…
…
நேற்றிரவு, பாரதியின் வசன கவிதையொன்றை
படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இதை இப்போது தான் முதல் தடவையாகப் படிக்கிறேன்.
..

..
—————-
இவ்வுலகம் இனிது,
இதிலுள்ள வான் இனிமையுடைத்தது
காற்றும் இனிது,
தீ இனிது, நீர் இனிது, நிலம் இனிது.
ஞாயிறு நன்று, திங்களும் நன்று,
வானத்துச் சுடர்களெல்லாம் மிக இனியன.
மழை இனிது, மின்னல் இனிது, இடி இனிது,
கடல் இனிது, மலை இனிது.
காடு நன்று, ஆறுகள் இனியன,
உலோகமும், மரமும், செடியும், கொடியும்,
மலரும், காயும், கனியும் இனியன.
பறவைகள் இனியவை…
ஊர்வனவும் நல்லன..
விலங்குகளெல்லாம் இனியவை…
நீர்வாழ்வனவும் நல்லன.
மனிதர் மிகவும் இனியர்……
—————————
பாரதியை பார்க்கும்போது ….. கேட்க வேண்டும்
கடைசி வரியில் சொல்லி இருக்கிறீர்களே….
அவர்கள் எல்லாம் –
இப்போது எங்கே இருக்கிறார்கள் …? – என்று…. 🙂 🙂 🙂
———————————————————————–
இன்று சுதந்திரத் திருநாள்….
நாட்டு வாழ்த்தை பலர் குரலில் கேட்டிருக்கிறோம் …
எனக்குப் பிடித்த அமிதாப் பச்சனின் குரலில் …..
…
.
———————————————————————————
.
– சுதந்திர நாள் வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
15, ஆகஸ்ட், 2018



ஐயா எதுக்கு பாரதியிடம் அந்த கேள்விய கேட்கிறீங்க?
நேராக உங்கள் வீட்டிலுள்ள கண்ணாடி முன்னால் நின்று பாருங்க, இனிய மனிதர் தென்படுவார்.
இனிய சுதந்திர நன்னாள் நல்வாழ்த்துகள்
பிங்குபாக்: பாரதியின் வசன கவிதையொன்று ….!!! – TamilBlogs
// மனிதர் மிகவும் இனியர்……//
அந்த “இனியர்” பாரதி காலத்து மனிதர்களாக இருந்திருப்பார்கள்.
அவரோடேயே அவர்களும் போயிருப்பார்கள்;
இப்போது பாரதி இருந்திருந்தால்
அப்படியெல்லாம் பாட மாட்டார் !
இப்போதும் இருக்கிறார்கள் சிலர்;
அய்யா அஜீஸ் அவர்கள் சொன்னது போல் !