…
…
ஒரு நாளிரவு 8 மணி – (2016-ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 8-ந்தேதி) திடீரென்று ஒருவர் அனைத்து தொலைக்காட்சிகளிலும் தோன்றி, ஒரு அறிவிப்பை வெளியிட்டார்…. இந்த நாட்டு மக்கள் அனைவரையும்
கதிகலங்க வைத்த ஒரு அறிவிப்பு.
அதன் விளைவு –
அடுத்த ஆறு மாதங்களுக்கு நாம் படாதபாடு பட்டோம்.
சொல்லொணாத்துயரங்களுக்கு உள்ளானோம்…
கையில் புழக்கத்திற்கு பணம் இன்றி தவித்தோம்.
பொழுது விடிந்தால், பொழுது போனால் – தினமும்
வங்கியின் வாசலிலும், ஏடிஎம் வாசலிலும் காத்திருந்து
இன்று ஆயிரம் கிடைக்குமா, இரண்டாயிரம் கிடைக்குமா என்று
நமது சொந்தப்பணத்தை திரும்ப பெறுவதற்கே
பிச்சைக்காரர்களைப் போல் அலைந்தோம்.

..

AppleMark
..

..

..

..

..
சிறு வியாபாரிகள் திணறினார்கள்.
சிறு, குறு தொழிற்சாலைகள் பல மூடப்பட வேண்டியதாயின. பல்லாயிரக்கணக்கானோர் வேலையிழந்தனர். பொருளாதாரம் படுத்தது.
சுமார் 15 கோடி பேர் – தினக்கூலி வாங்குவோர் – பல வாரங்களுக்கு தங்கள் வேலைகளை இழந்தனர்.
..

..
குறைந்த பட்சம் 100 பேருக்கு மேல் உயிரிழக்க
இந்த அறிவிப்பு காரணமாக இருந்தது.
ஆனால் – இனிமையான வாக்குறுதிகள் தரப்பட்டன…
கலர் கலரான கனவுகள் சித்தரித்து காட்டப்பட்டன …
கருப்பு மார்க்கெட்காரர்கள் விலங்கு போடப்பட்டு இழுத்துச் செல்லப்படுவார்கள்…கள்ளநோட்டு கும்பல் கதி கலங்கும்…
அடியோடு ஒழியும்.
காஷ்மீரில் கல்லெரியும் கும்பல் காணாமல் போகும்.
வரி ஏய்ப்பு செய்தவர்கள் அனைவரும்
சிறை செல்லும் நிலை ஏற்படும்….
இன்னும் கொஞ்ச நாட்களில் அனைத்தும் சீர்படும்.
நாட்டில் பாலும் தேனும் ஆறாக ஓடும்…
புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும்…etc. etc.
ஆனால் நடந்ததென்ன…?
எத்தனையோ தடவை கேட்டும், ரிசர்வ் வங்கி இறுதி அறிக்கையை
அளிப்பதை தாமதப்படுத்தி கொண்டே வந்தது. ஏனோ…?
மத்திய அரசு தடுத்து வந்ததன் காரணமோ…?
சர்குலேஷனில் இருந்த பணத்தில் திரும்ப வந்தது எவ்வளவு…?
அதில் கள்ளநோட்டுகள் எவ்வளவு..?
பிடிபட்டவர்கள் எவ்வளவு பேர்…?
குஜராத்திலும், மும்பையிலும், டெல்லியிலும் –
கோடி கோடியாக – ஆயிரக்கணக்கான கோடிகள்
பெரும் செல்வந்தர்களால் புதிய நோட்டுகளாக மாற்றப்பட்டது
செய்திகளில் அரைகுறையாக வந்தது…
ஆனால், இன்று வரை ஒரு நபரும் கைது செய்யப்பட்டதாகவோ
சிறைக்குச் சென்றதாகவோ தெரியவில்லையே…?
காஷ்மீரில் கல்லெரிதல் நின்று விட்டதா…?
2000-500 ரூபாய் கள்ளநோட்டுகள் புழக்கத்தில் இருப்பது
நிறுத்தப்பட்டு விட்டதா…?
மூடப்பட்ட சிறு, குறு தொழிற்சாலைகள் அனைத்தும்
திறக்கப்பட்டு விட்டனவா…?
எத்தனை பேர் மீது வருமான வரிச்சட்டங்களை மீறியதாக
வழக்கு போடப்பட்டு, எத்தனை ஆயிரம் கோடி
புதிதாக வசூல் செய்யப்பட்டது…?
ஒரு விவரமும் தெரியவில்லை…
அனைத்தும், கிணற்றில் போட்ட கல்’லாக இருந்து வந்தது.
இறுதியாக இப்போது ரிசர்வ் வங்கி தனது ரிப்போர்ட்டை வெளியிட்டு
விட்டது. ரிப்போர்ட்டை பார்த்தாலே தெரியும்…காலதாமதம் செய்யப்பட்டதற்கு காரணமென்ன என்பது … என்ன சொல்கிறது அறிக்கை….?
சர்குலேஷனில் இருந்த பழைய 500-1000 ரூபாய் நோட்டுகளின்
மொத்த மதிப்பு – 15.42 லட்சம் கோடி ரூபாய்.
இதில் வெறும் 13 ஆயிரம் கோடி ரூபாயைத் தவிர மற்ற அனைத்தும்
ரிசர்வ் வங்கிக்கு திரும்ப வந்து விட்டன….
..

