…
…
நான் இங்கே சொல்வது 40-45 ஆண்டுகளுக்கு முந்தைய விஷயம்.
அப்போதெல்லாம் இன்று போல் தொழில் நுட்ப வளர்ச்சிகள் இல்லை. இலக்கிய கூட்டம் என்றால், நேரில் போய் கேட்டால், பார்த்தால் தான் உண்டு. டிவி, வீடியோ எல்லாம் கிடையாது.
..

..
காரைக்குடியில் (சட்டை அணியாத…) சா.கணேசன் அவர்கள் நடத்தும் கம்பன் விழா மிகவும் புகழ் பெற்று பரபரப்பாக பேசப்பட்ட காலம்….
புதுச்சேரி -பாண்டிச்சேரியாக இருந்தபோது, காரைக்குடியை தொடர்ந்து,
ஆண்டுதோறும் பாண்டிச்சேரியிலும் கம்பன் விழா நடத்துவது
வழக்கமானது… தமிழ் இலக்கியத்தில் தலைசிறந்த பேச்சாளர்கள் வந்து
பேசுவார்கள்.
எம்.எம்.இஸ்மாயில் (1921-2005) அவர்களைப்பற்றி, இந்தக்கால இளைஞர்களுக்கு தெரிந்திருக்காது…. ஆனால் முன்னாள் இலக்கியப்
பிரியர்கள் மறக்கவே மாட்டார்கள்.
..

..
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்த அவர் ஒரு மிகச்சிறந்த இலக்கியவாதி….
தமிழ்ப் பேச்சாளர்… ஒரு இஸ்லாமியராக இருந்தாலும் கூட
கம்ப ராமாயணத்தை கரைத்துக் குடித்தவர். கம்பன் கழகத்தின் தலைவராகவும் கூட செயலாற்றியவர்.
கம்ப ராமாயணத்தின் கதாபாத்திரங்களைப்பற்றி அவர் பேசினால்,
கேட்டுக்கொண்டே இருக்கலாம். பேசி முடித்து விட்டால் அடடா – முடித்து விட்டாரே என்று இருக்கும். அவர் கலந்துகொண்ட பல கம்பன் விழா நிகழ்ச்சிகளை பார்த்த பாக்கியம் எனக்கு உண்டு.
இப்போது இது ஏன் என்கிறீர்களா…?
இந்த வருடமும் ஜூன் 2018-ல், கம்பன் விழா புதுச்சேரியில் சிறப்பாக
நடந்திருக்கிறது….. நேரில் போகக்கூடிய வாய்ப்பு எனக்குத்தான்
கிடைக்கவில்லை…
ஆனால், அதற்கு பதிலாக, அண்மையில், புதுச்சேரி தொலைக்காட்சி
( தூர்தர்ஷன் ) ஒளிபரப்பிய, கம்பன் விழா காட்சிகள் சிலவற்றை காணும் வாய்ப்பு கிடைத்தது….
புதுச்சேரி கம்பன் விழாவில், நிஜமும், உருவகமும் பற்றி
திரு.சுகி சிவம் அவர்களின் அற்புதமான உரையொன்று …
நண்பர்கள் அவசியம் கேட்க வேண்டும்…
( முதலில் இந்த இடுகைக்கான தலைப்பாக நான் போடவிருந்தது –
“நிஜமும், உருவகமும் – புதுச்சேரி கம்பன் விழாவில்
திரு.சுகி சிவம் உரை…” – பின் ஏன் மாற்றப்பட்டது…?
தலைவிதி… அந்த தலைப்பின் தலைவிதி.. 🙂 🙂
அதைப்பற்றி பின்னர் – அதற்கான நேரம் வரும்போது – சொல்கிறேன் )
…..
.
———————————————————————————
.
பின் குறிப்பு –
10-ஆம் நூற்றாண்டின் இறுதியில், (நான் இதைத்தான் ஏற்கிறேன்…)
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தான் “கம்ப ராமாயணம்”
கவிச்சக்ரவர்த்தி கம்பரால், அரங்கேற்றப்பட்டது.
இராம காவியத்தை இயற்றிய கம்பர், ஒவ்வொரு பாடலாக அதை
வாசித்து விளக்கும்போது அமர்ந்திருந்த மண்டபமும்,
அதை ரசித்துக் கேட்ட மன்னன் குலோத்துங்க சோழன்
அமர்ந்திருந்த உயர் மேடையும், இன்றும் தாயார் சந்நிதி எதிரே,
அதற்குரிய குறிப்புகளுடன் அடையாளம் காட்டப்படுகிறது.
ஒவ்வொரு தடவையும் ஸ்ரீரங்கம் போகும்போது,
நான் இந்த மண்டபத்தில்
கொஞ்ச நேரம் அமர்ந்திருப்பேன்…
கம்ப ராமாயணம் அரங்கேறிய அந்த நாட்களில் இந்த இடம்
எப்படி இருந்திருக்கும் என்று கற்பனையில் நினைத்துப் பார்ப்பேன்…
இனிமையான கனவு(நினைவு..?)களிலிருந்து பிரிய மனமில்லாமலே
அங்கிருந்து கிளம்புவேன்.
தமிழ், சரித்திரம் – இரண்டுமே சுவையானவை.
பேசப்பேச, கேட்கக்கேட்க
அலுக்கவே அலுக்காது…!
.
——————————————————————————-



