ரஃபேல் + அனில் அம்பானிஜி +மோடிஜி = ?????????????????




..

நாட்டிலுள்ள துறைமுகங்களில் பெரும்பாலானவை
அடானிஜி பிரதர்சுக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளன.

நாட்டிலுள்ள பெரும்பாலான சோலார் (சூரியசக்தி)
மின் உற்பத்தி நிலையங்களுக்கான ஒப்பந்தங்கள் அடானி மற்றும்
அவரது மைந்தர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளன..

நாட்டின் தொலை தொடர்பு(செல்போன்….) வசதிகளுக்கான
பெரும் அளவிலான லைசென்சுகள் பெரியண்ணன்
அம்பானிஜிக்கு (ஜியோ) கொடுக்கப்பட்டுள்ளன….

கடைசியாக – நாட்டின் பாதுகாப்புத்துறை உற்பத்தியிலும்
கைவைக்கப்பட்டுள்ளது….

2008-ல் ஏ.கே.அந்தோனி (காங்கிரஸ்) -பாதுகாப்புத்துறை அமைச்சராக
இருந்தபோது போடப்பட்ட ஒப்பந்தத்தின் தொடர்ச்சி என்று
சொல்லிக்கொண்டு, “ரகசியம்” காக்கப்பட வேண்டும் என்கிற ஒரே பகுதியை மட்டும் எடுத்துக்கொண்டு, மற்ற அனைத்து விதிகளும் மாற்றப்பட்டு விட்டன.

2012-ல் – (காங்கிரஸ் கூட்டணி அரசு)
அந்த நிறுவனத்துடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தில் 126 ரஃபேல் போர் விமானங்கள் ரூ.52,000 கோடிக்கு பேசி முடிக்கப்பட்டது. அதன்படி 2015-க்குள் 18 விமானங்கள் போர் முனைக்குத் தயார் நிலையில் இந்தியாவில் தரையிறக்கப்பட வேண்டும்.

எஞ்சிய 108 விமானங்களை ( பங்களூரில் உள்ள – மத்திய அரசின் விமான தயாரிப்பு தொழிற்சாலை…) ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்துடன் இணைந்து ‘தொழில்நுட்பம் பரிமாற்ற’ ஒப்பந்தம் அடிப்படையில் பிரான்ஸின் ரஃபேல் நிறுவனம் இந்தியாவில் உற்பத்தி செய்துதர வேண்டும்.

‘தொழில்நுட்ப பரிமாற்ற’ ஒப்பந்தத்தின்படி ரஃபேல் போர் விமானத்தின்
மொத்த தொழில்நுட்பமும் இந்தியாவின் வசப்படும்.
அதன் பிறகு இந்தியா நினைத்தால் எப்போது வேண்டுமானாலும் பிரான்ஸ் நிறுவனத்தின் தயவு இல்லாமல் ரஃபேல் போர் விமானங்களை இஷ்டம்போல தயாரித்துக்கொள்ளலாம் என்பது இந்த ஒப்பந்தத்தின் முக்கியமான ஷரத்து.

அடுத்தடுத்த நடவடிக்கைகளில் இந்த விமானத்தின் விலையும்
ரூ.90,000 கோடி வரை உயர்ந்தது. ஆனால், பல்வேறு காரணங்களால், இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்படுவது தாமதமாகி இருக்கிறது.

அதற்குள் ஆட்சி மாறி, 2014-ல் பாஜக அரசு பொறுப்பேற்றவுடன் ஒப்பந்தத்தின் அடிப்படையே மாறுகிறது. HAL (Hindustan Aeronatic Limited, Bangalore) -க்கு

– தன்னுடன் இணைந்து இந்த விமானத்தை தயாரிக்கும் அளவிற்கு அனுபவமோ, தகுதி வாய்ந்த ஆட்களோ இல்லையென்று கூறி, ரஃபேல் நிறுவனம், HAL -உடன் சேர்ந்து தயாரிப்பதையும், தொழில் நுட்ப பரிமாற்றத்தையும் தவிர்க்கிறது.

