…
…

..
“அன்று பராசக்தி…
இன்று ‘பல்டி’யே சக்தி! ”
கீழே இருப்பது – திரு.ப.திருமாவேலன் 2013-ல் எழுதிய ஒரு கட்டுரை…!
————————
‘ சாந்தா அல்லது பழனியப்பன்’ – இது கருணாநிதி போட்ட முதல் நாடகம்.
‘டெசோ அல்லது புஸ்ஸோ’ – இது கருணாநிதி நடத்த ஆரம்பித்திருக்கும்
இறுதி நாடகம்.
கோபாலபுரம் வீட்டு வாசலில் முதலமைச்சர் கார் வந்து நிற்க ஆரம்பித்தால், ‘தமிழினத் தலைவர்’ நாற்காலியைப் புறவாசலில் கொண்டுபோய்ப் போட்டுவிடுவதும், அந்தக் கார் காணாமல் போனால், தூசி தட்டி ‘தமிழினத் தலைவர்’ நாற்காலியை எடுத்துவந்து உட்காருவதும் கருணாநிதிக்குக் கைவந்த கலை. இந்த நூற்றாண்டின் வரலாற்றுச் சோகமான ஈழத் தமிழர் வாழ்க்கையைவைத்தும் அவர் இப்படி நாடகம் ஆடுவதைத் தான் பார்க்கச் சகிக்கவில்லை.
ஈழத்தில் கொடுமை நடந்து 100 ஆண்டுகள் ஆகிவிடவில்லை. மூன்று ஆண்டுகளே முழுமையாக முடியவில்லை. அந்த அவலம் அரங்கேறியபோது, தமிழ்நாட்டின் அதிகாரம் பொருந்திய நாற்காலியில் அமைச்சர்களோடு அமர்ந்து நாளொரு பாராட்டு விழா, நித்தம் ஒரு கொண்டாட்டம், கவர்ச்சி ஆட்டம் பாட்டங்களைக் கண்டுகளித்தவர் கருணாநிதி.
அப்போது அவரது கட்சியின் தயவை நம்பித்தான் மத்தியில் காங்கிரஸ்
அரசாங்கம் இருந்தது. மன்மோகன், சோனியா, பிரணாப் முகர்ஜி ஆகிய மூன்று அதிகார மையங்களிடமும் அரை மணி நேரத்தில் தொடர்புகொண்டு, தான் நினைத்ததைச் சொல்லும் சக்தி கருணாநிதிக்கு இருந்தது.
அப்போதெல்லாம் கேளாக் காதினராய், பாராக் கண்ணுடையவராய் இருந்துவிட்டு, ‘என்னது… சிவாஜி செத்துட்டாரா?’ என்று மறதி நாயகன்
கேட்பதுபோல, இப்போது ‘ஈழத்தில் எவ்வளவு அவலம் பார்த்தாயா
உடன்பிறப்பே!’ என்று கேட்பது சினிமாவுக்கு வேண்டுமானால் சிரிப்பைத்
தரலாம். அரசியலில் இதற்குப் பெயர் துரோகம்… பச்சைத் துரோகம்!
முதலமைச்சராக இருக்கும்போது ஒரு பேச்சு, எதிர்க் கட்சி ஆனதும்
மறுபேச்சு. நரம்பு இல்லாத நாக்கு எப்படி வேண்டு மானாலும் வளையும்
என்பார்கள். ஆனால், இப்படியெல்லாம் வளைய முடியுமா என்று
கருணாநிதியின் அறிக்கைகளைப் பார்த்து அதிர்ச்சியடையத்தான்
வேண்டும்.
கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக கருணாநிதி எதையெல்லாம்
சொல்லிவந்தாரோ, அதை எல்லாம் கடந்த இரண்டு, மூன்று வாரங்களாக
உல்டா அடிக்க ஆரம்பித்திருக்கிறார்.
”இலங்கையை சர்வாதிகாரப் பாதையில் செலுத்திக்கொண்டு இருக்கும்
ராஜபக்ஷேவை, மனித உரிமைகள், மனிதநேயம் ஆகியவற்றுக்கு எதிராகப்
பல்வேறு வகையான போர்க் குற்றங்களைப் புரிந்த சர்வதேசக்
குற்றவாளி என உலக நாடுகள் பார்க்கின்றன. அவர் இந்தப் பூனையும்
பால் குடிக்குமா என்று கேட்கும் அளவுக்குப் பேசி இருக்கிறார். சிங்களப்
பேரினவாதத்தின் சின்னம் ராஜபக்ஷே. நமது இந்தியப் பேரரசு
தற்போதாவது விழித்துக்கொண்டு ராஜபக்ஷே வின் சுய உருவத்தையும்,
குணத்தையும், நோக்கத்தையும் புரிந்துகொள்ள வேண்டும்” என்று
இப்போது அறிக்கைவிட்ட கருணாநிதி தான் –
– தமிழ்நாடு சட்டசபையில் ‘முதல்வராக’ இருந்தபோது, ”நாம்
தமிழர்களைக் காப்பாற்ற அவர்களுடைய வாழ்வாதாரத்தை வளமாக்கப்
பாடுபடப்போகிறோமா? அல்லது ராஜபக்ஷேவை குற்றவாளிக் கூண்டிலே
நிறுத்தப்போகிறோமா? வாழ்வாதாரத்தைப் பெருக்க வேண்டுமானால்,
இன்றைக்கு இருக்கிற சிங்கள அரசின் மூலமாகத்தான் அதைச் செய்ய முடியும்.
