…
…
40-களில் (ஏன் 50 -களில் கூட) தமிழில் அதிகம் போனால்,
5-6 வார இதழ்களே வெளிவந்து கொண்டிருந்தன.
நான் 7-8 வயதிலிருந்தே ஆனந்த விகடன், கல்கி படிப்பேன்….
எங்கள் வீட்டில் அப்போதே ஆ.வி., கல்கி வாங்குவார்கள்..
பின்னர் கதிர் அவற்றுடன் சேர்ந்து கொண்டது…
அதற்கும் பின்னால் குமுதம் வெளிவரத் துவங்கியது…
ஆனால் எங்கள் வீட்டில் வாங்குவதில்லை…
ஆனால், நான் தொடர்ச்சியாக 67-லிருந்து குமுதம் படித்து வருகிறேன்.
தொடர்ச்சியாக இல்லாமல், அவ்வப்போது காசு சேருவதைப்
பொறுத்து, நாங்கள் – அண்ணன், தம்பிகள் சேர்ந்து
ஆளுக்கு அரையணா ( 3 பைசா) போட்டு,
தமிழ்வாணனின் கல்கண்டு வாங்கி படிப்போம்…
(சங்கர்லால் துப்பறிகிறார்… கத்தரிக்காய், மாணிக்கம்…!!! )
அப்போது வந்த தமிழ் வார இதழ்களுக்கும் –
இப்போது வெளிவரும் இதழ்களுக்கும்
அடேயப்பா……எவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வளவு
வித்தியாசம்…!!!
அப்போதெல்லாம் சினிமா நடிகர்/நடிகைகளின் புகைப்படத்தை
அட்டையில் போடவே மாட்டார்கள்…
அவர்களுக்கு அது கௌரவக்குறைவு – அப்போது……!!!
எதாவது ஜோக் – கார்ட்டூன் தான் அட்டையில் வரும்….
இந்தக்கால இளைஞர்களுக்கு சாம்பிளுக்கு –
1940-களில் வெளிவந்த ஆனந்த விகடன் வார இதழின்
அட்டைப்பட ஜோக்’குகள் கொஞ்சம் – கீழே….!!!
…

…

…

…

பாவம்…
மக்கள் குடும்ப கட்டுப்பாடு என்கிற வார்த்தையையே
கேட்டிராத காலம் அது…!!!
.
———————————————————————————————————————–



பிங்குபாக்: 1940 -களில் தமிழில் வார இதழ்கள் …. – TamilBlogs
பழைய கார்ட்டூன்களில் தத்ருபமாக வரைந்து இருக்கிறது .
முதல் படம் – IV கிளாஸ் ரயில்வே பெட்டி .(அப்ப இருந்தது ; இப்ப இல்லை )
மூன்றாவது படம் – போலீஸ்காரர் காலில் பட்டியை சுற்றி இருக்கிறார் – சாக்ஸ் இல்லை .இதுவும் ஒரு காலத்தில் இருந்தது .
ராஜு , கோபுலு ,தாணு போன்றவர்கள் வரைந்தது ! மிக்க நன்றி !
நண்பர் மெய்ப்பொருள்,
நல்ல observation….
பழைய நாட்களை இன்னமும்
நினைவில் வைத்திருக்கிறீர்கள்…
என் ரசனையுடன் ஒத்துப்போகும் ஒரு நண்பரை
இங்கே பார்க்க மகிழ்ச்சி…!!!
ஒப்பீடு செய்து எழுதி இருக்கிறீர்கள்.
இன்றைய காலகட்டத்தில் அதிகம் பேரால் இது முடியாது.
உங்கள் சுவாரஸ்யமான பின்னூட்டத்திற்கு நன்றி.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்