பதிலுக்கு இந்தியாவிலிருந்து ஒரு 50 சதவீத பார்ட்னரை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்கிற நிபந்தனையுடன் இந்திய அரசு இதற்கு ஒத்துக்கொள்கிறது. (அந்த பார்ட்னர் அனில் அம்பானிஜியாக இருக்க வேண்டும் என்பது மட்டும் எழுத்துபூர்வமாக இல்லை…)

மத்திய கேபினட்டின் முன்கூட்டிய ஒப்புதல் இல்லாமலே
மோடிஜி ஃப்ரான்ஸ் செல்லும்போது, ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.
முக்கியமான பாதுகாப்புத்துறை ஒப்பந்தம் கையெழுத்தாகும்போது,
இந்திய பாதுகாப்பு அமைச்சர் கோவா’வில் மீன் பிடித்துக் கொண்டிருந்தார்….(அவரை பிரதமர் தன்னுடன் அழைத்துச் செல்லவில்லை…!)

-126 விமானங்கள் ரூ.90,000 கோடி என்பதற்கு பதிலாக 36 விமானங்கள்
ரூ.60,000 கோடிக்கு வாங்குவதாக மாற்றப்பட்டிருந்தது.

-ஒரு விமானத்துக்கான விலை ரூ.714 கோடியிலிருந்து
ரூ.1,611 கோடியாக உயர்ந்திருந்தது. (இது உறுதி செய்யப்படாத செய்தி)

– மிகப் பெரிய அதிர்ச்சியாக ‘தொழில்நுட்ப பரிமாற்றம்’ ரத்துசெய்யப்பட்டிருந்தது. இதனால், நம் வசமாகவிருந்த மிகப் பெரிய
விமான தொழில் நுட்பத்தை நாடு இழந்தது.

இதில் மிகப்பெரிய விசேஷம் என்னவென்றால் –

ஃப்ரான்ஸுக்கு பிரதமர் விஜயம் செய்த அதே நாளில் அம்பானிஜியும்
விஜயம் செய்கிறார். ஆனால், பிரதமருக்கோ, மத்திய அரசுக்கோ
இதுபற்றி ஒன்றும் தெரியாது.

ஒப்பந்தம் கையெழுத்தான 2015, ஏப்ரல் 10 -க்கு just 12 நாட்கள் முன்னதாக அம்பானிஜியால் “ரிலையன்ஸ் டிபென்ஸ்” நிறுவனம் தொடங்கப்படுகிறது… போர் விமானங்களை தயாரிப்பதில், எந்தவித முன் அனுபவமும் இல்லாத அந்த நிறுவனம், ஃப்ரென்ச் ரஃபேல் போர் விமான கம்பெனியுடன் 50% பார்ட்னராக சேர்ந்து கொள்கிறது.
(விமான தயாரிப்பில் 60 ஆண்டுக்கால அனுபவம் வாய்ந்த இந்திய
அரசின் நிறுவனமான HAL -ஐ முன் அனுபவம் இல்லையென்று
நிராகரித்த இடத்தில் அம்பானியின் புதிய கம்பெனி…!!! )

..

..

ஆனால், அம்பானிஜி ரஃபேல் கம்பெனியுடன் பார்ட்னராக இணைந்தது
பற்றி இந்திய அரசுக்கு எதுவும் தெரியாது; அரசுக்கு இதில் எந்தவித
சம்பந்தமும் இல்லையென்று மத்திய அரசு கூறுகிறது….

ரிலையன்ஸ் டிபென்ஸ் பதிவு செய்யப்பட்ட நாளில், அதற்கென சொந்த இடமோ, கட்டிடமோ கிடையாது…( சில காலம் கழித்து, மஹாராஷ்டிராவில், நாக்பூர் அருகே ஒரு இடம் அதுவும் மஹாராஷ்டிர பாஜக அரசு மூலம் சலுகை விலையில் வாங்கப்பட்டுள்ளது….)

இந்த விவரங்கள் தெரிய வந்தபிறகு –
தலைப்பிலுள்ள (கேள்விக்குறி) ???????? க்கு பதிலாக கீழ்க்கண்டவற்றில் –
எதைக்கொண்டு நிரப்புவது என்பதை வாசகர்களே தீர்மானிக்கலாம்….

தேசத்துரோகம்….
ஒட்டு மொத்த நாட்டு மக்களையும் ஏமாற்றுவது….
எதிர்பார்த்தது தானே…? இதிலென்ன அதிசயம்….?

2019-ல் நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்தலை நடத்தப்போவது இந்திய தேர்தல் கமிஷன் தான் என்று நாமெல்லாரும்

நம்பிக்கொண்டிருக்கிறோம்….

ஆனால், அடுத்த தேர்தலை இயக்கப்போவது இந்தியாவின் 10-15 டாப்
தொழிலதிபர்கள் தான் என்கின்ற நிலை இருக்கும்போது –

மாற்றம் எப்படி ஏற்படும்…?

