…
…
இவருக்கு வயது நிச்சயம் 55 -க்கு மேலேயே இருக்கும்.
வாயாலேயே, ராக்கெட் விடுகிறார்… 🙂 🙂
ராக்கெட் – கிளம்பும் முன்னரே வெடித்தால்,
முகம் என்ன ஆவது என்கிற கவலையையே காணோம்.
என்ன அஸ்ஸால்டாக அரை டஜன் ராக்கெட் விட்டு விட்டு,
திரும்பிப் பார்க்காமல், ஸ்டைலாக போய்க்கொண்டே இருக்கிறார்
பாருங்கள்…!!!
…
.
இவரது துணிச்சலும்… திறமையும்….(?) பாராட்டப்படுமா ..?
அல்லது பொது இடத்தில் சிகரெட் பிடிக்கிறார் என்று
ட்ராஃபிக் ராமசாமியால் புகார் கொடுக்கப்பட்டு
இவர் தண்டிக்கப்படுவாரா…!!!
———————————————————————————



வாயால வடை சுடறவங்க மத்தியில …வாயால ராக்கெட் விடுகிறாரா …?
பிங்குபாக்: இவரது திறமை…(?) பாராட்டப்படுமா… அல்லது இவர் தண்டிக்கப்படுவாரா…? – TamilBlogs
இந்தக் காணொளியை ஏற்கனவே பார்த்திருக்கிறேன். அவர் செய்வது ‘திறமை’ கிடையாது. அதைப் பாராட்டக்கூடாது.
அவர், தனக்கும், தன்னைச் சார்ந்த குடும்பத்துக்கும் மிகப் பெரிய ரிஸ்க் எடுக்கிறார். ஒரு வெடி பொருளை அதற்கான வழிமுறைகளின்படி வெடிக்காதது, விதிமுறை மீறல்தான்.
தனிப்பட்ட முறையில் நான் இதனை, ‘கல்வி அறிவு இல்லாததால்’ என்றுதான் எண்ணுகிறேன் (சென்னை பீச் ரோடுல, பைக் வேகமாக ஓட்டி மற்றவர்களைப் பதட்டப்படுத்தும், தானும் ரிஸ்க் எடுக்கும் கழிசடைகளையும் சேர்த்துத்தான் சொல்கிறேன். அவர்கள் எல்லோரும், பணத் திமிரில் பெற்றோர் கொடுத்த பைக்குகளை மற்றவர்களின் தொந்தரவுக்குக் காரணமாக இருக்கிறார்கள். இவர், தன் குடும்பத்தைப் பற்றிக் கவலைப்படாமல், தன் உயிரைப் பற்றியும் கவலை கொள்ளாமல் தன் வேலையைச் செய்துகொண்டிருக்கிறார்)
புதியவன் கருத்தே என் கருத்து. இது மனநோய், பாராட்டக் கூடாது.