இதை – “எந்த மதம்” என்று சொல்லுவது….?


நம்புவதற்கு கடினமாகவும் –
ஆனால் மனதிற்கு மிகவும் மகிழ்ச்சி தரத்தக்கதுமாக
இருக்கிறது இந்த செய்தி…

வடக்கு கர்நாடகாவில் – பெலாகவி என்று ஒரு ஊர்…..
அதனையொட்டி சுமார் 11,000 பேர் வசிக்கும் தேசானூர் என்கிற
பச்சைபசேல் – அழகிய கிராமம்… !

இங்கே என்ன விசேஷம்…?
அங்கே பனாரசி நகரா ஸ்டைலில் கட்டப்பட்டிருக்கும்
ஒரு சர்ச்… Churt of Saint John the Baptist….

இந்த சர்ச்சுக்கு இன்னொரு பெயரும் உண்டு…
ஸ்நானிக அருளப்பன்வாரா விரக்தா மடம்…
(Snanika Arulappanavara Virakta Mutt )

இந்த சர்ச்சின் உள்ளே நடுவில்
ஒரு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்க,
அதன்ஒரு புறம் ஜீசஸ்… மற்றொரு புறம் மேரி ஆகியோரின் சிலைகள்…!

..


..

அந்த அமைப்பின் உட்புறச்சுவர்களில் –
கவிஞரும், சீர்திருத்தவாதியும், லிங்காயத் இயக்கத்தை
உருவாக்கியவருமான பசவேஸ்வரா, மற்றும் புரந்தரதாசர் ஆகியோரின்
மற்றும் பைபிளிலிருந்தும் பல quotes….எழுதப்பட்டிருக்கின்றன….!!!

இந்த அமைப்பை நடத்துபவர்-இயக்குபவர் –
மெனினோ கான்ஸ்லேவ்ஸ் என்கிற ஸ்ரீ மெனினோ சுவாமி…!!!
அவருக்கு 8 மொழிகள் தெரியும்… ஆயுர்வேத மருத்துவர்…, ஆசிரியர்…
அவர் காசி, ஹரித்வார், ரிஷிகேஷ் ஆகியவற்றோடு –
வாடிகனுக்கும் சென்றிருக்கிறார்….

அந்த சர்ச்சில், சமூக நலன் சம்பந்தப்பட்ட பல சேவைகளில்
அவர் ஈடுபட்டிருப்பதோடு, அந்த கிராம மக்களுக்கு
இலவசமாக வைத்தியமும் செய்கிறார்.

ஞாயிற்றுக்கிழமைகளில், சர்ச்சில் – மாஸ் நடக்கும்.
மெனினோ கான்ஸ்லேவ்ஸ் என்கிற அந்த ஸ்ரீ மெனினோ சுவாமி….
எல்லா மத நூல்களிலிருந்தும் நல்ல செய்திகளை எடுத்துச் சொல்வார்…
இந்துக்கள் நல்ல இந்துக்களாகவும்,
இஸ்லாமியர்கள் நல்ல இஸ்லாமியராகவும்,
கிறிஸ்தவர்கள் நல்ல கிறிஸ்தவராகவும் –
வாழ முயற்சிக்க வேண்டும் என்று உபதேசம் செய்வார்.
எந்த ஒரு மதத்தையும் பற்றி தனியாக, உயர்வாக பேச மாட்டார்.

அவர், காவி உடை தரித்திருப்பதோடு, கழுத்தில் ஒரு
ருத்ராக்ஷ மாலையும், கூடவே சிலுவையும் அணிவார்…!!!

மாஸ் முடிந்த பிறகு, பூஜை செய்து, கற்பூர ஆரத்தியும் எடுப்பார்.

” நான் ஈடுபடும் எந்த செயலும், எனக்கு எந்தவித தயக்கத்தையும்
உண்டு பண்ணுவதில்லை… அனைத்து மதங்களும் நல்ல
விஷயங்களையே போதிக்கின்றன… நான் யார் மீதும் எந்தவித
மத நம்பிக்கைகளையும் திணிப்பதில்லை… எல்லாருக்கும் பொதுவான
நல்ல செய்திகளையே உபதேசிக்கிறேன்….”
– என்கிறார் மெனினோ சுவாமி….

