, வாஜ்பாய் அவர்களை மனதில் நினைத்து மோடிஜிக்கு வாக்கு அளிப்பார்கள் மக்கள் என்பது அவர்கள் எதிர்பார்ப்பு….
வாஜ்பாய்ஜிக்கும், மோடிஜிக்கும் உள்ள வித்தியாசத்தை அறியாத மக்குகள்
என்று தான், இந்த திருநாட்டின் மக்களைப்பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் அந்த இரட்டையர்கள்….!!!
நல்ல வேளை – வாஜ்பாய் தன் இதயத்தை என்னிடம் இரவலாகத் தந்துவிட்டு போயிருக்கிறார் என்று மோடிஜி சொல்லாத வரை மக்கள் தப்பித்தார்கள்…!!!
சரி – அது எப்படியோ போகட்டும்…
நான் சொல்ல வந்தது வேறு தமாஷான விஷயம்…!
வாஜ்பாய் அவர்களின் நகைச்சுவை உணர்வும், பேச்சுத்திறமையும், அவரை அறிந்தவர்களுக்கு நன்கு தெரிந்த விஷயம் …
செய்தியாளர் குல்தீப்மிஸ்ரா எழுதியிருந்த ஒரு கட்டுரையில்
பார்த்தேன் –
வாஜ்பாய் அவர்கள் பிரம்மச்சாரியாகவே இருப்பது பற்றி ஒரு சமயம் பத்திரிகைக்காரர்கள் அவரிடம் வினவினார்கள்…
அதற்கு பதில் சொன்ன வாஜ்பாய்,
“நான் திருமணம் செய்து கொள்ளவில்லை உண்மை தான் …”
என்று சொல்லிவிட்டு சற்று இடைவெளி விட்டு விட்டு,
“ஆனால் நான் பிரம்மச்சாரியும் இல்லை” என்று கூறிச் சிரித்தாராம்….
விடாத செய்தியாளர்கள் தொடர்ந்து –
“திருமணம் செய்து கொள்ளாததற்கு காரணம் என்ன…? ”
என்று வினவி இருக்கிறார்கள்…
துவக்கத்தில், சுற்றி வளைத்து, நழுவிக்கொண்டிருந்தவர்
கடைசியில் ஒரு கட்டத்தில், குறும்பாக –
“ஒரு சிறந்த மனைவிக்காக காத்துக் கொண்டிருக்கிறேன்…”
என்று பதில் சொல்லி இருக்கிறார்…
“இன்னுமா கிடைக்கவில்லை…? ” என்று
தொடர்ந்து கேட்கப்பட்டபோது –
சிரித்துக்கொண்டே – “கிடைத்தார்… ஆனால் என் துரதிருஷ்டம்…..
அவரும் ஒரு நல்ல கணவரை தேடிக்கொண்டிருந்தார்…” 🙂 🙂 🙂
என்றிருக்கிறார்….
இந்த மாதிரி நகைச்சுவை உணர்வுள்ள அரசியல் தலைவர்கள் நமக்கு அபூர்வமாகவே கிடைக்கிறார்கள்…
அகில இந்திய அளவில் சிலர் இருந்தார்கள் …
நேருஜியின் சமயத்தில், பாராளுமன்றத்தில் பிலு மோடி (…! )
என்றொருவர் இருந்தார்…பயங்கர குண்டாக இருப்பார்…
ராஜாஜியின் சுதந்திரா கட்சியைச் சேர்ந்தவர்.
நகைச்சுவை மன்னன். யார் பேசினாலும், கவலையேபடாமல்
குறுக்கிட்டு, கிண்டலடிப்பார்…
யாரும் தவறாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள்…
கட்சி வேறுபாடில்லாமல், பாராளுமன்றமே குலுங்கிச் சிரிக்கும்…!
இப்போதுள்ளவர்களில் திரு.லாலு பிரசாத்தை இந்த ரகத்தில் சேர்க்கலாம்.
ஆனால் பாவம், இப்போது பீஹார் சிறை ஹாஸ்பிடலில் கொசுத்தொல்லையில் சிக்கி அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்…
தமிழ்நாட்டில் யாரையாவது இந்த பட்டியலில் சேர்க்க முடியுமா ….?
(திமுக – துரைமுருகன் அவர்கள்… கொஞ்சம் பரவாயில்லை…)
இன்னும் வேறு யாராவது…?
.
———————————————————————————



பிங்குபாக்: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் – ஒரு சுவாரஸ்யமான விஷயம் …!!! – TamilBlogs
கருணாநிதியும் நகைச்சுவையாகப் பேசுவார். ஆரம்ப காலங்களில் சட்ட சபையில் நகைச்சுவையாகப் பேசியிருக்கிறார்.ஆனால் அவர், மற்றவர்களைக் குத்திக் காண்பிக்குமாறு பேசுவதால் அவர் ஒரு சாஃப்ட் பெர்சனாக வெளிப்படமுடியவில்லை. நகைச்சுவை என்பது பிறரைக் குத்திக்காண்பிக்காத வரையில், எல்லோரும் அதனை ரசிப்பார்கள்.