…
…

..
மேற்கத்திய கட்டடக் கலையைக் கொண்டு மும்பையில்
வடிவமைக்கப்பட்ட ‘விக்டோரியன் கோத்திக்’ என்னும்
பிரிட்டிஷ் கால கட்டடத்திற்கு தற்போது யுனெஸ்கோ அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.
..

..
ஏற்கெனவே, மும்பையில் உள்ள எலிபென்டா குகைகளுக்கு
கடந்த 1987-லும் –
..

..

சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்திற்கு ( விக்டோரியா
ரயில் நிலையம்)

2004-லும் யுனெஸ்கோ அங்கீகாரம் கிடைத்தது.
மும்பை – வர்த்தக நகரம் என்ற பெயருடன் கலாச்சார நகரம்
என்கிற பெருமையையும் சேர்த்து பெற்றிருக்கிறது. இதையும் சேர்த்து
இந்தியாவில் மொத்தம் 37 இடங்கள் யுனெஸ்கோ அங்கீகாரம்
பெற்றுள்ளன.
நவம்பர் 2017-ல் – பாரம்பரிய இசைக்கு சென்னை அளித்து வரும்
பங்களிப்பை கௌரவிக்கும் வகையில்,
கிரியேட்டிவ் சிட்டீஸ் பட்டியலில் சென்னையையும்
யுனெஸ்கோ அமைப்பு சேர்த்தது.

யுனெஸ்கோ அங்கீகாரம் கிடைத்திருப்பது – தகுந்த முறையில்
விளம்பரப்படுத்தப்பட்டால், வெளிநாட்டு சுற்றுப்பயணிகளின்
எண்ணிக்கையை ஓரளவு கூட்ட அது உதவி செய்யும்.
.
————————————————————————————————————-



பிங்குபாக்: மும்பையின் ‘விக்டோரியன் கோத்திக்’ கட்டிடத்திற்கு கிடைத்த யுனெஸ்கோ அங்கீகாரம்…. – TamilBlogs