அங்கே இருக்கிற தமிழர்களுக்கு நன்மை செய்ய வேண்டுமானால், நாம் இங்கே ஆத்திரப்பட்டோ அல்லது வெறுப்பு உணர்வுடனோ அங்குள்ள சிங்கள இனத்தினரைப் பற்றி ஒன்றைச் சொல்லி, அது வேறு விதமான விளைவுகளை உண்டாக்கினால் நல்லதல்ல. இலங்கையிலே உள்ள தமிழனைக் காப்பாற்ற வேண்டுமானால், சிங்களவர்கள் கோபத்தை அதிகமாக ஆக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எதிலும் ஒரு நீக்குப்போக்கு வேண்டும்” என்று சொல்லிச் சமாளித்தவர்.
லட்சக்கணக்கான தமிழர்கள் கொத்துக் கொத்தாகக் கொலை செய்யப்பட்டது மே மாதம் 17-ம் தேதி. கருணாநிதி இப்படிச் சொன்னது ஜூலை 1.
லட்சம் பேர் செத்ததைப் பார்த்து ஆத்திரம் வரவில்லை. அனுதாபம் கூட
வரவில்லை. ‘கோபப்படாதே’ என்று ஈழ தாகத்தின் வேரில் வெந்நீர் ஊற்றினார். அதற்கு ஒரே காரணம்தான். அதையும் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றுக்குக் கொடுத்த பேட்டியில் அவர் ஒப்புக்கொண்டார். ‘இலங்கைப் பிரச்னையில் மத்திய அரசின் நிலைக்கு மாறாக நடந்திருந்தால், என் ஆட்சியையே இழக்க வேண்டி வந்திருக்கும்’ என்பது பட்டவர்த் தனமான அவரது வாக்குமூலம். ”பதவி என் தோளில் கிடக்கும் துண்டு, கொள்கைதான் வேட்டி” என்று பேசியது எல்லாம் ஊருக்குத்தானோ?!
”இலங்கை அரசு அறிவித்த போர் நிறுத்தத்தை உண்மை என்று நானும் நம்பி, இந்திய அரசும் அதை நம்பி எனக்குத் தெரிவித்ததால், உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றேன்” என்று புதுக்கதை விட ஆரம்பித்துள்ளார் கருணாநிதி.
அவரை இத்தனை சுலபமாக ஏமாற்ற முடியும் என்பதை அவரது எதிரிகளும் ஏற்க மாட்டார்கள். அவர் அப்போதும் இப்போதும் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றுகிறார் என்பதே உண்மை.
‘போரை நிறுத்திவிட்டோம்’ என்று ராஜபக்ஷே சொன்னதை, ப.சிதம்பரம்
நம்பலாம். ப.சி. சொன்னதை மு.க-வும் நம்பலாம். தவறில்லை.
”அன்றைய தினம்தான் எட்டு இடங்களில் கொத்துக் குண்டுகளைப் போட்டார்கள்” என்று விடுதலைப் புலிகளின் அரசியல் பொறுப்பாளர் நடேசன், பி.பி.சி. வானொலியில் அன்று இரவே கதறினாரே… அப்போது கருணாநிதி அளித்த பதில் என்ன? கருணாநிதியின் அறிவிப்பைப் பார்த்துதான் ‘பாதுகாப்பான இடத்துக்கு’
அப்பாவி மக்கள் இடம் பெயர்ந்தார்கள். அந்த இடத்தில் குண்டுகள் போடப்பட்டு கொலைகள் நடந்தன. கருணாநிதி சொன்னதை நம்பியதால் தமிழர்கள் உயிரைவிட்டார்கள். ஆனால், இப்போது கருணாநிதி அறிக்கைவிட்டு ஊதுபத்தி ஏற்றுகிறார்.
