டெலிபோன் மந்திரிக்கு, டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் இனாம்…!!! சென்னை கோர்ட்டில் வாதம் …!!!


கடந்த ஜூலை 25, அன்று சென்னையில் நிகழ்ந்த
ஒரு மிக முக்கியமான வழக்கு தொடர்பான செய்திகளை,
4 நாட்களுக்குப் பிறகும், பெரும்பாலான தமிழ் நாளிதழ்கள்
விவரமாக வெளியிடவில்லை… காரணம்… எமக்குத் தெரியவில்லை…
இதைப் படித்தால் ஒருவேளை உங்களுக்கு புரியலாம்……!!!

சிபிஐ -ஆல் தொடரப்பட்ட ஒரு மிக முக்கியமான கிரிமினல் வழக்கில்,
குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவருமே – விசாரணைக்கு
உட்படுத்தப்படாமலே கீழ் கோர்ட்டால் விடுவிக்கப்பட்டு விட்டார்கள்….

கீழ் கோர்ட்டின் இந்த விடுவிப்பை எதிர்த்து சிபிஐ – சென்னை
உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தது…

அந்த வழக்கில் ஜூலை 25-ந்தேதி நடைபெற்ற சில நிகழ்வுகள் கீழே –

குற்றம் சாட்டப்பட்டவரின் சார்பில் முன் வைக்கப்பட்ட வாதத்திற்கு
நீதிபதி விளக்கம் தருகிறார்….

———-

broadband வசதியை, அந்த துறைக்கு அமைச்சராக இருந்தவர்
பாப்புலர் ஆக்கினார் என்கிற ஒரு காரணத்திற்காக –

கணக்கில் அடங்காத அளவிற்கு தானும்,
தனது சகோதரரும்,
அவர் நடத்தும் தொழிலுக்கும் சேர்த்து –

அந்த பிராட் பேண்ட் வசதியை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம்
என்கிற உங்கள் வாதம் அடிப்படையிலேயே தவறானது…
————

ஒரு ஜனநாயக அரசியலமைப்பில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட
ஒரு பிரதிநிதி இந்த மாதிரி யோசிப்பதே தவறு…அதை நீதிமன்றமும்
அனுமதிக்காது….

————

விவாதம் தொடர்கிறது…
இன்னொரு சீனியர் வக்கீல் வாதாடுகிறார்…

“பாதுகாப்பு அமைச்சர், தனி ராணுவ விமானத்தில்
இலவசமாக பயணம் செய்கிறார்….

ரெயில்வே அமைச்சர், தனி (saloon) கம்பார்ட்மெண்டில்
இலவசமாக பயணம் செய்கிறார்… இந்த நிலையில் –

தொலைபேசி அமைச்சர், தனக்கென ஒரு தனி தொலைபேசி
நிலையம் அமைத்துக் கொள்வதில் என்ன தவறு….? ”

இதற்கு நீதிபதி சொல்கிறார்…
” தவறு இல்லை தான்…
சட்டமும் அதை அனுமதித்தால்….!!!

” தொலைபேசித்துறை அமைச்சர் தனியாக தனியாக தொலைபேசி
நிலையம் வைத்துக் கொள்ள சட்டத்தில் இடமில்லையே…?

-சட்டத்தில் அதற்கு இடம் இல்லாதபோது, அமைத்துக் கொண்டால் –
வழக்கை சந்திக்க வேண்டியது தான்…!!! ”

——–

நீதிபதி தொடர்கிறார்…” கீழ் கோர்ட், பிராசிகியூஷன் தரப்பின்
வாதங்களை சரியான புரிந்துகொள்ளாமல்,
ஒரே ஒரு தொலைபேசி தான் பயன்படுத்தப்பட்டது என்ற
முடிவிற்கு வந்திருக்கிறது…

இது சன் டிவிக்காக பயன்படுத்தப்பட்ட ஒரு தொலைபேசி மட்டிற்குமான
வழக்கல்ல…

..

..