..
இந்த 13,000 கோடியை மிச்சம் பிடிப்பதற்காக, அச்சடிக்கப்பட்ட புதிய
நோட்டுகளின் அச்சடிப்பு செலவு சுமார் 30,000 கோடிகள்…!
நோட்டுகளை அச்சடிக்கும் இடத்திலிருந்து இந்த புதிய நோட்டுகளை மின்னல் வேகத்தில் நாடு பூராவும் விமானம் மூலம் எடுத்துச் சென்று விநியோகிக்க ஏற்பட்ட செலவு எவ்வளவு ஆயிரம் கோடிகளோ…?
ரூபாய் நோட்டுகள் செல்லாததாக அறிவிக்கப்பட்ட பிறகு கோட்டை
கொத்தளத்தில் தேசியக்கொடியை ஏற்றியவர் – நாட்டு மக்களிடம்
பெருமையுடன் சொன்னது – குறைந்த பட்சம் 3 லட்சம் கோடி ரூபாய்
பழைய நோட்டுகள் திரும்ப வராது. அது அத்தனையும் நாட்டுக்கு லாபம்.
அது தான் நோட்டு மதிப்பிழப்பின் உச்சகட்ட லாபம்…!!!
அந்த 3 லட்சம் கோடி ரூபாய் இப்போது
– வெறும் 13,000 கோடி ரூபாய் ஆனது ஏன்…?
..

..
அத்தோடு விட்டதா…..?
நாட்டின் வளர்ச்சி விகிதத்தில் 1.5 % வீழ்ச்சி….
2.25 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு உற்பத்தி இழப்பு.
அன்று விழுந்த பொருளாதாரம் இன்னும் எழுந்திருக்கவே இல்லை.
இதனால் பலன் அடைந்தவர்கள் யாருமே இல்லையா…?
இருந்தார்களே… குஜராத்திலும், மும்பையிலும் –
சில தொழிலதிபர்கள்… பெரும் செல்வந்தர்கள்…
அதிகாரத்திற்கு நெருங்கியவர்கள்…
வேண்டப்பட்டவர்கள்…
..

..
தவிர, அடுத்து வந்த உ.பி. தேர்தலில் செலவழிக்க
எதிர்க்கட்சிகள் சேர்த்து வைத்திருந்த கணக்கில் வராத பணம்
அழிக்கப்பட்டு, அவர்கள் பலம் அடித்து உடைக்கப்பட்டது….
மத்தியில் அதிகாரத்தில் இருந்தவர்கள் – மாநிலத்திலும்
அமோக வெற்றி பெற்றார்கள்…!!!
இதற்காகவா –
இந்த 15-20 அதிகாரத்திற்கு நெருங்கிய பெரும் கோடீஸ்வரர்கள் தங்கள் கருப்பை வெள்ளையாக்கிக் கொள்ளவும், மத்தியில் ஆளும் கட்சி, உ.பி. மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்றவுமா இந்த நாடும், நாட்டு மக்களும் இவ்வளவு பெரிய விலை கொடுத்தார்கள்; அத்தனை இன்னல்களையும் அனுபவித்தார்கள்…?
நல்லவர் போல் வேடம் பூண்டு,
கவர்ச்சிகரமாகப் பேசி,
சுயநலத்தால், இந்த நாட்டையே சூறையாடிய இவர்களுக்கு ….
– என்ன தண்டனை கொடுக்கலாம்….?
.
—————————————————————————
பின்சேர்க்கை – நண்பர் புதியவன் விருப்பம் …..!!!
..