.
——————————————————————————–

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to ரஃபேல் + அனில் அம்பானிஜி +மோடிஜி = ?????????????????

  1. பிங்குபாக்: ரஃபேல் + அனில் அம்பானிஜி +மோடிஜி = ????????????????? – TamilBlogs

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


      தலைவர் நேற்று லக்னோ’வில் பேசுகிறார்.

      “காந்திஜி, பிர்லாவோடு பழகியதை தவறு என்று சொல்வீர்களா..? அவர் பணக்காரரோடு நட்பு வைக்க வெட்கப்படவில்லையே…? நான் ஏன் பயப்பட வேண்டும்…?”

      காந்திஜி தன் வாழ்நாளில் எந்த அரசு பதவியையும் ஏற்றதில்லை… தேர்தல் அரசியலுக்குள் நுழைந்ததே இல்லை… ஆர்வம் காட்டியது கூட இல்லை.

      பதவிப் பித்தும், அதிகார வெறியும் கொண்டவர்கள் தன்னை காந்திஜியுடன்
      ஒப்பிடுவது அபத்தம் மட்டுமல்ல.. அது அவர்களின் அகங்காரத்தையும்,
      மண்டைக்கனத்தையும் கூட வெளிப்படுத்துகிறது…!

      காந்திஜி, பிர்லாவுடனான நட்பை, பிரார்த்தனைக் கூட்டங்களை நடத்தவும்,
      பொது மக்களுடனான சந்திப்புகளுக்கும் தான் பயன்படுத்தினார்….
      புதுப்புது கம்பெனிகளை உருவாக்கவும், தனக்கு நெருக்கமான தொழிலதிபர்களுக்கு வசதிகள், வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொள்ளவும் அல்லவே…!

      “ஆம். ஒவ்வொருத்தரைப்போல் நான் மறைமுகமாக பழக வேண்டிய
      அவசியமில்லை… தொழிலதிபர்கள் அனைவருடன் நட்புறவோடு தான்
      இருப்பேன்… அவர்களை ஏன் திருடர்களைப்போல் கருத வேண்டும் …?
      இந்த நாட்டில் வளர்ச்சி ஏற்படுத்த எனக்கு அவர்களின் துணை தேவை…”

      அத்தனை தொழிலதிபர்களுக்கும் சேர்த்து வெளிப்படையான கொள்கை முடிவுகளை எடுத்தால், தொழில் வளர்ச்சிக்கு உதவினால் – அதில் தவறு இல்லை தான்…

      தன்னைச் சுற்றியுள்ள, தனக்கு தேர்தல் பிரச்சாரத்தில் உதவும், ஆட்சியில் அமர உதவும் ஒரு டஜன் பணக்கார தொழிலதிபர்களுக்கு மட்டும்-

      அதுவும் சட்டத்திற்கு புறம்பான வழிகளில்- ரகசியமாக உதவுவதை எந்த வாதம் நியாயப்படுத்தும்…?

  2. Raghavendraw's avatar Raghavendraw சொல்கிறார்:

    நான் இந்த தேசத்தின் சௌகிதார் ( வாட்ச்மேன் ) ஆக இருப்பேன்
    என்று எலெக்ஷனின் போது சொன்னார். இப்போது இந்த தேசத்தை
    சுரண்டுபவர்களின் சௌகிதாராக இருக்கிறார். அவர்கள்
    சௌகரியமாக சுரண்டிவிட்டு, ஆயிரக்கணக்கான கோடிகள் வங்கியிலிருந்து சுருட்டி விட்டு, அண்டார்டிகாவில் எதாவது ஒரு குட்டித்தீவில் போய் நிரந்தர குடிமகனாக செட்டில் ஆகி விடுகிறார்கள்.
    ஏமாந்து போனவர்கள் நாம்; இனி என்ன செய்ய முடியும் ?
    நம்மை நாமே நொந்துகொள்வதை விட ?

  3. indian_thenn__tamilian@yahoo.com's avatar indian_thenn__tamilian@yahoo.com சொல்கிறார்:

    கஷ்ட காலம் தான்.
    வங்கிகள் இவர்களுக்கு கடன் கொடுத்து திவாலாகி விடுமோ என்று இப்பொழுதெல்லாம் ரொம்ப பயமாக இருக்கிறது. பணத்தை வீட்டில் வைத்தாலும் செல்லாது என்று அறிவித்து பீதியை கிளப்புகிறார்கள்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.