”நீங்கள் போர் நிறுத்தம் செய்துவிட்டதாகச் சொல்லி உண்ணாவிரதத்தை
முடித்துவிட்டீர்கள். ஆனால், அன்றைய தினம்கூட குண்டுபோட்டுள்ளார்களே?” என்று மனசாட்சிஉள்ள ஒரு பத்திரிகையாளன் கேட்டபோது,
”மழைவிட்டும் தூவானம் தொடர்வது வழக்கம்தான். இதைப் போலத்தான் இலங்கையிலே இப்போதும் தொடரும் விமானத் தாக்குதல்களைக் கருத வேண்டும்” என்று கருணாநிதி சொன்ன வாசகம்,
மிகக் கொடூரமான சினிமா வில்லன்கள்கூடப் பேசாத வசனம்.
உரிமை மனோபாவம் கொண்டவன் உடலில் உடைகூட இருக்கக் கூடாது என்று நிர்வாணப்படுத்திக் கண்ணைக் கட்டி சிட்டுக்குருவிகளைப் போல சுட்டுக் கொன்ற காட்சிகளைப் போர் முடிந்த நான்கா வது மாதம் சேனல் 4 வெளிப்படுத்தியது. ‘கொன்றுவிட்டார்கள்… கொடுமைப்படுத்தினார்கள்…
சித்ரவதை செய்தார்கள்’ என்று அதுவரை சொல்லிக் கொண்டுதான்
இருந்தார்கள். முதன்முதலாக அந்த வீடியோ காட்சிகள், அம்பலப்படுத்தி
அதிரவைத்தன. அப்போதும் ‘முதல்வர்’ கருணாநிதி, ”இந்தக் காட்சிகள் பழையவை. இப்போது எடுக்கப்பட்டவை அல்ல” என்று எல்லாம்
தெரிந்தவராகச் சொன்னார்.
ராஜ பக்ஷேவின் கண்துடைப்பு நாடகத்தில் தானும் ஒரு பாத்திரமாகப்
பங்கேற்கும் வகையில் 10 பேரை அனுப்பிவைத்தார் கருணாநிதி.
அவர்களை சென்னை விமான நிலையத்தில் வரவேற்கும் தினத்திலும்,
”போரின்போதுதான் சித்ரவதைகள் நடந்தன. இப்போது அல்ல. இப்போது
தமிழர்கள் யாரும் கடத்திச் செல்லப்படுவது இல்லை” என்றார்.
அதாவது, இலங்கை அரசாங்கத்தை, ராஜபக்ஷேவைக் குற்றம்சாட்டி யார் கேள்வி கேட்டாலும் கருணாநிதிக்குச் சுருக்கென்றது. அதனால்தான் ராஜபக்ஷேவும் மன்மோகனும் பதில் சொல்ல வேண்டிய கேள்விகளுக்கு எல்லாம் கருணா நிதியே வலியப் போய் பதில் சொன்னார்.
இந்த அதீத ஆர்வத்துக்கு ஒரு பின்னணி இருந்தது. இலங்கையில் நடந்த அனைத்தும் அவருக்கு முன்கூட்டியே சொல்லப்பட்டன.
”இறுதிப் போர் நடந்த காலகட்டத்தில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே அதிகாரப்பூர்வமற்ற முறையில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஒரு குழுவை அமைத்தோம். எங்கள் நாட்டின் சார்பில் நானும் பசில் ராஜபக்ஷே, லலித் வீரதுங்க ஆகிய மூவரும் இடம்பெற்றோம்.
இந்தியாவின் சார்பில் எம்.கே.நாராயணன், சிவசங்கர்மேனன், விஜய்சிங் ஆகிய மூவரும் இருந்தார்கள்” என்று கோத்தபய ராஜபக்ஷே சொன்னார்.
போர் நடந்த காலகட்டத்தில் கருணாநிதியை எம்.கே.நாராயணன் எத்தனையோ தடவை சந்தித்தார். இலங்கை போய்விட்டு இங்கே வருவார். அல்லது கருணாநிதியைப் பார்த்துவிட்டு அங்கே போவார்.
போரை வழி நடத்திய ஒருவர் தன்னை அடிக்கடி வந்து சந்திக்கிறாரே என்று அப்போதாவது கருணாநிதிக்குக் குற்றவுணர்ச்சி வந்திருக்க வேண்டும். ‘போர் நிறுத்தம் செய்வதற்கு இந்தியா முயற்சிக்காவிட்டால், உங்களுக்குத் தரும் ஆதரவை வாபஸ் பெறுவேன்’ என்று மானஸ்தர் சொல்லி இருக்க வேண்டும்.
”போர் நிறுத்தம் செய்யச் சொல்வது எங்களது வேலை அல்ல” என்று கருணாநிதி வீட்டு வாசலில் நின்றுகொண்டு அன்றைய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி சொன்னபோதாவது, கருணாநிதிக்கு ஆத்திரம் வந்திருக்க வேண்டும்.
