…
…
மற்றவர் தேவையை அறிந்து அதற்கு ஏற்றாப்போல் உதவி செய்வது
எப்படி….? நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய பல செய்திகளை
கேரள வெள்ளமும், உதவிக்குழுக்களும் சொல்லித் தருகின்றன….!
கீழே ஒரு உதாரணம்…. இது போல் இன்னும் பல விதங்கள்…!!!
…
.
——————————————————————————



பிங்குபாக்: கேரளாவில் தொண்டு செய்வோர் – அதை எப்படிச் செய்கிறார்கள்….. – TamilBlogs
நீங்கள் சொல்வது போல, நிவாரண வேலைகள் எல்லாம் அந்தந்த இடத்திற்கு
தகுந்தபடி மாறுபடும். சென்னையில் முற்றிலும் வேறு மாதிரி. கேரளர்கள் எல்லாருமே பொதுவாக கொஞ்சம் வசதியானவர்கள். எனவே அவர்கள் தேவை வேறு மாதிரி. எப்பேற்பட்ட பிரச்சினையாக இருந்தாலும், 10 பேர் கூட இருந்து உதவி செய்தால், பஞ்சாகப் பறந்து விடுகிறது. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கே.எம்.சார்.
வாலண்டியர்கள் செய்யவேண்டியது ஏழைகளின் குடிசைகளைச் சுத்தம் செய்யத்தான் என்று எனக்குப் படுகிறது. பணக்காரர்கள், எத்தனை வேண்டுமானாலும் கொடுத்து தங்கள் வீட்டைச் சுத்தம் செய்துகொள்வார்கள். அதுவும் தவிர, இந்த மாதிரி சுத்தம் செய்யும்போது வீட்டு ஆட்கள் உதவி செய்வதுபோல் தெரியவில்லையே.
என்னைக் கேட்டால், வீடு சுத்தம் செய்ய எல்லோரிடமும் ஒரு தொகை வாங்கிக்கொண்டு, செய்துகொடுக்கலாம். (பாம்பு மற்ற பிரச்சனைகளினால் வீட்டுக்கு உரியவர் சுத்தம் செய்வது கடினமாக இருக்கலாம்).
என் அனுபவத்தில் சொல்கிறேன். கேரளர்கள் எங்கே இருந்தாலும், நாம் மலையாளிகள் என்ற ஒற்றுமை உண்டு (அவர்களுக்குள் சண்டை இருக்கும், ஆனால் உதவி என்று வரும்போதோ அல்லது பிறருக்கு முன்போ அவர்கள் மிக ஒற்றுமையானவர்கள்). தமிழர்கள் எங்கு இருந்தாலும் ஒற்றுமையாக, நாம் தமிழர்கள் என்ற எண்ணத்தில் இருந்து நான் எங்கேயும் பார்த்ததில்லை (நால் பல தேசங்களுக்குச் சென்றிருக்கிறேன், வெளிநாடுகளில் வசித்திருக்கிறேன்)