…
…

…
எப்போதெல்லாம் நிதி பற்றாக்குறையாக இருக்கிறது
என்று நினைக்கிறாரோ அப்போதெல்லாம் கலைஞர், கட்சியின்
பொருளாளராக இருந்த என்னிடம் பணம் திரட்டச் சொல்வார்…
அவர் ஆலோசனைப்படியே நானும் வசூலைத்
துவங்குவேன் – என்று சொல்கிறார் ஆற்காட்டார்.
( அப்பாவியாகவோ, வேண்டுமென்றேயோ -நமக்குத் தெரியாது…!!! )
ஆற்காட்டாருக்கு இப்போது திமுக-வில் எந்தவித பொறுப்பும் இல்லை.
கிட்டத்தட்ட ஓரம் கட்டப்பட்டு விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.
தந்தி தொலைக்காட்சியின் ஹரிஹரன், தனது ‘ராஜபாட்டை’
நிகழ்ச்சிக்காக முக்கியஸ்தர்களை பேட்டி காணும்போது,
மிக மிக மென்மையாகப் பேசுவார்…
அவர் கேள்விகளை கேட்கும்போது, அப்பாவித்தனமாக எந்தவித
உள்ளர்த்தமும் இல்லாமல் கேட்பது போல் தான் இருக்கும்.. ஆனால்,
சில சமயங்களில் பதில்களில் prize catch வந்து விழும்…!!!
அப்படியொரு பேட்டி தான் இந்த வாரம் அமைந்தது…
கலைஞருடன் பொருளாளராக பதவி வகிக்கும்போது –
தான் “நிதி” வசூலுக்குப் போகும் விதத்தை வர்ணிக்கிறார் ஆற்காட்டார்….
.
முதலில் எம்.ஏ.எம். ( கோடீஸ்வர தொழிலதிபர், செட்டி நாட்டரசர்,
எம்.ஏ.எம்.ராமசாமி செட்டியார் அவர்கள்…) அவர்களிடம் போவேன்.
ஐந்து கோடி ரூபாயை தாராளமாக தூக்கிக் கொடுப்பார்…
ஹரி குறுக்கிடுகிறார்….பரவால்லையே…
அஞ்சு கோடி ரூபாயை அவ்வளவு சகஜமாக கொடுத்து விடுவாரா …?
ஆற்காட்டார் ரகசியத்தை இங்கேயே போட்டு உடைத்து விடுகிறார்….
அவர்கள் மெடிகல் காலேஜில் முதலில் கோட்டா வரையீட்டின்படி சீட்கள் நிரப்பப்பட வேண்டும்……
பிற்பாடு, சேர்க்கப்பட்டவர்கள் யாராவது வெளியேறினால்,
அப்படி காலியாகும் இடங்களை – அவர்கள் இஷ்டப்படி மேனேஜ்மெண்ட்
தரப்பிலிருந்து நிரப்பிக் கொள்ளலாம்….
நான், அரசு மருத்துவக் கல்லூரியில்
சேர்க்கப்பட இருப்பவர்கள் பட்டியலின் ஒரு காப்பியை
முன்னதாகவே அவருக்கு கொடுத்து விடுவேன்.
அவர், முதலில், அந்த கேண்டிடேட்களுக்கு,
அவர்கள் மெடிகல் காலேஜில் அட்மிஷன் போட்டு விடுவார்… 🙂 சம்பந்தப்பட்ட கேண்டிடேட்கள் பிற்பாடு,
அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்து,
வெளியேறும்போது – அதன் விளைவாக உண்டாகும்
காலியிடங்களை அவர்கள் நிர்வாகத்தின் தரப்பில்
( டொனேஷன் வாங்கிக்கொண்டு…?? 🙂 🙂 ) நிரப்பிக் கொள்வார்கள்.
.
பின் ஏ.சி.முத்தையா ( இன்னொரு கோடீஸ்வர தொழிலதிபர்…) கிட்ட
போவேன்.. அவர் ஒரு கோடி ரூபாய் தருவார்… என்ன சார் எம்.ஏ.எம்.
அஞ்சு கோடி கொடுத்திருக்கிறாரே… நீங்கள்….. என்று இழுப்பேன்.
அவர் மேலும் ஒரு கோடி போட்டு, இரண்டு கோடியாக கொடுப்பார்….
பின்னர், இண்டியா சிமெண்ட் ஸ்ரீநிவாசனிடம் போவேன்…
( 2ஜி, கலைஞர் தொலைக்காட்சி, 200 கோடி ரூபாய், வழக்கு
பதியப்பட்டவுடன் அவசர அவசரமாக கடன் திருப்பியளிப்பு, இண்டியா
சிமெண்டிலிருந்து 60 கோடி ரூபாய் உதவி – நினைவிற்கு வருகிறதா..? )
ஸ்ரீநிவாசன், எல்லாரிடமும் முடித்து விட்டு என்னிடம் வாருங்கள். டார்கெட்டுக்கு எவ்வளவு குறைகிறதோ அதை நான் தருகிறேன் என்பார். அதே மாதிரி கடைசியில் நிறைய கொடுத்து – முடித்து வைப்பார்….
