…
…
ஜூனியர் விகடனில் வந்த சில “சங்கதி”களை வைத்து,
தினமலர் தன் பங்கிற்கு இன்னும் கொஞ்சம் “சங்கதிகளை” சேர்த்து
“ரீலா” அல்லது “ரியலா” என்று கேட்க வைக்கும் ஒரு கூட்டணியை
உருவாக்கி இருக்கிறார்கள்.
” மரியாதையாக என்னுடன் கூட்டணி வைத்துக் கொள்ளுங்கள்
இல்லையேல், திமுகவை உடைத்து, திருவாளர் அழகிரியுடன் இணைந்து
நாங்கள் புதிய திமுக+பாஜக கூட்டணியை உருவாக்குவோம் ” என்று
திரு.ஸ்டாலினிடம், பாஜக தலைமை கூறி இருப்பதாக ரீல் அல்லது
ரியல் செய்தி உருவாக்கப்பட்டுள்ளது.
தினமலரில் இன்று காலை வெளியான அந்த கட்டுரையை கீழே தந்திருக்கிறேன்.
அதற்குள் போவதற்கு முன்பாக –
– தத்துவங்களை,
கொள்கைகளை – அடிப்படையாக வைத்து
கூட்டணிகள் உருவானது துவக்க காலம்.
– கொள்கைகளில் வேறுபாடுகள் இருந்தாலும்,
“பொது செயல் திட்டம்” (common agenda) ஒன்றினை
உருவாக்கி, கூட்டணிகள், கூட்டணி அரசுகள்
உருவானது அதன் அடுத்த கட்டம்….
– கொள்கையாவது, பொது கோட்பாடாவது –
அதிக பட்சம் சீட்’டுகளை பெற வேண்டும்…
அதிகாரத்தைப் பெற வேண்டும் என்கிற – ஒரே லட்சியத்திலாவது
இணைந்து சம்பந்தப்பட்ட கட்சிகள் கூட்டு வைத்துக் கொண்டது –
அதற்கும் அடுத்த கட்டம்….
– மரியாதையாக கூட்டணி வைத்துக் கொள்கிறாயா அல்லது
உன் கட்சியை உடைக்கட்டுமா…? என்று மிரட்டி கூட்டணிகளை
உருவாக்குவது அதற்கும் அடுத்த கட்டம்…!!!
– ஒரு விஷயம்….
இந்த காலத்து இளைஞர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை…
கட்சிகளை உடைக்கும் வேலையை தமிழ்நாட்டில் முதல் முதலில்
துவக்கியது கலைஞர் தான் என்பது… அதற்கு முதல் பலியாக இருந்தது –
அந்த காலத்து பா.ம.க….!!!!
காலம் இப்போது திரும்புகிறது….
ஒருவழியாக, அதிமுகவை உடைத்து சிதற வைத்து விட்டு,
திமுக-வின் பக்கம் திரும்பி இருக்கிறது பாஜக….
இன்று அரசியலில் –
எந்த கொள்கையும் இல்லை…
கோட்பாடுகளும் இல்லை…
லட்சியங்களும் இல்லை…
ஒரே ஒரு குறிக்கோள்…… ஒரே ஒரு லட்சியம் மட்டும் தான் –
எதைச் செய்தாவது ஆட்சியை, அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும்…
அதற்காக எதைச் செய்தாலும் பரவாயில்லை…
என்ன விலை கொடுத்தாலும் பரவாயில்லை…. என்பது தான் அது…!
தமிழக மக்கள்… இந்திய மக்கள்… ஒரு மிக மிக மோசமான அரசியல்
சூழ்நிலையில், காலகட்டத்தில் – பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்
என்பதற்கு இது இன்னொரு உதாரணம்….

—————————————————————————-
தினமலர் நாளிதழில் இன்று வெளியாகியுள்ள ஒரு செய்திக்கட்டுரை….
(http://www.dinamalar.com/news_detail.asp?id=2083448)
———————
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 18,2018,
தி.மு.க.,வுடன் கூட்டணி: விரும்புது பா.ஜ., மேலிடம் ஸ்டாலின் மறுத்தால் அழகிரியை ஆதரிக்க திட்டம்
வரும் லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் இடம் பெற, பா.ஜ.,
மேலிடம் விருப்பம் தெரிவித்துள்ளது. தி.மு.க., தரப்பில், இன்னும், ‘கிரீன்
சிக்னல்’ தரப்படவில்லை.
