…
…

…
துளிக்கூட எண்ணையே படாமல் தயாரிக்கும் கோதுமை மாவு சப்பாத்தியை
வடக்கே – ஹிந்தியில் “ஃபுல்கா ரோட்டி” என்று சொல்வார்கள்.
உடலுக்கு எந்தவித கெடுதலும் இல்லாதது என்பது மட்டுமல்ல…
எளிதில் ஜீரணமாகக்கூடியதும், மிகவும் மலிவானதும் கூட….
நான் வடக்கே போகும்போதெல்லாம், ஃபுல்கா+டால் தான் எனக்கு உணவு.
தயாரிப்பில் அங்கே கொஞ்சம் வித்தியாசம்…
அங்கே எரிகின்ற கரி அடுப்பில் நேரடியாக ரொட்டியை சுடுவார்கள்..
மிக அழகாக உப்பும். சைஸ் இன்னும் சிறியதாக இருக்கும்…
ஆர்டர் கொடுத்த பிறகு கண்ணெதிரே சுடச்சுட பண்ணிக் கொடுப்பார்கள்…!
இங்கே கரியடுப்புக்கு எங்கே போவது…?
எனவே, Gas அடுப்பில், ஆனால் நேரடியாக ஜுவாலையில் சுடுகிறார்கள்.
உலகத்திலேயே ( !!! ) மிகவும் வேகமாக ஃபுல்கா சுடுபவரை
காண வேண்டுமா…? ரோட்டி எவ்வளவு அழகாக உப்புகிறது பாருங்கள் –
கீழே –
…
.
———————————————————————————



பிங்குபாக்: Fastest Phulka Roti Making Man – பார்த்திருக்கிறீர்களா…? – TamilBlogs
இவ்வளவு வெண்மையாகவும் மெல்லியதாகவும் இருப்பதால் இது மைதாவில் செய்யப்பட்டது போல் இருக்கிறது. அப்படியிருந்தால் இது புல்கா வாக இருக்காது போல..
ரொம்ப அருமையா இருக்கு. அந்த வேலை செய்பவரின் திறமையையும் அந்த டீமின் ஒர்க்கையும் பார்த்தால் நான் பார்த்த (வெளிநாட்டில்) கபூஸ், ரோட்டீ செய்கின்ற கடைகளில் பணியாற்றும் பங்களாதேசிகள் நினைவுக்கு வருகிறார்கள். நான் இந்தக் கடைகளில் ரோடீ, நான் மட்டும் வாங்கிக்கொள்வேன். சைட் டிஷ், நல்ல பெரிய கடைகளிலோ அல்லது வீட்டிலோ செய்துகொள்வேன். இந்த மாதிரிக் கடைகளில் சைட் டிஷ் நன்றாக இருக்காது (சுத்தமாக தரமாக இருக்காது)
இது கோதுமைதான். புல்கா (சப்பாத்தி) நன்றாகப் பண்ணுகிறார்கள்.
வீட்டில் சப்பாத்தி செய்வதற்கே தாவு தீர்ந்துவிடுகிறது. இதுவும், தோசையும் மிகுந்த உழைப்பைக் கோருகின்றன. காணொளி கண்டதில் மகிழ்ச்சி கா.மை. சார்.