”அங்கே போர் முடிவுக்கு வரப்போகிறது” என்று சந்தோஷ அறிவிப்பை
நாடாளுமன்றத்தில் பிரணாப் வெளியிட்டபோதாவது, கோபம் வந்திருக்க வேண்டும்.
”ராஜபக்ஷே என்ன முடிவெடுத்தாலும் இந்தியா வழக்கம்போல ஆதரிக்கும். இந்தியாவின் போரை நாங்கள் நடத்தினோம் என்று ராஜபக்ஷே சொன்னது ஒருவகையில் சரியானதுதான்” என்று சிவசங்கர் மேனன் சொன்னபோதாவது, அவமானம் வந்திருக்க வேண்டும்.
இத்தனை கழுத்தறுப்புகளையும் மறைப்பதற்கு டெசோ ஷோவை கருணாநிதி இப்போது ஆரம்பிக்கிறார்.
போர் உச்சகட்டத்தில் இருந்த போது, ”முதல்வர் கருணாநிதியின் உயிருக்கு விடுதலைப் புலிகளால் ஆபத்து” என்று சென்னை போலீஸ் கமிஷனரை வைத்து அறிக்கை விடவைத்து, முத்துக்குமார் உள்ளிட்ட 17 தமிழ்த் தியாகிகள் தங்களது தேகங்களை ஈழத் தாய்க்கு
அர்ப்பணித்தபோது வேடிக்கை பார்த்ததுடன், ”அவர்கள் ஈழத் தமிழர்களுக்காகத் தீக்குளிக்கவில்லை… பொண்டாட்டியிடம் தகராறு. அதனால் தீக்குளித்தனர்” என்று கொச்சைப்படுத்தும் காரியத்தை போலீஸ்காரர்களை வைத்து முடுக்கிவிட்டு,
தமிழ்நாடு ஒரே உணர்வில் இருக்கிறது என்பதைக் காட்ட கடையடைப்பு
நடத்தப் பட்டபோது, ”இது சட்டப்படி குற்றம். கடையை அடைக்கச் சொன்னால் தேசப் பாதுகாப்புச் சட்டப்படி கைது செய்வோம்” என்று மிரட்டல் விடுத்து,
பிரபாகரன் படத்தைப் பார்த்தாலே கிழிக்கும் வேலையை போலீஸாருக்குக் கொடுத்து… இப்படிச் செய்த அனைத்துப் பாவங்களுக்கும் இப்போது பரிகாரம் தேட நினைக்கிறார் கருணாநிதி.
சென்னையில் இருந்த இலங்கைத் தூதரக வட்டாரத்துக்கும் அன்றைய தி.மு.க. ஆட்சியின் போலீஸ் உளவுத் துறைக்கும் இருந்த பிரிக்க முடியாத பாசத்தை கருணாநிதி உணரத் தவறியதன் விளைவுதான்,
இன்று நித்தமும் உடன்பிறப்பு களுக்குக் கடிதம் எழுதியாக வேண்டிய அவஸ்தையைக் கொடுக்கிறது.
உயிரோடு வந்த பாட்டி பார்வதியை, அநாதையாக வானத்தில் திருப்பி அனுப்பிய சோகத்தை பேரன் பாலச்சந்திரன் படம் பார்த்து அறிக்கை வெளியிட்டுப் போக்கியாக வேண்டியிருக்கிறது. ”பாவிகளின் கொலை வெறிக்குப் பலியான பாலகன் பாலச்சந்திரன்” என்று இன்று கண்ணீர்க் கவிதை வடிப்பவர்,
”விடுதலைப் புலிகள் கல்லறைகள் கட்டுவதில் காலம் கழித்து விட்டார்கள்” என்று கிண்டல் அடித்ததும், ”இன்று அனைவரும் ஒன்று சேர்ந்து போராடுவோம்” என்பவர், அன்று, ”ஈழ ஆதரவாளர்கள் அனைவரும் கடல் வழியாகப் போய் போராட வேண்டியதுதானே. நான் கரையில் இருந்து கண்டுகளிப்பேன்” என்று வயிற்றெரிச் சலைக் கொட்டியதும் தமிழன் மறக்கக் கூடாத வாக்குமூலங்கள்.
ஊழல் வழக்கில் ஏ.சி முருகேசன் தன் கையைப் பிடித்துத் தூக்கியதால் ஏற்பட்ட சிவப்புக் காய்ப்பை 100 வீடியோ கேமராக்களுக்கு முன்னால் காட்ட வேண்டுமானால், பாளையங்கோட்டை சிறையில் பல்லி ஓடியதையே 50 ஆண்டுகள் சொல்ல முடியுமானால்,
வளரும் கருவை வயிற்றில் இருந்து எடுத்துப் பொசுக்கிய காட்டுமிராண்டிக் கூட்டத்தைப் பற்றி இன்னும் எத்தனை ஆண்டுகள் சொல்லித் தொலைத்தாலும் ஆத்திரம் அடங்காது.