இதனால், ‘மாஜி’ மத்திய அமைச்சர் அழகிரியை, பகடைக்காயாக பயன்படுத்தி, தி.மு.க.,விற்கு நெருக்கடி கொடுக்க, பா.ஜ., மேலிடம் திட்டமிட்டுள்ளதாக, தி.மு.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.தி.மு.க., தலைவர் கருணாநிதி, உடல் நலக்குறைவு ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டதும், ‘அவருக்கு வேண்டிய உதவிகள் செய்ய தயாராக உள்ளோம்’ என, பிரதமர் மோடி அறிவித்தார்.
கருணாநிதி உடல் நலம் குறித்து, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மற்றும் மத்திய அமைச்சர்கள், பா.ஜ., தலைவர்கள், மருத்துவ மனை வந்து விசாரித்தனர்.
கருணாநிதி மறைவை, தேசிய துக்கமாக, மத்திய அரசு அறிவித்தது. லோக்சபா,ராஜ்யசபாவில், இரங்கல் தெரிவித்து, சபைகளும் ஒத்தி வைக்கப்பட்டன. இப்படி, கருணா நிதியின் மறைவுக்கு முன், பின், தி.மு.க.,விடம் மத்திய அரசு நெருக்கத்தை காட்டி வருகிறது.
அபிமானம்
வரும், 30ம் தேதி, சென்னை, நந்தனம், ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில்
நடக்கவுள்ள கருணாநிதி புகழஞ்சலி கூட்டத்திற்கு, பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதில்,அமித் ஷா பங்கேற்றால், தி.மு.க.,தொண்டர்களிடம், பா.ஜ., மீதான அபிமானம் உருவாகும்.மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு,தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின், மகளிர் அணி செயலர் கனிமொழி ஆகியோர், டில்லி சென்று, அஞ்சலி செலுத்தினர்.
வாஜ்பாய் மறைவுக்கு முன், ‘அவர் நலம் பெற வேண்டும்’ என, ஸ்டாலின், டுவிட்டரில் பதிவு செய்திருந்தார்.இந்நிலையில், லோக்சபா தேர்தலில், தி.மு.க., வுடன், பா.ஜ., கூட்டணி அமைத்து போட்டியிட்டால்,
30 முதல், 37 தொகுதி கள் வரை வெற்றி பெறலாம் என, மத்திய உளவுத் துறை கணித்துள்ளது.
அதாவது, லோக்சபா தேர்தலில் பதிவாகும் மொத்த ஓட்டுகளின் சதவீதத்தில், ஆளுங்கட்சி என்ற அடிப் படையில், அ.தி.மு.க.,வுக்கு, 25 சதவீதம்; தினகரன் கட்சிக்கு, 10 சதவீதம் கிடைக்க வாய்ப்புள்ளது.
தி.மு.க., – பா.ஜ.,கூட்டணிக்கு, 40 சதவீதம் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்ற கணக்கை, மத்திய உளவுத் துறை, பா.ஜ., மேலிடத்தில் வழங்கிஉள்ளது.
தமிழகத்தில், தி.மு.க., வுடன், பா.ஜ., கூட்டணி அமைத்தால், தேசிய அளவில், மாநில கட்சிகளின் மத்தியில் அதிர்வலைகளை உருவாக்கும்.
மற்ற மாநிலங்களிலும் உள்ள கட்சிகளும், பா.ஜ., வுடன் கூட்டணி அமைக்க தயாராகும் என, பா.ஜ., மேலிடம் கருதுகிறது.
தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:
குட்டையை குழப்பி, மீன் பிடிப்பது போல, திராவிட கட்சிகளில் உருவாகும் பலவீனத்தை பயன்படுத்தி, தமிழகத்தில் வலுவாக காலுான்ற, பா.ஜ., மேலிடம் காய் நகர்த்த பார்க்கிறது.
அ.தி.மு.க., பலவீனப்படும் வகையில், முதல்வர் பழனிசாமி, தினகரன், தீபா, திவாகரன் என, நான்கு அணிகளாக பிரிந்து கிடக்கின்றன.ஜெயலலிதா உயிரோடு இருக்கும் போது, பா.ஜ., வுக்கு கிடைக்கக் கூடிய நடுநிலையான, ஹிந்து மக்களின் ஓட்டுகள், ஜெயலலிதா என்ற பிம்பத்திற்காக பிரிந்து சென்றது.
