ஒரு புகைப்படமும், தலைப்பும், அது சொல்லாமல் சொல்லும் செய்தியும்….


முதலில் ஒரு புகைப்படம் – பின் அதனையொட்டி, வெளியாகியுள்ள தமிழ் ஒன் இந்தியா – செய்தி –

ரக்ஷாபந்தனான இன்று ஸ்டாலினிடம் அன்பை
வெளிப்படுத்திய கனிமொழி!

சென்னை: ரக்ஷாபந்தன் நாளான இன்று திமுக தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்னர் ஸ்டாலினிடம் கனிமொழி அன்பை பொழிந்து வாழ்த்து கூறினார்.

வேட்புமனு தாக்கல் நிகழ்ச்சி இன்று அண்ணா அறிவாலயத்தில்
நடந்தது. வேட்புமனுவை தாக்கல் செய்ய ஸ்டாலின் மற்றும் துரைமுருகன் அண்ணா அறிவாலயத்துக்கு வந்திருந்தனர். அப்போது அங்கு வந்திருந்த கனிமொழி, ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்ததுடன் அவருக்கு முத்தத்தை பரிசாக வழங்கினார்.

இன்று ரக்ஷாபந்தன் விழா கொண்டாடப்படுகிறது. சகோதர- சகோதரித்துவத்தை வெளிப்படுத்தும் வடமாநிலத்தவர்களின் நிகழ்ச்சி இதுவாகும். இந்நிலையில் அதற்கு பொருத்தமாக ஸ்டாலினுக்கு முத்தத்தையும் மகிழ்ச்சியையும் பரிசாக வழங்கியுள்ளார் கனிமொழி.

இன்று காலை கருணாநிதியின் சமாதிக்கும் கோபாலபுரத்துக்கும் கனிமொழிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று கூறப்பட்டது.

இந்நிலையில் கனிமொழி தனது அண்ணனுக்கு
வாழ்த்து தெரிவித்துள்ளதை
தொண்டர்கள் நெகிழ்ச்சியாக பார்க்கின்றனர்.

( https://tamil.oneindia.com/news/tamilnadu/kanimozhi-expresses-her-wishes-
kissing-stalin-328314.html )

——————————————————

“ரக்ஷாபந்தன்” வட மாநிலங்களில் கொண்டாடப்படும் ஒரு விழா.

அந்த நாளில், பெண்கள் –
தங்கள் கூடப்பிறந்த சகோதரர்களுக்கும்,
உடன்பிறவா விட்டாலும், சகோதரர்களாக கருதப்படுபவர்களுக்கும் –

கையில் “ராக்கி” என்னும் ஒரு அலங்கரிக்கப்பட்ட
கயிற்றை அணிவித்து
தங்கள் அன்பை, பாசத்தை – தெரிவிப்பது வழக்கம். அவ்விதம் ராக்கி கயிறு கட்டும் பெண்களை, அந்த ஆண்கள், தங்களது சொந்த சகோதரிகளாக ஏற்று, அவர்களை எந்த துன்பமும் அணுகாதபடி பாதுகாக்க உறுதி ஏற்பார்கள்.

சகோதர, சகோதரிகள் கன்னத்தில் முத்தம் இட்டுக்கொள்வது,
தமிழர் பண்பாடும் அல்ல. இந்தியப் பண்பாடும் அல்ல.

ரக்ஷா பந்தன் விழாவிற்கும், இந்த நிகழ்வுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை…செய்தித்தளம் தன் பரந்த கற்பனை வளத்தை வெளிப்படுத்தி
இருக்கிறது….அவ்வளவே.

மாறாக, இந்த புகைப்படம் இன்னொரு செய்தியை வெளிப்படுத்துவதாகத்
தோன்றுகிறது….

தந்தையின் பாதுகாப்பை இழந்து அரசியலில் தனியராக இருக்கும், திருமதி. கனிமொழிக்கு, தலைமைப் பொறுப்பை ஏற்கவிருக்கும் திரு.ஸ்டாலினின் ஆதரவு தேவைப்படுகிறது….ஆனால் அது கிடைப்பதாகத் தெரியவில்லை….

தந்தை உயிரோடு இருந்த வரை,
இந்த இருவரிடையேயும் – வெளிப்படையாகவே, ஒரு இடைவெளி இருந்துகொண்டே தான் இருந்தது. ( ஸ்டாலினின் ஈகோ, ஒரு வித open surrender-ஐ எதிர்பார்ப்பதாகத் தெரிகிறது…) தந்தையின் பாதுகாப்பு இருந்த வரை கனிமொழி அதைப்பற்றி கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

எனவே, தற்போது, மாறிவிட்ட சூழ்நிலையில், திமுக குடும்பத்தில்,தன் இருப்பை, இடத்தை – தக்கவைத்துக் கொள்ளும் ஒரு முயற்சியாக
கூட்டத்தினர் எதிரில், தான் ஸ்டாலினுக்கு
அடங்கியவராகவே இருப்பேன் என்பதை உறுதி செய்து,
இந்த வலுக்கட்டாய அணைப்பின் மூலம்
அவரது அரவணைப்பை கோருகிறார் என்று தோன்றுகிறது….