அந்த சோகத்தில்கூட அரசியல் செய்ய நினைப்பது, அந்தக் கொடூரத்தை விடக் கொடூரமானது. காங்கிரஸை மிரட்டுவதற்கு, அல்லது காங்கிரஸ் தங்களை விரட்டிவிட்டால் ஈழ ஆதரவுக் கட்சிகளைக்கொண்ட கூட்டணி அமைப்பதற்கு, அதுவும் இல்லா விட்டால் ஈழப் பிரச்னையை எதிர் அணியினர் பயன்படுத்தாமல் இருப்பதற்கு… என்று சாவு வீட்டிலும் லாப நஷ்டங்களுக்கு, கடல் தாண்டிய சொந்தங்களின் சோகத்தை முதலீடு ஆக்குவது ஆபத்தானது.
தன்னுடைய கடந்த காலத் தவறுகளை மறைக்க இன்றைக்கு கருணாநிதிக்குத் தேவை முகமூடி. ஏற்கெனவே வீரமணி, திருமாவளவன் ஆகிய இருவரும் சிக்கிவிட்டார்கள்.
பெரியாரைக் காப்பாற்றுவதைவிட, அம்பேத்கர் புகழைப் பரப்புவதைவிட இவர்களுக்கு கருணாநிதியை நியாயப்படுத்துவதே முழு நேரத் தொழிலாக மாறிவிட்டது.
”ஓட்டுக்காக எவனும் எதையும் செய்வான். யார் காலையும் நக்குவான்.
இதற்கு யாரும் விதிவிலக்கு இல்லை !” என்று தந்தை பெரியார் சொன்னார். அதற்காக, ஈழத் தமிழர் பிணங்களையுமா?
————————————————
அண்மையில் தான் கவனித்தேன். ஜூனியர் விகடனில் ஆசிரியர் பெயரைக் காட்டும் இடத்தில் அதன் ஆசிரியராக இருந்த திரு. ப.திருமாவேலன் பெயரைக் காணவில்லை…
அடடா, மேற்படி கட்டுரை போல், எத்தனையோ உணர்ச்சி கொப்புளிக்க அரசியல் ” நேர்மைக் கட்டுரைகள் ” எழுதியவர் ஆயிற்றே…. ஏன் இப்படி சொல்லாமல்
கொள்ளாமல் போனார்…?
என்ன ஆயிற்று அவருக்கு…? என்று பல இடங்களிலும் கவலையோடு
தேடிக்கொண்டிருந்தேன்….
மிகுந்த சிரமங்களுக்குப்பிறகு இறுதியாக கண்டுபிடித்தேன் – அவர் இப்போது எங்கே இருக்கிறாரென்று…. எங்கே தெரியுமா….?
எனக்கு மயக்கம் வராத குறை….
கொஞ்ச நேரம் போகட்டும்….
நீங்கள் அதிர்ச்சிக்கு தயாரான பிறகு பின்னூட்டத்தில் சொல்கிறேன்…
அதற்கு முன்னதாக, நண்பர்கள் யாருக்காவது தெரிந்திருந்தாலும்
சொல்லலாம்….!!!
———————————————————————-
பிற்சேர்க்கை –
நண்பர் மணி சஸ்பென்சை உடைத்து விட்டார்…!
மேற்படி கட்டுரையை மட்டுமல்ல… கீழ்க்கண்ட கட்டுரையின் உள்ளடக்கத்தையும் எழுதிய மாபெரும் மனசாட்சி எழுத்தாளர் –
2011-ல் – கலைஞரின் குடும்ப ஆட்சி பற்றி வெளிவந்த ஆ.வி. கட்டுரை இப்போது எந்த அளவிற்கு பொருந்தும்…?
………….
இவ்வளவு அழகாக, தெளிவாக, விரிவாக – கலைஞரைப்பற்றி விமரிசித்த திரு.திருமாவேலன் அவர்கள் தற்போது இருக்கும் இடம் –
– கலைஞர் தொலைக்காட்சி –
பொறுப்பு – நிர்வாகி….!!!
தமிழ் உள்ள வரையிலும், தமிழகத்தில் அரசியல் என்பது உள்ள வரையிலும், மனசாட்சியுள்ள அந்த மாபெரும் புரட்சி எழுத்தாளரின் புகழ் மங்காதிருக்கட்டும்.
வெல்க அவரது திறமை புரிந்து, அவரை நன்கு அறிந்து … அதற்கு – உரிய விலை கொடுத்து வாங்கிய புத்திசாலி பெருமக்கள்…!!!
.
————————————————————————————————————–



கே.எம்.சார்,
சன் டிவி அல்லது
கலைஞர் டிவி ?
