…
…
தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்பட்ட கட்சி திராவிட முன்னேற்றக் கழகம்…. பல சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல்களை சந்தித்த கட்சி.
அதன் உட்கட்சி தேர்தல்கள் –
ஏற்கெனவே உருவாக்கப்பட்ட,
தேர்தல் கமிஷனாலும் அங்கீகரிக்கப்பட்ட –
கட்சி விதிமுறைகளின்படி நடைபெறுவது அவசியம்…
தலைவர் மற்றும் பொருளாளர் பதவிகளை நிரப்புவதற்கான செயல்முறை ஒன்று அதன் பொதுச்செயலாளரால் தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது….
கீழே இருப்பது – முதலில் செயலாளரால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை…..

..
இது அதற்கு அடுத்தபடியாக, பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கை…
..

..
சாதாரணமாக உள்கட்சி பதவிகளுக்கான -தேர்தல்கள் நடத்தப்படும்போது,
அதற்கென தனியாக தேர்தல் அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டு,
அவர் மூலம் –
வேட்பாளரின் தகுதிகள்,
வேட்பாளருக்கான மாதிரி விண்ணப்ப படிவம்,
வேட்பு மனு தாக்கல் செய்யும் முறைகள், மனு தாக்கல் செய்ய கடைசி நாள், மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு, இறுதி பட்டியல் வெளியிடப்படும் நாள்,
போட்டி இருப்பின் – தேர்தல் நடைபெறும் நாள், தகுதியுள்ள
வாக்காளர்களின் பட்டியல் – ஆகிய விவரங்கள் அனைத்தும் முறையாக வெளியிடப்பட வேண்டும்.
பொருளாளர் தேர்தலைப் பொறுத்த வரையில் –
இவை எதுவுமே முறையாக செய்யப்படவில்லை;
தலைவர் தேர்தலைப் பொறுத்த வரையில் – சில விவரங்கள் மட்டும், அதுவும் பொதுச்செயலாளரால் அறிவிக்கப்பட்டிருக்கின்றன…. தேர்தல் அதிகாரி நியமனம் செய்யப்படவில்லை….
திமுக, தற்போது ஒரு முக்கியமான காலகட்டத்தை சந்தித்துக் கொண்டிருக்கிறது…. கலைஞர் இருந்த வரையில், எந்த பதவிக்கும் தேர்தல் நடந்தது கிடையாது… தலைவர் தீர்மானிக்கும் பெயர்கள் அப்படியே ஏற்றுக் கொள்ளப்படும் நிலை தான் இருந்தது…

இப்போது – நிலைமை அப்படி இல்லை. இந்த அறிவிப்புகள் முறையானதாக இல்லையென்று சொல்லி, கட்சி உறுப்பினர்கள் யார் வேண்டுமானாலும் நீதிமன்றத்தை அணுகக்கூடிய வாய்ப்பு உண்டு.
திமுகவுக்கு என்று ஒரு பெரிய வழக்கறிஞர் பட்டாளம் உண்டு. அவர்கள் இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது எதனால் என்று தான் புரியவில்லை….!
இந்த குறைகளை எல்லாம் கவனித்து, சுட்டிக்காட்டி, சரி செய்ய வேண்டியது அவர்களின் பொறுப்பு இல்லையா….?
விஷயம், நீதிமன்றத்திற்கு சென்றால் தான் –
அவர்களுக்கு முக்கியத்துவம் கிடைக்குமென்று நினைக்கிறார்களா…?
அல்லது மோதல் ஏற்படுவதை அவர்களும் விரும்புகிறார்களா…?
அல்லது பதவி கிடைக்க வாய்ப்பில்லாத “பஜனை” கோஷ்டிகள் எதாவது சதி செய்கின்றனவா…?
.
———————————————————————————



பிங்குபாக்: திமுக தலைவர், பொருளாளர் தேர்தல்கள் – சட்ட சிக்கலை சந்திக்கக்கூடும்… – TamilBlogs
Avasaram.
கலைஞர் மடம் …?
a big challenge is ahead for mr.stalin and he must try to convince mr.azhagiri and not to under weigh the supporters of mr.azhagiri.many party functionaries in almost all districts are dominated by some families.so frustrated may go with mr.azhagiri for sure.