————————————————-
.
( ஆர்க்காட்டார் அதிர்ச்சியான உண்மைகளை சொன்னாலும் கூட,
அதை பார்க்கும்போது, எனக்கு(நமக்கு…? ) அதிர்ச்சியோ, கோபமோ வரவில்லை…. வெறுப்பும், வேதனையும் தான் உண்டாகிறது…..)
.
———————————————————————————



பிங்குபாக்: திமுக-வுக்காக எப்படி நிதி வசூல் செய்தார் … அப்பாவி ஆற்காட்டார் ஒப்புதல் வாக்குமூலம்…!!! – TamilBlogs
பெரும்பாலும் இத்தகைய நன்கொடைகள் ரொக்கமாகவே கேட்டு
வாங்கப்படும்; அல்லது கொஞ்சம் செக் கொஞ்சம் கேஷ். சில சமயம்
இதில் வசூலிப்பவர் தன் பங்குக்கு கொஞ்சம் போட்டுக் கொள்வதும்
உண்டு. பல வருடங்கள் ஆற்காட்டார் இருந்தார். பின்னர் என் மகனை
பொருளாளராக ஆக்க விரும்புகிறேன் என்று கலைஞர் என்னிடம்
சொன்னார்; உடனேயே அங்கேயே, அவர் விருப்பப்படியே, விடுப்புக் கடிதம் எழுதிக்கொடுத்து விட்டேன் என்றும் பேட்டியில் சொல்கிறார் ஆற்காடு.
அவருக்குப் பிறகு 10 ஆண்டுகள் தளபதி. இவர் அப்பாவி ஆர்க்காட்டாரை விட அதிகமாகவே வசூலித்திருப்பாரென நம்பலாம். பிறகு இப்போது
காட்பாடி. இப்படி வசூல் செய்யப்பட்ட, படும் பணங்கள் எல்லாம் யார் யாருக்கு எந்தெந்த அளவில் பங்கு பிரிக்கப்படுகிறது; இறுதியில் எவ்வளவு
கணக்கு காட்டப்பட்டு கட்சியின் அதிகாரபூர்வமான கணக்கில் வரவு
வைக்கப்படுகிறது என்பது கலைஞருக்கும், பொருளாளராக இருந்தவருக்கும் மட்டுமே தெரிந்திருக்கக்கூடிய ரகசியம்.
பல கட்சிகளிலும் இப்படித்தான் வசூல் ஆகிறது என்றாலும் கூட,
இப்படி தலைவரும், பொருளாளரும் ஆண்டான், அடிமை ரேஞ்சில் இருப்பதில்லை. எனவே அடாவடியும் ஒரு அளவிற்குள்ளாகவேயிருக்கும்.
ஆர்க்காட்டார் விளைவுகளைப் பற்றியெல்லாம் யோசிக்கும் மனநிலையிலோ,
வயதிலோ இருப்பதாக தெரியவில்லை.
//நான், அரசு மருத்துவக் கல்லூரியில்
சேர்க்கப்பட இருப்பவர்கள் பட்டியலின் ஒரு காப்பியை
முன்னதாகவே அவருக்கு கொடுத்து விடுவேன்.
அவர், முதலில், அந்த கேண்டிடேட்களுக்கு,
அவர்கள் மெடிகல் காலேஜில் அட்மிஷன் போட்டு விடுவார்… 🙂 சம்பந்தப்பட்ட கேண்டிடேட்கள் பிற்பாடு,
அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்து,
வெளியேறும்போது – அதன் விளைவாக உண்டாகும்
காலியிடங்களை அவர்கள் நிர்வாகத்தின் தரப்பில்
( டொனேஷன் வாங்கிக்கொண்டு…?? 🙂 🙂 ) நிரப்பிக் கொள்வார்கள்.
//
விஞ்சான பூர்வ ஊழல் என்றால் என்ன என்று விளக்குகிறார்! தண்டனை எதுவுமே இல்லாமல் எப்படியெல்லாம் தப்பித்திருக்கிறார்கள்!
அய்யா…! அதே அப்பாவியின் மற்றாெரு பேட்டியில் நமக்கெல்லாம் காமெடியா கூறியது : // ‘100 கோடி இருந்தால் அதிமுக ஜோலியை முடித்துவிடுவோம்’! நம்புகிற மாதிரி தான் பேசுகிறாரா ஆற்காடு வீராசாமி? //
https://tamil.indianexpress.com/tamilnadu/arcot-veerasamy-about-admk/ இப்படியெல்லாம் வசூல் செய்திருந்தும்…. பல அறக்கட்டளைகளில் பல்லாயிரம் காேடிகள் இருந்தும் … தற்பாே து ஆற்காட்டார் மேலே உள்ளவாறு புதிய தலைமுறை பேட்டியில் கூறியிருப்பது … பாவம் கட்சியில் பணமே ? இல்லையாம் …நம்பித்தான் ஆக வேண்டும் ….?