காசு கொடுத்தால், சில கழிசடைகள் என்ன வேண்டுமானாலும் செய்யும்.
அதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்.
காசு இருப்பவர்களுக்கோ வெட்கமும் இல்லை ; மானமும் இல்லை.
இவன் நம்மைப்பற்றி என்னவெல்லாம் எழுதினான் என்கிற விவஸ்தை கூட கிடையாது. சீ – நாயும் பிழைக்கும் இந்த பிழைப்பு.
இந்த ஆசாமிக்கு தான் நாணமே இல்லை.
காசு கொடுத்தால், யாரையும் தாக்கி எழுதவும்,
தாக்கப்பட்ட ஆசாமியே காசு கொடுத்தால், அவர் காலை கழுவி விடவும் தயார்.
ஆனால் ஸ்டாலினுக்கு என்ன ஆச்சு ?
தன் தந்தையை இவ்வளவு கேவலமாக பழித்து எழுதி ஒரு ஆசாமியை
தன் நிர்வாகத்தில் வைத்துக் கொள்ள அவருக்கு என்ன அவசியம் வந்தது ?
இவரை விட்டால் அவர்களுக்கு வேறு ஆட்களெ இல்லையா ?
அல்லது இவரிடம் எதாவது விஷயம் மாட்டி இருக்கிறதா ?
பிங்குபாக்: உண்மை, நேர்மையின் அவதாரமான, இதை எழுதியவர் – இன்று எங்கிருக்கிறார் தெரியுமா…? – TamilBlogs
https://www.savukkuonline.com/14779/
இந்த சவுக்கு பதிவில் திருமாவேலன் கலைஞர் செய்தி சேனலுக்குள் எவ்வாறு நுழைந்தார் என்பதை விளக்குகிறது ..: —
// ஸ்டாலின் என்ன பேசுகிறார், யாரை சந்திக்கிறார், என்ன முடிவெடுக்கிறார் என்ற அனைத்தையும் வேலு முன்னதாகவே தெரிந்து கொள்கிறார். ஏறக்குறைய 24 மணி நேரமும் ஸ்டாலினை கண்காணிப்பிலேயே வைத்திருக்கிறார் வேலு. வேலுவின் கைப்பாவையாகவே ஸ்டாலின் மாறி விட்டார் என்றே கூறலாம்.
தற்போது கலைஞர் செய்தி சேனலையும் கைப்பற்றி விட்டார் மண்டக்கசாயம். கலைஞர் நியூஸ் செய்திச் சேனலை புதுப்பிக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்படுகிறது. அதற்காக ஒரு புதிய செய்தி ஆசிரியரை தேடிக் கொண்டிருந்தார்கள். இதில் இருவரின் பெயர்களை இறுதி செய்து விட்டதாக தகவல்கள் கூறுகின்றன. அந்த நேரத்தில் இறுதி செய்யப்பட்ட அந்த பெயர்கள் பரிசீலிக்கப்படாமல் அப்படியே விடப் படுகின்றன.
தற்போது ஜுனியர் விகடனிலிருந்து கலைஞர் நியூஸ் செய்தி சேனலின் ஆசிரியராக பொறுப்பேற்றிருப்பவர், பா. திருமாவேலன். மிகச் சிறந்த பத்திரிக்கையாளர். திராவிட அரசியலை இவரைப் போல அலசுபவர்களை பார்க்கவே முடியாது. சிறப்பான எழுத்தாளர். இதில் விசேடம் என்னவென்றால், ஜுனியர் விகடனில் சேர்வதற்கு முன்னதாக, எவ.வேலு நடத்திய தென் திசை பதிப்பகத்தில் வேலை பார்த்தவர்தான் திருமாவேலன். தற்போது திருமாவேலன் மூலமாக கலைஞர் நியூஸ் செய்தி சேனலையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டார் வேலு. // ….. அய்யா ….! நல்ல வருமானத்தாேடு பிழைப்பு நடக்க எதுவும் செய்வார்கள் …எங்கேயும் அண்டி அடிவருடுவார்கள் …!!!
செல்வராஜன்,
நல்ல தகவலை தேடித்தந்திருக்கிறீர்கள்…. மிக்க நன்றி. திருவாளர் அமாவாசை வேலுவைப் பற்றி, ஓரளவு ஏற்கெனவே தெரியும் என்றாலும் கூட – இத்தனை விவரங்களை நான் இதுவரை வேறு எங்கும் பார்க்கவில்லை…seems to be a very dangerous personality.
திரு.ஸ்டாலினைப்பற்றி என்ன சொல்வது, எப்படி சொல்வது என்று புரியவில்லை…. எப்படியாவது முதலமைச்சர் ஆகி விட வேண்டும் என்பதைத்தவிர வேறு எந்தவித சிந்தனையும் அவருக்கு இல்லையென்றே தோன்றுகிறது.