பிராசிகியூஷன் தரப்பு வாதப்படி, பலதொலைபேசி இலவச
இணைப்புகளும், இன்னும் பல கூடுதல் தொழில்நுட்ப வசதிகளும்,
சட்ட விதிகளுக்கு புறம்பாகவும், சட்டத்தை மீறியும், A3 (திரு.தயாநிதி
மாறன்) மற்றும் A-7(திரு.கலாநிதி மாறன்) ஆகியோருக்கு தரப்பட்டுள்ளன.

இதில் முன்னாள் BSNL ஜெனரல் மேனேஜர்கள் கே.பி.பிரம்மானந்தன்,
எம்.பி.வேலுசாமி, அமைச்சர் தயாநிதி மாறனின் பிரைவேட் செக்ரட்டரி
வேதகிரி கௌதமன், சன் டிவி Chief Technical Officer எஸ்.கண்ணன்
மற்றும் எலெக்ட்ரீஷியன் கே.எஸ்.ரவி ஆகியோர் இணைந்து
கூட்டுசதியில் ஈடுபட்டு, இந்த சட்டவிரோதமான குற்றச்செயல்களில்
ஈடுபட்டு, போலி ஆவணங்களையும் தயாரித்திருக்கிறார்கள்…

கடைசியாக நீதிபதி கோடிட்டு காட்டுகிறார்….

” குற்றம் சாட்டப்பட்ட தயாநிதி மாறன் உள்ளிட்ட 7 பேரும்,
முறையான விடுவிப்பு விண்ணப்பம் அளிக்காமலே – கீழ் கோர்ட்டால்
வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள்… ”

“ காவல் துறையின் அறிக்கைகள் மற்றும் ஆவணங்களைக் கருத்தில்
கொள்ளும்போது, குற்றம் சாட்டப்பட்ட
7 பேரும் குற்றம் செய்திருக்கலாம் என்று கருதுவதற்கு அடிப்படைகள்
உள்ளன” …

குற்றம் சாட்டப்பட்டவர் அத்தகைய வசதிகளை
அனுபவிப்பதற்குச் சட்டம் அனுமதிக்கவில்லை என்பது
இந்த விவகாரத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவர்களை
விசாரணைக்கு உட்படுத்தலாம்” என்று தெரிவித்ததோடு,

– கலாநிதி மாறன், தயாநிதி மாறன் உள்ளிட்டோரை விடுதலை செய்தது
செல்லாது. வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று
உயர்நிதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

கீழ் கோர்ட், விசாரணையை 12 மாதங்களுக்குள் நடத்தி முடிக்க
வேண்டும் என்பது கூடுதல் உத்திரவு.

———————————————–

இதன் மேல் நிகழ்வாக, சென்னை உயர்நீதிமன்ற உத்திரவுக்கு எதிராக,

திருவாளர் தயாநிதி தரப்பினரால், உடனடியாக
உச்சநீதிமன்றத்தில் ( சுப்ரீம் கோர்ட்) அப்பீல் செய்யப்பட்டிருக்கிறது….

30-ந்தேதி, இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட
உச்சநீதிமன்றம் –

————-

25-ந்தேதி சென்னை உயர்நீதிமன்றம் தலையிட்டு
உத்திரவிட காரணமாக இருந்தது –

அமைச்சராக இருந்தபோது, திரு.தயாநிதி மாறன், தனது சகோதரரின்
வணிக நலன்களுக்காக தொலைபேசி இணைப்பை சட்டவிரோதமாக
பயன்படுத்தி இருக்கிறார் என்கிற குற்றச்சாட்டே.

எனவே, குற்றம் சாட்டப்பட்டவர்கள் விசாரணையை அவசியம்
எதிர்கொள்ள வேண்டும் என்று நேற்று அறிவுறுத்தி இருக்கிறது…!!!

——————

25-ந்தேதி செய்தியை விவரமாக வெளியிடுவதை – தமிழ் நாளேடுகள்
ஏன் தவிர்த்தன…?

.
—————————————————————————————————————

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

9 Responses to டெலிபோன் மந்திரிக்கு, டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் இனாம்…!!! சென்னை கோர்ட்டில் வாதம் …!!!

