…
…
தமிழகத்தின் மீடியா முக்கியஸ்தர்களை மோடிஜி சந்தித்து,
அளவளாவுவது போல் ஒரு புகைப்படம் சில வலைத்தளங்களில்
வெளியாகி இருக்கிறது…
தமிழகத்தின் எந்த செய்தி /தொலைக்காட்சி நிறுவனமும்
இதுவரை இந்த செய்தியையோ, புகைப்படத்தையோ
வெளியிட்டதாக தெரியவில்லை….
அவர்களால், இதுவரை – இது மறுக்கப்படவும் இல்லை…
தமிழக மீடியாவை மட்டும் வைத்து உண்மையிலேயே
இப்படி ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததா…?
சமூக வலைத்தளங்களில் உலவும் இந்த புகைப்படம்
உண்மையானதா…?
சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் – அமைப்பினர் –
இது குறித்த விளக்கத்தை உடனடியாக வெளியிடுவது –
பலரிடையே ஏற்பட்டுள்ள சந்தேகத்தையும், குழப்பத்தையும்
போக்க உதவும்.
செய்வார்களா…?
.
——————————————————————————————————



‘கழுகு’ வேலை பார்க்கிறீர்களே கா.மை. சார். இதில்தால் இந்தப் புகைப்படத்தைப் பார்க்கிறேன். எப்படி ஊடகங்களில் செய்தி வராமல் இருந்தது? (ஒருவேளை ஸ்டெர்லைட் ஆலை பற்றியதாக இருக்குமோ? அதனால் சீனாவிலிருந்து காப்பர் இறக்குமதி மிக அதிகமாகிவிட்டதாகவும் விலையும் கூடிவிட்டதாகவும் இன்னொரு செய்தியில் படித்தேன்)
வேறு ஒரு பத்திரிகையில் எடப்பாடி மீது ஆக்ஷன் (அவருக்கு நெருக்கமானவர்கள் மீது.. டெண்டர் விஷயமாக), ஓபிஎஸ் அவர்களை முதல்வராக்க அல்லது முன்னிலைப்படுத்தும் திட்டம், ரஜினி அதிமுகவிலா என்றெல்லாம் படிக்கிறேன். ஏதோ அஜெண்டா இருப்பதுபோல் எனக்குத் தோன்றுகிறது. நல்லதற்கா என்பதைக் காலம்தான் உணர்த்தும். கூடவே, ‘கூரை ஏறிக் கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுந்தம் போனானாம்’ என்ற பழமொழியும் நினைவில் வருகிறது.
பிங்குபாக்: இந்த “சந்திப்பு” ஏன் ரகசியமாக வைக்கப்பட்டிருக்கிறது….? – TamilBlogs
புதிய தலைமுறை கார்த்திகைச் செல்வன்,
குமுதம் வரதராஜன் ஆகியொரும் தெரிகிறார்கள்.
ஒருவேளை மத்திய அரசை ஆதரிக்கச் சொல்லி
‘அன்பாக’ ‘ முதுகில்தட்டி’ கேட்டுக்கொள்ளப்பட்டார்களோ ?
எந்த ஊடகங்களிலும் வெளிவரவே வராத ஒரு புகைப்படம் whatsup ல் பரவி வருகிறது என்றால், இது ஒரு photoshop என்பதை தைவர வேறு என்னவாக இருக்கும்.இப்படி ஒரு புகைப்படம், எந்த பத்திரிகைகளிலும் வெளி வராத பட்சத்தில், இந்த புகைப்படத்தை உங்களுக்கு அனுப்பியவருக்கு மட்டும் எப்படி கிடைத்தது.
whatsup ல் இப்பொழுதெல்லாம், கற்பனைக்கு எல்லை இல்லை என்பது போல் புகைப்படங்கள் உருவாக்க பட்டு, பகிர படுகின்றன.
meme ஸ் களின் மூலம் எவரையும் கொச்சைப்படுத்த வாட்ஸுப் தகவல்கள் உதவுகின்றன.
ஒரு வேளை அப்படியும் கூட இருக்கலாம்….
அதற்கும் வாய்ப்பு இருக்கிறது என்றும் தோன்றுகிறது.
(தகவல் ஊர்ஜிதப்படுத்தப்படும் வரையில்
படம் இங்கு வேண்டாமென்று நினைக்கிறேன்…)
ஆனால், இது மிகவும் பரவலாக காணப்படுகிறது.
பல வலைத்தளங்களில் இதை பார்க்கிறேன்.
சம்பந்தப்பட்ட செய்தி ஊடகங்களுக்கும்
இந்த தகவல் நிச்சயம் போய்ச் சேர்ந்திருக்கும்.
இது இட்டுக்கட்டப்பட்ட விஷயம் என்றால்,
சம்பந்தப்பட்ட செய்தி ஊடகங்கள் இதற்கு உடனடியாக
மறுப்பு தெரிவித்திருக்கலாமே…?
இப்போதாவது அவை சரியான செய்தியை
உறுதி செய்ய வேண்டும்.
This news was in Nakkheeran few days back.
Only Vikatan and Nakkheeran are publishing real news about central gov.