ஆனால், ஸ்டாலின் முகத்தில் சகோதரியின் மீதான அன்போ, பாசமோ –
தெரியவில்லை… மாறாக, ஒருவித reluctance தான் தெரிகிறது….!

இப்போதைக்கு திருமதி கனிமொழிக்கு, ஸ்டாலின் குடும்பத்தில் –
(அப்படித்தானே சொல்ல வேண்டும்…? )
ஸ்டாலின் தன்னை வலுப்படுத்திக் கொள்ளும் வரை –
தற்காலிகமாக இடம் கிடைக்கலாம். ஆனால்,
போகப்போக கனிமொழி ஒதுக்கப்படுவார் என்றே தோன்றுகிறது….

திருமதி கனிமொழிக்கு அந்த நிலை ஏமாற்றம் தரக்கூடியதாக இருந்தாலும் கூட, அவர் அதற்கு தன்னை தயார்படுத்திக்கொள்வது தான்
– அவருக்கு நல்லது – என்றே தோன்றுகிறது.

.
———————————————————————————

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

8 Responses to ஒரு புகைப்படமும், தலைப்பும், அது சொல்லாமல் சொல்லும் செய்தியும்….

  1. பிங்குபாக்: ஒரு புகைப்படமும், தலைப்பும், அது சொல்லாமல் சொல்லும் செய்தியும்…. – TamilBlogs

  2. karthislmkarthi's avatar karthislmkarthi சொல்கிறார்:

    ஸ்டாலின் தன்னை வலுப்படுத்திக் கொள்ளும் வரை –
    தற்காலிகமாக இடம் கிடைக்கலாம். ஆனால்,
    போகப்போக கனிமொழி ஒதுக்கப்படுவார் என்றே தோன்றுகிறது….

    திருமதி கனிமொழிக்கு அந்த நிலை ஏமாற்றம் தரக்கூடியதாக இருந்தாலும் கூட, அவர் அதற்கு தன்னை தயார்படுத்திக்கொள்வது தான்
    – அவருக்கு நல்லது – என்றே தோன்றுகிறது.

    ——–
    உங்களது கருத்து (ஆவல் )புரிகிறது .உங்களது நடுநிலை பாராட்டத்தக்கது

  3. Sanmath AK's avatar Sanmath AK சொல்கிறார்:

    KM Sir,

    Stalin could very well trust Kanimozhi to deal with Delhi affairs rather than trusting Marans or TR Balu. She has a caste backing, comparatively an orator, could lead the literary wing and women’s wing of the party, could deal with electronic media etc. For some reasons Stalin feels very much insecure. May be he is looking for a comfortable platform rather than creating a one on his own. Also every activity of Stalin is compared with Karunanidhi’s, which could form a great pressure to him to perform(some media are doing it on purpose). More to come anyways.

    Thanks.

    • Varnan Thirugnanasambandan's avatar Varnan Thirugnanasambandan சொல்கிறார்:

      but the role of Maran brothers is inevitable and ignoring them is not good for DMK. KALAINGAR never ignored mr.maran and mr stalin knows all better than any one.

      • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

        இது தவறான கணிப்பு என்று நினைக்கிறேன். குடும்ப ரத்தம் அவங்களுக்கு (கேடி) இருக்கும். சமயம் கிடைக்கும்போது பழி வாங்குவாங்க. ஆனானப்பட்ட கருணாநிதியையே எதிர்க்கத் துணிந்தவர் கலாநிதி மாறன். அதுமட்டுமல்லாமல் வெளிப்படையாக அதைப் பற்றிப் பேசினார் (இன்னும் அந்தக் காணொளி இருக்கும்னு நினைக்கறேன்) சன் தொலைக்காட்சிக்கு பிஎஸ் என் எல் கேபிள் இலவசமா போட்டுக்கொண்டது, கலாநிதிக்கு விருதும் பாராட்டும், தங்களுக்கு நிறைய சேனல் என்று தங்கள் வர்த்தகத்தை கேடி பிரதர்ஸ் கருணாநிதிக்கு தெரியாமல் பெருக்கிக்கொண்டனர். யாரையும் விலைக்கு வாங்குவதில் அவர்கள் கைதேர்ந்தவர்கள். அதனால் ஸ்டாலின் கேடி பிரதர்சை ஒரு தொலைவில் வைப்பது நல்லது. கனிமொழியை ஓரளவு அவர் நம்பலாம் என்று தோன்றுகிறது (கட்சியில் ரொம்பவும் முகத்தைக் காண்பிக்கவிடாமல். இல்லைனா உதயநிதிக்கு அல்லது மாப்பிள்ளைக்கு பிரச்சனை வந்துடும்)