  1. jksm raja's avatar jksm raja சொல்கிறார்:

    ஊடகம் என்பது கொள்ளை லாபம் சம்பாதிப்பதற்கான ஒரு தொழில் மற்றும் பணம் சம்பாதிப்பது மட்டுமே இலக்கு என்று ஆனபின்பு ஒரு செய்தியை இருட்டடிப்பு செய்வதின்முலம் வருமானம் வருமென்றால் அது என்ன கசக்கவா செய்யப்போகிறது.

  2. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையா?

    செய்த குற்றங்களுக்கு (2004-2010), உள்ளே போட்டுவிட்டு, பிறகு கோர்ட்டில் வழக்காடி விடுதலை பெற்றுக்கொள் என்று சொல்லாமல், நமது நீதி மிகவும் தாமதமாகவும் மெதுவாகவும் செயல்படுவதால், அரசியல் என்பது அயோக்கியர்கள் பெரும்பாலும் பணம் சேர்ப்பதற்காகப் புகலும் இடமாகிவிட்டது என்று பலர் சொல்கின்றனர். அதில் அர்த்தம் உள்ளதுபோல் தெரிகிறது.

  3. Raghavendra's avatar Raghavendra சொல்கிறார்:

    கீழ் கோர்ட் விலை போயிருப்பது போல தெரிகிறதே.
    உயர்நீதிமன்றம் அது குறித்து எதாவது நடவடிக்கை
    எடுக்க வாய்ப்பிருக்கிறதா சார் ?

  4. பிங்குபாக்: டெலிபோன் மந்திரிக்கு, டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் இனாம்…!!! சென்னை கோர்ட்டில் வாதம் …!!! – TamilBlogs

  5. indian_thenn__tamilian@yahoo.com's avatar indian_thenn__tamilian@yahoo.com சொல்கிறார்:

    இது போன்று குற்றம் செய்தவர் சாதாரண நபராக இருந்து, இது போன்ற வாதங்களை வைத்தால், நீதிபதி நிச்சயம் அவரை தொலைத்திருப்பார்.ஆனால் குற்றம் செய்தவர் மிக பெரிய மனிதர் என்பதால் , நீதிமன்றம் அவருடைய வாதம் தவறென்று விளக்கம் வேறு அளித்து கொண்டிருக்கிறது…

    • தமிழன்'s avatar தமிழன் சொல்கிறார்:

      முதலில் வேலுச்சாமி, பிரம்மானந்தன் முதலானோர்களை, அவர்கள் ஓய்வூதியத்தை நிறுத்தி, உள்ளே தள்ளிவிட்டு, அரசியல்வாதிகளின் குற்றங்களை ஆராயணும். அதிகாரிகளின் அயோக்கியத் தனத்தால்தானே இந்த அட்டூழியம் நடந்தது. அதற்குக் காரணம், பதவிக்காக விலை போன வேலுச்சாமி என்றுதான் பத்திரிகைகள் அப்போது எழுதியிருந்தன.

  6. R.Srinivasan's avatar R.Srinivasan சொல்கிறார்:

    by the same logic, the modi govt. should have appealed against Mr.Amit Shah’s discharge in shorabudhin case before he faces the trial. The govt. chose not to appeal.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      ஸ்ரீநிவாசன்,

      ஆக, இன்னொரு ஜட்ஜும் பரலோகம் போக வேண்டும் என்கிறீர்கள்…?
      உங்களுக்கு ஏன் சார் இந்த விபரீத ஆசை …!!!

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

  7. tamilmani's avatar tamilmani சொல்கிறார்:

    ஆம்புலன்ஸ் என்பது ஒரு உயிரை காக்க பயன்படுகிறது .
    ஆனால் அரசாங்க செலவில் ஓர் தொலைபேசி இணைப்பகம்
    உருவாக்கப்பட்டு அது மந்திரியின் வீட்டில் இயங்குகிறது,
    அந்த இணைப்பகம் மந்திரியின் சகோதரர் நடத்தும்
    தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகள் upload செய்ய பயன்படுத்தப்படுகிறது
    என்றால் அரசாங்க பணம் ஒரு தனியார் தொலைக்காட்சி பணம் ஈட்ட
    பயன்படுகிறது, இது குற்றம் இல்லையா?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.