…
…

…
நள்ளிரவில் உயர்நீதிமன்றம் கூடியது…
கலைஞர் அவர்களின் மறைவையொட்டி,
அவரை நல்லடக்கம் செய்யப்பட வேண்டிய இடத்திற்காக –
சில பொதுநல வழக்குகள் அங்கேயே வாபஸ் பெறப்பட்டது…
அவை வாபஸ் பெற நீதிமன்றத்தால் அனுமதிக்கப்பட்டது …
இவற்றில் கடைபிடிக்கப்பட்ட சட்டபூர்வமான நடைமுறைகள் எந்த
அளவிற்கு சரியானவை….? என்று ஓய்வுபெற்ற நீதிபதி திரு.சந்துரு
அவர்களிடம் ஒரு பேட்டியில் கேட்கப்பட்டது…
அவற்றைக் குறித்த தனது கருத்துகளை ஜஸ்டிஸ் சந்துரு அவர்கள்
விவரமாக தெரிவித்திருக்கிறார்.
அவரிடம் கேட்கப்பட்ட சில கேள்விகளும்,
அவற்றிற்கு அவர் அளித்துள்ள விளக்கங்களும் கீழே –
———–
கேள்வி – கருணாநிதி அவர்கள் இறப்பையொட்டி,
மெரினாவில் அடக்கம் செய்ய இடம் வேண்டும் என்று கேட்டு
அவசர மனு தாக்கல் செய்ததும், உயர்நீதிமன்ற நீதிபதிகள்
அதை ஏற்று இரவு 10.30 மணிக்கு நீதிமன்றத்தை கூட்டியதும்
சட்டப்படியானது தானா…?
.
பதில் – என்னைப் பொறுத்தவரை நீதிமன்றங்கள் வருடம் முழுவதும்
24 x 7 நேரமும் செயல்பட வேண்டும். ஒவ்வொரு வழக்கின் அவசரத்
தன்மையைப் பொறுத்து, நீதிபதிகள் வழக்கை எந்த நேரமும் விசாரிக்க
முற்படலாம். திமுக வழக்கறிஞர்களின் கோரிக்கையை ஏற்று
நீதிமன்றம் இரவில் வழக்கை விசாரிக்கப்பட்டது போல்,
எல்லா வழக்காடிகளுக்கும், வழக்கின் தன்மையை மனதில் கொண்டு நீதிமன்றங்கள் செயல்பட்டால், இப்படிப்பட்ட கேள்விகள் வருவதற்கு வாய்ப்பில்லை.
.
கேள்வி – பொதுநல வழக்குகளை தொடர்ந்தவர்கள், அந்த வழக்கை
தன்னிச்சையாக வாபஸ் பெற்றுக் கொள்ள முடியுமா…?
.
பதில் – பொதுநல வழக்குகள் போடுவதற்கான தகுதி, அவை சுயநலம் கருதி போடப்படாமல் இருக்க வேண்டும் என்பதே.
ஒருவர் பொதுநலம் கருதி போடக்கூடிய வழக்கு,
அவர் சம்பந்தப்படாத பலரையும் உட்படுத்தி இருப்பதனால்,
வழக்கை நீதிமன்றத்திற்கு கொண்டு வந்தவர்,
தன் விருப்பப்படி வழக்கைத் திரும்பப்பெற முடியாது.
அவர் தன்னை விடுவித்துக் கொள்ள நீதிமன்றத்திடம் கோரிக்கை வைத்தால், நீதிமன்றம் வேறொரு வழக்கறிஞரிடம் அந்த வழக்கை நடத்தும் பொறுப்பை ஒப்படைத்த பின்னர் தான் அந்த வழக்கை தொடுத்தவரை விடுவிக்கும்….!
ஒருமுறை மும்பையை சேர்ந்த ஷீலா பார்ஸே என்ற சமூக சேவகர்,உச்சநீதி மன்றம் தன் வழக்கை விரைவாக விசாரிக்கவில்லை என்று புகார் கூறி, திரும்பப் பெற கோரிக்கை விடுத்தார். நீதிமன்றம் அவர் தொடுத்த வழக்கிலிருந்து அவரை விடுவித்து, வேறொரு சமூக ஆர்வலரை அவ்வழக்கை நடத்தும்படி மாற்று ஏற்பாடு செய்தது.
.
கேள்வி – மாநில அரசு, மெரினாவில் இடம் தருவதற்கில்லை
என்று கூறியபோது, ‘தருவதில் என்ன சட்டச் சிக்கல்’ என்று
கேள்வி எழுப்பியது உயர்நீதிமன்றம்.