கொஞ்ச நாட்களுக்கு – மறைந்தவர் பற்றியோ, அவரது கட்சியைப்பற்றியோ விமரிசனம் எதுவும் செய்ய வேண்டாம் என்று பண்பாடு காரணமாக மௌனமாக இருந்தது தவறு என்று இப்போது பலருக்கும் தோன்றும் என்று நினைக்கிறேன்…. என்னைப்போலவே…!
இருந்தாலும், பலருக்கு, இந்த மாயையிலிருந்து வெளிவர இன்னும் நீண்ட நாட்கள் பிடிக்கலாம்.
உங்கள் பயனுள்ள பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
இப்போது நடப்பது கருணாநிதி அவர்களை புனிதராக ஊதிப் பேருக்கும் வேலை. எல்லா மீடியாக்களிலும் ஒரே சமயத்தில் நடை பெற்றுக்கொண்டிருக்கிறது. இப்போது வரும் கட்டுரைகளை பார்த்தால், அவரை காந்தி ரேஞ்சுக்கு உயர்த்தி எழுதுகிறார்கள்.
நேற்று பார்த்தால், ஒரு நாளிதழில் அவர் பெயரில் கார் இல்லை. வீடு இல்லை. என்று எழுதியிருக்கிறது! எந்த அளவு அவர் குடும்பம் சொத்து சேர்த்தியிருக்கிறது என்பது எல்லாருக்கும் தெரியும். வெகு சமீப காலம் வரை அதை பற்றி விரிவாக பற்பல கட்டுரைகள் வந்திருக்கிறது. இப்போது என்னவென்றால், இப்படி!
அவர் இமேஜை பேருக்கும் வேலையை ஒரு எலெக்ஷன் மேனேஜ்மென்ட் கம்பெனியிடம் கொடுத்து இருக்கிறார்கள் என நினைக்கிறேன். அதனால்தான் இப்படி ஒரு கோ-ஆர்டினேட்டட் அட்டாக்!
bandhu,
நீங்கள் சொல்வது சரியே.
கலைஞரின் மறைவை பயன்படுத்திக்கொண்டு ( taking advantage of his death …) பிரம்மாண்டமான ஒரு
புகழ் மலை, பிம்பம் உருவாக்கப்படுகிறது. திமுகவின் கடந்த காலம் அதனடியில் ஆழப் புதைக்கப்படுகிறது என்பது தெரிகிறது.
2014-ல் மோடிஜியின் டீம் வேலை செய்ததைப் போல, திமுகவில் இப்போது ஒரு டீம் வேலை செய்வதாகத் தெரிகிறது….
ஹிந்து ராம் முதற்கொண்டு – பல செய்தியாளர்களும், மீடியாக்களும் – இந்த டீமி’ல் அடக்கம் என்றும் தெரிகிறது.
ராம் இதுவரை 3 நினைவுக் கூட்டங்களில் கலந்து கொண்டுள்ளார்…!
பணம் இருந்தால் – எதையும், யாரையும் வாங்கலாம் என்பதற்கு மேலேயுள்ள இடுகையே சாட்சி…….
நடக்கட்டும்….!!!
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
ஹிந்து ராம் – ஏதோ இவரை புத்தரின் அவதாரமாக எண்ணி எழுதுகிறீர்களே. எனக்கென்னவோ திருமாவேலனுக்கும் இவருக்கும் வித்தியாசம் இருக்கிறதா என்றே சந்தேகம். எல்லாம் காசு செய்யும் வேலை (கனிமொழி இந்துவில் பணிபுரிந்ததையும் இத்துடன் முடிச்சிடாதீர்கள் ஹாஹா ஹா)
இல்லை தமிழன்…
இவரைப்பற்றி நான் நன்கு அறிவேன்.
கலைஞர், இவருக்கு “மவுண்ட் ரோடு மஹாவிஷ்ணு” என்று பெயர் வைத்த காலத்திலிருந்தே அறிவேன்…
முற்போக்காளராக, இடதுசாரி சிந்தனையாளராக – நடித்துக் கொண்டிருக்கும் ஒரு சுயநலவாதி…
ஹிந்து நாளிதழின் தொழிற்சங்கம் துவக்க காலத்திலிருந்தே, திமுகவால் தான் இயக்கப்படுகிறது….
அடுத்ததாக இவருக்கு திருவாளர் ஸ்டாலின் தயவு தேவை… அதற்குத்தான் இந்த நாடகங்கள் எல்லாம்..