பிங்குபாக்: ஐஜி அருள் அவர்கள் பார்க்க விரும்பிய பெண்மணி – திரு.சுகி சிவம் சொன்ன ஒரு சுவாரஸ்யமான விஷயம்…. –
அய்யா …! இந்த 53 ம் ஆண்டு கம்பன் விழா பல சிறப்புகளை உள்ளடக்கியது .. பல தமிழறிஞர்கள் கலந்துக் காெண்டு சிறப்புரை ஆற்றனார்கள் ..சுகி .சிவம் , ஜெயமாேகன் , இலங்கை ஜெயராஜ் , பேராசிரியர் அப்துல்காதர் , பர்வின் சுலதானா , அன்பரசு ஐ .ஏ. எஸ் …பாேன்றவர்கள்…எம்.எம்.இஸமாயில் அய்யாவின் இடத்தைப் பிடிக்காவிட்டாலும் தற்பாேது ஓரளவு அவரை நெருங்குகிறார் பேராசிரியர் அப்துல் காதர் அவர்கள் என்பது என் எண்ணம் …
இந்தாண்டு விழா மே மாதம் 11. அன்று தாெடங்கியது . இதில் என்னஒரு விஷேசம் என்றால் புதுவை துணை நிலை ஆளுனர் கிரண்பேடி அவர்களின் உரையை தமிழாக்கம் செய்தவர் முதல்வர் நாராயணசாமி என்பது மக்களிடையே பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது …!
சுகி . சிவம் அவர்கள் கூறிய ஐஜி அருள் விவகாரம் ” குரலும் ..நபரும் ” என்பது தக்க நேரத்தில் தங்களின் ஸ்பெஷல் பன்ச் என்பது உண்மை ….! இது பாேன்ற விழாக்களை ஒரு சில இடங்களில் மட்டுமே நடத்துகிறார்கள் …அதில் குடியேத்தம் ” பதுமனார் ” அவர்கள் நடத்துவதும் சிறப்பாக இருக்கும் ….!!
செல்வராஜன்,
உங்கள் தகவல்களுக்கு நன்றி… கலந்து கொள்ளும் வாய்ப்பு
உங்களுக்கு கிடைத்ததா…?
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
கிடைத்தது அய்யா .. ! இருந்தாலும் பேராசிரியர் அப்துல் காதர் அவர்களது உரையை மட்டுமே கேட்கும் விதமாக எனது பணி அமைந்துவிட்டது ….மற்றவர்களின் உரையை கேட்கமுடியாமல் பாேனதுவருத்தம்தான் … முன்பு பழைய பேரூந்து நிலைய அருகில் கம்பன் கலை அரங்கம் இருந்த காலத்திலிருந்து ஒரு பாக்கியம் எனக்கு ..கடலூர் அருகில் உள்ளதால் …
தற்பாேது ஆரா டி.வி. யில் தான் இது பாேன்ற கம்பன் விழா ..மார்கழி விழா பாேன்றவற்றை காண முடிகிறது … மற்ற டி.வி கள் பண்டிகைக் கால நகைச்சுவை பட்டி மன்றங்களை நடத்தி தமிழை காெல்லாமல் காெல்லுகிறார்கள் ….!