நீதிபதிகளுக்கு இந்த அதிகாரம் உள்ளதா…? ஒரு நீதிமன்றம் சட்டத்தை
வைத்து தான் தீர்ப்பளிக்க முடியும். இன்னாரை அடக்கம் செய்ய
இன்ன இடத்தை ஒதுக்க வேண்டும் என்று உத்திரவிட எந்த சட்டம்
துணைக்கு வந்தது…?
.
பதில் -பொது இடத்தில் அடக்கம் செய்யுமிடம் ஒன்று கொடுக்க வேண்டும் என்று எந்த ஒரு அரசியல் கட்சியும், எந்த நீதிமன்றத்திலும் வழக்கு தொடுக்க முடியாது. அப்படிப்பட்ட தகுதி (locus standi) எவருக்கும் இல்லை.
.
ஏற்கெனவே அனுமதியளித்த அரசின் முடிவு தவறு என்றால், மெரினாவில் எந்த கல்லறைகளும் உருவாகக்கூடாது என்றுதான் நீதிமன்றம் உத்திரவிட்டிருக்க வேண்டும். மாறாக, ஏற்கெனவே ஒரு அரசு செய்த தவறான செயல்பாட்டின் முன்னுதாரணத்தைக் காட்டி, மற்றொரு தவறான செயலை செய்ய நீதிமன்றம் உதவி செய்திருக்கக்கூடாது.
.
உணர்ச்சிக் கொந்தளிப்புக்கு நடுவில், சட்டத்தின் மேலாண்மையை
தவற விட்டிருக்கக் கூடாது.
இவ்வழக்கில் சட்டத்தின் அடிப்படையை விட, ஒப்பீட்டு அடிப்படையில் வழக்கு முடிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், கோரிக்கை விடுத்தவர்களின் உரிமை என்ன என்பதை நீதிமன்றம் கூறவில்லை.
.
———————————————————————————



சட்டமும் நீதியும் இந்த லட்சணத்தில் இருந்தால் தவறு செய்ய அல்லது தான் விரும்பியதை செய்ய யார்தான் முன் வரமாட்டார்கள்?
அசிங்கம் அசிங்கம்
எல்லாமே அசிங்கம்
எல்லோருமே அசிங்கம்
நீதிபதி சந்துரு அவர்கள் தான் பதவி வகித்த காலத்தில் பல சமுதாய நலன் நாடுகின்ற தீர்ப்புகளை வழங்கியவர் ..! எடுத்துக்காட்டாக : விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றியத்தைச் சேர்ந்த நல்லூர் ஊராட்சி மன்றத்தில் அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் நூலகம் ஒன்றைக் கட்டுவதாக முடிவு செய்யப்பட்டது. அந்த நூலகத்தைக் கட்டுவதற்குத் தெரிவுசெய்யப்பட்ட பொது இடத்தில் அதை கட்டக்கூடாது என்று அந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இதை வலியுறுத்தி அந்த ஊராட்சி மன்றத்திலேயே தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதாகவும், அந்தத் தீர்மானத்தைச் செயல்படுத்த உத்தரவிட வேண்டும் என்றும் மனுதாரர் கேட்டிருந்தார். ஏனென்றால் ஆதி திராவிடர்களும் அங்கே வந்து நூலகத்தை பயன் படுத்துவார்கள் என்பதால் வழக்கை தாெடுத்திருந்தார்கள்
இந்த வழக்கு நீதிபதி சந்துரு அவர்களிடம் வந்த பாேது அந்தக் கிராம மக்களின் மனநிலை கவிஞர் கலீல் ஜிப்ரான் தனது ‘வெள்ளைக்காகிதத்தின் கூற்று’ என்ற தலைப்பிலான கவிதையில் விவரித்துள்ளவற்றுக்கு ஒப்பானதாக இருக்கிறது எனக்குறிப்பிட்டு அந்தக் கவிதை முழுவதையும் தனது தீர்ப்பில் மேற்கோள் காட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது …
‘‘நான் தூய்மையானவளாக படைக்கப்பட்டேன். அப்படியேதான் எப்போதும் இருப்பேன். மையினால் கறைபடுவதைவிடவும் எரிந்து சாம்பலாவதையே நான் விரும்புவேன் என்று ஒரு வெள்ளைக்காகிதம் கூறியது. மை குப்பி ஒன்று அதைக்கேட்டது. தனது கறுத்த மனதுக்குள் சிரித்துக்கொண்டது. காகிதத்தின் பக்கம் அது நெருங்கவில்லை. அதைப் பாேலவே வண்ண வண்ணப் பென்சில்களும் அதைக்கேட்டன. அவையும் அந்தக் காகிதத்தின் பக்கம் செல்லவில்லை. அந்த வெள்ளைக்காகிதம் தூய்மையாக, புனிதமாக கற்போடு காலமெல்லாம் இருந்தது. வெறுமையாக’’ என்பதுதான் அந்தக் கவிதை…..