இதனால், தமிழகத்தில், பா.ஜ.,வினரால் தனிதன்மை ஓட்டுகளை அறுவடை செய்ய முடியவில்லை. தற்போது, ஜெயலலிதா மறைந்து விட்டதால், நடு நிலையான ஹிந்து மக்களின் ஓட்டுகள், இனி, பா.ஜ.,விற்கு அல்லது நடிகர் ரஜினி கட்சிக்கு பிரிந்து செல்ல வாய்ப்பு உள்ளது.
அதே போல், கருணாநிதி மறைவு காரணமாக, தி.மு.க.,விலும் பிளவு ஏற்படுமா என்ற கேள்விஎழுந்துள்ளது. அதற்கு கட்டியம் கூறும் வகையில், தி.மு.க.,வில் இருந்து நீக்கி வைக்கப் பட்டுள்ள, அழகிரியின் செயல்பாடுகளும் உள்ளன.
சென்னை, அறிவாலயத்தில் நடந்த, தி.மு.க., செயற் குழு கூட்டத்தில், முன்னாள் மத்திய அமைச்சரும், தி.மு.க., துணைப் பொதுசெயலருமான
சுப்புலட்சுமி ஜெகதீசன் பேசுகையில், ‘தி.மு.க.,வை இரண்டாக உடைக்க,மத்திய அரசு சதி செய்கிறது’ என்றார்.அவரது பேச்சை, தி.மு.க.,
தரப்பில் யாரும் மறுக்கவில்லை. ஆனால், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ‘மத்திய அரசு, எந்த கட்சியையும் உடைக்கும்
வேலையில் ஈடுபடவில்லை’ என, பதிலடி கொடுத்தார்.
தி.மு.க.,வுடன் கூட்டணி வைக்க, பிரதமர் மோடி விரும்புகிறார்.
ஆனால், ஸ்டாலின் விரும்பவில்லை.அதற்கு காரணம், தி.மு.க.,வின்
ஓட்டு வங்கியாக கருதப்படும், சிறுபான்மையினரின் ஓட்டுகளை இழக்க
நேரிடும்.
கருணாநிதி உயிருடன் இருக்கும் போது, பா.ஜ., கூட்டணி ஏற்பட்டால்,
அவர், சிறுபான்மை மக்களையும், அந்த கூட்டணியை ஏற்றுக் கொள்ள
வைப்பார். அதாவது, ‘என்னை மீறி, பா.ஜ., மேலிடம்,
சிறுபான்மையினருக்கு பாதகமாக நடக்காது’ என்ற, உறுதிமொழியை
தருவார். ஆனால், ஸ்டாலினால் அப்படியொரு உறுதிமொழி அளிக்க
முடியாது. அவர் தலைமை, இன்னும் வெற்றியை தரவில்லை.
பகடைக்காய்
எனவே, தி.மு.க., – பா.ஜ., கூட்டணி தோல்வி அடைந்தால், தி.மு.க.,வுக்கு
எதிர்காலம் இருக்காது என்பது மட்டுமின்றி, தன்னுடைய அரசியல் வாழ்க்கையும் கேள்விக்குறியாகி விடும் என்ற அச்சம், அவருக்கு இருப்பதால் தான், கூட்டணி குறித்து, எந்த முடிவும் சொல்ல முடியாமல், குழப்பத்தில் இருக்கிறார்.
பா.ஜ., கூட்டணி குறித்த முடிவுக்கு, ஸ்டாலின் பச்சைக் கொடி காட்டவில்லை என்றால், அழகிரியை பகடைக்காயாக பயன்படுத்தி, தி.மு.க.,வை பிளவுபடுத்தி,நெருக்கடி கொடுக்க, பா.ஜ.,மேலிடம் தயாராக உள்ளது. இவ்வாறு தி.மு.க., வட்டாரங்கள் கூறின.
.
————————————————————————————————————–
\



கே.எம்.சார்.
ஒரு மாறுதலாக; திமுகவும்(ஸ்டாலின்) , பாஜகவும் கூட்டு சேர வேண்டும் என்று தோன்றுகிறது.
அதன் பின், தமிழக கட்சிகள் எப்படி, எந்தெந்த பக்கம் தாவுகின்றன என்பதை
பார்க்க தமாஷாக இருக்கும். வாழ்த்தியவர்கள் எல்லாம் ஏசுவார்கள். ஏசியவர்கள் எல்லாம் கட்டியணைத்துக் கொள்வார்கள்.