        • Karthik's avatar Karthik சொல்கிறார்:

          Ayya, இல்லைனா உதயநிதிக்கு அல்லது மாப்பிள்ளைக்கு பிரச்சனை வந்துடும் – What a futuristic view !!! Kudos.

  4. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    ரொம்ப மைல்ட் ஆக விஷயத்தைச் சொல்லியிருக்கீங்க. கருணாநிதி இருந்தபோது நிலைமை வேறு, இப்போது நிலைமை வேறு.

    ஸ்டாலினுக்கு தான் இப்போது கருணாநிதி லெவல்ல அசைக்க முடியாத திமுக தலைவர் என்ற நிலைமைக்கு வரும்வரை, எல்லோரையும் ஓரளவு அணைத்துக்கொண்டு செல்வார். எல்லா இடங்களுக்கும் கனிமொழி தலை காட்ட வாய்ப்பு கொடுக்கமாட்டார். ஸ்டாலின் காலத்துக்குப் பிறகு அவரது மகனுக்குத்தான் தலைமை என்ற எண்ணம் அவரிடம் நிச்சயமாக இருக்கும். இது இல்லை, நம் விருப்பத்தைச் சொல்கிறோம் என்று நினைப்பவர்கள் எந்த வரலாற்றையும் படித்தவர்கள் இல்லை

    கனிமொழி 2ஜி, தொலைக்காட்சி ஊழலில் கருணாநிதியால் இழுக்கப்பட்டவர். அதனால்தான் ஆறுதல் கூற கருணாநிதியே திகார் ஜெயிலின் வாசலில் காத்திருக்க நேரிட்டது. கனிமொழி திறமை மிக்கவர் (அரசியல்). கட்சியின் பெயருக்கு இழுக்கு தரும் காரியங்களில் (அதாவது என்ன நடந்தது என்று சொல்லி) ஈடுபடமாட்டார். அவர் அழகிரியைவிட மிகுந்த திறமைசாலி.

    கருணாநிதி, அரசியலில் சுதாரிப்பு உள்ளவர். அதனால்தான் மாறன் பிரதர்ஸ், தங்கள் மித மிஞ்சிய பணத்தினால், திமுக மாவட்டச் செயலாளர்களுக்கு புது வண்டி வாங்கித்தரும் யோசனையைத் தெரிவித்தபோது கருணாநிதி ஆரம்பத்திலேயே சுதாரித்துக்கொண்டார். கண்கள் கலங்கி பிறகு ஒன்று சேர்ந்தபோதுகூட, மாறன் பிரதர்சின் ஆசையான, ‘கலைஞர் தொலைக்காட்சியை விட்டுவிடுங்கள், சன் குழுமம் திமுகவுக்கு இருக்கும்’ என்று சொன்னபோது அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. அந்த அளவு சுதாரிப்பு ஸ்டாலினுக்கு இருக்குமா, அதனால் என்ன என்ன விளைவுகள் பின்னால் வரும் என்பதை காலம்தான் சொல்லும். செல்வி, அவர்கள் வீட்டுக்கு நன்மையை (மாறன் பிரதர்ஸ்) எதிர்பார்ப்பார், அதனால் கனிமொழிக்கு எதிராகவே அவர் ஸ்டாலினிடம் சொல்லுவார்.

  5. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    முன்பிருந்தே ராக்கி கட்டியிருந்தால் இந்தளவுக்கு முக்கியத்துவம் பெற்றிருக்காது …!
    // தந்தையின் பாதுகாப்பு இருந்த வரை கனிமொழி அதைப்பற்றி கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. // இதற்கு எடுத்துக்காட்டாக

    கனிமொழியின் கவிதை ஒன்று

    …”அப்பா சொன்னாரென
    பள்ளிக்குச் சென்றேன்
    தலைசீவினேன், சில
    நண்பர்களைத் தவிர்த்தேன்,
    சட்டைபோட்டுக்கொண்டேன்,
    பல்துலக்கினேன், வழிபட்டேன்,
    கல்யாணம் கட்டிக்கொண்டேன்,
    காத்திருக்கிறேன்
    என்முறை வருமென்று. ” ….. இனியும் இவரது முறை வருமென்று காத்திருக்க பாேகிறாரா.?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.