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
கா.மை. சார்… ஓரிரு கட்டுரைகளை வைத்து நீங்கள், திருமாவேலன் நியாயமான பத்திரிகையாளர் என்ற முடிவுக்கு எப்படி வந்தீர்கள்? அந்தக் கட்டுரைகள், விகடன் அதிபரால் இப்படி எழுதவேண்டும் என்று அந்த சமயத்துக்கேற்ப வந்த கட்டுரைகளாக இருக்கலாம் இல்லையா? நான் அப்படித்தான் நம்புகிறேன். விகடன் பதிப்பான, திருமாவேலன் அரசியல் கட்டுரைகள் கொண்ட புத்தகத்தைப் படித்தபோது, இப்படி கருணாநிதிக்கும் திமுகவுக்கும் ஜால்ரா போடுகிறாரே இந்த நடுநிலை என்ற பசுத்தோலைப் போர்த்திக்கொண்ட பத்திரிகையாளர் என்றுதான் தோன்றியது. புத்தகத்தின் பல்வேறு கட்டுரைகளின் நம்பகத் தன்மையே அதனால் இல்லாமல் போய்விட்டது. அதனால் திருமாவேலன் திமுகவின் ஸ்லீப்பிங் செல், விகடனில் இருந்தபோது என்றுதான் எல்லோரும் புரிந்துகொள்ளவேண்டும்.
50,000 கோடி ரூபாய் அறக்கட்டளையில் இருக்கிறது. அதனை வைத்து எல்லாத் தொலைக்காட்சிகளையும் விலைக்கு வாங்கியிருக்கின்றனர். நீயா நானாவில், கருணாநிதியின் புகழாரத்தைப் பற்றிய நிகழ்ச்சி. இந்தத் தொலைக்காட்சிகளுக்கு வெட்கம் சூடு சுரணை எதுவும் இல்லை. இவங்களைப் பற்றித்தான் நீங்கள் மிக உயர்ந்த அபிப்ராயம் கொண்டிருக்கீங்க.
கருணாநிதி, தமிழக அரசியல் படுபாதாளத்துக்கு அனுப்பியதில் முதன்மையானவர். சொந்த வாழ்க்கையில் ஒழுக்கக்கேட்டுடன் இருந்தவர் மட்டுமல்ல, அதனை சட்ட மன்றத்தில் மறைக்க முயன்றவர். ஊழலின் ஊற்றுக்கண். எதை எடுத்தாலும் லஞ்சம், ஏமாற்றிக் கொள்ளையடிப்பது, மாஃபியா போன்று கமிஷன் அடிப்பது என்று எல்லா விதத்திலும் சட்டத்தை ஏமாற்றி பல்லாயிரம் கோடி ரூபாயை அடித்தவர். இல்லாவிட்டால் எங்கிருந்து அவரது உறவினர் ஒவ்வொருவர் பேரிலும் 500+ கோடி ரூபாய் சொத்திருக்கும்? எந்தத் தொழில் செய்து சம்பாதித்தனர்? (இதில் அன்புமணியும் ஒழுங்கில்லை. அவர் சொத்து ரியல் எஸ்டேட்டில் சம்பாதித்ததாம். கேட்கிறவன் கேணையன் என்று நினைத்துக்கொண்டிருக்கின்றனர் இந்த அரசியல்வாதிகள்). கருணாநிதி ஒரு தீய சக்தி என்று எம்.ஜி.யார் சொன்னதில் ஒரு தவறும் இல்லை. (கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது, லாட்டரிச் சீட்டு மார்ட்டின் தயாரித்த ‘இளைஞன்?’ படத்துக்கு கதை வசனத்துக்காக 50 லட்சம் சம்பளம் வாங்கினார். அதன்மூலம் லாட்டரிச்சீட்டு ஊழலுக்கு வழிவகுத்து மார்ட்டினைத் தப்பிக்க வைத்தார். கதாநாயகனுக்கே 50 லட்சம் சம்பளம் இல்லாதபோது கிம்பளம் சட்டப்படி பெற்றுக்கொண்டவர் முதலமைச்சர் கருணாநிதி. 2ஜி, தொலைக்காட்சி ஊழல், சன் தொலைக்காட்சியின் ஷேர், இந்தியா சிமிண்ட்ஸ் தொடர்பு என்று ஏகப்பட்ட ஊழல் அவர்மீது சொல்லலாம்). கருணாநிதிக்கு பாரத ரத்னா கொடுக்க குழு அமைத்ததைப் போன்ற அபத்தம் இந்தியாவில் நிகழ்ந்ததில்லை. என்னைக் கேட்டால், இதைவிட, பாரதரத்னா இதுவரை பெற்றவர்களை (சச்சினைத்தவிர) அவமானப்படுத்த முடியாது.
KM Sir,
One doubt….. before that I want to clarify that I am not a dmk or mk or Stalin follower…..
the intensity shown by your words(of course not in this post) against Karunanidhi does not match with the intensity of words against Jayalalitha….. Not even the number of essays(against or criticizing each of them) would match….. why so ?
Thanks.