… India Fuel Price Hike
…

..
“பாரத் மாதா கீ – ஜேய்” என்று 3 முறை
ஏற்ற இறக்கங்களுடன் உணர்ச்சி பொங்க – உரக்கச் சொல்லி
பேச்சை முடித்து விட்டால் போதும்….
என்ன செய்தாலும் தாங்குவார்கள் … இளிச்சவாய் இந்தியர்கள் …!!!
இப்போது நம் மக்கள் (உங்களையும், என்னையும் சேர்த்து தான்…!) லேடஸ்ட்டாக இளிச்சவாயர்களாகி இருப்பது – பெட்ரோல், டீசல் விலையில்….
கீழே ஒரு செய்தி – செய்தியே போதும்.. என் வியாக்கியானம்
எதுவும் தேவையில்லை….
……………….
சென்னையில் – டீசல்விலை லிட்டருக்கு ரூ.74.18 காசுகள்
பெட்ரோல் விலை ரூ.81.58 காசுகளாக உயர்ந்திருக்கிறது.
இத்தகைய விலை உயர்வுகள் சாமானிய, நடுத்தர மக்கள் வாழ்க்கையில் எந்த அளவிற்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிட்டது என்பதை மக்களே உணர்வார்கள்… இங்கே விவரிக்கத் தேவையில்லை.
2014-ம் ஆண்டில் பாஜக ஆட்சிக்கு வந்தபின்-
மொத்தம் 12 முறை உற்பத்தி வரி உயர்த்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் மட்டுமே சுமார் 11 லட்சம் கோடி
(பதினோறு லட்சம் கோடி…. ) மத்திய அரசுக்கு
கிடைத்திருக்கிறது என்று ஒரு தகவல் சொல்கிறது.
இந்த 11 லட்சம் கோடியை அவர்கள் எப்படி பயன்படுத்தினார்கள்
என்பது தனி விஷயம். அதை தெரிந்து கொள்ளும்போது
ஆச்சரியமாக இருக்கும்…!!!
பாஜக அரசு பொறுப்பேற்ற பிறகு – இதுவரை – பெட்ரோல் மீது உற்பத்தி வரி
211.7 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது,
டீசல் மீது 433.06 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
நம்முடைய நாட்டில் இருந்து சுத்தீகரிக்கப்பட்ட பெட்ரோல், டீசல்
15 வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. சுத்தீகரிக்கப்பட்ட பெட்ரோல், டீசல் இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகிறது என்பதே பொதுமக்கள் பலருக்கு
புதிய செய்தியாக இருக்கும்.
நம்நாட்டில் சராசரியாக பெட்ரோல்,
டீசல் விற்கப்படும் விலை ரு.86, மற்றும் ரூ.78, ஆக இருக்கிறது.
ஆனால், பாஜக அரசு 15 வெளிநாடுகளுக்கு பெட்ரோலை
லிட்டர் ரூ.34க்கும், டீசலை ரூ.29-க்கும் ஏற்றுமதி செய்துவருகிறது.
அதாவது இந்திய எண்ணை கம்பெனிகள் கச்சா எண்ணையை சுத்தீகரித்து, பயன்படுத்த தயாராக்கி, அதன் பின் ஓரளவு சதவீதம் லாபமும் சேர்த்த பிறகு வரும் விற்பனை விலை இது.
அப்படியானால், ஒரிஜினல் விலை
நிச்சயம் இதைவிட குறைவாகவே இருக்கும்.
இளிச்சவாயர்கள் உள்நாட்டுக்காரர்கள் மட்டுமே….(!!!) என்கிற
ஒளிந்திருந்த இந்த அரிய தகவல் இப்போது எப்படி வெளியே வந்தது…?
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ரோகித் சப்ரவால்
என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெட்ரோல், டீசல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் விலையைப் பற்றிய விவரங்களை கேட்டிருந்தார்.
கடந்த 3 மாதங்களுக்கு முன் அவர் தாக்கல் செய்த மனுவுக்கு தற்போது
மத்திய அரசின் மங்களூரு பெட்ரோலிய சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் ( தெரியாத்தனமாக – அதன் விளைவுகளைப்பற்றி
யோசிக்காமல்…) அளித்துள்ள பதிலிலிருந்து –
நாமெல்லாரும் இளிச்சவாயர்கள் என்கிற –
இந்த மகத்தான விஷயம் வெளியாகி இருக்கிறது…
இரண்டு நாட்களுக்கு முன்னர் பெட்ரோல் பங்க்-களில் போர்டு
வைக்க வேண்டுமென்று சொல்லப்பட்ட ஆர்டர் பற்றி பேசிக்கொண்டிருந்தோம்.
அந்த போர்டுகளில் – தலைப்பாக – பெரிய எழுத்துக்களில் –
இன்னொரு வாசகத்தையும், சேர்த்துக் கொள்ள அரசு
பரிவுடன் பரிசீலிக்க வேண்டும்.
.
“இளிச்சவாய் இந்தியர்களை வரவேற்கிறோம்…”
.