இந்த மடம் cum சர்ச்சை துவங்கியவர், இந்தியாவிற்கு சுதந்திரம்
கிடைத்த புதிதில், 1947-ல் கோவா’ விலிருந்து – பெலாகவி’யில்
வந்து குடியேறி, ஆசிரியராக பணியாற்றத் துவங்கிய –
தன்னை ஸ்ரீ அனிமானந்த சுவாமி என்று அழைத்துக் கொண்ட
Armado Alvares அவர்கள்.

அவர் 1950-ல் தேசானூரில் சிறுவர்களுக்கான ஒரு ஆதரவற்றோர்
இல்லத்தை துவக்கினார்… அதைத்தொடர்ந்து 1953-ல் பெண்களுக்கான
ஒரு பள்ளியைத் துவக்கினார்… இப்போது அந்த ஆதரவற்றோர்
இல்லத்தில் 50 சிறுவர்கள் இருக்கிறார்கள்…. அந்த பள்ளியில்
350 சிறுவர், சிறுமியர் படிக்கிறார்கள்….

அந்த கிராமத்தினர் அனைவரும் ஒரே இடத்தில் கூடி –
மகர சங்கராந்தி மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகைகளை
கொண்டாடுகின்றனர்.

இது எப்படி சாத்தியமாகிறது என்று கேட்கும்போது மெனினோ
சுவாமி…என்கிற மெனினோ கான்ஸ்லேவ்ஸ் சொல்கிறார் –
” இந்த கிராமத்து மக்கள் – பரந்த உள்ளம் கொண்டவர்கள்…
மனிதரிடையே எந்த வித்தியாசமும் பார்ப்பதில்லை….”

கடைசியாக ஒரு விஷயத்தை சொல்லியாக வேண்டும்….

சுமார் 11,000 பேர் வசிக்கும் அந்த கிராமத்தில் கிட்டத்தட்ட
சம அளவில், இந்துக்களும், முஸ்லிம்களும் இருக்கிறார்கள்…
கிறிஸ்தவர் என்று ….. யாரும் இல்லை….!!!

.
——————————————————————————————————–

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to இதை – “எந்த மதம்” என்று சொல்லுவது….?

  1. பிங்குபாக்: இதை – “எந்த மதம்” என்று சொல்லுவது….? – TamilBlogs

  2. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    இங்கே – எனக்கு கவிஞர் கண்ணதாசனின்
    இந்த பாடல் நினைவிற்கு வருகிறது –

    ————-
    மனிதன் என்பவன் தெய்வமாகலாம்..
    வாரிவாரி வழங்கும் போது வள்ளலாகலாம்

    வாழை போல தன்னை தந்து தியாகியாகலாம்
    உறுதியோடு மெழுகு போல ஒளியை வீசலாம் –

    ஊருக்கென்று வாழ்ந்த நெஞ்சம் சிலைகளாகலாம்
    உறவுக்கென்று விரிந்த உள்ளம் மலர்களாகலாம்

    முக்கியமாக இந்த வரிகள் –

    ———
    மனம் இருந்தால் பறவை கூட்டில் மான்கள் வாழலாம்
    வழியிருந்தால் கடுகுக்குள்ளே மலையைக் காணலாம்

    ———-

    -மனிதர் – விசாலமான மனம் கொண்டு
    சிந்திக்க, வாழ, பழக வேண்டும்.

    இந்த நாடு முன்னேற வேண்டுவது அவசியம் –
    ஆனால், எல்லாரையும் அரவணைத்துச்
    செல்ல வேண்டியது அதைவிட அவசியம்…

    .
    இறைவா…. இவர்களுக்கு, இந்த நாட்டை ஆள்பவர்களுக்கு –
    இதைக் கொஞ்சமாவது புரிய வையேன்…!!!

    .

    -வாழ்த்துக்களுடன்,
    காவிரிமைந்தன்

  3. Sankaran's avatar Sankaran சொல்கிறார்:

    என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் – செய்யலாம் … ஆனால் எக்காரணத்தை கொண்டும் இவர்களை நம்பக்கூடாது. ஒரு காணொளி பார்த்தேன், அதில் ஒருவன் சிவனை இந்தியாவில் “சிவன்” என்றும் வெளி நாடுகளில் ஜீசஸ் என்றும் அழைக்கிறார்கள் என்று கூறினான்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.