இவர்கள் எப்படி அரசியல் பண்ணினாலும், நாட்டுக்கு எந்த நல்லதும் விளையப்போவதில்லை; அரசியலாவது கொஞ்சம் free entertainment ஆக இருக்கட்டுமே.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
மணி,
உங்கள் கனவு, ஆசை – நிறைவேற வாய்ப்புகள் பிரகாசமாகத் தெரிகின்றன…
எல்லாரும் இன்புற்றிருக்க வேண்டும் என்பதே என் ஆசை…
எனவே உங்கள் ஆசை நிறைவேற எனது வாழ்த்துகள்….. 🙂 🙂 🙂
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
@மணி – ஒவ்வொரு கட்சியின் தலைவர்களும் இதற்கு முன்னால் என்ன என்ன பேசினார்கள் என்று ஒரு இடுகை (அது பல இடுகைகளுக்கு வரும்) கா.மை சார் போட்டால், அது இவர்களின் சுயரூபத்தை வெளிப்படையாகக் காட்டிவிடும். கூடவே படமில்லாமல் இடுகைகள் சுவாரசியப்படாது என்பதால், கருணாநிதி, திகார் வாசலில் கனிமொழிக்காகக் காத்திருந்த படத்தையும், மெரினாவில் இணை, துணையுடன் கூலர்கள் துணையுடன் காற்று வாங்கிய படமும், கனிமொழி மற்றும் திருமாவளவன், ராஜபக்ஷேவைப் பார்த்து எல்லாப் பற்களையும் காண்பித்துச் சிரித்து அவரிடம் பரிசுப் பொருள் பெற்றுக்கொள்ளும் படங்களும் மிக அழகாக இருக்கும்.
கா.மை சாருக்காக நான் ஆரம்பித்துக்கொடுக்கிறேன்.
ராமதாஸ்-ஜெ. வைப் பார்க்கப்போனால், நமக்கு ஒன்றும் தரமாட்டார். கருணாநிதி, நாம் கட்டிய வேட்டியையும் உருவிவிட்டு அனுப்புவார்.
திருமாவளவன் – ராமதாஸ், தலித் மக்களின் முன்னேற்றத்துக்குப் பாடுபடுவதால், அம்பேத்கார் விருது கொடுக்கிறேன்.
கருணாநிதி காங்கிரஸ் கூட்டணியில்- பாஜக பண்டாரங்கள் பரதேசிக் கட்சி. நான் சிறுபான்மையினரின் காவலன்.
கருணாநிதி பாஜக கூட்டணியில் – வாஜ்பாய் மிக நல்ல தலைவர். பாஜக நல்ல கட்சி.
எழுத ஆரம்பித்தால் ஏகப்பட்டது எழுதலாம். அதுவும் அவர்கள் சொன்னதை அதேபோல் போட்டால், விமர்சனம் தளத்தில் நகைச்சுவை குறைவு என்ற குறையை உடனடியாகப் போக்கிவிடலாம். ஹா ஹா ஹா.
பிங்குபாக்: ஜூ.வி.யும், தினமலரும் சேர்ந்து படைக்கும் – பாஜக + திமுக கூட்டணி…!!! – TamilBlogs
அழகிரியினால் ஒரு சேதமும் திமுகவுக்கு ஏற்படாது என்றே நான் நினைக்கிறேன் (ஏற்கனவே அழகிரியை கேடிகளுக்குப் பிடிக்காது. அதனால் சன் குழுமமும் ஸ்டாலினையே ஆதரிக்கும், ஸ்டாலின் weak என்று கருதுவதால், அதனை வைத்து பலன் அடையலாம் என்று). திமுக பாஜகவுடன் சேராது என்றே நான் நம்புகிறேன். சேர்ந்தால், பலனடைவது அதிமுக அல்லது தினகரனாக இருக்கும்.
அழகிரி, வெளிப்படையாக மிரட்டுவது பலனைத் தராது-அதாவது மாநில அளவில் பதவி வேணும், நிர்வாகிகள் என் கட்டுப்பாட்டில் என்று. இருக்கின்ற நிர்வாகிகள் ஸ்டாலினையே ஆதரிப்பார்கள் (எம்.ஜி.ஆர் செய்த ஒரு சிறிய தவறு போல.. அவர் திமுகவினர் எல்லோரும் கணக்குக் காண்பிக்கணும் என்றார். அதை விட்டுவிட்டு, கருணாநிதியை மட்டும் அவர் டார்கெட் செய்திருந்தால் விளைவுகள் வேறுமாதிரியாக இருந்திருக்கலாம்).
