…
…



…
பொய்யான வாக்குறுதிகள், பொதுவாழ்வில் நடிப்பு, ஏமாற்றுதல்,
துரோகம் போன்ற ( அரசியல்வாதிகளுக்கே உரித்தான –
பொதுவான ) குணங்கள் எதுவுமின்றி தப்பிப் பிறந்த அரசியல்வாதி –
திரு.அடல் பிஹாரி வாஜ்பாய்…..
நம்மைப் பொறுத்த வரையில் பிரிவு துயர் தந்தாலும்,
அவரைப் பொறுத்த வரை – இது ஒரு விடுதலை…
தொடர்ந்து அவரை துன்புறுத்தும் நோய்த்தொல்லைகளிலிருந்து
நிரந்தரமானதொரு விடுதலை…. நிம்மதி…!
சென்று வாருங்கள் வாஜ்பாய் அவர்களே.
இந்த தேசத்தின் நன்றியுள்ள,
மனசாட்சியுள்ள – மக்கள் என்றும் உங்களை மறக்க மாட்டார்கள்.
.
——————————————————————————-



பிங்குபாக்: தப்பிப் பிறந்த ஒருவர் …… – TamilBlogs
அரசியல்வாதி ஆனாலும் கூட அனைவரும் நண்பர்களே.
வாஜ்பாய்க்கு எதிரிகளே கிடையாது (சு.சு.என்கிற சனியனைத்தவிர )
அரசியலை விட தேசம் முக்கியமானது என்று கூறியவர் …மரணத்திற்கு பயங்காெள்ளாதவர் …மரணத்தைப் பற்றி அவர் எழுதிய கவிதை :
மரணத்தின் வயது என்ன?
இரண்டு கணம் கூட இல்லை.
வாழ்க்கையின் தொடர்ச்சிகள்
இன்று நேற்று வந்தவை அல்ல.
வேண்டிய அளவு வாழ்ந்தாயிற்று.
மனதைத் தொலைத்து விட்டு
மீண்டும் நான் வருவேன்.
கேவலம் மரணத்திடம்
ஏன் பயம் கொள்ள வேண்டும்?
மரணமே!
திருட்டுத்தனமாக
பதுங்கிக்கொண்டு வராதே.
என்னை எதிர்கொண்டு
நேரடியாக பரிட்சித்துப் பார்.
இவ்வாறு மரணம் குறித்து வாஜ்பாய் எழுதியிருந்தார்….! நேரடியாக பரிட்சித்து பார்த்திருந்தாலும் கவிதையில் கூறியுள்ளபடி ” மீண்டும் நான் வருவேன் ” ..வாருங்கள் …மீண்டும் வாருங்கள் ..!!!
நமக்குத்தான் அதிருஷ்டம் இல்லை. வாஜ்பாய் அவர்கள் இரண்டாவது முறை பிரதமர் பதவிக்கு நிற்கமுடியாதது. ரொம்ப நியூட்ரல் பெர்சன். நல்ல பேச்சுத் திறமை. ஜெ. செய்த பெரிய அரசியல் தவறாக நான் நினைப்பது வாஜ்பாய் அரசைக் கவிழ்த்தது. (பிறகு அதற்காக வாஜ்பாய் அவர்கள் ஜெ. அரசை பழி வாங்கினார் என்பதையும் உணர்ந்திருக்கிறேன்). வாஜ்பாய் அவர்கள், குஜராத் கலவரங்களின்போது மோடி அரசைக் கடிந்துகொண்டார், மனசாட்சிக்கு விரோதமில்லாது நடந்துகொள்ளவேண்டும் என்று அறிவுறுத்தினார் என்பதும் நினைவுக்கு வருகிறது.