மக்களுக்காக – இவ்வளவு செய்தவர்களால் –
இதைச் செய்ய முடியாதா என்ன …?
.
———————————————————————————



பிங்குபாக்: இளிச்சவாய் இந்தியர்கள்…. – TamilBlogs
Super Good Idea 🙂
WHAT ELSE WE CAN DO ?
இதில் 10 லட்சம் கோடி ரூபாய், நாட்டின் உள்கட்டமைப்பை அபிவிருத்தி
செய்வதவற்காக செலவழிக்கப்படுவதாக அரசின் சில செய்திகள் சொல்கின்றன. ஆனால், தேசிய நெடுஞ்சாலைகள் அனைத்தையும்
கட்டமைக்கும் பணியும், அதில் ஏற்படும் செலவுத்தொகை+லாபத்தை சுங்கச்சாவடிகள் மூலம் வசூலித்துக் கொள்ளவும் -இதற்கான குத்தகை/
காண்டிராக்டு, பெரும் நிறுவனங்களுக்கு கொடுக்கப்படுகின்றன.
இதைப்பெறும் காண்டிராக்டர்கள் யாரென்பது ஆளும் கட்சி மட்டுமே அறிந்த விஷயம். இதனுடன் தொடர்புடைய இன்னொரு தகவல்; 2019 பாராளுமன்ற தேர்தல் செலவுகளை சமாளிப்பதற்காக, 10,000 கோடி ரூபாய் டார்கெட் நிச்சயம் செய்து, இதை வசூல் செய்யும் பொறுப்பு பாஜகவைச் சேர்ந்த மூத்த அமைச்சர் ஒருவரிடம் கொடுக்கப்பட்டிருக்கிறதாம். சாலைகள் போடுவதில் வல்லவராம் அவர்.
கல்ஃபில், 1 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட லெட் நீக்கப்பட்ட பெட்ரோல், லிட்டர் 30-34 ரூ. இதுவரை அரசு கொடுத்திருந்த மானியம், கடந்த இரு வருடங்களாக சிறிது சிறிதாக நீக்கப்பட்டுள்ளது. நமது பெட்ரோல் விலை (இந்திய விலை) அமெரிக்கா மற்றும் பிரிட்டன், நியூசிலாந்துக்கு இணையாக இருக்கவேண்டும். அதற்கு மேல் இந்திய அரசு வசூலிப்பதன் காரணத்தையாவது வெளிப்படையாகத் தெரிவிக்கவேண்டும். (ஏனென்றால் இந்தக் கொள்கையை, அதாவது தினமும் விலை மாற்றம் ஏற்படுவதை, காங்கிரஸ் அரசு கொண்டுவந்தது, பாஜக அரசு தொடர்கிறது. மக்களுக்கு அதனால் என்ன பயன் விளைந்துள்ளது? விலைவாசி உயர்வுதான் மிச்சம். இதற்கு மேல், இந்தியப் பணத்தின் மதிப்பு பாதாளத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. 2009லிருந்துதான் பணவீக்கம் அதிகரிக்க ஆரம்பித்திருக்கிறது.. நான் வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்பியதால் எனக்குத் தெரியும்.)
அல்லது காங்கிரஸ் தலைமை, இதற்கு மாற்று கூறவேண்டும். அப்படி சரியான மாற்று இருக்குமென்றால், பாஜகவுக்கு பெரும் பின்னடைவு 2019ல் ஏற்படும்.
தேர்தலில் பணத்தின் மூலம் வெற்றி பெறலாம் என்ற நிலைமை இருப்பது இந்தியாவுக்கு நல்லதில்லை.
காவிரி மைந்தன் சார்….. தற்போது வெளிவந்துகொண்டிருக்கும் சுகாதாரத்துறை ஊழலைப் பற்றி நீங்க ஒரு இடுகை வெளியிடவேண்டும். கூச்ச நாச்சமில்லாமல் ஏகப்பட்ட கொள்ளை அடிக்கப்படுகிறது (கல்லூரிப் படிப்புகள் அனுமதிக்காக). இதையெல்லாம் ஆரம்பித்த கருணாநிதியை நினைக்காமல் இருக்கமுடியவில்லை. ஒவ்வொரு பணிக்கும் லஞ்சம் என்பது வளர்ந்து, ஒவ்வொரு அனுமதிக்கும் லஞ்சம், பேப்பர் ரீ வேலுவேஷனுக்கு லஞ்சம் என்று தமிழ்நாடு எங்கேயோ போய்க்கொண்டிருக்கிறது. தமிழ்நாடே (அரசு அலுவலர்கள் மற்றும் எல்லா இடங்கள் உள்பட) லஞ்ச தேசமாகிவிட்டது.
ஏதாவது ஒரு தேர்தல் வந்தால் குறைப்பார்கள் …அந்த சமயத்தில் பைசா ..பைசாவா குறைத்து மக்களுக்கு குஷி ஏற்படுத்துவார்கள் …அப்புறம் …வளர்ச்சி ..வளர்ச்சி தான் …?