பாஜக எதனுடன் சேர்ந்தாலும் அதற்கு வாக்குகள் கிடைக்காது. ஹிந்து வாக்குகள், திமுக வெளிப்படையாக ‘சிறுபான்மையினர்’ என்று பேச ஆரம்பித்தால்தான் பாஜக வாக்கு வங்கி பெருகும்.
ஸ்டாலின், தைரியமாக, எல்லோரையும் கழற்றிவிட்டுவிட்டு (காங்கிரஸ் உள்பட), தனியாக நின்றால், வாக்குகள் சிதறுவதால், நிறைய சீட்டுகள் கிடைக்கும். இல்லாவிட்டால், அது பாஜக வளர்ச்சியில் கொண்டுபோய்விடும் (அதாவது மோடி அவர்களின் முகம், பாஜ + கூட்டுச் சேரும் கட்சியின் வாக்குகள் என்று. தனிப்பட்ட முறையில் பாஜகவுக்கு 3000 வாக்குகளுக்கு மேல் எந்தத் தொகுதியிலும் இருக்காது, பாராளுமன்றத் தொகுதியில் 20,000க்கு மேல் எங்கேயும் இருக்காது, இரு தொகுதிகளைத் தவிர. அங்கும் அவர்கள் தனியாக வெற்றி பெற சாத்தியமே இல்லை)
ஸ்டாலினுக்கு பிரச்சனை, கேடி பிரதர்ஸாலும், கனிமொழியாலும்தான் எதிர்காலத்தில் வர வாய்ப்பு இருக்கு. அதனால் இப்போ அமைதியாக இருந்து (இருவரையும் அரவணைத்து), அழகிரியைக் கழற்றிவிட்டால், பிறகு இவர்களைப் பார்த்துக்கொள்ளலாம்.
i guess that if DMK allies with BJP, whatever credibility that DMK has would be lost. Currently, it is only DMK that has a mass cadre based following in TN. No point in DMK pledging their support fo BJP as DMK wouldn’t get any undue leverage joining with BJP.
UNDUE LEVERAGE – இதை நீங்கள் விளக்கியிருக்கலாம். கருணாநிதி காலத்தில், மருமகனுக்கு பெரிய பதவி, அதனால் தங்களுக்கு தங்கள் குடும்பத்துக்கு மிகுந்த பண வரவு என்று ஆதாயங்கள் இருந்தன. அடுத்த காலத்தில், தன் பெண்ணுக்கு வரவு, 2 ஜி, மற்றும் பல பணவரவுகள் இருந்தன, கூடவே தன் பேரனையும் மந்திரியாக்கி அழகுபார்த்தார். இப்போ மத்திய அரசுல ஸ்டாலின் சேர்ந்தால், அதனால் அவருக்கு என்ன லாபம்? கனிமொழி வளர்ச்சி அடைவதனால் அவருக்கு பிரயோசனம் கிடையாதே.. உதயநிதிக்கு இன்னும் வருடங்கள் போகணும். தான் நல்ல பெயர் எடுக்கறதுக்குள்ள, மத்திய அரசில் சேர்ந்தால் தனக்குள்ள நல்ல பெயரை தங்கள் ‘அமைச்சர்கள்’ கெடுத்துடுவாங்க என்ற எண்ணம் அவருக்கு இருக்கும். அதனால் பாஜகவுடன் சேரமாட்டார். (சேர்ந்தபிறகு, ஜோக்கர்கள் வீரமணி போன்றோர் எப்படி அதை ஜஸ்டிஃபை செய்யப் பார்ப்பார்கள் என்று நினைக்கவே சிரிப்பா இருக்கு)
karunanithi , stalin. and udayanithi stalin, kanimozhi, maran bros if members of one family
rule Tamilnadu where is the question of democracy here? This is what dynastic rule which has
thrown out Congress out of power and brought in BJP. Kaliagnar used to say that DMK
is not SANKARAMADAM, but what is happening now condraticts his statement. It is time for us to bring in a new dispensation with both DMK and AIADMK are not part of that. Will Tamilnadu
do that? That is a millsion dollor question.