…



பிங்குபாக்: இவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்…? – TamilBlogs
KM sir I have Rs 1000, my cousin has Rs 26 000, my brother has Rs 17 000 and many of my friends too have old notes with us. We didn’t get a chance to come and change our notes.
நீங்கள் போட்டிருக்கும் செல்வந்தர்கள் படம், அவர்கள் ஒபாமா இந்தியா வந்திருந்தபோது, சந்திப்பதற்கு கியூவில் நின்ற படமாச்சே…..
மற்றபடி டிமானிடைசேஷனைப் பற்றி எழுதி திரும்பவும் அதனை நினைக்கவைக்காதீர்கள். நல்லது எண்ணித்தான் செய்திருப்பார் என்று நிச்சயமாக நம்பினோம்… (சாமி படம் பார்த்திருக்கிறீர்களா? அதில் வில்லன், விக்ரமைப் பார்த்து எப்படி எப்படிச் சொல்வான் என்பதை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். அதுதான் என் நினைவுக்கு இப்போ வருது). மீதிக்கு அப்புறம் வர்றேன். இப்போ அந்த நாட்களை நினைத்தால், அடப்பூ இதுக்குத்தானா இப்படி அப்போ கஷ்டப்பட்டது என்று தோணுது. நாம நினைச்சதுக்கு ஏறுக்கு மாறானா இருக்கு. இது உண்மையா இல்லை ரிசர்வ் வங்கியின் ஆட்கள் தவறாச் சொல்றாங்களா? கொஞ்சம் நிதானமா இந்த இடுகைக்கு மீண்டும் வருகிறேன்.
புதியவன்,
உங்கள் விருப்பமாக,
புதிய படம் ஒன்றை மேலே இடுகையில்
பின்சேர்க்கையாக சேர்த்திருக்கிறேன்., 🙂 🙂
அவசியம் பார்க்கவும்.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
பார்த்தேன்…… காலம் வரட்டும்…..
எனக்கு ஒரு சந்தேகம் காமை சார். 5-10 கோடி ரூபாய்களுக்கு மேல் ஒருவர் சேர்த்து என்னவிதத்தில் செலவழித்துவிட முடியும்? இந்தியாவில், சொத்து அடுத்த தலைமுறைக்கு போகமுடியாது, சொத்து அடுத்த தலைமுறைக்கு போகவேண்டும் என்றால் 75% சொத்துவரி (மார்க்கெட் விலையில்) என்று சட்டம் போடக்கூடாதா (இது ஷேர்களுக்கும் பொருந்தும்). ஒருவன், தன் வாழ்நாளில் தன் குழந்தைகளை வளர்த்தால் போதாதா? அதற்கு அடுத்த தலைமுறைக்கு நிச்சயம் இந்தப் பணம் போகக்கூடாது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அதுபோல, ஒருவர் (அல்லது ஒரு கட்சி) ஒரு டிரெஸ்டுக்கு மேல் வைத்திருக்கக்கூடாது, அவர் வாழ்நாள் முடிவில் அந்த டிரெஸ்ட் அரசு கையகப்படுத்திக்கொள்ளலாம் எனவும் இருந்தால் 40,000 கோடி ரூபாய் டிரஸ்ட் எல்லாம் இந்தியர்களுக்கு (தமிழர்களுக்கு) உபயோகப்படுமல்லவா?
அப்படி ஒரு சட்டம் இருந்தால்
”எனக்கு 50 நாட்கள் மட்டும் கொடுங்கள்; இந்த முடிவு தவறாகப் போனால் என்னைப் பொதுவிடத்தில் வைத்து தூக்கிலிடுங்கள்” – கண்களில் வழியும் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாமல் கூறினார் மேதகு பாரத பிரதமர் மோடி. ….
அது நவம்பர் 13-ம் தேதி, 2016-ம் வருடம். ஆயிரம் மற்றும் ஐநூறு ரூபாய்த் தாள்கள் செல்லாது என அறிவித்த ஐந்தாம் நாள் மேற்படி “மேதகு” அவர்கள் கோவாவில் நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றச் சென்ற போது கூறியது ….
அந்த நாள் ஞாபகம் நமக்கு இருக்கிறது …அவர்களுக்கு …?