என்ன ஒரு எடுத்துக்காட்டு நூறு பக்கங்களில் சொல்வதைவிட மிக அழுத்தமாக அந்த ஊர்க்காரர்களின் அறியாமையை இந்தக் கவிதையின் மூலம் நீதிபதி அவர்கள் எடுத்துக்காட்டி விட்டார்கள். நூலகம் அந்த இடத்திலேயே அமைய உத்தரவு இட்டார்
இந்த தீர்ப்பு தற்பாேதை நிலையில் பல கூற்றுகளை நமக்கு எடுத்து கூறுகிறதா …?
ஜஸ்டிஸ் சந்துரு அவர்கள் உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றியவர்
என்பதைத் தவிர, சமூக நலன் தொடர்பான பல வழக்குகளையும் முன்னெடுத்துச் சென்றவர். எனவே, அவரது கருத்துகள் ஏற்கத்தக்கவையே. அவர் சொல்வதைப் பார்த்தால்:
1) நள்ளிரவு நீதிமன்றம் கூடியது தவறில்லை.
2) ஏற்கெனவே நிலுவையில் இருந்த பொதுநல வழக்குகளை
வாபஸ் பெற அனுமதித்தது சரியல்ல.
3) எந்த சட்ட பின்னணியும், மெரினாவில், இன்னொரு சமாதி
உருவாவதை அனுமதிக்கவில்லை.
ஆனால் எல்லாம் முடிந்து விட்டது; இது ஒரு அறிவார்ந்த விவாதத்திற்காகவும்,
பின்னால் அரசியல்வாதிகள் பயன்படுத்திக்கொள்ளவும் மட்டும் தான் உதவும்.
Will it not lead people to think that court is controlled by ‘DMK’. When they ensure taking up of the case of karunanithi overnight and give judgement, how long they will get adjourned maran brothers and ‘2G’ case ?
இதைப்பற்றி அன்றே என் மறுமொழியில் எழுதி பிறகு வெளியிடவில்லை. கோர்ட் செய்தது அவர்கள் அதிகாரத்துக்கு உட்பட்டதுபோல் தெரியவில்லை. இப்போது ஜெ. இருந்திருந்தால் இந்தமாதிரி நடந்திருக்காது. கோர்ட் வழக்குகளை வாபஸ் வாங்க வைத்ததுக்கும், தீர்ப்புக்கும் நிறையத் தொடர்புகள் இருக்கு என்றே பொதுஜனம் நம்புகிறது. ப.சி. தேர்தல் வழக்கு அவசர வழக்கில் வராது, நிறைய வழக்குகள் அவசர வழக்கில் வருவதில்லை. சந்துரு அவர்கள் சொல்வது முற்றிலும் சரி என்றுதான் தோன்றுகிறது.
பிங்குபாக்: ஜஸ்டிஸ் சந்துரு அவர்கள் – நள்ளிரவு விசாரணை – வழக்குகள் வாபஸ் – சரியா…? – குறித்து கருத்து… – Tami
எங்கும் அரசியல் ; எதிலும் அரசியல்.
இதை அப்படிப் கடந்துவிட்டால் எந்த அரசியல்வாதி செய்யும் தவறை நாம் கண்டுகொள்ளாதிருக்க வேண்டும்.
அடம் பிடித்து இடம் பெற்று அடக்கம் செய்த கலைஞர் நினைவிடத்தில் எ.வ.வேலு தலைமையில் நடந்த ” பஜனை ” பெரியார் பாசறையில் பயின்ற பகுத்தறவு பகலவனுக்கு பாேய் சேர்ந்திருக்குமா …? இனி பகுத்தறிவு பஜனைகளை அதிகம் எதிர்பார்க்கலாமாே … ? தினமலரின் எண்ணம் ஈடேறினாலும் ஆச்சர்யமில்லை … ! என்ன ஒரு அருமையான பயிற்சி பெற்ற பஜனை காேஷ்டிக்கு ……?
மாண்பு மிகு எ.வ.வேலுவின் – லேட்டஸ்ட் எடிஷன் ஜிமிக்கி கம்மல்
hint கொடுத்ததற்கு நன்றி செல்வராஜன் சார்.